Friday, June 15, 2018

ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்: கவிஞர் தணிகை

ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்: கவிஞர் தணிகை

Madras High Court

நீதி ஆளுக்கு ஆள் நீதிபதிகளுக்கே வேறுபட்டு மூன்றாம் நீதிபதியின் கருத்துக்கு விடப்படுகின்றபோது அந்த சட்டம் நீதியில் அந்த நாட்டின் ஆளுமையில் போலித்தனம் இருப்பது சொல்லாமலே விளங்குகிறது. சட்டமும் நீதியும் ஆளுக்கு ஆள், ஆட்சிக்கு ஆட்சி, கட்சிக்கு கட்சி வேறுபடும்போது அது எப்படி அனைவருக்கும் பொதுவான முக்கியமாக ஏழைகளைக் காக்கின்ற அல்லது கீழ்த்தட்டில் உழல்கின்ற மக்களின் வாழ்வுத் தரத்தை மேம்படுத்தி நாட்டை நாட்டு மக்களை சமப்படுத்துகின்ற சட்டமாக எப்படி இருக்க முடியும்?

Madras High Court

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று இந்த நாட்டின் சட்டமும் நீதியும் சொன்னதுதானே...

பணத்தின் நீதி மட்டும் அப்படியே நிற்கிறது பாதாளம் மட்டும் பாயும் என்பது நிரூபணமாகி....
 பணம் தான் தேவைப்படுகிறது பிணத்தை அரசு மருத்துவமனையின் பிணவறையிலிருந்து கடைசிக் காரியத்திற்காக மீட்டுக் கொடுக்கும்போதும்...

மற்றபடி அரசியலும் , நீதியும், நாட்டின் சட்டத்தின் மாண்புகளும் கைகோர்த்து கூட்டணி சேர்ந்து நிற்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

குன்ஹா செய்த நீதியை இழிவுபடுத்தி அவரை இழிவு படுத்தினார்கள் பின் அதுவே சரி எனச் சொல்வதற்குள் ஒரு கட்சித் தலைவரை இயற்கையின் நீதியே தண்டித்து விட்டது....

Madras High Court

ஒரு தந்தை ஒரு தனயனை முத்தமிட்ட படத்தை தமிழகமெங்கும் ஒட்டி ஒரு கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை கேலி செய்து வருகிறது...

ஒரு தேர்தல் நடக்கும்வரை , ஒரு தலைவர் மரிக்கும் வரை ஒரு சட்டம் நீதியை நீதிமன்றங்கள் தள்ளிப் போட வழிகாட்டுகிறது எனில் அந்த நீதிமன்றங்களும் அந்தப் பாராளுமன்றங்களும் யாருக்காக எதற்காக எப்படி இயங்குகின்றன என்பதைச் சொல்ல எந்த சட்டமும் படித்திருக்க வேண்டியத் தேவையில்லை எந்த நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதுபற்றியும் சொல்லத் தேவையே இல்லை..

எல்லாம் ஏடுகளிலும் சொற்களிலும் இருக்கின்றன நடைமுறைக்கு வரவேண்டும் என எதிர்பார்த்து எழுதி வைக்கப்பட்ட யாவும்...

அந்தக் காகிதங்கள் அந்த எழுத்துகள் எல்லாம் எதற்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை வைத்துப் பார்த்தால் தெரியும்....மேலை நாடுகளில் கழிவை சுத்தம் செய்ய சில காகிதங்கள் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தல் போல... இந்த சட்டப்புத்தகத்தின் காகிதங்களும் எழுத்துகளும் ஒரு பயனுமின்றி...

Madras High Court

சட்டம் படித்தார்க்கு வேலை கிடைக்கும், வழக்கறிஞர், வழக்குரைஞர், அரசுப்பிரதிநிதி, நோட்டரி, நீதிபதி இப்படி எல்லாம்...அதுவும் ஒரு துறை அந்தத் துறை மற்ற எல்லாத்துறைகளையும் விட உயர்ந்தது என்று சொல்லிக் கொன்டிருந்தது எல்லாம் எவ்வளவு தவறானது எனக் கண்கூடாக காண்பிக்க, அரசியல் துறை அதை எப்படி மாற்றிக் காண்பித்திருக்கிறது என்பதைக் கண் கூடாகவே கண்டு கொண்டிருக்கிறோம்.

சட்டசபை நிகழ்வில் சட்டம் நுழையக்கூடாது என்கிறார் ஒரு தலமை நீதிபதி, சபாநாயகர் செய்த நீதி சரி இல்லை என்கிறார் அந்த தலமை நீதிபதியின் கீழ் பணி புரியும் மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி...ஆக தாமதிக்க எப்படி எல்லாம் வழி செய்யலாம் என்ற ஆராய்ச்சியின் வழியாக இந்த நீதி வழங்கப்பட்டிருப்பதாகவே பாமரர்கள் கருதுகின்றனர்.

Madras High Court

எப்படி நீதி வழங்கி இருந்தாலும் ஜெவுக்கு வழங்கிய நீதிபோல உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கின்றதே அதனால் இன்னும் 3 ஆண்டுக்கு அல்லது மத்திய பாராளுமன்றத் தேர்தல் வரும் கால அளவுக்கு உள்ளாவது எடப்பாடி பழனிசாமி முதல்வர் அரசு எப்படியும் பயமின்றி காலம் தள்ளலாம் போராடினால் சுட்டுத் தள்ளலாம் எவருமே கேட்க முடியாது இந்த நாட்டின் சட்டமும் நீதியும், அரசும் கட்சிகளும் அப்படி...நினைவில் கொள்ளுங்கள் தலைப்பை ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்...இது ஒரு பழமொழிதானே...புதுமை செய்யும் நாட்டுக்கு இதெல்லாம் பொருந்துமா என்ன? அது அவாரிய நாட்டுப் பழமொழி....இது பாரத நாட்டின் ஒரு மொழி.
Madras High Court


கடைசியாக ஒரு கோரிக்கை தமிழக அரசுக்கு: கண்ணகி சிலையை கடற்கரையிலிருந்து அம்மா அரசு அகற்றியது போல சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறதால் என்பது போல இது போன்ற நீதிக்கெல்லாம் நெருடலை ஏற்படுத்தும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வாயிலில் உள்ள மனுநீதிச் சோழன் சிலையை எடுத்து விடலாம்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment