Tuesday, March 7, 2017

முப்பரிமாணம்: கவிஞர் தணிகை

முப்பரிமாணம்: கவிஞர் தணிகை


Image result for mupparimanam



சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடிக்க, பழைய கதையில் ஒரு நல்ல கிளைமாக்ஸ் செய்து வழங்கி இருக்கிறார்கள். இடையில் தாயை இழக்கிறார் போதை மருந்துக்கு அடிமையான கதிர் என்ற இளைஞர். இவருக்கும் அனுஷா என்னும் பெண்ணுக்கும் சிறு வயது முதலே காதல். முதல் காதல் என்றும் சொல்லலாம். முதல் காதல் காலத்திலிருந்தே இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்றும் சொல்லலாம்

அதிகம் மெனக்கெடாமல் அதிக பொருட் செலவு விரயமின்றி நிறைய நடிகர்களை பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள். எல்லா காலத்திலும் சொல்லப்பட்டு எப்போதும் இளைய சமுதாயம் சந்தித்து வரும் கதை அதே போரடிக்காத போராடி வரும் காதல் தான் மையக் கரு.

எல்லார் வாழ்க்கையிலும் எல்லாரும் கேட்பதுதான், காதலிப்பது என்பது திருமணத்திற்காகத்தானே அதன் பின் ஏன் காதலிகள் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு விட்டுப் பிரிந்து வேறொருவரை மணமுடித்துச் சென்று விடுகின்றனர்? காதலிக்கும்போது இவர்களின் பெற்றோரின் நிலையை இவர்களால் உணரமுடிவதில்லையா? இல்லை இவர்களுக்கு எதிர்காலம் என்றால் என்ன என்றே தெரிவதில்லையா? பிறர் வாழ்க்கை தொலைந்து போனால் அது நாம் செய்யும் பாவம் என்பதெல்லாம் புரிவதில்லையா?

Image result for mupparimanam

இது போன்ற கேள்விகளுடன் இந்தக் காதலி தனது முதல் காதலை, பால்ய காதலை விட்டு விட்டு ஒரு பிரபல நடிகரை மணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என வாழ்க்கை கணக்கு போடுகிறார் கொடி த்ரிஷா போல.

அவற்றுக்கு எல்லாம் பதிலடியாக இந்தக் காதலன் என்ன செய்தான், என்ன செய்கிறான் என்பதே சினிமாவின் முடிச்சு. இதைப் பற்றி பாக்யராஜ் ரெயில்வே ஸ்டேசனில் தினமும் குரல் வழியே இந்தக் காதலர்களுக்கு நேர்ந்தது மிகக் கொடுமை எனச் சொல்லி விளம்பரம் செய்து கொண்டிருந்தது இந்தப் படத்தை என்னைப் பார்க்கத் தூண்டியது.

தம்பி இராமய்யாவுக்கு எல்லாம் வேலையே இல்லை. நாயகியாக நடிக்கும் இந்தப் பெண் ஸ்ருஷ்டி நன்றாக நடித்திருக்கிறார்.

Image result for mupparimanam


நல்ல கேள்வியைத்தான் எழுப்பி இருக்கிறார் இயக்குனர் அதிரூபன். ஆனால் இது ஒன்றும் புதிய கேள்வி அல்ல. இருந்தாலும் நம் சமுதாயத்தில் இது பதியுமா மாறுமா? என்பதெல்லாம் நம்முள் எழும் வழக்கமான கேள்விகள்.

பார்க்கலாம். 40 மார்க்கும் கொடுக்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment