நாதியத்த நதி காவிரி, நாதியத்த நாடு தமிழ் நாடு: கவிஞர் தணிகை
மறுபடியும் நீர் 40 அடிக்கு நீர்த்தேக்கத்தில் மிகவிரைவாக குறைந்து வருகிறது. 47 கன அடி வருகிறதாம் 500 கன அடி குடி நீருக்குத் தேவைப்படுகிறதாம். இப்போதே நீர்க்கரையில் இருக்கும் எம் போன்ற குடித்தனங்களில் எல்லாம் குடுமிப் பிடிகள் ஆரம்பித்து விட்டன...இந்நிலையில் இனி வரும் கோடைக்காலத்தை தமிழகம் குடி நீர் த்தேவை, மற்றும் நீர்த்தேவையை எப்படி சமாளிக்கப் போகிறதோ? இந்த இலட்சணத்தில் பாசனத்திற்கு என பற்றாத பாசன நிலங்களுக்கு என போயும் சேராத நீரை குடி நீருக்கு எனக் கூட வைக்காமல் சரியான முடிவெடுக்கும் திறனின்றி திறந்து விட்ட அரசை என்ன தான் சொல்வதோ?
முதல்வர் அவரது கட்சித் தலைவிக்கு சட்டசபையில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இடத்திற்கு எதிராக அவரால் என்ன செய்ய முடியும் எனச் சவால் எழுப்புவது போல,,, கலைஞர் கருணாநிதிக்கு இன்னும் அந்த திருவள்ளுவர், மகாத்மா காந்தி,அண்ணா, பெரியார், காயிதே மில்லத்,அம்பேத்கார், காமராஜ்,முத்து ராமலிங்கத் தேவர், இராஜாஜி,எம்.ஜி.ஆர், ஆகியோர் படங்களுடன் வைக்க இடம் கிடைக்கவில்லை அதற்குள் ஜெயலலிதாவின் ஆளுயர முழு உருவப் படம் பதினோராவதாக திறந்து வைத்த் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்,ஸ்டாலினுக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தி விட்டார்க
ள்..
ஆனால் கர்நாடகத்தில் இவர் நீர் கேட்க நேரம் கேட்டபோது அந்த மாநிலத்து முதல்வரால் நேரம் மறுக்கப்பட்டதை இவர்கள் சொல்லாமல் துணை முதல்வர் காவிரி நீர் கிடைக்காது என்று பதில் உரைத்த செய்திகள் வந்துள்ளன.
இவர்கள் முடிவுக்கு வந்து விட்டனர், இனி இந்தக் கட்சி எப்படியும் கோட்டையை பிடிக்கப் போவதில்லை. இறங்குவதற்குள் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்து விடலாம் என...
கர்நாடகாவிற்கு இராஜ இராஜ சோழன் படையெடுத்து சென்று அவர்கள் அன்று கட்டியிருந்த தடையை உடைத்து நீர் கொண்டுவந்ததாக சரித்திரம் பேசுகிற தமிழ் நாட்டில்... அரசாணை பெற்றுவிட்டதாக வெட்டிப் பேச்சு வரும் அரசு மக்களுக்கு என எதையும் செய்யாமல் ஸ்கூட்டி வழங்க ஏற்பாடு செய்து வருகிறது...பேருந்து கட்டணத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஏற்றிவிட்ட நிலையில்.
காவிரி நீரற்ற நிலையுடனும்
தமிழ் நாடு நாதியற்ற நிலையுடனும்
போகப் போக செல்வதன் அறிகுறிகளும், அடையாளங்களும் நிறையவே தெரிகின்றன...
விகடன் குழுவும், அகரம் போன்ற குழுக்களும் இன்ன பிற சிறு சிறு குழுக்களும் விழிப்புணர்வை நகர்புறங்களில் ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னும் கிராம விழிப்புணர்வு கிடைக்கவில்லை...
கமல் மாவட்டத்திற்கு ஒரு கிராமத்தை தத்து எடுத்து பணி செய்து அதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பது வரவேற்கத் தக்கது...
செல்லுகின்ற நிலையைப் பார்த்தால் மத்திய அரசுடன், தமிழக மாநில அரசுத் தேர்தலும் வந்து விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது...கணபதி பாரதி பேர் வைத்த பல்கலைகழகத்தில் பலி ஆடாக, இது போன்ற கருப்பு ஆடுகள் இன்னும் மேல் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் எண்ணிறந்தன இதை எல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறோம்?
பொதுவாகவே இந்த தமிழகத்தின் மக்களை சுயநலத் திருட்டு என்னும் பேயும் மது என்னும் அரக்கனும், அரசு என்னும் திசை திருப்பும் பூதமும், வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, இலவச பிசாசுகளும் பேய்களும் கபளீகரம் செய்து வருகையில், வாக்குக்கு பணம் கொடுத்தால் போட்டு விடுவான் என்ற அரசியல்வாதியின் இறுமாப்பு மலையை இந்த சமூக ஆர்வலர்கள் எப்படி தகர்க்கப் போகிறார்கள்?
முதல் இலக்காய் குடி நீர்க் கொடுங்கள்...நீர் விற்பனை தடுங்கள். குடி நீர் விற்பனை என்பது மது விற்பனையை விட மிகவும் கொடுமையானது நீருக்காக எப்படி எல்லாம் திருட்டுத் தனம் நடக்கிறது என களத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்...எனவே சொல்லத் தோன்றியதை சொல்லி இருக்கிறேன்
நீரை மனிதரால் தயாரிக்க முடியாதபோது எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சொந்தமானதை எப்படி இந்த சில இலஞ்சம் கொடுத்து ஊழல் செய்யும் மனிதர்கள் மட்டும் கையில் எடுத்து விற்பனை செய்து சுயஇலாபம் ஈட்டிக் கொள்ள முடியும்? அதற்கு இந்த அரசுக் கட்டிலைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இடைத்தரகர்கள் எப்படி அனுமதி அளிக்க முடியும்? எப்படி இவர்கள் அவர்களின் பங்காளிகளாக பணி யாற்ற முடியும்? பதவி என்ற ஒன்று வாக்குகளால் பெற்று விட்டால் போதுமா எல்லா அராஜகமும் செய்து விட முடியுமா?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

This comment has been removed by the author.
ReplyDelete