Wednesday, March 29, 2017

10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதாடா?: கவிஞர் தணிகை.

10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதாடா?: கவிஞர் தணிகை.

Image result for 1o rupee coin

இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு முறை இந்த 10 ரூபாய் நாணயம் செல்லும் புழக்கத்திற்கு பெற்றுக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொள்ளவும் என்று அரசு ஆணையாய் அறிவிப்பு செய்த போதும் இந்தப் புல்லுருவிப் பதர்கள் அதை ஏற்க மறுத்து வாங்கவே மறுப்பதால் இந்திய ரிலையன்ஸ் குழுமத்திற்கு ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை...ஆனால் என்னிடம் ஒரு காசும், என் மகனிடம் ஒரு காசும் வந்து மாட்டிக் கொண்டுள்ளது. அதை கோவிலுக்கு காணிக்கையாகக் கூட கொடுக்க எங்களுக்கு மனமில்லை. அரசு சொல்வதை எந்த சாமி கேட்கிறது? அல்லது எந்த அம்மா சாமிகள் சொல்வதை அரசு கேட்கிறது? இயலாதார்க்கு கொடுத்தாலும் ஊ ஹூம் வேண்டாம் சாமி செல்லாத காசை எங்கிட்ட கொடுக்கலான்னு பார்க்கிறீரா என சர்வ ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள்,அட நம்ம மோடி அரசு வித்தை இதுதான்...காய் கறிகளும் , சமையல் எரிவாயு விலையும் எக்கச்சக்கமாக ஏறி எட்ட முடியாமல் போக‌,

அட இப்போ கோதுமைக்கும் துவரம்பருப்புக்கும் 10 வரியாம், நுகர்வோருக்கு அடி, விவசாயிகளுக்கு நல்லதாம், டில்லியில் உண்ணா நோன்பிருக்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் நல்லதுதான் டில்லையை என்ன்னைக்கு அவர்கள் சுற்றிப் பார்ப்பது, சோறில்லாமல் செத்தாலும் டில்லியில் சாவது நல்லதுதானே? மோடி மஸ்தான் பாபு கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடறார் பார்க்கலாம் வாங்கோ வாங்கோ...அட நம்ம ஆதித்யநாத் இன்னும் எம்.எல்.சி,எம்.எல்.ஏ ஆகாமலே உ.பி முதல்வர் காதலரை சூத்தா மட்டையில் குண்டாந்தடியால் போலீஸை விட்டு அடிப்பதென்ன, கசாப்புக்கடைக்காரர்கள் பொல்லாப்பை பெற்று இப்போது டில்லியில் கூட மாமிசக் கறி விலை ஏறிப்போச்சாம்...

உப்பு விலை கிலோ 750க்கு கல் உப்புதான், ஏறிய புதிர் உங்களுக்குத் தெரியும்தானே? இனி உப்பே கிடைக்காது என்ற புரளியை நம்பி அனைவரும் மூட்டை மூட்டையாக வாங்கி இருப்பு வைத்துக் கொண்டார்கள் ...ரிலையன்ஸில் அதை அடுத்த சில மாதங்கள் வரை டாட்டா லோ சோடியம்  லைட் சால்ட் கூட கிடைக்கவில்லை.

அதெல்லாம் போகட்டும் நம்ம கதைக்கு வாரோமுங்க: இரயிலில் போகலாமா பஸ்ஸில் போலாமா ஒரு பெரிய போராட்டம் எனக்கு 5 ரோடு சேலத்தில் இருந்தபடி...சரி ட்ரெயின் பாஸ் இப்படியே வீணாகப் போகிறதே என  பஸ்ஸில் வந்திருந்தா நேரத்தில் வந்து ஒரு 4+4 கி.மீ வாக்கிங்க் அடித்திருக்கலாம். ஆனால் அந்த வாக்கிங்க்குக்கான விலை 25 கொடுக்க வேண்டியதிருக்கிறது எனக்கு.நேரம் நிறைய இருந்தது டெஸ்க் டாப் யு.பி.எஸ் பாட்டரியை வாங்கிக் கொண்டு மணி பார்த்தால் 4.15 மாலை...சரி வேண்டாம் என யோசித்தபோது நமது போராட்டத்தை தீர்க்க ஒரு ஜங்ஷன் பஸ்...உடனே ஏறிக் கொண்டேன் மனப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி. 4.25க்கு  ஜங்ஷன் போனேன் அது வேறு. அந்த பிளாட்பார்மில் நடை 5.40க்கு ட்ரெயின் எடுத்து 7 மணிக்கு வீடு வந்து சேர்ந்தது வேறு வேறு கதை.

ஆனால் அந்த பேருந்தில் நல்ல நடத்துனர்,மேட்டூருக்கு செல்ல எடுத்து வைத்திருந்த 20 ரூபாய் நோட்டுக்கு சலித்துக் கொள்ளாமல் சில்லறை கொடுத்தார் 16 ரூபாய் எல்லாமே நாணயங்கள். அதில் ஒன்று 10 ரூபாய் நாணயம். மற்றவை 3 இரண்டு ரூபாய் நாணயஙகள். டிக்கட். 4 ரூபாய்.

என்னைப் பார்த்தால் சில சமயம் இளிச்ச வாயனைப் பார்ப்பது போன்று இருக்குமோ என்னவோ, சில சமயம், பழம் வாங்க சென்றால் அழுகிய பழத்தை தலையில் கட்டி விடுவார்கள், காய் கறி வாங்க சென்றால் காய்ந்து போனதை முற்றியதை போட்டு விடுவார்கள், தேங்காய் வாங்கினால் கூட ஏமாந்து விடுவேன் இப்படி எதை எடுத்தாலும் சொதப்புவதால் வாயை கையை  கட்டிக் கொண்டு விடு விட்டா வேலை வேலை விட்டா வீடு என வாலை சுருட்டிக் கொண்டு வந்து விடுவதுண்டு..

அந்த 10 ரூபாய்க்கு நாணயத்துக்கு வேறு நோட்டு கேட்டுப் பார்க்கலாமா அந்த நடத்துனரிடம் வாங்கலாமா என யோசித்தபடியே வாங்காமலே வந்து விட்டேன்.

இங்கு எனது டெஸ்க் டாப்பிற்கு  யு.பி.எஸ்  பேட்டரி மாற்ற‌ வந்த எமது வீட்டு ஆஸ்தான சர்வீஸ் மேன் சதீஸ் அண்ணா, ஒரு க்விக் பிக்ஸ் வாங்கி வாருங்கள், 5 ரூபாய் தான் இருக்கும் என்றார், சாந்தா மளிகை கடைக்கு ஓடினேன், வீட்டில் யாரும் இல்லை...அங்கே மாலைக் கூட்டம், அருகில் உள்ள கடை அதுதான்.என்னைப் பார்த்தவுடன் அந்த க்விக் பிக்ஸை எடுத்து கொடுத்தார் அந்த 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்தேன் , என்னிடம் யாரும் வாங்குவதில்லை அது வேண்டாம் என்று கண்ணியமாக மறுத்தார், எனக்கு இப்போதுதான் டவுன் பஸ்ஸில் கொடுத்தார்கள், நான் வாங்கிக் கொண்டேனே என்றேன்,இங்கு யாரும் வாங்குவதில்லை என்றார், இது இப்படி நடக்கும் என்று  தெரிந்தே சில்லறை 2 இரண்டு ரூபாய் நாணயமும் ஒரு ஒரு ரூபாய் நாணயமும் கொண்டு சென்றதக் க்கொடுத்து விட்டு வந்து  நாணயமாக வந்து சேர்ந்தேன்...

யோவ் மோடி வெளி நாட்டில் இருக்கும் இந்தியப்பணத்தைக் கொண்டு வந்து எங்களது கணக்குக்கு ஓவ்வொரு வங்கிக் கணக்கும் 15 இலட்சம் போடுவதாக வாக்களித்து வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டு நல்லாட்சி நடத்துகிறீர்? நினைவிருக்கிறதா? நாணயமே இல்லையே....அந்த ஒரு ரூபாய் செல்லுகிறது இந்த 10 ரூபாய் செல்லாக்காசாகி பள பள என்று புத்தம் புதிதாய் சிரிக்கிறதே.... இதுதாய்யா ஒங்க ஆட்சி...

யோவ் சுப்ரீம் கோர்ட் தண்ணீ விடச் சொன்னதை கர்நாடகா அரசு பின்னால ஒட்டிய மண்ணைப் போல  தட்டி விட்டுக் கொண்டிருக்கிறதே, அவர்களுக்கே கிருஷ்ணராஜ சாகரில் தண்ணீ இல்லையாமே என்ன செய்யப் போகிறாய் ஈஷா ஜக்கியுடன் வந்து சேர்ந்து மழை வேண்டி யாகம் நடத்து...பிரார்த்தனை செய் யாவும் நடந்து விடும் எங்க அம்மா நிரந்தர முதல்வரானது போல....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை..

Image result for 1o rupee coin

   ஒன்று ஜனங்க அரசு, சட்டம், நீதி, நிர்வாகம் சொல்வதை கேட்க வேண்டும் அல்லது அரசு ஜனங்க சொல்லும், நினைக்கும் கருத்துக்கு மதிப்பளித்து ஆள வேண்டும்..இங்கு இரண்டுமே இல்லை...நாங்கதான்யா நடுவில கிடந் து
அல்லாடறோம் இந்த 10 ரூபாயை செலுத்தவும் முடியாமல் வாங்காமல் இருக்கவும் முடியாமல்....

4 comments:

  1. உண்மைதான் நண்பரே
    ஒன்று ஜனங்க அரசு, சட்டம், நீதி, நிர்வாகம் சொல்வதை கேட்க வேண்டும் அல்லது அரசு ஜனங்க சொல்லும், நினைக்கும் கருத்துக்கு மதிப்பளித்து ஆள வேண்டும்..இங்கு இரண்டுமே இல்லை..

    ReplyDelete
  2. ஐயய்யோ என்னிடமும் ஒரு பேருந்து கன்ரக்டர் பத்து ரூபாய் காசை கொடுத்து விட்டாரே என்ன செய்ய மோடிஜி எனக்கும் வழி சொல்லுங்கள் எசமான்.

    ReplyDelete
    Replies
    1. you are doing fun or really expressed I dont know anyhow thanks for your feedback on this post. vanakka.pl.keep contact

      Delete