Sunday, December 27, 2020

டாஸ்மாக் மது பான விற்பனை பற்றி ஒரு விசாரணை ஆணையம் அமைத்தால் என்ன? கவிஞர் தணிகை

 டாஸ்மாக் மது பான விற்பனை பற்றி ஒரு விசாரணை ஆணையம் அமைத்தால் என்ன? கவிஞர் தணிகை



உண்மையிலேயே செய்தி ஊடகப் பிரிவில் மது விற்பனை பற்றி தமிழக அரசு மதுபானக் கடைகளின் விற்பனை பற்றி கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் சரியானதுதானா?


இந்த மதுபானக் கடைகளில்  பணிபுரியும் ஊழியர்களின் வருவாய்க்கு அதிகமான சொத்துகள் பற்றி அரசு ஒரு வெள்ளை அறிக்கை தர முடியுமா?



பொதுவாகவே மதுப்புட்டிகளுக்கு நமது குடிமகன்களிடம் உரிய விலைக்கும் மேல் ஐந்து பத்து ரூபாய் அதிகம் வாங்குவது என்கிற செய்தி உறுதியானதா? அது விற்பனையாளர்களின் தனிப் பட்ட பாக்கெட்டுகளுக்கு செல்வது என்பது உண்மையா?


அன்றாடம் கடையை மூடி கணக்கெடுத்து பூட்டி வரும்போது நன்றாக விற்பனையாகும் சரக்குகள் பில் போட்டு வெளி எடுத்துச் செல்லப் பட்டு கள்ளச் சந்தையில் மதிப்பை விட அதிகமாக விற்பனை செய்யப் பட்டு அந்த அதிகபடியான பணம் தனிப்பட்ட விற்பனையாளர்களின் பாக்கெட்டுக்கு போகிறது என்ற செய்தி எல்லாம் சரி பார்க்கப் படுமா?



மேற்பாரவையாளர்கள் எல்லாம் கோடிக்கும் மேலும், விற்பனையாளர் எல்லாம் பல இலட்சங்களிலும் பணம், பொருள், சொத்துகள் இருப்பதும் சேர்த்து வருவதும் சரியான செய்தியா?


இந்த ஊற்றில் ஆரம்பம் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை கோடிக்கணக்கில் பணக்கற்றைகளின் விரிப்புகள் சென்றபடி இருக்கின்றன என்பது சரியான செய்தியா?



ஆளும் கட்சி, பிரதான எதிர்கட்சி இரண்டும் தான் இந்த மது ஆலைகள், உரிமம், விற்பனை, டென்டர் போன்றவற்றில் ஈடுபட்டு பெரும்பயன் பெறும் பயன் அடைந்து வருகின்றன இவை அரசின் கணக்கில் இருந்து பெருத்த வேறுபாட்டு இடைவெளியுடன் இருக்கின்றன‌


எனவே தான் மதுவிலக்கை அமலாக்க, டாஸ்மாக்கை மூட மறுத்து வருவதும் அது பெரிய தேர்தல் சக்தியாக உருப் பெற்று வருவதுமாக இருக்கின்றன என்பதும் ஆய்வுக்குரிய செய்தியாக இருக்கிற படியால்....


ஜெ இறப்பு பற்றி ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த கதை தொடர்ந்து இன்னும் முடிவு சொல்லாதது போல அல்லாமல்


சூரப்பா அண்ணா பல்கலையின் துணை வேந்தரின் நிலை பற்றி விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தது போல அல்லாமல்



உண்மையான மக்கள் சக்தி விரயமாகப் போவது பற்றி


ஒரு விசாரணை ஆணையம் அமைத்து மக்களை அவர் சக்தியை  உணர வைக்க, உண்மையிலேயே மக்களின் பணம் மதுவிற்கு எவ்வளவு பாய்கிறது? பாய்ந்து செல்லும் பணம் குவியல்  எங்கே பயனாகிறது? அதன் பயன் உண்மையிலேயே அனைத்து வருவாய் விவரங்களும் அரசுக்கேதான் அரசு சொல்வது போல மதுவிற்பனை வருவாயில் தான் அரசு இயங்குகிறது என்பது பற்றி எல்லாம் ஆராய்ந்து அறிக்கை தர முற்படுமா?



பத்திரிகை ஊடகங்கள் கூட இதில் உள்ள ஊடுருவி உள்ள செய்தியை வெளிக் கொண்டு வரலாம் உண்மையிலேயே மக்களுக்கான பணி செய்வதாக இருந்தால்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




2 comments:

  1. டாஸ்மாக் நடக்கும் தவறுகள் உண்மை தான். அதே போல, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம், TNCSC நெல் கொள்முதல் செய்ய, ஒரு மூட்டைக்கு 30 முதல் 40 வரை விவசாயிகளிடம் லஞ்சம் பகிரங்கமாகப் பெறுகிறார்கள். பெறும் பணத்தை பல்வேறு மட்டங்களில் பணி செய்பவர்கள் பிரித்துக் கொள்கிறார்கள். கேட்டால் சம்பளம் போதவில்லை என்று கூறுகின்றனர். இதற்கும் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, விவசாயிகள் நலம் பெற அரசு உதவி செய்யலாம்.

    ReplyDelete