பாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிகை
Prof.Dr.J.Baby John M.D.S
Principal
Vinayaka missions
Sankarachariyar Dental college.
SALEM. TAMIL NADU.
தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கல்லூரி மாணவர்களுக்கான கோடை உறைவிடப் பயிற்சியின் கீழ் ஜூன் 11 முதல் ஜுலை 11 வரை விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல்மருத்துவக் கல்லூரியின் 20 பல் மருத்துவர்களை 5 பிரிவுகளாக அதாவது ஒரு முறைக்கு 4 மருத்துவர்களை அழைத்து சென்று பாலமலை மேல் உள்ள கிராமங்களுக்கான முகாமை நடத்தி வருகிறோம்.
https://www.facebook.com/tanigaiezhilan/videos/1925722917479072/
மிகவும் எளிதில் அடைய முடியாத பகுதி சேலம் மாவட்டத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதி. செய்தி தொடர்பு ஊடகங்கள் பெரும்பாலான கிராமங்களை எட்டாத பகுதி. பெரிய குளம் , திம்மம்பொதி போன்ற மலையின் அந்தப்பக்க கிராமங்களில் இன்னும் மின் வசதியே சென்றடையவே இல்லை
நிலை இப்படி இருக்கும்போது...கண்ணாமூச்சி, செட்டியூர், குருவரெட்டியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் இருந்து இந்த மலையை எட்ட முடியும்.
கண்ணாமூச்சி, குருவரெட்டியூர் பகுதிகளில் இருந்து இந்த மலைக்கிராமங்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாட்டுடன் உள்ள மலை மேல் ஏறும் ஜீப்கள் நமக்கு போக்குவரத்து உதவிகளை செய்து வருகின்றன. செல்லும் தூரத்தைப் பொறுத்து கிராம மக்களுக்கு ரூபாய் 30 முதல் 50 ரூபாய் தலைக்கு வாங்கிக் கொண்டு இளம் வயதுடைய ஓட்டுனர்கள் இந்த ஜீப் பயணச் சேவையை செய்து வருகின்றனர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாகனத்தின் ஸ்டேரிங் வீலுடன்.
ஏன் எனில் சாலை அவ்வளவு மோசம். கரணம் தப்பினால் மரணம் நிகழுமோ என்னவோ ஆனால் ஜீப் கரணம் போடாவிட்டாலும் , சாய்ந்து படுத்துக் கொள்வதென்னவோ நிச்சயம் நடக்கும்.ஆனால் அத்தனை வளைவு, சறுக்கல் குண்டும் குழியிலும் இந்த இளைஞர்கள் அநாயசமாக நம்மை கொண்டு சேர்க்கின்றனர், கொண்டு வந்து கீழ் இறக்கியும் விடுகின்றனர்
இந்த சாலை வசதியும் கூட நூறு நாள் வேலை வாய்ப்பு செய்யும் நபர்கள் மூலமே செய்யப்பட்டதாக செய்திகள் உள்ளன. இன்னும் ஆங்காங்கே அந்த மண் சாலைகளில் குறுக்கே பெயர்க்க முடியாத பெயர்த்து எடுக்கப்படாத மரங்களும் பாறைகளும் கூட இருக்கின்றன.
கடந்த பார்த்திபன் எம்.எல்.ஏஆக இருந்த காலக் கட்டத்தில் இந்த சாலை போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.... மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிச்சை என்பார் அப்போது சிறப்பு கவனம் எடுத்து இந்த சாலை வசதியில் நாட்டம் கொண்டு செய்ய வைத்ததாகவும் செய்திகள் உலவுகின்றன.
ஆனால் உங்களுக்கு எல்லாம் ஒரு செய்தி சொல்கிறேன்: நான் 1986ல் இந்த மலைக்கு ஒரு தன்னார்வலராக சென்று அரசு அனுமதியுடன் மக்கள் தொகை கணக்கெடுக்கும்போதெல்லாம் செட்டியூர் என்ற இடத்தில் இருந்து கால்நடையாகவே ஏறித்தான் சென்றேன். அப்போதெல்லாம் எந்த சாலை வசதியுமே கிடையாது...வெறும் காட்டுத்தடம், கொடித்தடம் தான்.
அதிலேயே நான் எல்லா கிராமங்களுக்கும் திம்மம்பொதி, நாகம்பொதி, பெரியகுளம் வரை கூட சென்று திரும்பியது உண்மைதான் .அங்கு மலை மேல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினேன். அப்போதிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கதுரை, கோட்டாட்சியர் மலையாளம் ஆகியோரின் அறிவுரையாக கீழே வருவாய் அலுவலர்க்காக இருக்கும் அரசுக் குடியிருப்பில் தங்கிக் கொள்க என்பதையும் மீறி.
அப்போதெல்லாம் முதல் கிராமம் கெம்மம்பட்டி, அதன் பின் இராமன்பட்டி. வரும். இப்போது ஜீப் சென்றடையும் முதல் சந்திப்பாக சுண்டைக்காடு, புல்லாம்பட்டி கிராமம் வந்து நிற்கிறது. ஆனால் இப்போதும் இராமன்பட்டிதான் அரசு உயர்நிலைப்பள்ளி அதுவும் மலைவாசிகளுக்கான உறைவிடப்பள்ளி...இதில் படித்த 9 பத்தாம் வகுப்பு படித்த பிள்ளைகள் அனைவருமே தேறிவிட்டனர் இந்த கல்வி ஆண்டில் என்பது எனது எண்ணத்திற்கிடையே முந்திரிக் கொட்டையாக முந்தி வரும் செய்தி.
அந்த இராமன்பட்டி மட்டுமே பெரிய ஊர். அதாவது சுமார் 100 வீடுகள் இருக்கலாம் எனத் தோராயமாகச் சொல்லலாம். அங்குதான் அரசின் சுகாதார துணை மையமும் உள்ளது. அந்த மையத்தில் பணி செய்த ரூபி என்ற செவிலியர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அங்கு தங்கி பணி புரிந்து இரு முறை மாவட்ட ஆட்சியர் விருது பெற்றிருக்கிறார். நாங்கள் எங்கள் மருத்துவக் குழுவினர் இரு முறை அவருடன் சந்திக்க நேர்ந்தது.
அவர் அளித்த அனுமதி பேரில் சாலையோரம் இருந்த அந்த துணை சுகாதாரமையச் சுவரில் எமது மருத்துவர்கள் முதல் குழு குப்பைக் கூள நிர்வாகம் பற்றி சித்திரங்களை ஓவியமாக வரைந்து சொல்லாமல் தமது கருத்துகளை பதிவு செய்தனர்.
அந்த மலை மேல் சுமார் 30 கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் எல்லாமே விரவிக் கிடக்கும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வீடுகள் உள்ளன. மொத்தம் மக்கள் தொகை 4347 என்ற புள்ளி விவரம் கிடைத்தது.
பெரும்பாலும் இன்னும் எவருமே படித்தவர்களாக இல்லை. இராமன் பட்டியின் துணைத் தலைமை ஆசிரியரை வைத்தே முதல் குழுவினர் பேஸ்ட் பிரஸ் எல்லாம் கொடுத்து பல் துலக்கல் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினர் துவக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மறு நாளில் குப்புசாமி தலைமை ஆசிரியரும் சேர்ந்து கொள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து இராமன்பட்டி முதல் கெம்மம்பட்டி வரை அணிவகுத்து சுத்தம் சுகாதாரம், குப்பையை கண்ட இடங்களில் போடக்கூடது, கழிக்காதே திறந்த இடத்தில் மலம் கழிக்காதே, பெண்களை படிக்கவை, சிறுவர் சிறுமியரை வேலைக்கனுப்பாதே போன்ற முழக்கமிட்டு அனைவரும் ஊர் மக்கள் எல்லாம் வியந்து பார்க்க ஊர்வலம் சென்றனர்.
முதல் குழுவை விட இரண்டாம் மருத்துவக் குழுவினர் ஒரு படி மேல் சென்று இவர்கள் செய்த பணிகளையும் செய்தும் அதற்கும் மேல் புல்லாம்பட்டி. நமங்காடு ஆகிய ஊர்களிலும், மற்றும் இரண்டு பெரிய பள்ளிகளான இராமன்பட்டி, கடுக்கா மரத்துக்காடு ஆகிய ஊர்களிலும் வெட்ட வெளியில் எச்சில் துப்பல், மலம் கழித்தல், சிறு நீர் கழித்தல் எவ்வளவு சுகாதாரக் கேடானது என்பதை விளக்கும் திரைப்படத்தை ஒவ்வொரு ஊரிலும் சுமார் அரை மணி நேரம் ஒலி ஒளிபரப்பி விளக்கிப் பேசினர்
மேலும் கடுக்கா மரத்துக் காடு தலைமை ஆசிரியர் மாதேசன், ஆசிரியர் பவளக்கொடி ஆகியோரின் ஒத்துழைப்புடன் பள்ளிச் சுவரில் படம் வரைந்தும், பள்ளியில் திரைப்படம் காண்பித்தும், பற்பசை, பல் துலக்கி ஆகியவ்ற்றைக் கொடுத்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அது மட்டுமல்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்ட 3 பேர் தங்களது பற்களின் பிரச்சனையை புல்லாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் தொலைதூரத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பல் மருத்துவ மையத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.நமது மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.
அது மட்டுமின்றி காடு கழனி, வீடு வாசல் ஆகியவற்றில் இருந்த அத்தனை மனிதர்க்கும் சுத்தம் சுகாதாரம், வெட்ட வெளியில் மலம் கழித்தலின் தீமை, சிறுநீர், உமிழ் நீர் கண்ட இடங்களில் துப்புவதால் நேரும் கேடு பற்றி விளக்கிக் கூறப்பட்டது. மேலும் பெண்களின் மாதவிடாய், சேனிட்டர் நாப்கின்கள்,எய்ட்ஸ், பாலியல் நோய் பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
நிறைய உபசரிப்புகள் வேறு..மா, பலா, வாழை , விளாம்பழம், சிறு நெல்லி இப்படி ஏகப்பட்ட கனி வர்க்கங்களை நமது மருத்துவர்கள் உண்டு மகிழ்ந்த அனுபவத்தை அந்த பாலமலை மண் அளித்தது.
இத்தனைக்கும் எங்களுக்கு படுக்க படுக்கை, தங்க இடம், உணவு தயாரித்தளிக்கும் பாங்கு ஆகியவற்றை புள்ளாம்பட்டியில் ஆசீர்வாத இயக்கம் என்ற நிறுவனம் நடத்தும் தேவாலய இடம் சேர்ந்த குடியிருப்பே எமக்கு அளிக்க மனங்கோணாமல் அதில் ஊழியம் செய்து வரும் யுவராஜ் மற்றும் அவரின் துணைவி ஜெயலலிதாவும் செய்து வருகின்றனர். நல்ல வசதி. அந்த மலைப்பாங்கான இடத்தில் அப்படி தூய்மையான சுத்தம் சுகாதாரமான ஓய்வறைகளும் எங்களுக்கு கிடைத்தது இயற்கையின் கொடையே. Mr..சாமிதாஸ், Mr.ஆல்பர்ட் and Pushparaj, Blessing Youth Mission ஆகியோர் இதன் நிர்வாகிகளாக விளங்குகின்றனர்.அவர்க்கும் எமது நன்றிகள் உரித்தாகும்.
மேலும் இந்த முகாம்களை பாலமலையில் நடத்துவது என்றும், என்னையே அதற்கான பொறுப்பான அலுவலராக நோடல் ஆபிசராகவும் நியமித்து அந்த மருத்துவக் குழுவினரை வழி நடத்துவதென்றும் என்னைப் பணித்த விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்: பேராசிரியர் மருத்துவர். ஜா.பேபிஜான் எம்.டி.எஸ் அவர்களுக்கே நன்றிகள் உரித்தாகும்.
மேலும் கல்லூரியின் பல் மருத்துவ சமுதாயத்துறையின் தலைவர் மருத்துவர் என்.சரவணன் எம்.டி எஸ் அவர்களும் இந்த முகாம் நடைபெற தமது வழிகாட்டுதல்களையும், தமது துறையின் அத்தனை ஒத்துழைப்பையும் நல்கி வருவது பாராட்டத்தக்கது.
மேலும் இந்த 20 மருத்துவர்களை அவரவர் துறைகளிலிருந்தும் இந்த முகாம் நாட்களில் பணி விடுவிப்பு செய்து முகாமில் ஆர்வத்துடன் ஈடுபட வைத்தமைக்கும் எல்லா துறைத் தலைவர்களுக்கும் சிறப்பாக மாணவர்களின் பொறுப்பு சார்ந்த துணை முதல்வர் பேராசிரியர் மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் நன்றி உரித்தாகிறது.
மதிப்பிற்குரிய கவின் கோகுல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உதவியாக இருக்கும் மத்திய அரசின் மாவட்ட ஊக்குனராக என்னோடு வாட்ஸ் அப்பில் இணைந்து நடக்கும் செயல்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தி மகிழ்கிறார் மேலும் இந்த பாலமலையில் அரசுத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் அந்த அந்த ஊர்களுக்கு சென்றடையாமல் இராமன்பட்டியில் ஒரு வெட்ட வெளியிலேயே வைக்கப்பட்டு கை கழுவி விடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை, இந்த புகைப்படங்களை அவர்க்கும் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
மேலும் அரசின் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பெரும்பாலான கழிவறைகள், ஓய்வறைகள் திட்டத்தின் இலக்கான கழிவறையாக பயன்பாட்டில் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. முடிந்தவரை அவற்றை பயன்பாட்டிற்கானதாக செய்ய நாமும் முயன்று வருகிறோம்.
S. Thanikachalam
Nodal Officer: Summer Internship Training Program 2018:
Camp and Public Relations Officer.
VINAYAKA MISSIONS SANKARACHARIYAR DENTAL COLLEGE
SALEM.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிகை - மலைவாழ் மக்களின் வாழ்க்கை, சமூக சேவை செய்வதன் சிரமங்கள் - கவிஞர் தணிகை அவர்களின் அருமையான, பயனுள்ள பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam
ReplyDeletethanks for your sharing of this post sir. vanakkam
ReplyDeleteGreat service to mankind . Very good effort by doctors and Vinayaka missions University and dental college. Congratulations team
ReplyDeletethanks for your feedback on this post sir. thanks for your wishes.
Deletethanks who ever it may be. vanakkam.please keep contact
ReplyDeleteவித்தியாசமான பல் மருத்துவ / நலவாழ்வு முகாம் சிறப்பாக நடைபெற்றதும் பெரிய அளவில் வெற்றி பெற்றதும் அறிந்து மகிழ்ச்சி. மலைவாழ் மக்களுக்கு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக நம்புவோம். சேவை தொடர வாழ்த்துகள்.
ReplyDeletethanks R.Muthusamy for your feedback on this post. vanakkam.keep your contact.
DeleteDear and respected sir, I am RAMANATHAN bym based in Andhra. Once I visited Balamalai field last August month.i was talked with you through phone. Really I am very happy to hear about your burden and sacrificial work through your WhatsApp information.one day definitely your burden will fulfill.Next Time we will meet.convey our regards to all the staff in your organization.
DeleteThanks