விடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர் தணிகை.
கடந்த ஆண்டிலிருந்து இந்த குழுவை ஒருங்கிணைத்து நடத்தி வருபவரும் எனது நண்பருமான விடியல் குகன் நாளை மூன்றாம் சந்திப்புக்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.ஜி.எஸ் மீட்டிங் ஹாலில் ஏற்பாடு செய்துள்ளார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சந்திப்பில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறார். இந்த சந்திப்பில் எனது உரை:" புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் இடம் பெற உள்ளது.
1978 ஆம் ஆண்டில் இருந்தே விடியல் என்ற கை எழுத்துப் பிரதியுடன் ஆரம்பமானது இதன் விதை. அதன் பின் அச்சுப் பிரதியுடன் சிறிது காலம் நடைபெற்றது.
அதன் விழுதாய் முதல் சந்திப்பு கரூரில் 11/06.2017ல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது : "நெட்டை மரங்களென நின்றார்" என்ற தலைப்பில் எனது உரை வீச்சு இடம்பெற்றது அத்துடன் ஆடல் பாடல் என நிறைய நிகழ்வுகள் ஏன் ஒரு படிக்க பொருளாதாரச் சிக்கலில் இருந்த ஒரு ஏழை மாணவருக்கும் கல்லூரியில் மேல் படிப்பு படிக்க உடனடியாக நிதி திரட்டி கொடுக்கப்பட்டது.
19 05. 2018ல் பழனி ராயல் பார்க் ஹோட்டலில் முதலாண்டை விட மிகவும் சிறப்பாகவே சுமார் 70 தேர்வு செய்யப்பட்ட நண்பர்களுடன் இந்த சந்திப்பு நடந்தது....பல்வேறுபட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலிருந்தும் கூட நண்பர்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர். தங்குமிடம் ஏற்பாடுகளும், மாலை பழனி முருகன் கோவிலுக்கு கம்பி வட ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டு முருகனின் இராஜ தரிசனம் தங்க ரதம் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு அனைவர்க்கும் பழனி பிரசாதம் வேறு வழங்கப்பட்டன எல்லாம் ஒரு பைசா எங்களது செலவின்றி. மறு நாள் அனைவரும் கொடைக்கானல் சென்றனர் நண்பர்கள் அனைவரும். என்னைத்தவிர சென்னை போன்ற வெகு தூரம் செல்ல வேண்டிய நண்பர்கள் தவிர... இந்த சந்திப்பின் போது ஆத்மாலயா என்ற ஆதரவற்ற மலை வாழ் மக்கள் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கும் அந்த தயானந்த சரஸ்வதி ஆரம்பித்து வைத்து நடந்து வரும் உறைவிடத்துக்கும் பத்தாயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது. இது அந்தப் பெண்களின் எதிர்காலத்துக்கும் மேற்படிப்புக்கும் உதவி வரும் அமைப்பாகும்.
இந்த நிகழ்வில் எனது உரை வீச்சு:" உடல் வளர்ப்போம், உயிர் வளர்ப்போம்" என்ற தலைப்பில் நிகழ்ந்தது.
மேலும் பட்டிமன்றம், விழிப்புணர்வு பாடல்கள், இப்படி பல பிரிவுகளிலும் பங்கு பெற்ற அனைவர்க்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது...
மிகச் சிறப்பான ஏற்பாடுகள்...உணவு பற்றிய கவலை எல்லாம் இல்லாமல். பத்தியச் சாப்பாட்டுக்காரன் இந்த ஒரு நிகழ்வில் எனது பிடிவாதத்தை விட்டு விட்டு பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் என்ற குறளுக்குகேற்ப கலந்து கொண்டு உண்டு வருகிறேன் எனது உடல் நலத்தையும் புறக்கணித்து இந்த நிகழ்வில் எனது பெரு நட்புக்காக பல மணிகள் கடந்து செல்கிறேன்.
வாழ்வு இயல் வழிகாட்டி என என்னை முதலில் இந்த அவையில் அழைத்திருக்கிறார்கள்...
இந்த நிகழ்வுகளில் எனது புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டு எனக்கு உதவியாய் அமைகின்றன. மேலும் கடந்த பழனி சந்திப்பில் இதுவரை வெளிச்சம் படாதிருந்த கால்நடை மருத்துவர் மறைந்த வாசவய்யா அவர்கள் எழுதி வெளியிடப்படாமல் இருந்த "வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்" என்ற நூலும் வெளியிடப்பட்டது. அந்த நூலை விடியல் குகன் வெளியிட நீதிமன்ற நடுவர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்....
,
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

மகிழ்ந்தேன் நண்பரே
ReplyDeletethanks sir vanakkam.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete