இவன் எல்லாம் ஒரு அறிவியல் விஞ்ஞானியா?/ டீம் லீடரா?? கவிஞர் தணிகை
அறிவியல் விஞ்ஞானியா? நாகேஸ்வர ராவ் நீ டீம் லீடரா?
நாகேஸ்வர ராவ் சந்தியா தம்பதிகள் ஆந்திராவைச் சார்ந்தவர்கள், பெங்களூரில் மிக மேல் தட்டு மக்கள் வசிக்கும் ஒயிட் ஃபீல்டு பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். மகள் வழக்கம் போல அமெரிக்கக் குடியரசில்.தாம் இன்னும் 3 அல்லது 4 வயதுதான் இருப்போம் என இந்த 76 வயது மனிதன் அதற்கும் பின் சந்தியாவை யார் பார்த்துக் கொள்வார் என சினிமா பாணியில் காலை 10.15 மணிக்கு சமையலறையில் பணி செய்து கொண்டிருந்தவரை பின் பக்கமாகச் சென்று அவரது முகத்தை துண்டை வைத்து மூடி இறுக்கி கொன்று விட்டு,பக்கத்தில் 20 நிமிடம் மௌனமாக இருந்து விட்டு பக்கத்து வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்து, அவர் மருத்துவரை அழைத்து, மருத்துவர் ஆம்புலன்ஸ் போன்றவற்றை அழைத்து எல்லா காட்சிகளும் அரங்கேற அந்தக் காவல் துறை அலுவலரிடம் இந்த ஓய்வு பெற்ற இஸ்ரோவில் பணி புரிந்த அதுவும் ஒரு டீம் லீடராக இருந்தவர், தமது நிலை பற்றி விளக்கி அதனால் தாம் கொன்றேன் என காவல்துறையிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்த அசம்பாவிதம் நேற்று புதன் காலையில் பெங்களூருவின் ஒயிட் பீல்ட் (வெள்ளை வயல்) என்ற இடத்தில் நடந்த உண்மைச் சம்பவம் பாக்யராஜ் படமல்ல. இதெல்லாம் ஒரு அதிர்ச்சி அறிக்கை. எளிதில் செரித்துக் கொள்ள முடியாததால் இந்தப் பதிவு. இந்தியாவில் மட்டுமல்ல இந்த உலகில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்குமய்யா!
இப்படியும் இருக்கிறார்கள்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
நன்றி: டைம்ஸ் ஆப் இன்டியா 19.02.2026 (7 மணி நேரம் முன்பு).
அறி!
p.s:அதே நேரத்தில் தற்போதுதான் கீச்சொலியில் ட்விட்டரில் Dhinakaran ஒரு செய்தி பகிர்வு: தொடர்ந்து 30 நிமிடம் சிபிஆர் (நெஞ்சை மருத்துவ முறையில் அழுத்திக் கொடுத்து)செய்து ஒரு பெண் நோயாளியை ஒரு மருத்துவ தேவதை காப்பாற்றியுள்ளதாக...https://x.com/i/status/2024061286317760908/
No comments:
Post a Comment