Friday, August 29, 2025

தெரியாமல் இருந்தது:கவிஞர் தணிகை

 


கோள்கள் வேறு மீன்கள் வேறு எனத் தெரியாமல் இருந்தது

பலப் பல நிலாக்கள் உண்டென்பது தெரியாமல் இருந்தது

நிலா ஒரு கோள் அல்ல துணைக் கோள் தான் எனத் தெரியாமல் இருந்தது

சூரியன் ஒரு விண்மீன் தான் எனத் தெரியாமல் இருந்தது


தொலைவிருப்பது அருகே செல்ல வேறாய் இருப்பது தெரியாமல் இருந்தது

நெருக்கமான உறவு வெறுப்பாகவும் வெறுப்பாக இருந்த உறவு

நெருக்கமாகவும் ஆகலாம் என்பது தெரியாமல் இருந்தது


திசைகள் யாவும் கற்பிதமே என்பது தெரியாமல் இருந்தது

உயிர்கள் என்றால் அது போகும் என்பது தெரியாமல் இருந்தது

நாமும் இருக்க மாட்டோம் என்பது தெளிவாகத் தெரிந்தே இருக்கிறது

                   .....மறுபடியும் பூக்கும் வரை

                         கவிஞர் தணிகை


தெரியாமல் இருந்தது: கவிஞர் தணிகை

No comments:

Post a Comment