Monday, May 9, 2016

சினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் தணிகை

சினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் தணிகை

தனி மனிதராக நின்று தனக்கு நீர் கொடுக்காத சமுதாயத்துக்கு தனி உழைப்பை ஈந்து நீருக்காக கிணற்றை வெட்டி அதில் கிடைத்த நீரை அனைவர்க்கும் பகிர்ந்தளித்த பரந்த மனதுக்காரர் பற்றி பகிர்ந்து கொள்ளத் தான் வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
 நன்றி
 தினத் தந்தி.


உயர் சாதியினர் எதிர்ப்பு, தனி ஒருவனாக 40 நாட்களில் கிணறு தோண்டி அனைவருக்கும் தண்ணீர் வழங்கியவருக்கு பாராட்டு
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
225
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
திங்கள் , மே 09,2016, 9:34 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , மே 09,2016, 9:34 AM IST


நாக்பூர், 

பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவனாக நின்று கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்.

தண்ணீர் பிடிக்க மறுப்பு 

வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு சமீபத்தில் தண்ணீர் பிடிக்க சென்றார். இவர்கள் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏமாற்றத்துடன் பாபுராவ் தஜ்னேயின் மனைவி வீடு திரும்பினார். நடந்ததை கணவரிடம் கூறி வருத்தப்பட்டார். இருந்தாலும், பாபுராவ் தஜ்னே சோர்ந்து விட வில்லை. 

தன்னுடைய நிலத்தில் கிணறு தோண்டி அதன் மூலம் தன்னை சார்ந்த தலித் மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என தீர்க்கமாக முடிவு செய்தார். அதன்படி, தன்னுடைய நிலத்தில் தனி ஒருவனாக நின்று கிணறு தோண்டும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

முயற்சிக்கு பலன் 

ஆரம்பத்தில், இவரது செயல்பாட்டை மனைவி உள்பட அனைவரும் விமர்சனம் செய்தனர். நக்கலாக சிரித்தனர். எனினும், தன்னுடைய வியர்வை துளியை மூலதனமாக கொண்டு, செயலில் அவர் உறுதியுடன் இருந்தார். எண்ணி சரியாக 40–வது நாளில் பாபுராவ் தஜ்னேயின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவர் தோண்டியிருந்த அந்த கிணற்றில், எக்கச்சக்கமாக தண்ணீர் கிடைத்தது.

இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தற்போது அந்த கிணற்று நீரை வைத்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த தலித் மக்களும், உயர் சாதியினரும் பயனடைந்து வருகின்றனர். 

ஆரம்பத்தில், அவரை எள்ளி நகையாடியவர்கள் கூட, இப்போது வாழ்த்துகளை சொல்லி உள்ளம் பூரிக்கின்றனர்.

எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் நாங்கள் ஏழைகள் மற்றும் தலித் என்பதினால் அவமதித்துவிட்டார். மார்ச் மாதம் அழுதுக் கொண்டே கிராமத்திற்கு வந்தோம். யாரிடமும் யாசிப்பதால் தண்ணீர் தேவையானது பூர்த்தியடையாது என்று புரிந்துக் கொண்டேன். நான் மாலிகான் சென்றேன், கிணறு தோண்டுவதற்கான பொருட்களை வாங்கி வந்தேன், தோண்டினேன். என்னுடைய கிணற்றில் தண்ணீர் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று பாபுராவ் தஜ்னே கூறிஉள்ளார்.

அப்பகுதியில் தண்ணீர் எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்யாமல் கூட அவர் தோண்டிஉள்ளார். நான் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக கடவுளை மட்டுமே நம்பினேன், அவர் என்னுடைய வேண்டுதலுக்கு பலனாக தண்ணீர் கொடுத்து உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

மாவட்ட நிர்வாகம் பாராட்டு 

இந்த தகவல் வாசிம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேயை சந்தித்தார். மேலும், அவரது இந்த செயலை மனதார பாராட்டியதுடன், ‘‘நீங்கள் உறுதியின் உருவமாகவும், வலிமையான மன வலிமை கொண்டவராகவும் இருக்கிறீர்கள்’’ என்று புகழாரம் சூட்டினார்.

பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் மறுப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தன்னம்பிக்கையுடன், தனி ஆளாக நின்று கிணறு வெட்டி அதன் தண்ணீரை ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.

கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
225
பிரதி
Share

Sunday, May 8, 2016

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: கவிஞர் தணிகை

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: கவிஞர் தணிகை



வரும் ஆனா வராது, நடக்கும் ஆனா நடக்காது, கிடைக்கும் ஆனா கிடைக்காது செயல் படும் ஆனா செயல்படாது இது போன்ற வடிவேலுவின் வாசகங்கள் நமது இந்திய , தமிழகத் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் .ஆனா பொருந்தாது...

எங்கு நோக்கினும் பேனர், பிளாஸ்டிக் பிளக்ஸ்களாக காட்சி அளிக்கும் முன் தேர்தலின் போதெல்லாம். ஆனால் இப்போது இன்றைய தேர்தல் களத்தில் ஒரு பிளக்ஸ் பேனர் கூட இல்லை. பாராட்டுகளும் நன்றியும் நமது இந்திய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு. கட்சிகளின் வாலை ஒட்ட வெட்டியுள்ளதால் .இந்த செயல்பாடு வரவேற்கத்தக்கதே.

வாக்களிக்கும் இடமான பள்ளி பூத் வாக்குச் சாவடிகளில் இருந்து 200 மீட்டர் கணக்கில் எந்த அரசியல் கட்சியினரும் குழுமக் கூடாது என்ற தடை விதித்தது, கட்சிக்கொடிகள் கம்பங்கள், கொடிகள், தலைவர்களின் படங்கள் சிலையாக, ஓவியமாகக் கூட இருக்கக் கூடாது என்றது,பூத் வாக்கு ஸ்லிப்களை நீங்கள் அளிக்க வேண்டாம் ஆணையமே அளிக்கும் என மாற்றியது என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஜனநாயக நெறிமுறைக்கு ஒரு ஆளுமை காட்டி வருவதற்கெல்லாம் ஒரு பெரிய சல்யூட்.

ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லை. இதனால் உள்ளூர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வருவாய் இல்லை குடிக்க காசு இல்லை என்றாலும் எவருக்கும் எவருக்குள்ளும் சண்டை சச்சரவு இல்லை. எல்லா வீட்டு, கடை, தெருமுனை, சாலைச் சுவர்களும் வழக்கப்படியே அமைதியாக இருக்கின்றன. வாழ்த்துகள் தமிழக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு.



பொதுமக்களின் சராசரி அன்றாட வாழ்க்கை பாதிக்கவில்லை. அவரவர் அவரவர் பணிக்கு சென்று கொண்டே இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் தனது பணியை கண்ணும் கருத்துமாக கண்ணியமாக செய்துகொண்டிருக்கிறது.

எனவே அதன் பணியாளர்கள் தலைமை ஆணையர் நஜீம் ஜைதி முதல் ராஜேஸ் லக்கானி, சைலேந்திர பாபு போன்ற காவல்துறை கூடுதல் தலைவர் முதல் அடிமட்ட பணியாளர் வரை அனைவர்க்கும் எமது வணக்கம்.

ஆனால் திறந்த வாகனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களை மடை திறந்து கூட்டத் திடல் நோக்கி திரட்டிவருவார், கட்சிகள் மேல் ஏன் நடவடிக்கை இல்லை ? சரத் குமார் காரில் 9 இலட்சம், அ.இ.அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் சில கோடிகள், மின்வெட்டி விடியற்காலை வார்டு பிரமுகர்கள் காற்றுக்காக வெளி அமர்கையில் அவர்களுக்கு பணத்தாள்கள் அளிப்பு, ஆரத்தி எடுப்பு அன்பளிப்பு, இப்படி பண பரிமாறுதல்கள் குடும்பத்துக்கு 5000 என்றும் நபருக்கு 500, 1000,2000 என்றெல்லாம் விநியோகிக்கப்படுவதாக பகிரங்க செய்திகள் இதை எல்லாம் ஏன் எப்படி எதற்காக நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் பார்த்தபடி இருக்கிறது.?



அதிலும் முக்கியமாக ஆளும் கட்சி அ.இ.அ.தி.மு.கவின் கட்டுப்பாடற்ற இது போன்ற நடவடிக்கைகளை ஏன் கண்டும் காணாமல் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது? தேர்தல் ஆணையம்..

இந்த முக்கியமான நிகழ்வில் தேர்தலை பாதிக்கும் நிகழ்வில், திசை திருப்பும் நிகழ்வில் ஏன் வாளவிருக்கிறது? எப்படி தேர்தல் அறிக்கையில் எல்லாம் இலவசம் என்பதை வேடிக்கை பார்த்தபடி நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் வாளாவிருக்கிறது ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க வெறும் வாக்களித்தால் மட்டும் வாக்களிக்க சொன்னால் மட்டும் போதுமா? கணக்கு வழக்கு சமர்ப்பித்தால் மட்டும் போதுமா? இவர்களுக்கு போலிக்கணக்கு சமர்ப்பிக்க முடியாதா?



வேட்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமை, வாக்களிப்பின் படி விகிதாசார முறைகள் வர முக்கிய ஜனநாயக கடமை யாற்ற வேண்டமா? ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுமதி மறுத்து தேர்தலில் நிற்க தடை விதித்து வீட்டுக்கு அல்லது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாமா? இதெல்லாம் பொறுப்புள்ள ஆணையம் செய்யக்கூடாதா?

டி.என். சேஷன் என்னும் நபர்தான் முதன் முதலில் தேர்தல் ஆணையம் என்ற அரசு எந்திரம் கூட எவ்வளவு சக்தி மிக்கது இந்திய ஜனநாயகத்தில் என செயல் நடவடிக்கை ஆரம்பித்தது...1990களில் இருந்து இதன் சக்தி வெளிப்பட்டது

நவீன் சாவ்லா,டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபால சாமி,வி.எஸ்.சம்பத்,இன்னும் பலர் இதன் தரத்தை உயர்த்தினர். அதில் தமிழகத்தை சார்ந்த சிலரும் பெரும்பங்கு வகித்தனர். எம்.எஸ் கில்,எச்.ஒய்.குரேசி, பிர்மா,வி.எஸ்.ரமாதேவி, சாமிநாதன், கல்யாண் சுந்தரம் போன்றவர் பட்டியல் விரிகிறது.




நாம் இந்த பதிவுடன் சொல்ல விரும்புவது, குடியரசுத் தலைவர், பிரதமர், பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் யாவரும் ஜனநாயக மரபாகிய இந்த தேர்தல் மக்கள் விழாவை இன்னும் பொருள் பொதிந்த மக்களுக்கு நாட்டுக்கு உகந்த சக்தியாக இதை நோட்டா, 49ஓ  போன்றவற்றுடன் அடுத்த கட்டத்துக்கு பயன்படா வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்றி பல படிகள் முன் உயர்த்திச் செல்ல வேண்டும் என்பதே. சார்புடையதாய் இருக்கக் கூடாது என்பதே.

ஏன் பஞ்சாயத்து , சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் அனைத்தையும் ஒரே காலத்தில் நடத்தி முடிப்பது இது கூட தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முன் வந்து நிற்கும் எதிர்காலப் பணியாகும். ஆனால் பணியாகாது..



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, May 7, 2016

மம்மியிடம் மண்டியிடுமா தமிழகம்: கவிஞர் தணிகை.

மம்மியிடம் மண்டியிடுமா தமிழகம்: கவிஞர் தணிகை.




கடைசி வாய்ப்பு, கடைசி காலக் கட்டம், தேர்தலுக்கும் முன் இன்னும் ஒரே வாரம். எங்கு நோக்கினும் அம்மா மம்மியின் இலவசம் என்பதே பேச்சு வெயிலில் போன உயிர் மூச்சுகள் பற்றி எல்லாம் போச்சு.

பதவியில் ஏறிவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்யலாம், என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது என்றும் சொல்லி விட்டு செல்லலாம். அருகே யாரும் நெருங்கவே முடியாது.

எனவே மம்மி அதாங்க மம்மி என்றால் அம்மாதானே? வாரி வாரி இலவசம் என்று தேர்தல் அறிக்கையில் விட்டு விட்டார்கள். இப்போது யார் ஆட்சி நடந்தது ? யார் மின் கட்டணம் உயர்த்தியது? யார் பால் விலை உயர்த்தியது? யார் போக்குவரத்துக் கட்டணத்தை சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமலும் உயர்த்தியது?

யார் ஆட்சி செய்யாமலே அமமா வரட்டும் எனவே காத்திருந்தது? எந்த வித திட்டங்களும் நிறைவேற்றாமலே? யார் ஓட்டை பஸ்ஸில் இருந்து விழுந்தால் என்ன? எந்த பஸ்ஸின் கூரை பறந்து மழையில் எவர் பஸ்ஸில் இருந்து கொண்டே நனைந்தால் என்ன நாங்கள் அம்மா வரும் வரை புது பேருந்துகளை வழித்தடத்தில் இறக்கவே மாட்டோம் என்றது?

யார் டான்ஸி வழக்கு, கொடை நாடு எஸ்டேட், சிறு தாவூர் பங்களா, யார் பீனிக்ஸ் பார்க் மால், யார் போயஸ் கார்டனில் இருந்தபடியே எவரையும் பார்க்க முடியாமல் இருந்தது?அப்துல் கலாம் போன்ற மாமேதையின் இறுதி ஊர்வலத்துக்கு கலந்து கொள்ளாமல் இருந்தது

யார் சென்னை வெள்ளத்தின் போது கால் பதிக்காமல் கிடந்தது? யார்
அண்ணா பூங்காவை அரசின் நீதிமன்றங்கள் தடுத்தும் அதை மருத்துவமனையாக மாற்ற முயன்றது?

