ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை
திரை உலக ஞானி என்றழைக்கப் படும் கமல்ஹாசனின் ராஜ்யசபா பேச்சை புரியவில்லை என்று ஒரு சார்பான நபர்களும், ஊடகங்களும் சொல்லி இருப்பதை பேசி வருவதைக் கவனித்தீர்களா? அறிவிலிகளுக்குப் புரியாது அறிவு இருப்பார்க்கு அது நன்கு புரிகிறது. அதில் புரியாதது ஏதுமில்லை. ஏன் எனில் ராஜ்யசபா என்பது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்களின் தேர்தல் மூலம் அல்லது கட்சிகளின் சார்பாக போதுமான வாக்குகள் பெற்ற அறிவாளிகள் அல்லது கலைஞர்கள் அல்லது படிப்பாளிகள், படைப்பாளிகள் போன்றோரைக் கொண்டது. பேரறிஞர் அண்ணா பேசியதை அங்கில உரையை புத்தகமாகப் படித்த நினைவுகளில் இந்தப் பதிவு செய்யவும் எனக்கு அவா.
அவர் (கமல்) ஒரு நல்ல கவிஞரும் கூட. எனவே தமது கவிதை மூலம் அறம் பாடியிருக்கிறார் இது அனைவர்க்கும் புரியாது வாழ்க ஒழிக என்ற கூச்சல் மட்டுமே இடுவோர்க்கு. ஏன் எனில் வீழ்க வளமுடன், தமிழ் படித்தால் திருடவும், பிச்சை எடுக்கவும் முடியாது என்றெல்லாம் தமது ஆற்றாமையை சொல்லாடி இருக்கிறார்.சுமார் ஏறத் தாழ 12 நிமிடத்துக்கு சற்றேறக் குறைய பேசியதை அடியேனும் கவனித்தேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் தமது பணியை செவ்வனே செய்திருப்பதாகவே கருதுகிறேன். முடிந்தால் வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
சட்ட மன்றங்களிலும்கூட யாம் சிறுவயதில் கண்டதுண்டுM.L.C எம்.எல்.சி என ஒரு மேலவைப் பிரதிநிதித்துவம், மேலவை இப்போதெல்லாம் கலைத்து வெகு காலம் ஆகிவிட்டது. அவை எல்லாம் பொது மனிதர்க்கு, படிப்பார்க்கு, படைப்பார்க்கு என இருந்தது. அதெல்லாம் கூடத் தேவையில்லை என விட்டு விட்டார்கள்.
ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதே சான்று. அந்த ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தால் அந்த மக்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்து இவர்களை எல்லாம் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதும் புரியும்.
மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி, மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. சாக்ரடீஸ் கிரேக்க தேசத்தில் கி.மு 300 முதல் 400களிலேயே எப்படி இந்த மக்களாட்சி தத்துவம், வாக்கெடுப்பு முறை மூலமே மரணம் தழுவினார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அறிஞர்களுக்கு எப்போதுமே அது விதி. ஆனால் காலத்தை மிஞ்சி சரித்திரம் சொல்லும் அவர் பேர்களை அதுவும் ஒரு விதி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: WITH THE CONSIDERATION OF IN FORMALLY சரியாக பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாத ஒரு நபர் இவ்வளவு பெரிய ஏணியில் ஏறி இருக்கிறார் என்பதில் இருந்து அவரது உழைப்பை அவரது திறத்தை நாம் கணித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.Don't try to be neglect it.
பதிலை யாருக்கு சொல்கிறேன் என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாத நபருக்கு இந்த அளவுக்கு பாராட்டு(முட்டு) அநாவசியமாக தோன்றுகிறது நண்பரே
ReplyDeleteHe directly answered towards the present rulers. I think you too not understood it. I think you are trying and want to support the other side.Anyhow thank you for your comment and feedback on this post.take care of your health.best wishes.
Delete