Saturday, August 23, 2025

பகிர்ந்திடு BIRD WATCHING & STAR GAZING: கவிஞர் தணிகை

 பகிர்ந்திடு: கவிஞர் தணிகை



சில நாளுக்கும் முன் விடிகாலை 4.45 மணி, மிக அரிய வாய்ப்பாக :ஸ்டார் கேசிங் 

வெறும் கண்களாலும், தொலை நோக்கி மூலமும் பார்த்தேன் .எல்லாக் கோள்களும், நிலவும், மற்றும் விண்மீன்களும் மிக அற்புதமாக தெரிந்தன.


அத்துடன் ஸ்கை லேப் எனப்படும் ஆகாய விண்வெளி ஓடம் தெற்கிலிருந்து வடக்கே நெடுநேரம் பயணித்ததையும் பார்க்க முடிந்தது.


பேர்ட் வாட்ச்சிங் BIRD WATCHING என்று பறவைகளைப் பார்த்து மகிழ்ந்து அறிவதை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்

ஸ்டார் கேசிங் STAR GAZING என்று விண்மீன்களைப் பார்ப்பது பற்றி கூர்ந்து கவனிப்பதைச் சொல்கிறார்கள்.


எனக்கு வேள்பாரியில் திசைவிளையான் என்ற குரு பாத்திரத்தின் நினைவு நெஞ்சிலாடியது ஏனோ தவிர்க்க முடியவில்லை


முருகனே முதல்வனே சிவனே திருமாலே

அம்மனே காளியே நீலியே பிடாரியே

யாதொன்றுமாகிய பேரிலா சக்தியே

பேர்களில் உறங்கிக் கிடக்கும் புத்தியே

சமயோசித அறிவு வரா சுரங்கத்தின் யுக்தியே!


 இந்த கிறுக்கலை ஒரு நண்பர்க்கு பகிர்ந்துள்ளேன் உங்களுக்கும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: கல்லூரியின் ஒரு முதுநிலை மருத்துவர் இதற்காகவே ஒரு வீட்டை ஏற்காட்டில் அமைத்துக் கொண்டு அவ்வப்போது அங்கு விடுமுறைகளின் போது அங்கு சென்று அவர் தனிப்பட்ட முறையில் அமைத்துள்ள இடத்தில் இருந்து விண்மீன்களைப் பார்த்தது பற்றி எனது பணிக்காலத்தில் என்னுடன் பகிர்ந்து கொண்டதுமுண்டு.

No comments:

Post a Comment