யார் புதிதாக கட்டப்பட்ட சட்டசபை வளாகத்தில் அமர மறுத்து பழைய கட்டடத்திலேயே 5 ஆண்டுகள் கடத்தியது? யார் உழவர் சந்தைகளை எல்லாம் தனி மனித துவேசத்துக்காக வழித்தெடுத்து துடைத்து ஒன்றுமில்லாமல் செய்தது?

யார் கிராமங்களை எல்லாம் இணைத்துக் கொண்டிருந்த சிறு பேருந்துகளை எல்லாம் இல்லாமல் செய்தது?

யார் தம் பேரே வேண்டும் என அம்மா உணவகம், குடிநீர், மருந்தகம் என  எல்லா இடங்களீலும் தம் பேரே விளங்க வேண்டும் என முயன்றது?

யார் சென்னை வெள்ளத்தின் போது கூட அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய பொட்டலங்களே சென்று சேர வேண்டும் என தின்கிற பிச்சை சோற்றில் கூட மண் அள்ளிப் போட்டது? கிடைத்த பிச்சைப் பொருள்களில் கூட திருடி தம் கட்சி செய்தது என தம்பட்டம் அடிக்க முனைந்து டமாரம் கிழிந்து கிடந்தது?

யார் சசி பெருமாள் சாகும் வரை ஒரு வார்த்தையுமே மதுவிலக்கு ஆதரவாக சொல்லாமல் இன்று கூட மக்கள் அதிகார அமைப்பு மதுவுக்கு எதிராக போராடும்போது இளைஞர்களை இளம் யுவதிகளை அடித்து இழுத்து துன்புறுத்தியது? துன்புறுத்துவது?

எப்படி இவர்கள் பதவிக்கு மறுபடியும் வந்ததும் மதுவிலக்கு படிப்படியாக செய்வார்கள் என எதிர்பார்ப்பது?

யார் ஒரு தெருமுனைப்பாடகரான கோவனை இரவுக்கு இரவாக கைது செய்தது? பாடாக படுத்தியது?

யார் செய்தி ஊடகங்களை திசை திருப்பி விஜய்காந்த், இளையராஜா, பீப்சிம்பு என செய்திகளை ஒன்றுமில்லாமல் செய்து ச்சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு நடந்த கொடுமையை அரசின் கையாலாமையை மறைத்து மறைக்க ச் செய்தது?

யார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவுக்கு எதிராக தம் கட்சிக்காரர்களை தூண்டி விட்டு கடைசியில் விட்டு விடுங்கள் என்றது?

யார் குன்ஹா நீதிக்கு எதிராக கர்நாடகா குமாரசாமியை கரும்புள்ளி நீதிபதியை விலைக்கு வாங்கியது உச்ச நீதிமன்றத்தையும் என்ன சேதி என கேட்டுக் கொண்டிருப்பது?

இப்படிப்பட்ட இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ள டான்ஸி பேர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தமது கை எழுத்தே அது இல்லை என்றது , சேஷன், ராம், மணி சங்கர அய்யர், சந்திர லேஹா , இன்னும் நடராஜன் வைத்திருந்த சிறு வயது பெண் என ஒரு பெண்ணுக்கு தீங்கிழைக்க முயன்றது? சிவாஜி கணேசன் சிலையை அகற்ற முயன்றது, கண்ணகி சிலையை அகற்றியது..

இப்படி சொல்ல சொல்ல விடியாத எத்தனையோ மழை மறைவுப் பிரதேசங்களில் மறைந்துகொண்டும் இன்னும் ஒரு கட்சிக்கு தலைவியாக‌ யாரும் தொடமுடியாத உயரத்தில் இருந்து கொண்டிருக்கும் மம்மி இப்போது எதற்கிந்த இவ்வளவு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலறிக்கை தந்திருக்கிறார்? பதவி இன்னும் முடிந்து விடக் கூடாதே என்பதற்காகத்தானே?

இவர் ஏற்கெனவே கொடுத்த இலவசங்கள் எல்லாமே எவருக்காவது பயன்பட்டதா? இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு கேடுதான்.

முதல்வரை யாராவது சென்று பார்க்க முடியுமா? வெயிலில் வெந்து சாகவேண்டுமானாலும் முடியும்? இரவோடுஇரவாக குடும்பத்துக்கு 5000 நபருக்கு ஆயிரம் என தருவதாக எல்லாம் செய்திகள்...இவர் கட்சி வேட்பாளர் சரத்குமார் தமது திருச்செந்தூர் தொகுதிக்கு மாநிலமெங்கும் வாக்கு சேகரிப்பதாகவும், வாகனத்தில் 9 லட்சம் வைத்திருந்ததாகவும் மற்றொரு இவரதுகட்சிக்காரர் வீட்டில் கோடிகளில் பணம் தேர்தல் ஆணையத்தால் பிடிபட்டதாகவும் செய்திகள்..

ஆனாலும் இந்தக் கட்சி மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. இது போல் நிகழும்போது அந்தக் கட்சியானது தேர்தலில் இருந்து விலக்கப் படவேண்டும்.

அல்லது உண்மையான மக்களாக இருந்து நீங்கள் அவர்களை ஆட்சியிலிருந்து பதவியிலிருந்து விலக்குங்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, May 5, 2016

நிஜமா இதெல்லாம் சாத்தியமா அ.இ.அ.தி.மு.க? கவிஞர் தணிகை

நிஜமா இதெல்லாம் சாத்தியமா அ.இ.அ.தி.மு.க? கவிஞர் தணிகை




இன்றைய டாப் டாக் அ.இ.அ.தி.மு.கவின் பெருந்துறையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை. நண்பர் சொன்னார் இதை ஏற்கெனவே ஊகித்து. இனியும் மக்கள் இதற்கெல்லாம் சாய்வார்களா? என்பதுதான் இனி வரும் நாட்களின் விடையாக இருக்கும்.

மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% தள்ளுபடி, மடிக்கணினி இன்டெர் நெட்டுடன் இலவசம், மொபைல் இலவசம், மின் கட்டணம் 100 யூனிட் வரை  இலவசம் இப்படியாக எல்லாம் இலவசமாகவே தெரிகிறது அந்தக் கட்சியின் தோல்வி பயம் தேர்தல் பீதி இப்படி வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஏனெனில் மதுவிலக்கையும் படிப்படியாக அமல்படுத்துவதாகவும், டாஸ்மாக் கடைநேரத்தை குறைப்பது முதலாக அடியோடு நிறுத்துவதாகவும் மதுஅடிமைகளுக்கு மறு வாழ்வு மையங்கள், மருத்துவ உதவிகள் செய்வதாகவும் இருப்பதால் மதுவின் இப்போதைய வருவாயும் இல்லை (சசி பெருமாள் ஆவியே ப்ளீஸ் நோட் இட்).

அதன் பின் எப்படி இவ்வளவு இலவசங்கள் தரமுடியும்? மக்களை டெம்ப்ட் தீயக் கவர்ச்சி செய்கிறது. மக்கள் என்ன செய்வார்களோ? என்பதும், என்ன செய்தார் என்பதும் 19 மே மாதம் வெளிச்சமாகிவிடும்

ஜெ ஜெயித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இப்படி பிதற்ற வைத்திருக்கிறது என்பது தெரிகிறது. ஏற்கெனவே பல லட்சம் கோடி பற்றாக்குறை நிதி நெருக்கடி கடன் சுமை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிற ஒரு அரசு அதுவும் ஏற்கெனவே கடந்த 5 ஆண்டில் ஏதும் செய்யாமல் ஏமாற்றிய அரசு இதை எல்லாம் செய்கிறேன் என எப்படி எல்லாம் ஏமாற்ற முனைகிறது என்று  பாருங்கள்.

இவர்கள் கடந்த முறை கொடுத்த மிக்ஸி, கிரைன்டர், மின்விசிறி யாவும் எப்படிவிரயமான குப்பையாக காயலான் கடையில் எனத் தெரிந்த பிறகும் மக்கள் இதற்கெல்லாம் கிடைக்கும் என மயங்கி வாக்களிப்பார்கள் என எப்படி இவர்கள் நம்புகிறார் எனத் தெரியவில்லை. யார் இதை எல்லாம் செய்தார்கள் செய்வார்கள் என்ற மேக் இன் புரோடக்ட் நேம் இல்லாமல் அனைத்தும் விநியோகிக்கப் பட்டுள்ளன என என்.டி.டி.வி புட்டு புட்டு வைத்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் இவை எல்லாம் மீறி

இதற்கும் மயங்கி மக்கள் வாக்களித்து விட்டார்கள் எனில் தமிழகத்தின் நிலையை எண்ணிப் பார்க்க முடியாது.




ஒரு பக்கம் உச்ச நீதிமன்ற வழக்கு பம்முகிறது, பயமுறுத்துகிறது, மறுபக்கம் பதவி ஆசை ஜெயித்தே ஆக வேண்டும் என நெருக்குகிறது அதன் எதிரொலியாக எதிரொளியாக இருக்கிறது இந்த தேர்தல் அறிக்கை. மேலும் எதிராளிகளுக்கு மிரட்சியும் ஊட்டுகிறது.

எப்படியும் இப்படி எல்லாம் சொல்லி வந்து விட்டால் பதவி ஏறிவிட்டால் அதன் பின் செய்தால் என்ன? செய்யாவிட்டால்தான் என்ன? பதவிதான் பவராயிற்றே மிக்க சக்தி ஆயிற்றே...

ஏமாற்றி வந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் தேர்தல் அறிக்கை. தமிழக மக்கள் கடந்த முறை போல இந்த முறை ஏமாறப்  போகிறார்களா? அல்லது தூக்கி வீசி எறியப்போகிறார்களா அறிக்கையை  இந்த எதுவும் செய்யாத போலி ஆட்சியை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Wednesday, May 4, 2016

புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் வேட்பாளர்களின் களமும்,வாக்காளர்களின் கணிப்பும்  கவிஞர் தணிகை.



03.04.2016 அன்று மேட்டூர் தள்ளி காவேரிகிராஸ் அருகில் உள்ள எம்.ஐ.டி. என்ற கல்வி நிறுவனத்தில் மேற்சொன்ன தலைப்பில் ஒரு ஒளி‍&ஒளிப்பதிவு நடைபெற்றது

அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்: ஜி.கே. மணி.தி.மு.க தலைமையில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.பார்த்திபன்,தேர்தல் மன்னன் பத்ம ராஜன் கொங்கு வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிக நல்ல முறையில்.எம்.ஐ.டி கல்வி நிறுவனம் சார்ந்தவர் வேட்பாளர்களை மரியாதை செய்தார்.

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை வரவில்லை. கடைசி வரை அவரது மேடையில் போடப்பட்ட இருக்கை காலியாகவே இருந்தது.

சுமார் 20க்கும் மேற்பட்டோர் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டார்கள். புதிய தலைமுறை தம்பி பாலகிருஷ்ணன் வேண்டுகோளுக்கிணங்க அடியேனும் கலந்து கொண்டு எனது கருத்துகளை மிகச் சுருக்கமான நேரத்துக்குள் சொல்ல வேண்டிய நிபந்தனை இருந்ததால் சுருக்கமாக பேசியுள்ளேன்.

நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு வேட்பாளர்கள் அறிமுகம் என்ற பேரில் அல்லது வேட்பாளர்களின் களமும் கணிக்கும் வாக்காளர்களும் என்ற பேரில் ஒலி‍ ஒளிபரப்பப் படுகிறது. அனேகமாக இந்நிகழ்வு தினமும் ஒரு தொகுதியுடன் நடந்து வருகிறது. மேட்டூர் தொகுதியின் சுற்று நாளை அல்லது மறு நாளில் இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.



கட்சி சார்பில்லாதவர்கள் பங்கெடுத்துக் கொள்ளும் நிகழ்வு என்றார்கள் ஆனால் அங்கு பா.ம.க அன்பர்களே அதிகம் இருந்தது சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டது. மேலும் நிகழ்வு 8மணி முதல் 10 மணி என்றார்கள். ஆனால் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் வந்து இருக்கையில் அமரவே 9 மணிக்கும் மேல் ஆகிவிட்டது. நிகழ்வு முடிந்து வீடு வந்து பார்த்தால் இரவு மணி 11.40. விடியற்காலம் 4 மணிக்கு எழுந்து பணிக்கு கிளம்ப வேண்டி இருந்ததால் கொஞ்சம் சிரமம் கொடுப்பதாக மறு நாள் தூங்கி வழியும்படியாகவே பேருந்து பயணங்கள் அமைந்திருந்தன.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, May 2, 2016

உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍ சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.

உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் மீது செருப்பு வீசல் ‍  சிறப்பு தேர்தல் செய்திகள்: கவிஞர் தணிகை.



பாப்பி ரெட்டிப் பட்டி தமது தொகுதியில் உள்ள நத்த மேடு என்ற பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற உயர்கல்வித் துறை அமைச்சர் மேல் கையில் கிடைத்ததை எல்லாம் வீசினர் பொதுமக்கள் அதில் செருப்புகளும் அடங்கும். உடனே காவல் காக்கப்பட்டு அமைச்சர் வாக்கு சேகரிப்பதிலிருந்து பின் வாங்கி அந்த ஊரிலிருந்து திரும்பினார்.

விஜய் காந்த் அம்மாவை அந்த அம்மா என்ற பட்டம் கொடுத்தது யார்? நீயே வைத்துக்கொண்டதுதானே? முடிந்தால் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற வேண்டியதுதானே? ஏன் இன்னும் இரட்டை இலையை வைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறீர் ? அது எம்.ஜி.ஆர் சின்னம். அம்மா மருந்தகம் அம்மா குடிநீர் அம்மா உணவகம் என்பதற்கு பதிலாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேர்தானே வைத்திருக்க வேண்டும்? தேர்தலுக்காக எம்.ஜி.ஆர் பேரை படத்தை உபயோகிக்கிறீர் என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் தேவக் கோட்டையில் நடந்த பிரச்சாரத்தில். எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைவு இப்போதுதான் இவருக்கு வந்திருக்கிறது போலும். சபாஷ். சரியான போட்டி.Anyhow Vijay kanth is better than Rajini kanth by all ways.



அக்னி நட்சத்திரம் வருமுன்னே கோடையின் கொடுமை 106 டிகிரி பாரன்ஹீட் 107 என்று அடிப்பதையும் பொருட்படுத்தாது அ.தி.மு.க கூட்டம் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் கவனிக்க வில்லையா என மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்டுள்ளது

இந்நிலையில் தேர்தலுக்கு சரியாக 2 வாரங்கள் உள்ள நிலையில் நல்ல நல்ல கேள்விகள் செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன‌



விஜய் காந்த் கேள்விகளில் நியாயம் உள்ளது. தேர்தல் என்றால் உடனே வானொலியில், தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் பெயரை அம்மா முழக்குகிறார்.முழங்குகிறார்.

ஆனால் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டம் சென்னை வெள்ளத்தில் மூழ்கி சிதிலமடைந்தது பற்றி எந்த கவலையும் இவர் கொள்ளவில்லை. மேலும் ராஜிவ் காந்திக்கு ஆடாமல் அசையாமல் கிடக்கும் இந்த சவத்துக்கு எதற்கு இன்னும் முதல்வர் பதவி என்னை முதல்வர் ஆக்கி விடுங்கள் நீங்கள் வேண்டியதை செய்து தருகிறேன் என்ற வரலாறுகளும், சேவல் புறாக் கதைகளும் நிறைய உண்டு.

இவரின் புத்தியைப் பார்த்து தந்திரத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் தமது உடல் நிலை குன்றி இருந்த நிலையிலும் இவரை  கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்த போது சேலத்து முன்னால் அமைச்சர் இராசாரம், இவர் சபா நாயகராகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர். உடல் நிலை சரியாகட்டும் ஏன் சிரமம் எடுத்துக் கொள்கிறீர் என்று சொல்ல அப்போது விட்டு விட்டு அதற்கு  பின் 3 நாட்களில் எம்.ஜி.ஆர் இறந்த கதையை  சாதமாகக் கொண்டு இவர் கட்சியை தன் வயப் படுத்திய வரலாறு நாடே அறிந்தது.



மேலும் எம்.ஜி.ஆரை அப்போது பிளாக் மெயில் செய்து இதோ வாழ்க்கை வரலாறு எழுதப் போகிறேன் குமதத்தில் எழுதுகிறேன், ஆனந்த விகடனில் எழுதுகிறேன் என்றே சொல்லி மிரட்டுவார் ஆனால் அந்த வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் பயந்து கொண்டிருந்த வரலாறு எழுதப்படவேயில்லை. இவர் எழுதியிருந்தாலும் அதை எம்.ஜி.ஆர் சமாளித்திருக்கலாம். அத்தனை புகழில் அவர் இருந்தார். ஆனால் தமக்கு களங்கம் ஏற்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என முயற்சிகள் மேற்கொண்டு அந்த தொடர் எழுதுவதை தடுத்து வந்ததாக அந்தக் கால அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிவர்.

எம்.ஜி.ஆரை அழியும்போதெல்லம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வாக்குகளை சேகரித்து விடலாம் என்ற உத்தி இந்த தேர்தலில் எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்று பார்ப்போம்.



அதென்னடா ஒரு தொழிற்சங்கம் சீட் கொடுக்காததால் அவர்களது கட்சியை விட்டு விட்டு தானாக தொழிற்சங்கம் அம்மாவுக்கு ஆதரவாக தேர்தல் பணி ஆற்றுகிறோம் என்று  கூறுகிறதாம். என்ன கட்சியோ என்ன கொள்கையோ?



வைக்கோவை தி.மு.க கொல்ல சதிசெய்கிறது என்ற பேச்சு வேறு ம.ந.கூ பொதுவுடமைக் கட்சியினரே பேசியுள்ளனர்.

நல்லா சூடு பறக்கிறது . பொறுக்க முடியா வெப்பம். எப்போதும் இல்லாத அளவு தாக்கம். இந்த தேர்தலும் தான்...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, May 1, 2016

மே தினம் உழைப்பவர் சீதனமா? கவிஞர் தணிகை

மே தினம் உழைப்பவர் சீதனமா? கவிஞர் தணிகை




அட மே தினம் ஞாயிற்றுக் கிழமையில் வந்து விட்டதே, ஒரு நாள் விடுமுறைப் போச்சே,

அட, டாஸ்மாக் கடை எல்லாம் லீவா?
நேற்றே ஸ்டாக் எல்லாம் வாங்கி வைச்சாச்சே!

மே தினம் ஞாயிற்றுக் கிழமை வந்ததால்
ஒரு லீவு போச்சே ஆனாலும்
டாஸ்மாக் கடை எல்லாம் லீவாச்சே...

இப்படி அவரவர் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்க மே தினத்துக்கு வருடா வருடம் அனைவரும் சேர்ந்து ஆடு வெட்டி கெடா விருந்து வைப்பார்களாம் சில நண்பர்கள் கூட்டம்

8 மணி நேர வேலையும் வேலைக்கேற்ற கூலி, சம்பளம், வருமானம் இதன் பேர் இப்படி எப்படி இருந்தாலும் சிகாகோ நகரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி வரும் காலத்தில் தொழிலாள இனத்துக்கு நீதி செய்த தினம், அந்த நினவை போற்றும் தினம்

இப்போது இந்தியாவில் தமிழகத்தில் வெறும் விடுமுறைகான நாளாக ஒரு டாஸ்மாக் விடுமுறை நாளாக கேலிக் கூத்தாக..

ஒரு மதிப்பிற்குரிய நண்பர் என்னிடம் வந்து மேதின வாழ்த்து சொன்னார் நான் எதிர்பார்க்காமல். எனக்கு வியப்பு வந்தது. பொறுக்காமல் இயல்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் அவர் வேறு ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என ஏங்க ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா எனக் கேட்டதற்கு...சாரி சார், சரி சரி சார் உண்மைதான் சார்,நாளைக்கு சொல்வதற்கு இது அட்வான்ஸ் வாழ்த்துதான் சார் என்றெல்லாம் சொல்லி சமாளித்தேன்...

ஒரு சில வர்க்கம், கட்டடப் பணியாளர்கள், மரவேலை செய்வோர் பிலம்பர் என்னும் நீர்க்குழாய் சீர்செய்யும் பணியாளர்கள் மின் பணியாளர்கள் எல்லாம் கூட பரவாயில்லை ஒரளவு தமது வேலைக்கான கூலியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.அவசியமாக அந்தப் பணி தேவை ஆக இருப்பதால்.  ஆனால் அதுவும் மதுக்கடை, பீடிப் புகை,பான் பராக், புகையிலை என்று போய் விட..



இந்தியாவில், தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் தாக்கம் மிகையாகப் போய் நிறைய நிறுவனங்கள் விலாசம் தெரியாமல் அழிந்து விட்டன.எனவே உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்னும் கோஷம் வெற்று கோஷமாகிவிட்டது. கேரளத் தொழில் நலிந்து போனதற்கு இது போன்ற கம்யூனிச சித்தாந்த தொழிற்சங்கங்கள் ஒரு காரணம் என்பர்.

எனவே இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் எல்லாம் தொழிலாளர் கூட்டுறவு யாவும் கலைந்து விட்டன கட்சி, சாதி. பிரிவினை எனப் பிரிந்து போய்...

இப்போது ஒரு பொறியியல் பட்டப் படிப்பு படித்த இளைஞர்க்கு சேலம் போன்ற இடங்களில் மாத ஊதியம் ரூபாய் 2500 என்றெல்லாம் வழங்கப் படுகிறது. அது அவருக்கு எப்படி போதும்?அவர் அலுவலகம் வந்து செல்லும் போக்குவரத்துச் செலவுக்காவது அது போதுமா?

இப்படி இந்தியாவில் தொழிலும் தொழிலாளர் நிலையும் மிகவும் கேலிக்குள்ளான நிலையில் மேதினம் கொண்டாட்டம் எல்லாம் மிகவும் தூரம் விலகிச் சென்று விட்டன. மாறக அதற்கு மாற்றாக செயல்கள் நடக்கவும் வழி இல்லை அவை முளையிலேயே கிள்ளி எறியப்படும் நிலைகள்.வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

 பசி,பஞ்சம், பிணி, வறுமை, அத்தியாவசியத் தேவைகளுக்கும் யாசகம் பிச்சை கேட்கும் நிலை. குடிநீர், மருத்துவம், வீடு, உடை, உணவு யாவுக்கும் கை ஏந்தும் நிலை.... இந்தியா ஒரு புறம் விஜய்மல்லையாக்களாக, லலித் மோடிகளாக ஏமாற்றி ஊதிப் புடைத்து வேறு இடம் சென்றாலும் வேறு நாடு சென்றாலும் கொழுத்தபடி வாழ்ந்து கொண்டிருக்க...ஆனால் படித்த இளைஞர்கள்....



 இன்றைய இளைஞர்கள் மேலை நாடுகள் நோக்கி படை எடுக்கிறார்கள் பணி வேண்டி,. எண்ணெய் வள நாடுகளும், ஐரோப்பிய , ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, அமெரிக்க, சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய நாடுகள் நோக்கி பிழைக்க சென்று விடுகிறார்கள்.

இந்நிலையில் மே தின நாளும் ஒரு சடங்கு நாளாகவே விடுமுறைக்கான நாளகவே ஆகிவிட்டது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.