முபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி: நூல் மதிப்புரை: கவிஞர் தணிகை
முபீன் சாதிகா 2017 டிசம்பரில் ஒரு நூலை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை 11 என்ற இடத்திலிருந்து தயாரித்து வெளிக் கொணர்ந்திருக்கிறார். நூலின் விலை 150. பக்கம் 176. மிகவும் நல்ல தரத்துடன் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் இணையமயம் எல்லாம் மின் ஊடகம் மின்னஞ்சல் மின் புத்தகம் என்று சென்று கொண்டிருக்கும் காலப் பயணத்தில் இப்படி நூலை செய்து வெளியிடுவது எல்லாம் எவ்வளவு கடினமான முயற்சி என்பதை என் போன்றவர்களிடம் கேட்டறிந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.
இது அவரது 3வது நூல் என்கிறார், அனேகமாக 4 வதாகவும் இருக்கலம். இவர் ஒரு ஆய்வாளர். தமிழின் பால் பற்றுக் கொண்ட பெண்மணி. தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டு இப்போது கூட சென்னையில் நடந்த டெல்யூஜ் என்ற மாநாட்டிற்கு வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு ஆய்வறிக்கைகள் கொடுத்ததை கவனிக்க கலந்து கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் விட நான் மதிக்கும் திருவில்லிபுத்தூர் என்.ரத்தினவேல் அய்யா அவர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளார். எனவே இவரைக் குறைத்து மதிப்பிட முடியாது.
மிகுந்த வேலைப்பளுவுக்கிடையே இந்த நூலைப் படித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தின்பாற்பட்டே நினைத்த இந்த விடியற்காலையில் விடியாத காலையில் இதைப்பற்றி சில கருத்துகள் சொல்லத் துணிகிறேன்.
புள் போலும் இறையாய்
பூ அன்ன அருவாய்
ஊன் நிகர் திருவாய்
மால் ஒத்த மதியாய்
என்ற வரிகள் இவரது மேதமையை கவிதா விலாசத்தை வெளிப்படுத்துகிறது மேலும் உருவகம் நன்றாக இவருக்கு வருகிறது.
நான் இலக்கியம் பல் வேறு மொழி இலக்கியம் உட்பட நிறைய கடந்து வந்துள்ளேன் கடந்து வருகிறேன். லா.ச.ராமமிர்தம், , மௌனி போன்ற கட்டவிழக் கடினாமாய் இருக்கும் எழுத்துகளுடனும், டாக்டர்,மு.வ, அறிஞர் அண்ணா, போன்ற வறட்சியான எழுத்துகளுடனும் கண்ணதாசன், போன்ற எளிமையான எழுத்துகளுடனும், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் உட்பட மிகவும் கூர்மையான எழுத்துகளுடனும் இன்றைய ஜெயமோகன் வரை, சரித்திர எழுத்துகள் படைத்த கல்கி, சாண்டில்யன், கோவி, அகிலன்,போன்ற எழுத்துகளம் கண்டவர்கள் , சுஜாதா போன்ற மாபெரும் எழுத்தாளர் வரை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் கவிதை என்று சொன்னால் பாரதி பாரதி தாசன் பட்டுக்கோட்டை இன்றைய வைரமுத்து, மேத்தா, ரகுமான், இன்குலாப்,தமிழ் இலக்கியப்பாடல்களில் வலம் வரும் திருவள்ளுவர், கம்பர், இப்படி பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம்...எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நயம் உண்டு. அவரவர்க்குரிய முத்திரை உண்டு. இவர்கள் சிலருடன் கலந்து மேடைகளில் பங்கேற்ற அனுபவமும் எனக்குண்டு.
என்னடா உளம் எனும் குமிழி பற்றி சொல்லாமல் உங்களைப்பற்றி சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும்.
நிறைய தலைப்புகளில் நிறைய கவிதைகள் நெய்திருக்கிறார். ஆனால் ஒரு முறை படித்தால் இதை உணர முடியாது. ஒற்றை மேகமாய் இவரும் இவரது எழுத்துகளும் தனியாக எளிதில் அவிழ்க்க முடியா முடிச்சிட்டுக் கொண்டு அலைந்து திரிகின்றன சாதாரணமாக பிடிக்க முடியாமல். நெடுந் தொடர் வாக்கியங்களை மிகுதியாக பயன்படுத்தி இருக்கிறார்.
புத்தகத்தின் பின் பக்கம் பாதியளவிலிருந்து அதாவது நூலை இருபகுதியாக்கினல் இரண்டாம் பகுதியில் இடம்பெற்ற கவிதைகள் சுலபமாக இருக்கின்றன இவற்றை முன்பகுதியில் வைத்திருந்தால் மேலும் நூல் சுவை பெற்றிருக்கும்
மேலும் நிறைய பக்கங்கள் காலியாக இடைவெளியுடன் இருப்பதை சில நவீன ஓவியம் கொண்டு நிரப்பி இருக்கலாம் அது புத்தகத்தை மேலும் மெருகூட்டியிருக்கும். இது எல்லாம் தயாரிப்பு பிரிவில் வருபவை. எல்லாம் வெறும் எழுத்துக் களமாகவே இருக்கின்றன. கவிதை கட்டுக்குள் அடங்காதது...அதற்கு இலக்கணம் என்றெல்லாம் அறுதியிட்டு சொல்லுமளவு அது அடங்காமல் வளர்ந்தபடி இருக்கிறது. சொல்லியும் சொல்லாமலும் அது உணர்வலைகளை படிப்பாரிடை கிளர்த்தி அவரை அந்த கவிஞரின் சுகானுபவத்துக்கு முடிந்த அளவு கொண்டு சேர்க்க முயல்வதாய் இருக்க வேண்டும்...
ஒரு
நல்ல கவிதையின்
படிக வரிகள்
மனதை விட்டகலாது
ஒரு சிறந்த விதை
மண்ணுக்குள் மக்காது...
இவர் கொண்டிருக்கும் அகமென்பதின் உள்ளே ஏதுமற்ற நிலையில் மோனம் நிலவுவதாகக் கொள்ளலாம் என்று அட்டையின் வெளிப்புறத்தில் சொல்லப்பட்டிருப்பது போல...
உளம் எனும் குமிழி
ரமண மஹரிசி சொல்லியது போல
நினைவு என்ற ஒன்ற நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்ற தத்துவப் பொருளுக்கு உண்மை நிலைக்கு கட்டியம் கூறுகிறது.
ஆனால் இவரது கவிதையின் உள்ளகம் என்பது பெரும் அமைதியை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று இவர் சொல்வது போல் தோன்றவில்லை...ஆங்காங்கே திமிறி வெளியேறத் துடித்து ஒரு இடத்துக்குள் அடைபடுவதாகவே இருக்கிறது...அது பிரவாகமாக கட்டுடைத்து வெளியே பொங்கிப் பாயும், சீறி எழும் ஒரு காட்டாற்று வெள்ளமாக புயலாக மாறி புலைத்தனங்களை அடித்துச் செல்வதாக இருக்க வேண்டும் இனி...
பொதுவாகவே கவிதை என்றாலும் இலக்கியம் என்றாலும் இரு கூறுகள்: அவை புறமாக இருந்தாலும் அகமாக இருந்தாலும்
1. கலை கலைக்காகவே என்னும் கட்சி கொண்ட படைப்பாளிகள்
2. கலை மக்களுக்காகவே என்னும் புரட்சி மனப்பாங்கு கொண்ட படைப்பின் கருவிகள்
இவர் எந்தப் பக்கம் இருக்க வேண்டும் என்ற வரையறைகளை இப்போதே முடிவு செய்து கொள்வது மிகவும் பண்பட்ட எதிர்காலத்தில் இவருக்கு மேலும் படைப்பின் ஆற்றலைப் பெருக்க காலப் பிரளய ஓட்டத்தில் இவரும் ஒரு சிறு கல் தடயமாக இருக்க மாறிக் கொள்ள மாற்றிக் கொள்ள சமுதாய நெருடல்களை, அவலங்களை மாற்றிச் செல்ல....உறுதுணையாக இருக்கும்.இருக்கட்டும்
எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல...என்பதை மௌனி போன்ற சில சிறுகதைகளை எழுதிவிட்டு சிறுகதை இலக்கியம் என்றால் இவர் பேரை விட்டு விடாமல் இடம் பெறச் செய்தல் போல...
இந்த ஆண்டு சாகித்ய அகாடமி பெற்ற இன்குலாப் போல
மிகவும் குறைவாக எழுதினாலும்
நிறைவாக நீண்ட நாள் பெயர் வளர
வாழ்த்துகள் முபீன் சாதிகா
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி நண்பரே
thanks sir vanakkam.
ReplyDelete