பொய்களின் தொழிற்சாலை: கவிஞர் தணிகை
கூலிக்கு வேலை செஞ்சி கூலியை ஒரு பக்கம் மதுவிற்கும் மறுபக்கம் இது போன்ற கோடீஸ்வரப் பொய்களின் ஏமாற்று நடிப்புக்கும் வீணடிப்பது எந்த வகை நியாயண்டா மரு(ந்)து?
பெத்த அம்மா அப்பனுக்கும் உடன் குடும்ப பொறப்புகளுக்கும் பொண்டாட்டி பிள்ளைகளுக்கும் செய்யாம இப்படி குதி குதின்னு குதிக்கிறீயேடா உயிருள்ள எல்லாருக்கும் எல்லாத்துக்கும் ஒரு நாள் சாவு வருண்டா? நாஞ் சொல்லறது வேம்பா கசக்குண்டா, ஆனா அந்த வேப்பங்காய் பழமானா இனிக்குன்டா? நாளான பின் தெரியுண்டா...எது நல்லது கெட்டதுன்னு...நல்லது தெரிய நாளாகும், தீயது தெரியும் தீ போல...
டேய் அவனுங்க எல்லாம் உன்னை எல்லாம் நல்லா ஏமாத்துறாங்கடா? கேட்டா நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறோம்பாங்க, கனவுத் தொழிற்சாலைம்பாங்க ஆனா எல்லா பணமும் எங்கடா போகுது? அந்த பணம் சேர்த்த கூட்டம் இது போன்ற மாயக்காரனுங்களுக்கு ஒரு பங்கு குடுத்து ஆடிப் பாட வைப்பது அடி பட வைப்பது எல்லாமே மேலும் பணம் சேர்க்கத் தானேடா பாக்கறாங்க இது உனக்கு எப்போதுமே புரியாதாடா? எப்படா புரியப் போகுது?
திங்கற எல்லாத்துக்குமே மிச்சமானா எச்சம் வந்துதான்டா ஆகணும்?அதை சுத்தம் செய்யற மனுசங்களை அவங்க செயல்களை வைச்சுதாண்டா கொண்டாடனும்...பிறரை மகிழ்வித்தல் என்பதில் பல இரகம் உண்டுடா? பிறருக்கு பயனாதல் என்பதில் தான்டா வாழ்க்கையின் அர்த்தம் இருக்குது. அது உனக்கு என்னைக்குடா புரியப் போகுது?
காக்காய்க்கும் கூட எது பழைய சோறு, எது முறுக்குத் துண்டு, எது சப்பாத்தி எது இட்டிலி, எது தோசை, எது வடைன்னு தெரியறப்ப உனக்கு ஏண்டா இதெல்லாம் தெரியவே மாட்டேங்குது?
சுயநலம், சுயநலமின்மை இந்த ரெண்டுதான்டா தெய்வம் பேய் பிசாசவது எல்லாம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment