Sunday, December 20, 2020

பாவக் கதைகள்: Netfilix cinema: கவிஞர் தணிகை.

 பாவக் கதைகள்: பார்க்காதீர்கள்: கவிஞர் தணிகை

??????????????.....

மனசை கசக்கிப் பிழிந்து மிகவும் பாதிப்படைய வைத்து தூங்க விடாமல் செய்து விடுகிறது.

இந்தப் படத்தில் சொல்லப் பட்ட 4 கதைகளும் இனி கதையோடே போய் விட்டால் பரவாயில்லை.சமூகத்தில் நேற்று கூட ஒரு சிறுமி வன்புணர்ச்சி பற்றிய ஒரு செய்தி வந்திருந்த நிலையில் இந்தப் படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.



பார்க்காதீர் என்றால் தான் நம்ம ஆட்கள் பார்ப்பார்கள்.  அதில் என்ன அப்படிப் பட்ட பாவங்களை பதிவு செய்திருக்கிறார்கள் எனில்


1. ஒரு திருநங்கை சமூகத்தால் வதம்

2. ஒரு சிறுமியின் வன்புணர்ச்சியும் அதிலும் அவளது அண்ணனது கல்லூரித் தோழன் ஒருவனே ஈடுபடுவதும் அவனை ஆண்குறியை அறுத்து பலி வாங்குவதும், அந்த வான்மகளை ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடி பெற்றோர் தேற்றுவதும்...


3. இரட்டைப் பிறவி அஞ்சலிகளின் தந்தை ஆணவக் கொலையில் ஈடுபட்டு ஒரு விஷத் தாயோ... ஆம் அப்படித்தான் அந்தக் குட்டையனை அழைக்க வேண்டும் அவனை தோற்கடித்து ஒரு அஞ்சலி மீள்வதும்...ஒரு அஞ்சலி அவர் விரும்பிய கார் ஓட்டுனர் இருவரும் பலி செய்யப் படுவதும்


4. ப்ரகாஷ் ராஜ் அப்படி ஒரு குரூரமான அமைதியான வில்லத்தனம் செய்வதும், நடிகை சாய் பல்லவி முழுகாது குழந்தையை வயிற்றில் வைத்திருக்கும் தாயாக இருந்து இரத்த வாந்தி எடுத்து கருக் கலைந்து போவதும் தான் இறப்பதுமாக...





அரை மணி நேரம் என 4 கதைகள் என இரண்டு மணி நேரத்துக்கு ஒரே டைட்டில்: பாவக் கதைகள் என.உண்மையிலேயே இவை பாவக் கதைகள் தாம்.


கண்ண தாசன் சொல்வாரே அது போல உலகெலாம் மதுவிலக்கு வேண்டும் அதற்கு தான் ஒருவனே எல்லா மதுவையும் குடித்து விட வேண்டும் என்பது போல‌

மதுவால் சீரழியும் ஒருவர் மதுவின் தீமை பற்றி விளக்குவதுமான  தகுதி உள்ளது என்ற‌ கண்ணோட்டத்தில் இந்த பாவக் கதைகள் எடுத்து உள்ளார்கள். ஒரு வேளை இது போன்ற படங்கள் மாறுதல் விளைக்குமா நம் சமூகத்தில் என.



அதெல்லாம் வேலைக்காகாது நண்பர்களே:

மொத்தத்தில் இளகிய நெஞ்சுள்ளவர் எவரும் இந்தப் படத்தை இலவசமாக காட்டினாலும் பார்க்காதிருப்பதே நல்லது

மனசு கெட்டுப் போகிறது. 11 மணி வரை இரவில் பார்த்த இந்த குறு நாவல் கதைகள் எனை உறக்கம் வராமல் செய்து 3 மணிக்கே எழுந்து உடல்நிலை பாதிப்பேற்படுத்தி விட்டது...


குறு நாவல்களை படிக்காமல் பார்க்கலாம் என இதன் தயாரிப்புகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதும், இதற்கு அதிகம் பொருட் செலவில்லாமலே ஒவ்வொரு 2 மணி நேரக் கதையையும் அரை மணி நேரத்தில் கொடுத்ததில் இவர்களின் வெற்றி 20 ஓவர் மேட்ச் போல ...இந்தியா வரலாற்றுப் பதிவில் இடம் பெற, 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆஸ்திரேலியாவிடம்...ஆனது போல நாமும் இந்தப் படத்தால் ஒரேயடியாக அவுட் ஆகி விடுகிறோம்.


வாழ்த்து சொல்வதா? வேண்டாமா? கருப்பொருள் தொந்தரவு செய்கிறது. எடுத்த விதம் வாழ்த்த சொல்கிறது.


கௌதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன் என இயக்குனர்கள் 3 மணி நேர சினிமாவுக்கு விடை கொடுத்து விட்டு அரை மணி நேரத்துக்கொரு முறை இடை வெளி விட்டு கூட ஒவ்வொரு கதையாக பார்க்கலாம். சினிமா வடிவங்கள் மாறி வருகின்றன. இது போன்ற சினிமா பற்றிய மாயைகள் மறைய நிறைய இது போன்ற படங்கள் வர வேண்டும். சில்லுக் கருப்பட்டி போல இதுவும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment