Tuesday, December 8, 2020

அகில இந்திய சிறுவர் பல்மருத்துவர் சங்கம்‍ ஆசிரியர் தின விழாப் போட்டி முதல் பரிசு: கவிஞர் தணிகை

 அகில இந்திய சிறுவர் பல்மருத்துவர் சங்கம்‍ ஆசிரியர் தின விழாப் போட்டி முதல் பரிசு: கவிஞர் தணிகை



 அகில இந்திய சிறுவர் பல்மருத்துவம் மற்றும் பல் நோய் தடுப்புப் பிரிவு சங்கம் (இதன் தலைமையகம் உத்திரப் பிரதேசத்தில் மீரட் நகரில் உள்ளது) நடத்திய  இந்திய தேசிய அளவிலான ஆசிரியர் தின விழாச் சிறப்புப் போட்டியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி முதல் பரிசை வென்றுள்ளது. இந்த முடிவை 30.11.2020 அன்று அகில இந்திய சிறுவர் பல் மருத்துவர் சங்கம் அறிவித்தது.



1. விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி சேலம் தமிழ் நாடு

2, யெனபோயா பல் மருத்துவக் கல்லூரி மங்களூர் கர்நாடகா

3. ஜே.என்.கபூர் டி.ஏ.வி(சி) பல் மருத்துவக் கல்லூரி யமுனா நகர் ஹரியானா

4. சுபார்த்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை மீரட்

5. கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிகல் சைன்ஸ் மஹாராஸ்ட்ரா (ஆறுதல் பரிசு முதல் இடம்)

6. பீப்பிள் ஆப் டென்டல் சைன்ஸ் போபால் ( ஆறுதல் பரிசு இரண்டாம் இடம்).



 அகில இந்திய அளவில் நடந்த இந்த மாபெரும் போட்டியில் மேற்சொன்ன  6 கல்லூரிகள் பரிசு பெற்றுள்ளன. அதிலும் இரண்டு ஆறுதல் பரிசுகள். மற்ற 4 கல்லூரிகளே பரிசுக்குரியவை அதிலும் எங்களது விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரி முதல் பரிசை வென்றுள்ளது என்பது மகிழ்வுக்குரியது.


இந்தப் போட்டியில் ஈடுபட கல்லூரியின் டீன் பேராசிரியர் மருத்துவர் ஜா.பேபிஜான் பெரிதும் ஊக்குவித்ததுடன் மட்டுமல்ல இங்கு  பள்ளி ஆசிரியர்களுக்கு இடையே நடத்திய பல் மருத்துவத்தில் பள்ளி ஆசிரியர்கள் பங்கு பணி என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடைபெற்ற கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு தலைமேயேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.




இந்த அரிய போட்டியை அசோசியேட் டீன் பேராசிரியர் மருத்துவர் சுரேஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைத்து ஆரம்பத்தில் இருந்தே எனைப் போன்றோருடன் கலந்து பேசி நிகழ்வை வெற்றிகரமாக இறுதி வரை நடத்தி முடித்தார். சரியான கடமையும் பொறுப்புணர்வுடனும் பணி செய்தாலே போதும் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாசகம் உண்மையில் எத்தகையது என்று நிரூபணம் செய்ய இந்தப் போட்டிகளில் முதல் பரிசை பெற்றதே சான்றாகும். ஏன் எனில் இதில் ஈடுபட்டோர் அனைவருமே அவரவர் கடமையை செவ்வனே செய்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் ஆங்கிலம் மற்றும் தமிழ்க் கவிதைகளை பல் மருத்துவம் அதிலும் சிறுவர் பல் மருத்துவம் எவ்வளவு சமுதாயத் தேவை உள்ளது என்பதை உணர்ந்து எழுதி போட்டிகளில் கலந்து கொண்டமை வெகுவாகப் பாராட்ட பெருமையுறத் தக்கது ஏன் எனில் அவர்களின் பங்கெடுப்பு இல்லை எனில் இந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக நிகழ்ந்தேறி இருக்காது.


மற்றும் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் சிறுவர் பல் மருத்துவப் பிரிவின் மருத்துவர்கள்: ப்ரதீப் டேனியல் கைன்னஸ், நந்தினி, சாந்த ரூபன் மற்றும் முதுகலை,பயிற்சி மருத்துவர்கள் போன்ற அனைவரும் அவரவர்களால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த அரிய மேன்மை மிகு குழுவினருடன் எனது பணியும் இணைந்திருந்தது என்று சொன்னால் மிகையாகாது. கல்லூரியின் பொது உறவு அலுவலர் என்ற முறையிலும் கவிஞர் தணிகை என்ற பதிவிலும் இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்து என்னால் இயன்ற பங்கெடுப்பை செலுத்தி, போட்டியின் முடிவுகளை மதிப்பீடு செய்து பரிசறிவித்து,ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்து கலந்து கொண்டிருந்த கவிதைகளின் முத்தாய்ப்பு வரிகளை எடுத்தாண்டு நிகழ்வில் எனது கவி உரை வீச்சுடன் பங்கெடுத்துக் கொண்ட நினைவும் எனக்கு இனியதே...



இதே போல கல்லூரியின் அனைத்துப் பிரிவினரும் அவரவர் கலந்து கொள்ளும் போட்டிகளிலும் துறைகளிலும் முன்னணியினராய் விளங்கி வருவது மேலும் மேலும் பெருமைப் பட வேண்டிய காலக் கட்டமாய் இருக்கிறது. இதன் அணித் தலைவராய் இருந்து வரும் கல்லூரியின் டீன் ஜா.பேபிஜான் இந்த அரும்பணியை செய்ய  வழிகாட்டியாயும் கேப்டனாகவும் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.


கோவிட் 19 நுண்ணியிர்க் கொல்லி அலைவீச்சில் உலகே தடுமாறிக் கொண்டிருக்கிற விளைவையும் விடாமுயற்சியுடன் பின் தள்ளி இந்தப் போட்டிகளை காணொளிக் காட்சிகள் வழியாகவே நடத்தி இந்த அகில இந்திய அளவிலான போட்டிகளில் முதல் பரிசை வென்றிருப்பது பேருவகை கொள்ளத் தக்கதே...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.









No comments:

Post a Comment