Sunday, July 23, 2017

வந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை

புலி வருது புலி என்ற பழமொழிக் கதை மெய்யாகி புலி வந்தே விட்டது: கவிஞர் தணிகை

Related image

வந்தே விட்டது பேராபத்து. குடிநீரும் , நீரும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் பேரமிர்தமாகிவிட்டது.ஏழைகள் வாங்கவும் தேக்கிக் கொள்ளவும் முடியா நிலை. மேட்டூரில் நீர் நிலை தூய்மை செய்கிறார்கள் என்று 8 நாட்கள் நீர் வராது என்று அறிவிப்பை செய்து விட்டார்கள்.

வீட்டுக்கு ஒரு கிணறு இருந்த சூழலை கெம்ப்ளாஸ்ட் அயோக்ய நாய்கள் மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத நிலையில் முன்னால் இருந்த அரசியல் பேய்களின் பேச்சைக் கேட்டு சிமென்ட் குழாய்கள் வழியே அனுப்பாமல் கழிவு நீரை நன்னீர் ஓடையின் வழியாக அனுப்பி இந்தப் பகுதி வாழ்வாதரத்துக்கே வஞ்சகம் விளைத்து விட்டார்கள். விளைவாக இன்று எல்லா பயன்பாட்டுக்கும் காவிரி நீரை நம்பியே மேட்டூர் மக்கள்.
\
ஆனால் காவிரியில் 25 அடி இந்த ஆடி மாதத்து உச்சக் கட்டக் காலத்தில் .மக்கள் எல்லாம் நீரின்றி இதே நிலை நீடித்தால் குடி பெயர்ந்தாக வேண்டிய நிலை வரும் என்றே எண்ணுகிறேன்.

தங்கத்தை விட குடி நீரின் விலை அதிகம் கூட ஆகலாம். வீட்டின் மேல் தொட்டி டேங்குகள் வைத்திருப்பார் எல்லாம் நீரை நிறைத்து வைத்திருப்பார் எல்லாம் பிழைத்துக் கொள்ளலாம் ஆனால் அது மட்டும் காலம் முழுதும் வந்து விடுமா? டேங்கரில் நீர் வாங்கி வருகிறார்கள். நிலத்தடி நீர் மட்டும் எவ்வளவு நாளுக்கு வரும்...எங்கும் போதாமை இல்லாமை...

இதில் ஆடி அமாவாசைக்கென்று புரோகிதர்களின் சமஸ்கிருத சத்தம் கோவில் எங்கும்....

டெல்லியில் உயிரியில் பூங்காவில் புலிக்கும், சிம்பன்ஸி குரங்குக்கும் பிறந்த நாள் விழா என கேக் ஊட்டியபடி கொண்டாடிப் பார்க்கிறார்களாம் அங்கே விவசாயிகள் மண்டையோடுகள், எலும்புகள் வைத்து போராடியவண்ணம் அரை மொட்டை அடித்துக் கொண்டு போராடியும் கேட்க நாதியில்லை. அதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் தமிழக அரசும் இல்லை.

இந்நிலையில் ஜந்தர் மந்தரில் இந்த விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட கழிப்பகம் வேண்டுமென்றே சில நாட்கள் சுத்தம் செய்யா நிலையில் கழிவு நீர் வெளியேறாமல் இவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே வந்து நாற்றம் எடுக்கிறதாம்.

இதெல்லாம்தான் இந்த அரசின் ஆட்சியின் இலட்சணங்கள்..இராம் நாத் கோவிந்த், வெங்கய்யா நாயுடு இருவரே பாக்கி.இனி இந்த நாட்டின் பிரச்சனைக்கெல்லாம் இந்த நாட்டின் முதல் குடிமகனாய், இரண்டாம் குடிமகனாய் வந்து தீர்வு செய்து விட...

நீர் பணக்கார சொத்தாக மாறி விட்டது, தனியார் மயம் குடிநீரில் கொண்டு வந்து நீரை எடுத்து விற்பனை செய்தார் எல்லாம் நாட்டுக்கு சேவை ஏன் உலகுக்கே சேவை செய்த வள்ளல்களாய் உலகே பாராட்டுப் பத்திரம், விருதுகள் வழங்க கௌரவிக்கப்படுகிறார்கள்...

இனி நீர் திருட்டு, நீர்க்கொள்ளை, நீர் கொண்டு செல்லும் வாகனம் வழி மறிப்பு, கடத்தல், நீருக்காக கொலை எல்லாம் நடக்கும்...

இந்த நிலை மாற வேண்டுமானால் நீரும் நிலமும் பொது உடமையாக அரசே கையகப்படுத்த வேண்டியதன்றி வேறு வழியே இல்லை...

நிலை ஒரு படி அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. சொல்லத் தரமில்லா நிலை என்று சொன்னால் ஒரு படி இன்னும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தை, வலை தளத்தை வாட்ஸ் ஆப்பை, வலைப்பூக்களை ,முகநூலை வைத்துக் கொண்டு தாகம் தீர்க்க முடியாது...நாக்கை கூட வழிக்க முடியாது. எல்லாம் சர்க்கரை என்று சொன்னவுடன் இனிக்கும் என்ற கதைதான்...

பிக் பாஸ் கமலை முதல்வராக்கலாம்.

அதைக்கூட அப்படி சொல்வதற்கு எஸ்.வி. சேகர் போன்றோர் ரஜினி முதல்வராம், கமல் துணை முதல்வராம் என கமலை தாழ்த்தி ரஜினியை உயர்த்தி பேசி ஒத்த கருத்தைப் போல தமது வேறுபாட்டை காட்டி இருக்கிறார்

வேண்டாம் அரசியல் வேண்டாம் என்னும் ரஜினிக்கு வாய்ப்பளிப்பதை விட மகக்ள் வாக்களித்தால் நானும் முதல்வர்தான் என அரசியலுக்கு வர விரும்பும் கமலுக்கு வாய்ப்பளிப்பது நல்லதுதான்...

தேசிய நீர்வழிச்சாலை சொல்லும் ஏ.சி.காமராஜ் அவரது காலத்தில் அமையுமா இல்லை சசியின் கர்நாடக புராணமாய் நீளுமா என்பதெல்லாம் காலம் காட்சிப் பொருளாய் காட்டிக் கொண்டிருக்கட்டும்...
Related image


குமாரசாமி தீர்ப்பு செய்த போது இந்த கர்நாடகம் மிகவும் தூய்மையாக இருந்தது இந்த சசியின் செயலால் மட்டுமே சிறைத்துறை கெட்டுவிட்டதாம்.
என்றாலும் ரூபா காவல்துறை களங்கமில்லாப் பெண்மணி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு அவர்க்கு மாறுதல் பரிசளித்த கர்நாடகம் அவரை தமிழகத்துக்கு அனுப்புவது நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: