Thursday, September 29, 2022

நல்ல நேரம் /சுப வேளை‍ கெட்ட நேரம்/ அசுப வேளை உண்மையா? கவிஞர் தணிகை

 நல்ல நேரம் /சுப வேளை‍ கெட்ட நேரம்/ அசுப வேளை உண்மையா? கவிஞர் தணிகை



நேற்று விட்டுப் போனதன் ஒரு சிறு தொடர் பதிவு இது.வியாழக் கிழமை குரு வாரத்தின் வணக்கங்களுடன்.(வாரம் என்பதை நாளின் பெயருடன் சேர்த்து சொல்வது தெலுங்கு ஸ்டைல்) அவர்கள் ஆதி வாரம், சோமவாரம், மங்கல வாரம், புத வாரம், குரு வாரம் சுக்ர வாரம், சனி வாரம் என்றே நாட்களைக் குறிப்பதைக் கவனித்திருக்கிறேன். வடக்கு ஸ்டைலும் கூட. இங்கு திருவள்ளுவர் ஆண்டு என ஆகும் போது 60 ஆண்டுகள் மறுபடியும் சுழல் செய்வதில்லை.


எங்கள் வீட்டில் கூட தந்தையும் தாயும் தமிழ் என்ற போதிலும் கூட தந்தை சோமவாரம் என்றே திங்கள்கிழமையைக் குறித்துப் பேசியதை அவர் ஆயுள் முடிந்து சுமார் 40 ஆண்டுகள் அருகே ஆன போதும் கூட நினைவில் கொள்ள முடிகிறது.



பொதுவாக கோள்கள் பெயரே நாட்களுக்கு இருக்கிறது. திங்கள் உப கோள். 


சரி இப்போது கருப்பொருள் இந்தப் பதிவுக்கு: நல்ல நேரம் கெட்ட நேரம் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அப்படி உண்டா? 60 ஆண்டுகளில் அவர்கள் முடித்து விட்டு மறுபடியும் ஆண்டின் பெயரை  முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்...அப்படித்தான் ஆரம்பித்து இருக்கிறார்கள் பஞ்ச அங்கத்தின் படி... நல்ல நாள் , கெட்ட நாள், கரி நாள்,மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் பிறப்பின் அடிப்படையில் எல்லா மனிதரையும்  27 நட்சத்திரம் 12 இராசிகள்,அந்த 12 இராசிகளையும் தினமும் 3 ஆக பிரித்தல் இப்படி பிறப்பு அதன் குறிப்பு ஜாதகம், (ஏன் இன்னும் ஆழமாகப் போகும் போது தாயும் தந்தையும் கூடி இருக்கும் நாட்கள் அதன் அடிப்படையில் கருவுறுதல், இணைதல் நாட்கள் அதன் பலா பலன்கள்) அனுதினமும் ப்ரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 4.30 முதல் 6 வரை...அப்போது ஓசோன் படரும் நேரம்.


  அடிப்படையில் நாட்கள், வளர் பிறை, தேய்பிறை, அமாவாசை, பௌர்ணமி,(நிலவின் பிறைத் தோற்ற‌ மாற்றம் கடலில் ஓத ஏற்றம் ஓத இறக்கம் எல்லாம் ஏற்படுவது அறிவியலும் சொல்லும் ஏற்றுக் கொள்ளும் உண்மை)அப்போது இறப்புகள் நடப்பவையும் உண்டு... பட்சி சாஸ்திரம், பறவை வலம் இடம் போதல்,கௌளி சொல், பூனை இடம் வலம் போதல், இப்படி நிறைய சகுனங்கள்...அறிகுறிகள் யாவும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


உப கோள் திங்களின் தோற்ற மாற்றத்திற்கே விளைவுகள் இருக்கின்றன என்னும் போது கோள்கள்,பூமி, சூரியன், நட்சத்திர பயணங்கள், வேகம் எல்லாம் கூட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டிய அத்தாட்சியாய் நிலவு இருக்கிறது. எனவே சூரிய தசை/திசை, சந்திர திசை,செவ்வாய் திசை, புதன் திசை, குரு திசை, சுக்ர திசை,சனி திசை, இராகு திசை, கேது திசை ( இராகு கேது சாயா கிரகமாம் அவை கிரகம் என்ற ஆதாரம் இல்லை ஆனால் அவை பாதிப்புகள் அதிகம் ஏன் அவை பின்னோக்கி பயணிக்கின்றன என்பன எல்லாம் கேள்விகள்) என மனித ஆயுளை ஆள்வதாகவும் அதில் புத்தி, அந்தரம், கரணம் எல்லாம் வருகின்றன...எட்டாம் இடத்து அஷ்டமத்துச் சனி, ஏழரைச் சனி இப்படி நிறைய நிறைய...


 அதில் தசா இருப்புக் கணக்குகள், நான் திருமணப் பொருத்தம் பார்க்கும் காலக் கட்டத்தில் தான் சோதிடம் பற்றி சிறிது கற்க ஆரம்பித்தேன்,திருமணப் பொருத்தம் பார்ப்பதிலும் எண் கணிதம் சோதிட முறைகளில் பெயர் வைத்தலில் வல்லமை வந்துவிட்டவர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்... அதில் செவ்வாய் தோசம், பரிகாரம், நிவர்த்தி, களத்திர தோசம், இராகு கேது இப்படி போய்க் கொண்டே இருக்கின்றன... ஆனால் காந்தர்வ விவாகம் என்றால் எதுவும் தேவையில்லையாம்...ஏன் எனில் அது பெண்ணைக் கவர்ந்து கொண்டு சென்று செய்து கொள்வதால்... 


கார்த்தி, சூரியா வின் தந்தை சிவகுமார் அவரின்  தந்தை ஒரு நல்ல ஆசிரியாக இருந்தாராம் அவர் எழுதி வைத்த குறிப்பு மிகத் துல்லியமாக இருந்தது என்றும் அவர் இவர் குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டார் என்பதையும் அவர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒரு முறை பகிர்ந்து கொண்டதை நானும் கேட்டேன். சரியான சோதிடக் கணிப்பு சரியாக துல்லியமான நிலைப்பாட்டை விளைவை சொல்கிறது என்பது அவரது நிலைப்பாடாகவும் அன்றைய பேச்சில் வெளிப்பட்டது.


மந்திரம் கால் மதி முக்கால்...அல்லது  எல்லாம் விதிப்பயன்,தலையில் அப்படிதான் எழுதி இருக்கிறது தலை விதி, என்ன தான் விதி என்றாலும் முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்...


அதில் இராகு, குளிகை, எமகண்டம் இப்படியும், சுப முகூர்த்தம், நொடி, வினாடி, நாழிகை, முகூர்த்தம் , அமிர்தம், சோரம், மரண யோகம், சூலம் இப்படி நிறைய போய்க் கொண்டே இருக்கிறது... குளிகை என்ற குளிர்ந்த நேரத்தில் மட்டும் வீட்டில் இறந்தாரை காடு நோக்கி கொண்டு செல்வதில்லை...


கலாம் அஷ்டமியில் பதவி ஏற்ற போது பூமி சூரியனை சுற்றும் எல்லா நாட்களுமே எனக்கு நல்ல நாட்கள் என்பது நினைவிலாடுகிறது.


எல்லாவற்றையும் மீறி கடவுள், இறை,தெய்வம் என்ற ஒன்று இருந்தால் நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள் தாமே உயிருள்ள நாட்கள் எல்லாம் நமக்கு நல்லவைதானே? பின் ஏன் இத்தனை குறிப்புகள்? கடவுளையே கட்டி விடுவதாகவும், மூலஸ்தானத்தில் கருவறையில் கடவுளுக்கு மனிதர்கள் உயிர் கொடுப்பதாகவும்,கடவுள்களுக்கும் ஜாதகம், பிறந்த குறிப்புகள் உள்ளதாகவும் சொல்லி வருகிறார்கள்... அஷ்டமி எனில் கிருஷ்ணனை வணங்குவதும், நவமி என்றால் அம்பிகை அல்லது துர்கை வழிபாடும்..இப்படியே போய்க் கொண்டே இருக்கிறது...கண்ணதாசன் கூட தமது அர்த்தமுள்ள இந்து மதத்தில் பூனை வலம் இடம் பற்றி எல்லாம் பேசுகிறார்.


விவிலியத்தில் ஒரு இடத்தில் மனிதர் கையால் கட்டிய கோயிலில் கடவுள் குடியிருப்பதில்லை என்ற குறிப்பு உள்ளது.


முகமதியத்தில் அல்லாஹு அக்பர், அல்லாவே இணையற்றவர் என்று ஓதப்படுகிறது...இரமலிங்கர் கூட கடவுள் இணையற்றவர் என்று குறிப்பிடுகிறார்...ஒப்பிட்டுப் பார்க்க சில சேர்க்கைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.அவர்களும் நிலவை வைத்தே எல்லா நாட்கணக்கு, திருவிழாக்கணக்கும் கொள்கிறார்கள்



வலது, இடது, இடது கையால் சிலர் வாங்குவது, செய்வது இல்லை...அது பீச்சாங் கை ஆயி கழுவுவதால் என்கிறார்கள்...


ஆனால் நாடி சுத்தி தமிழ் முறைப்படி டாய்லட் சோப்பை கழிவகத்தில் நிரந்தரமாக வைத்து ஆசன வாயைக் கழுவுதல் முதல், உள்ளங்கையைக் கழுவுதல்,மலம் மலக்குடலில் சேராமல் முழுதுமாக வழித்தெடுத்து சுத்தம் செய்து கொள்ள வழிகாட்டி தமிழ் முறைகளில் உள்ளவை. எனவே இடது வலது என்ற நிலை சரியா?



ஏன் எனில் இரு கையையும் பயன்படுத்தி பணி செய்வது, ஏன் காந்தி கூட இருகையாலும் எழுதி இருக்கிறார் என்ற குறிப்புகள் உள்ளன...அது உடலில் இரு பக்க உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு நல்ல விளைவைத் தருகின்றன‌


மேலும் பகிர்ந்து கொள்வோம்


இன்றைக்கு நண்பர்களுக்கு முன் எனது கேள்விகள் இவை...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment