Monday, September 5, 2022

மகசேசே' விருதை பெற்றுக் கொள்ள கேரள முன்னாள் அமைச்சர் மறுப்பு

 


திருவனந்தபுரம் : மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கே.கே.ஷைலஜாவுக்கு வழங்கப்பட்ட, 'ரமோன் மகசேசே' விருதைப் பெற்றுக்கொள்ள, அவர் மறுத்துவிட்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மகசேசேவின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து அரசுப்பணி, பொது சேவை, பத்திரிகை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவை செய்யும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

நம் நாட்டை சேர்ந்த மறைந்த திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே, 'கார்டூனிஸ்ட்' ஆர்.கே.லஷ்மண், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.


latest tamil news



கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான கே.கே.ஷைலஜாவுக்கு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை பெற்றுக்கொள்ள அவர் மறுத்துள்ளார்.

ஷைலஜா நேற்று கூறியதாவது: கேரள சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியது தனிப்பட்ட சாதனை அல்ல; அது ஒரு கூட்டு முயற்சி. மேலும், பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர். அவர் பெயரில் வழங்கப்படும் விருதை பெற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

thanks:

Dina malar 05.09.22


marubadiyumpookkum.blogspot.com


No comments:

Post a Comment