Wednesday, May 4, 2016

புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் வேட்பாளர்களின் களமும்,வாக்காளர்களின் கணிப்பும்  கவிஞர் தணிகை.



03.04.2016 அன்று மேட்டூர் தள்ளி காவேரிகிராஸ் அருகில் உள்ள எம்.ஐ.டி. என்ற கல்வி நிறுவனத்தில் மேற்சொன்ன தலைப்பில் ஒரு ஒளி‍&ஒளிப்பதிவு நடைபெற்றது

அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்: ஜி.கே. மணி.தி.மு.க தலைமையில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.பார்த்திபன்,தேர்தல் மன்னன் பத்ம ராஜன் கொங்கு வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிக நல்ல முறையில்.எம்.ஐ.டி கல்வி நிறுவனம் சார்ந்தவர் வேட்பாளர்களை மரியாதை செய்தார்.

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை வரவில்லை. கடைசி வரை அவரது மேடையில் போடப்பட்ட இருக்கை காலியாகவே இருந்தது.

சுமார் 20க்கும் மேற்பட்டோர் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டார்கள். புதிய தலைமுறை தம்பி பாலகிருஷ்ணன் வேண்டுகோளுக்கிணங்க அடியேனும் கலந்து கொண்டு எனது கருத்துகளை மிகச் சுருக்கமான நேரத்துக்குள் சொல்ல வேண்டிய நிபந்தனை இருந்ததால் சுருக்கமாக பேசியுள்ளேன்.

நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு வேட்பாளர்கள் அறிமுகம் என்ற பேரில் அல்லது வேட்பாளர்களின் களமும் கணிக்கும் வாக்காளர்களும் என்ற பேரில் ஒலி‍ ஒளிபரப்பப் படுகிறது. அனேகமாக இந்நிகழ்வு தினமும் ஒரு தொகுதியுடன் நடந்து வருகிறது. மேட்டூர் தொகுதியின் சுற்று நாளை அல்லது மறு நாளில் இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.



கட்சி சார்பில்லாதவர்கள் பங்கெடுத்துக் கொள்ளும் நிகழ்வு என்றார்கள் ஆனால் அங்கு பா.ம.க அன்பர்களே அதிகம் இருந்தது சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டது. மேலும் நிகழ்வு 8மணி முதல் 10 மணி என்றார்கள். ஆனால் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் வந்து இருக்கையில் அமரவே 9 மணிக்கும் மேல் ஆகிவிட்டது. நிகழ்வு முடிந்து வீடு வந்து பார்த்தால் இரவு மணி 11.40. விடியற்காலம் 4 மணிக்கு எழுந்து பணிக்கு கிளம்ப வேண்டி இருந்ததால் கொஞ்சம் சிரமம் கொடுப்பதாக மறு நாள் தூங்கி வழியும்படியாகவே பேருந்து பயணங்கள் அமைந்திருந்தன.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment