Wednesday, March 22, 2017

உலக தண்ணீர் தினம் மார்ச் : 22: கவிஞர் தணிகை

உலக தண்ணீர் தினம் மார்ச் : 22: கவிஞர் தணிகை


Related image

உலகின் அசுத்தமான நீரைப் பருகும் முதல் 10 நாடுகளில் முதல் நாடு இந்தியா.எல்லா குடிநீர் எடுக்கும் மினரல் வாட்டர் என்று கம்பெனி நடத்துவோரை எல்லாம் கைது செய்ய வேண்டும்,அந்த ஆலைகளை எல்லாம் தேசிய உடைமை ஆக்க வேண்டும் அல்லது நிரந்தரமாக மூடிவிட வேண்டும்.

நொடிக்கு 2000 கன அடி குடி நீர்  ஜூலை 11 வரை கூட கொடுக்காத உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத கர்நாடக அரசை கலைத்து விட்டு மத்திய குடியரசு  தலைவர் ஆட்சி குடி நீருக்காக காவிரியை அதன் நீரைக் கொடுத்து தமிழ் நாட்டுக்கு குடிநீர் தாகம் தீர்க்க வேண்டும்

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் குடிநீர் பொது உடமை என்றும் அனைவர்க்கும் சம வாய்ப்பளித்து குடி நீரை சமமாக பிரித்தளிக்கும் ஆட்சி நியமங்கள் முறைமைகள் வேண்டும்.

அப்போதுதான் உலக தண்ணீர் தினம் எனக் கொண்டாடப்படுவது சரியாக இருக்கும், இல்லையேல் இதெல்லாம் வெறும் பேருக்கு, இதெல்லாம் பேருக்கு சொல்லி என்ன பயன்?

நதி நீர் இணைப்பின் தற்போதைய வடிவம், நவீன நீர்ப் போக்குவரத்து தேசிய மாநாடு என்று சேலத்தில் 29 அன்று ஒரு மாநாடு நடைபெறுவதாகவும் அதில் கார்த்திகேயன் அதாங்க ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலனாய்வாளர் முதற்கொண்டு பல பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் ஒரு விளம்பர பேனர் பார்த்தேன். முயற்சி வெல்லட்டும் வாழ்த்துகள்.

நாங்களும் முயன்றோம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பெல்லாம் உண்ணா நோன்பு எல்லாம் செய்தோம், அங்கே நான் நிகழ்த்திய உரை சிறு நூலாகவும் கூட வெளியிடப்பட்டு அனைவர்க்கும் விநியோகிக்கப்பட்டது. நதி நீர் இணைப்பு ஒன்றைத் தவிர வேறு மார்க்கமே இல்லை இந்தியா உய்ய...

இது தான் இந்த உலக தண்ணீர் தினத்தின் தணிகை தரும் செய்தி.

இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும், குடி நீர்ப் பிரச்சனை தீரவும் ஒரே தீர்வு..கங்கையைக் கழுவுகிறோம் வாருகிறோம் என்பதெல்லாம் ஏமாற்று வேலைதான்....சிந்திக்கும் மக்கள் ஒருங்கிணையட்டும் நாட்டுக்கு அந்த மகோன்னதப்பணியை செய்யும் தலைமை நாட்டை முன்னெடுத்து சென்று மகாத்மாவை விட அதிகம் புகழ் பெறட்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: