Saturday, December 5, 2020

வடநாட்டுக்காரர்களின் போர்வை வியாபாரம்: கவிஞர் தணிகை

 வடநாட்டுக்காரர்களின் போர்வை வியாபாரம்: கவிஞர் தணிகை



தீரன் அதிகாரம் ஒன்று போல மிகப் பெரிய த்ரில்லரோ,சஸ்பென்ஸ் , போராட்ட கதையோ இல்லை ஆனால் இதுவும் உண்மைச் சம்பவம் அதுவும் உண்மைச் சம்பவம் என்று அந்த காவல் துறை அலுவலர் சொல்லியது உங்கள் நினைவுக்கு.


காலை சுமார் 10 மணி இருக்கும்.பழைய பாய்கள் கோரைப் பாய்கள் தாம் பழையதாகி விட புதிதாக ஒரு கோரைப்பாய் வாங்கலாமா என்ற எண்ணம் எழுந்தது


அந்தப் பாய் பாய் என பாய் விற்றுக் கொண்டு சென்ற குரலால் எழுந்த விளைவால்...


உடனே மிதி வண்டியில் 3 பாய்களை எடுத்து வந்திருந்த  பாய் விற்பவர் இளைஞர் தாம் வாசல் வந்து எல்லாப் பாய்களையும் மொத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் 1300ரூ கொடுத்து விடுங்கள் என்றார்.


இப்போதெல்லாம் ஒரு காலம் வந்துள்ளது இது போன்ற விற்பனையாளர்கள் எல்லாம் தேவைக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு எனத் தம் பொருட்களை விற்பது போல் இல்லை. அப்படியே கொண்டு வந்ததை மொத்தமாக விற்பனை செய்து செல்லவே எண்ணம். காரணமும் பாதிப்பும் கொரானா...


என்னடா வடநாட்டுக்கார போர்வை வியாபாரம் பற்றிச் சொல்கிறேன் என்றவர் பாய்கள் பற்றி பேச ஆரம்பித்துள்ளாரே என்று நீங்கள் நினைக்கலாம்.


ஆமாம், அப்போது பாய் விலை படிந்து வாங்கும் முன்னே, வடநாட்டு இளைஞர் இருவர், முதலில் ஒருவர் வந்தார் அதன் பின் அவருடன் மற்றொருவரும் அந்தப் போர்வையைக் கொண்டு வந்தவரை விட வலிமை அதிகம் உயரம் உள்ளவராக...



எனக்கு முற்காலத்தில் ஒரு முறை இரண்டு பேர் போத்திக் கொள்வதற்கு போதுமான ஒரு கம்பளியை  நியாயமான விலைக்கு வாங்கியதும் அது இன்றும் பயன்பட்டு வருவதும் நல்ல நினைவிலாடும் விடயம் எப்போதும் எனவே பாய்க்காரரை சற்று பொறுக்கச் சொல்லி விட்டு வடநாட்டுக்காரரை கவனிப்போம் எனச் சொன்னேன். பாய்க்காரர் நமது பக்கத்து ஊரான சின்ன திருப்பதி தான் என்றும் சொல்லி இருந்தார்.


எனவே அந்த வட நாட்டு இளைஞர்களைக் கேட்டேன் விலை...எனது வீட்டு எஜமானியம்மாவையும் அழைத்தேன். ஏன் எனில் அவர்தாம் ஒரு போர்வையும் தேவை மகன் வந்தால் சரியான போர்வை இல்லை அவனுக்கு என்றும் சொல்லியவர்


போர்வை விலையைக் கேட்டுக்கொண்டே அதை வைப்பதற்கு ஒரு இருக்கையை எடுத்தும் போடச் சொன்னேன் போட்டார்கள். போர்வையை சரியாக ஒன்றின் விலையைச் சொல்லாமலே ட்யூவில் தருவதாகச் சொன்னார். எதற்கு ட்யூ, (தவணை) இதை போய் யாராவது ட்யூவில் எடுப்பாரா என்று கேட்க, ஒன்று என்றால் 1300 எல்லாம் அதில் 6 போர்வை இருந்தது...2300 எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார், மேலும் இதென்ன ஒரு  போர்வை 1300 எல்லாம் சேர்ந்து 2300 என்கிறானே என அனைவரும் அதாவது நான், பாய்காரர், எனது வீட்டு எஜமானியம்மா எல்லாம் முரண்பட்டோம்.


எஜமானியம்மா போர்வையைப் பார்த்து விட்டு, என்னை உள்ளே வாருங்கள் , உள்ளே வாருங்கள் என்றார். நான் நமது வாசல்படியில் தானே நாம் அமர்ந்திருக்கிறோம், ஏன் உள்ளே வாருங்கள் எனக் கூப்பிடுகிறாய், இங்கேயே சொல்வது தானே என எனக்கும் அவர்க்கும் அங்கேயே தர்க்கம்...


நான் உள்ளே போகத் தயாராக இல்லை...


அந்த வட நாட்டு ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லா போர்வைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் ரூபாய் 2000 தாருங்கள் போதும் என்றனர். சத்தம் கூடியது...நானும் எனது பக்கத்துக்கு ( நாம் தாம் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நள்ளிரவில்  தவறாமல் தொடர்ந்து பல ஆண்டு சாலையோரத்தில் உறங்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கி இடது கை முழங்கை மூட்டை இடம் பெயர்த்துக் கொண்ட வள்ளல் ஆயிற்றே ) நானும் வாங்கலாம் என என்ன இவனுங்க சவால் விடறாங்க எங்க வந்து சவால் விடறாங்க எனக் கொக்கரிக்க  வீட்டுக்கார எஜமானியம்மாவின் பிடிவாதத்தால் முடிந்தது...அவன்கள் அப்புறம் செல்ல ஆரம்பித்தார்கள் அந்த இருவரில் ஒருவன் கொடுக்க முடியாது அந்த விலைக்கு என்பதாக எடுத்துச் செல்ல ஆரம்பித்திருந்தான் 


வேண்டாம் என மறுக்கப் பட்டது. யார்ரா நீங்க இங்க வந்து என்னடா செய்கிறீர்கள்? என கோபம் வந்தது எனக்கு.


பாய்க்காரரும், வீட்டு எஜமானியம்மாவும் வேண்டாம் என்றது எனக்குக் கேட்கவே இல்லையாம்...சவாலை முறியடிக்கவே நான் முயன்றேனாம். அது அவர்கள் குற்றச் சாட்டு.


அடுத்து தான் கதை  ஆரம்பம்: ஏற்கெனவே ஆறுபடை வீடு எனச் சொல்லப் படும் ஆறு சகோதரர்கள் வீட்டில் இப்படித்தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் கொடுத்து விட்டு அதன் பிறகு வந்து சண்டை செய்து மறுபடியும் காசு கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அங்கே ஒரே தகராறு...என்றார் வீட்டுக்காரம்மா...


ஏன் அவங்க நிறைய பேர் இருப்பார்களே அடித்து துரத்த மாட்டார்களா என்றேன்...


சார் மெதுவாகப் பேசுங்க சார் அவங்க இன்னும் போகவில்லை என்றார் பாய்க்காரர்.


அட இந்த நாட்டில என்னடா இது பேசக் கூட விடாம அதுவும் நான் பிறந்து வளர்ந்த 60 ஆண்டுகால சுவாசமா இருக்கிற வீட்டில...என்னால் தாள முடியவில்லை...



அடுத்து பாய் வியாபரம் விலை படிந்தது....சார் சீட்டுக் கட்டணும் சார் பார்த்துக் கொடுங்க சார் என்றார். பாய்க்காரர். நான் 500க்கு கேட்க எண்ணும்போது வீட்டுக்கார அம்மா 600 என்றார். பாய்க்காரர் சேர்த்துக் கேட்க பஞ்சாயத்து பேசி இருசாரர்க்கும் பொதுவாகப் பேசிய நியாயப் படி மேலும் ஒரு 100 ரூ என 700 என முடிவாகியது அதன் மேல் பசிக்கு சாப்பிட எனக் கேட்க சனிக்கிழமையாக இருக்கிறதே என ஒரு 50 ரூ சேர்த்து 3 பாய்களுக்கும் 750 ரூ கொடுத்து சென்று சாப்பிடு என அனுப்பி வைத்தோம்.


வியாபாரம் என்றால் என்ன, விலை தோதுப்பட்டு வந்தால் கொடுப்பதும் வாங்குவதும் முடியும் அதற்கு மேல் அதில் பேச என்ன இருக்கிறது. சொல்லும் விலை, கேட்கும் விலை இரண்டும் ஒத்துப் போனால் தானே வியாபாரம். அதற்கும் மேல் என்ன இருக்கிறது...


இவனுங்க பற்றி அன்றைய நடைப்பயிற்சியின் போது ஒரு நண்பர் சொன்னார், மாடு மேய்க்கும் இடத்தில் எனது அம்மாவிடம் எங்கள் காட்டில் வந்து போர்வையை வைத்து விட்டு, நாயைப் பிடித்து கட்டுங்கள், நாயை துரத்துங்கள் போர்வையை எடுத்துக் கொள்ளுங்கள் என இவனுங்க தொல்லை பெரியதாக வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள் இல்லையேல் காசே கிடையாது பார்க்கலாமா என்று மிரட்ட போர்வையை எல்லாம் எடுத்துக் கொண்டு போனதாக...


இப்படிப் பட்ட சூழ்நிலையில் இவனுங்க உண்மையிலேயே போர்வை விற்கத்தான் வருகிறார்களா? அப்படி என்றால் ஒரு போர்வை விலை சொல்லி தர மறுக்கும் காரணம் என்ன எடுத்தால் அரை டஜன் 6 அல்லது ஒரு டஜன் 12 என்றுதான் கொடுப்பார்களாம் அது எதற்கு> போர்வையை போய் எதற்கு யார் தவணை முறையில் வாங்குவார் இப்படி எல்லாம் கேள்விகள்...


அண்மைச் செய்தி: ஒரு வட நாட்டுப் பிச்சைக்காரர்க்கும் தமிழ் நாட்டுப் பிச்சைக்காரர்க்கும் சண்டை வந்து தமிழ்ப் பிச்சைக்காரரை வட நாட்டுப் பிச்சைக்காரர் அடித்தே கொன்றதாக செய்தி படத்துடன் படித்தோம்..


மேலும் வீட்டு வாடகைக்கு விடும் வீட்டுக்காரரை கொல்வதான செய்திகள்...

இப்படி பல வகையான குற்றப் பின்னணி செய்திகள் இருக்கின்றன...இவனுங்களைத் தான் நம்ம அரசு வேலைக்கு தமிழர்களை விலக்கி விட்டு எடுப்பதாக செய்திகள்...மேலும் எந்த வேலையானாலும் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருகிறார்கள் என வேலை...


போக்குவரத்தில் கூட அவர்கள் முரட்டுத் தனம் தெரியும். நாகரீகம் தெரியாது...

வடநாட்டு குற்றங்கள் தமிழ் நாட்டை ஆக்ரமிப்பதும் தீய பழக்கங்களான பான் பராக், மசாலா பான் போன்றவை தமிழ் நாட்டின் மண்ணில் அதிகம் உமிழப் படுவதும், துணையாக மதுக் கலாச்சாரமும் அரசுகளும் துணை போவதும் தமிழ் மக்கள் நிம்மதி தொலைந்து போக நெடு நாள் இல்லை எனக் கருத வாய்ப்புண்டு...


பாய்: நாம் மலை வாழ் மக்கள் சேவை செய்து வரும்போது பாய் நெசவுக்கு வட்டி இல்லாக் கடனுதவி செய்த போது பாய் தயாரிப்பதை பார்த்த நினைவும் இன்றும் மறையவில்லை..


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment