Thursday, July 13, 2017

சரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நிலவு: கவிஞர் தணிகை.

சரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நிலவு: கவிஞர் தணிகை.
Image result for fools paradise


பயணிகள் ரயில் விட்டு இறங்கி நடக்கிறேன் முன்னால் 3 பெண் பிள்ளைகள், அனேகமாக 10 ஆம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படிப்பவராக இருக்கலாம், சரவணன் மீனாட்சியில் வருகிற மாதிரியா என்று பேசிக் கொண்டார்கள், காதில் விழுந்தது காய்ச்சி ஊற்றிய ஈயமாக....

அந்தக் காலத்தில் செருப்பால் அடித்து விட்டால் அது பெரிய மானபங்கம் சிலர் உயிரையே மாய்த்துக் கொள்வார்களாம். இந்த தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள் மூலம் இந்த தொலைக்காட்சியினர் யாவரும் தமிழ் கூறும் நல்லுலகத்தையே செருப்பால் அடித்து வருகிறார்கள் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நீலி,பகல் நிலவு, இராஜா இராணி  என....மாபெரும் அழிவு சக்தி...அணுகுண்டு வீசித்தான் அழிக்க வேண்டுமென்பதில்லை. இது உயிரோடு வாழவிட்டு பெரும் கலாச்சாரச் சீரழிவையே செய்து வருகிறார்கள்.

மக்களை எல்லாம் முட்டாள்களாக, கிரிமினல்களாக ...குற்றவாளிகளாக மாற்ற முயன்று வருகிற பாத்திரங்கள் இவற்றில் எல்லாம். ஒருவர் மூக்கில் பேசுகிறார் , ஒருவர் பேசும் முன்பே கண்களில் பார்த்தே கால் மணி நேரம் ஓட்டி விடுகிறார். ஒருவர் திருடராய் இருந்து கொண்டே நகைச் சுவை செய்வாராம் ஒரு மாமியார் மருமகனை வீட்டு மருமகனாக மாற்றிக் கொண்டு அவருக்கு உணவு கூட கொடுக்காமல் பழி வாங்க தன் மகளை மணந்து கொண்டதற்காக அவன் பணிக்கு செல்வதை கூட தடுத்து தேங்காய் வாங்கி வா சட்னி ஆட்ட, முட்டை வாங்கி வா, காய்கறி வாங்கி வா சமைக்க என எல்லாம் ஆட்டி வைத்து வீட்டுக்கு வெளியே படுக்கச் சொல்லி விடுவாளாம், கதவைத் திறக்க மாட்டாளாம், மற்றவரையும் திறக்க வாய்ப்பின்றி செய்துவிடுவார்களாம்...


இன்னொரு தொடரில் எப்போது பார்த்தாலும் செம்பாவை நொறுக்கித் தள்ளுவதே வேலையாக வைத்துக் கொண்டு அவளை வீட்டை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவாராம், சாப்பாட்டில் காரப்பொடியை அப்படியே கொட்டி விட்டு சாப்பிடச் சொல்வாராம், கையை விரலைப் பிடித்து ஒடித்து முறுக்கி எடுப்பாரம்,  இப்படியே....


Image result for fools paradise

எனது வீட்டில் இது போன்ற சீரியல்களைப் பார்க்க வேண்டாம், அதுவும் என் முன்னிலையில் பார்க்கவே வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளேன். என்னால் சிறிதளவு கூட இதை எல்லாம் காதில் விழச் செய்வதில் கூட விருப்பமில்லை. நாம் முன்பே சொன்னபடி பெண்களை எல்லாம் கிரிமினல்களாக மாற்றி விடும் அவை. பெரும்பாலும் பெண்களே இதை எல்லாம் பார்க்கிறார்கள் எனத் தெரியவருகிறது.

தனிமையைத் தவிர்க்க சிலர் பார்ப்பதாகச் சொல்கிறார்கள்,சிலர் அவர்கள் பார்க்கிறார்கள் எனவே தாமும் பார்க்க வேண்டும் எனப் பார்க்கிறார்கள் மொத்தத்தில் இந்த விஷ சிலந்தி வலையில் தமிழகப் பெண்கள் மாட்டிக் கொண்டு சீரழிந்து வருகிறார்கள்.

நல்லதை சொல்லி நாட்டு மக்களிடையே நல்ல புகழடைய வேண்டிய ஊடகத்தின் பணியைப் பார்த்தால் துர் நாற்றம் எடுக்கும் புலைத்தனம்....யாரோ இரு பெண்கள் கல்லூரி மாணவரிடை போராட வாருங்கள் என புதுக்கோட்டைக்கு அழைத்ததாகவும், ஹைட்ரோ கார்பன் , மேட்டர் கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் எனப் பேசி நோட்டீஸ் அளித்த பெண்கள் ஜெயந்தி, வளர்மதி ஆகியோரை மாவோயிஸ்ட் தொடர்பாளர்கள் என காவல் துறை கைது செய்திருக்கும் நாட்டில் ஊடகத்தின் வாயிலாக நச்சை வாயிலே அல்ல நெஞ்சிலே கொணர்ந்து ஊட்டும் ஊடகத்தை பற்றி எல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை...


Image result for fools paradise

நல்ல அரசு, நல்ல மக்கள், நல்ல ஊடகங்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் முற்றாய் துறக்க வேண்டியவை தொலைக் காட்சியின் நாடகங்கள்தான்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam.

    ReplyDelete
  3. vendamnu sollum ungalukku ella serialkalin kathaiyum nalla therikirathe

    ReplyDelete