சேலம் ரயில்வே கோட்டம், சேலம் சந்திப்புக் கொட்டம்: கவிஞர் தணிகை
எல்லாம் ஜி.எஸ்.டி கூட்ஸ் அன்ட் சர்வீஸ் டேக்ஸ் கோரஸ் பாட...நான் சில ரெயில் செய்திகளுடன் இன்று
நடை மேடை எண் இரண்டு மற்றும் மூன்றில் சரியாக பயணிகளுக்குப் புரியாத நிலையே என்றும், மேட்டூர் ரயில் தடம் எண் 2ல் மேற்கு நோக்கி நிற்கும் அதில் சேலம் ஈரோடு கரூர் மேட்டூர் என்று போட்டிருக்க கரூர் பயணிகள் அதிலும் ஏறி அமர்ந்து கொண்டு எவரும் சொல்ல வில்லை எனில் வெகு தொலைவு வந்த பின்னே ஏமாறுவதுண்டு....
அதே போல சில நாட்களில் கரூர் வண்டி தடம் எண் 3ல் நின்று கொண்டிருந்தது இப்போதெல்லாம் தடம் எண் 2 ல் மேட்டூர் ரயிலுக்கு எதிரில் பின் பக்கம் காண்பித்துக் கொண்டு நிற்கிறது. நிறைய பேருக்கு புரியாமல் இருக்க பயணிகளுக்கு எம் போன்றோர் சொல்லிப் புரியவைத்துக் கொண்டிருக்கிறோம், மல்லூர், இராசிபுரம், நாமக்கல் வழியே கரூர் செல்லும் வண்டி இது.
அதே போல விருத்தாசலம் ரயில், அதாங்க வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் வழியே விருத்தாசலம் செல்லும் வண்டி முன்பெல்லாம் தடம் எண் 2ல் மேட்டூர் வண்டிக்கு பின் புறம் காட்டிக் கொண்டு அதே தடத்தில் நிற்கும் இப்போது இது தடம் எண் 3க்கு மாற்றப்பட்டு நின்று வருகிறது.
இது அடிக்கடி நிகழும் மாற்றம் என்பதால் பயணிகளுக்கு ஒரே நிலையான அறிவிப்பு என்ற ஒன்றே இல்லை...
நல்ல வேளை நான் எல்லாம் ஒரு மணி நேரம் முன்பே சென்று அங்கே நடைமேடையில் நடந்தபடி இருந்து மேட்டூர் ரயிலில் வருவதால் நிறைய பேருக்கு வழிகாட்டியாகத் திகழ முடிகிறது. கரூர் வண்டி இப்போது ஒரு முறைதான் செல்கிறது . மிகச் சரியாக மாலை 5.30க்கு கிளம்பி விடுகிறது அது கிளம்பிய பின்னே சிலர் வந்து கேட்டு ஏமாந்து செல்வதுண்டு. ஆனால் அதுதான் ரெய்ல்வே டைம் மிகச் சரியாக பின் பற்றும் ரயிலாக இருக்கிறது.
மேட்டூர் வண்டி எப்போதுமே கோவை விரைவு வண்டி குறுக்கிடுவதால் குறுக்கிட்டால் ரெய்ல்வே நேரம் 17.30க்கு கிளம்புவதற்கு மாறாக கோவை வண்டியை அனுப்பி விட்டு 10 நிமிடம் தாமதித்து 17.40க்கும் மேல்தான் கிளம்புகிறது. அப்படியே நாம் நம்பிக் கொண்டு 17.40 என வந்து விடவும் முடியாது ஒரு வேளை கோவை விரைவு வண்டி கோவையிலிருந்து சென்னை செல்வது தாமதித்தாலோ, அல்லது குறித்த நேரத்தில் வந்து அதாவது 17.12க்கு வந்து சென்று விட்டால் குறித்த நேரத்தில் மேட்டூர் வண்டியும் கிளம்பி விடும்.
இதில் நிறைய பேர் அனுமதிச் சீட்டு இன்றியே பயணம். இப்போதெல்லாம் மேட்டூர் வண்டியிலும் நிறைய பயணிகள். ஆனால் எத்தனை பேர் அனுமதிச் சீட்டு வாங்கிச் செல்கிறார்கள் என்று கேட்பாரே இல்லை. எனவே அப்படித்தான்.சென்னை ரயிலுக்கு மேட்டூரிலிருந்து இணைப்புப் பெட்டிகள் உள்ளதால் மாலை நேர ரயில் மிகவும் முக்கியமாக சென்று கொண்டிருக்கிறது
தடம் எண் 1ல் எப்போதுமே கீழ் நோக்கி தெற்கு நோக்கி செல்லும் ரயில் வெஸ்ட் கோஸ்ட் போன்றவை வந்து கேரளா வரை செல்லும்...ஈரோடு மார்க்கமாக செல்லும் விரைவு வண்டிப் பயணமும் அதில் கிட்டும்.
தடம் எண் 1 அல்லது நடைமேடை 1 அதற்கு . தடம் எண் ஒன்.ஏ. என்பது பெரும்பாலும் கூட்ஸ் ரயில்கள், மிலிட்டரி, ஆயில், இரும்பு , சிமெண்ட் , செயற்கை மணல் லோடுகளுடன் செல்லும்.
நடை மேடை 4 அல்லது தடம் எண் 4 கீழிருந்து சென்னை செல்ல, மேல் இந்தியாவுக்கு செல்லவும் ...இணைப்புக்காகவும்...இதில் கோவை விரைவு ரயில் , சதாப்தி, ரப்தி சாகர், மும்பை நாகர்கோவில் போன்றவை வந்து செல்கின்றன.
எண் 5 நடைமேடை அல்லது தடம்.: பெங்களூரு ரயில் மற்றும் சில சமயம் ஜோலார்பேட்டை ரயிலும் கூட ...இவ்வளவுதான் சேலம் சந்திப்பு பற்றி நாம் மற்றபடி ஜெயந்தி ஜனதா, மும்பை, டில்லி, கல்கத்தா ரயில்கள் எல்லாம் கூட அவ்வப்போது கடப்பதுண்டு...
ஹைதராபாத் இணைப்பு ரயில்கள் உண்டு . நானறிந்தவரை நேரடியாக ஹைதராபாத் ரயில் ஏதும் இல்லை.
திருப்பூர் ரயில் பற்றி கோவை செல்லும் ரயிலில் நிறைய பேர் வந்து கேட்பார்கள் ....
சேலம் கோட்டமும், சேலம் சந்திப்பும் தூய்மையான இந்திய ரயில் நிலையங்களில் 12 வது இடம் என்கிறார்கள்...ஆனால் எனக்கென்னவோ இன்னும் குப்பையும், மலம் மூத்திரம் துர்நாற்றத்திற்கு குறைவில்ல்லாமலே இருப்பதாகவே உணர்கிறேன். ஏன் எனில் மக்களை அவ்வளவு எளிதாக திருத்தி விட முடியுமா என்ன,,நேற்று கூடப் பார்த்தேன் மேட்டூர் ரயிலில் கழிப்பிட வசதி நீர் ஊற்றாமல் காய்ந்து துர் நாற்றம் எடுத்துக் கிடந்தது..
அங்கு சில நண்பர்கள் மீனு என்னும் ரயிலுக்கு மின்சார ஸ்விட்ச் ஆன் செய்பவர் , கார்டுகள், பயணிகள் என்று நிறைய நண்பர்கள், ஆதம் செரீப் என்னும் நடைப்பயிற்சி நண்பர் இப்படியாக..ரயிலை ஓட்டும் ஓட்டுனர்களை பார்த்து ரயிலை இயக்குவது பற்றி சற்று அறிந்து கொள்ள வேண்டும்...
ரயிலை இஞ்சினிலிருந்து பிரிப்பது, பிரேக் இரும்பை எடுப்பது, லாஸ்ட் வெய்கிள் போர்ட் லேம்ப் மாட்டுவது ஏர் செக் செய்வது, ஏர் ரிலீஸ் செய்து பார்ப்பது, பிரேக் அப்பளை செய்து பார்ப்பது எல்லாம் உடன் எப்போதும் ரயில் துப்புரவு தொழிலாளர்களுடன் அழுக்கு மக்கள்....உடல் ஊனத்துடன், நமது ரயில்வே நிலையத்துக்கான மனநிலை மனவளர்ச்சி இல்லா அழுக்கு மனிதர்கள் எல்லாம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment