Wednesday, March 15, 2017

லோகனும் யாக்கையும் மாநகரமும் : கவிஞர் தணிகை

லோகனும் யாக்கையும் மாநகரமும் : கவிஞர் தணிகை

Image result for logan review

ஆங்கிலப் படங்கள் ஒன்று பிரமிப்பூட்டும் விதத்தில் இருக்கும், அல்லது சிறுவர் சிறுமியரை மையப்படுத்தி இருக்கும், அல்லது அறிவியல் பூர்வமாக இருக்கும்..

லோகன்: தமிழ் டப்பிங் வசனத்துடன் நன்றாக செய்யப் பட்டிருக்கிறது. அந்த அதி வேக சிறுமிதான் மையக் கதையை நகர்த்தி செல்கிறார் நியூட்டன் என்ற மனித இனத்தை இந்த சிறுவர் சிறுமியைக் கொண்டு உருவாக்குகிறார்கள். பின் அவர்களும் வேண்டாம் என அதை விட அதிக சக்தி படைத்த ஒரு படைப்பை உருவாக்கி விடுவதால் இந்த நியூட்டன் சிறுவர் சிறுமிகளை கொன்று விட அந்தக் கூட்டம் துரத்துகிறது .அந்தக் கூட்டத்திலிருந்து லோகன் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார், லோகனின் குரு அதற்கு எப்படி உதவுகிறார், லோகன் தம் குருவுக்கு எப்படி உதவுகிறார் மேலும்

வெயில் அல்லது வெளிச்சம் பட்டாலே அழியும் இனமாக லோகனின் உதவி செய்யும் பாத்திரம், ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் ஒவ்வொரு சக்தி, புகை விடுதல், நார்க் கொடியால் கட்டுதல், மேலே தூக்கிச் செல்ல, கீழே இறக்கிவிடல் இப்படி பலவகை வித்தைகளை தம்முள் வைத்திருக்கும் இந்த அரிய சிறுவரை படாத பாடு படுத்தி வைக்கும் கூட்டம்.

இந்தப் படம் கல்லூரி மாணவ மாணவியருக்கும், சிறுவர் சிறுமியர்களுக்கும் அரிய படமாகவே இருக்கிறது. ஒரு காமிக்ஸ் புத்தகம் படிக்கும் சுவாரஸ்யத்துடன்.

Image result for yaakkai


யாக்கை: உடல், மனித உடலின் எல்லா உறுப்புகளையும் விற்கலாம், ஏன் இரத்தத்தையும் விற்க கொலையும் செய்யலாம் என்னும் மையக்கருவுடனான கதை. பிரகாஷ்ராஜ் நல்ல போலீஸ் ஆபிசராக மிடுக்குடன் அளவுடன் கொலைகளை இன்வெஸ்டிகேட் செய்கிறார். செல்வா சுப்ரமணியபுர கதாநாயகி ஸ்வாதி ரெட்டி இருவரும் நன்றாகவே கல்லூரி மாணவ மாணவியராகவும் காதலராகவும் செய்துள்ளனர். கடைசியில் காதலியின் கொலையை பிரிவை தாக்கு பிடிக்க முடியாமல் யார் இதற்கு காரணமோ அவர்களை எல்லாம் கொலை செய்கிறார் ஈவு இரக்கமின்றி சுத்தியலால் தலையில் அடித்தும்....

ஏற்றுக் கொள்ளக் கூடிய கதையாகவே எளிமையாகவே இருக்கிறது. இரத்தத்திற்காக அதன் தேவைக்காக மற்றவர்களை கொன்று பயனடையும் கூட்டம் இருக்கிறது என்பது கதையின் வல்லமையான சொல்.
Image result for maanagaram



மாநகரம்: நல்ல திரக்கதை அமைப்பு. எல்லாம் புதிய இளையவர்களை வைத்தே கதை நகர்த்தப் பட்டிருக்கிறது. சென்னை மாநகரம் வந்தாரை வாழவைக்கும் என்ற கருவுடன்.

சார்லி இயல்பாக நடிக்கிறார். கிராமத்திலிருந்து நகரத்துக்கு காதல் வெற்றி பெற வரும் ஒரு நல்ல இளைஞருக்கு என்ன என்ன பாதிப்புகள், காதலியை அடைய என்னவேண்டுமானாலும் செய்யத் துணிந்த வலுவான இளைஞர்க்கு நேர்ந்த பாதிப்பு, சிறுவன் கடத்தல் என பல தளங்களில் படம் பிரவேசித்து புகுந்து சென்றாலும் தெளிவாக கடைசியில் ஒருங்கிணைத்து விடுகிறார்கள். யாரோ செய்த தவறுக்கு இந்த கிராமத்து இளைஞர் தண்டனை பெறுவதும், சாலையில் அடித்து வீழ்த்தப் படுவதும், காவல் நிலையம் செல்வதும் நமக்கே நல்ல பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

குறைவான பொருட்ச் செலவில் நிறைவான படமாக இதை சொல்லலாம்.
நாம் முன் சொன்ன 3 படங்களும் குற்றம் 23 படமும் பார்க்கலாம் என்ற வரிசையில் நிற்கிறது. குற்றம் 23, மாநகரம் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்றும் யாக்கை அந்த அளவு போகவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் நல்ல நோக்கம் நல்ல தெளிவான கதை அமைப்பு. முதலுக்கு மோசமில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


2 comments: