Sunday, May 5, 2019

பேரன்பு: கவிஞர் தணிகை

பேரன்பு: கவிஞர் தணிகை

Image result for peranbu


1. உணர்வுக்கு அதன் வடிகாலுக்கு அழகு அழகில்லை என்பதெல்லாம் தேவையில்லை. வயதும் பருவமும் மட்டுமே..

2. ஆண் பெண்  நடுவண்பால்  என்ற இனம் எல்லாம் தேவையில்லை அன்பைக் கொட்டுவதற்கு

3. எப்பாடுபட்டாவது வாழ வேண்டுமேயல்லாமல் எவருமே சாகத் துணிவதில்லை பிச்சை எடுப்பாரும் உடலை அசைக்க முடியாதாரும் கூட...

4. இயற்கை பெரு வலிமையுடையது அது தமிழ் நாட்டுக்கு சேதமின்றி ஆந்திரா ஒடிஸா, மே.வங்கம், கிழக்கு வங்கம்  வழி கூட செல்லும் ஃபானி போல...

5 உரிய பருவம் வரும்போது உணர்வுகள் கிளர்ந்தெழுந்து சுய இன்பம் அனுபவிக்க விரும்பும் இளம் பருவத்தினர்க்கு நெறிப்படுத்தல் அதுவும் பெற்றோர் வழியே வழிகாட்டப்படல் வேண்டும்...

இப்படி பல வாரியான உயரிய அவசியமான சமூகத்திற்கு தேவையான கருத்துகள் ஒரு கவிதை நடையில் சொல்லப்பட்ட படம்.

இப்போதெல்லாம் படம் பார்க்கும் தொடர்பு விட்டுப் போய்விட்டது அல்லது பார்த்தாலும் அது எழுதும்படியான உந்துதலோடு இல்லை.

ஒரு கட்டத்தில் பார்த்தால் எதற்காக இந்த சோகப்படங்களை எல்லாம் பார்க்க வேண்டும் நாமும் துயரப்பட வேண்டும் வாங்க போங்க என குத்தாட்டம் ஆடிவிட்டு எல்லோரையும் போல விட்டு விட வேண்டியதும் சரிதானோ எனத் தோன்றும்...

அப்படித்தான் இந்த பேரன்பு, கனா போன்ற படங்கள் என் கை வசம் வந்து பல நாட்களாகிய பின்னும் பார்க்காமலே இருந்து வந்தேன். பணிச்சுமையும் பயணச் சுமையும் அன்றாட அலுவல்களின் போக்கும் கூட காரணங்கள்.

முன்பு போல சினிமா பார்ப்பதை ஒரு கடமையாகச் செய்துவிட்டு அதை உங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற அவா எல்லாம் இந்தக் காலத்துள் அமிழ்ந்து போய்விட்டது.

ஆனால் பேரன்பை பார்க்காமல் இருந்தால் பார்த்து விடுங்கள் எனச் சொல்லவே இந்தப் பதிவு. நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்... என்னைப் போல் ஒர் பெண் பிள்ளை இல்லாதவர்கள்...நான் அதை வைத்துக் கொண்டு பட்டதை பட்டு மீண்டதை எழுதி பல அத்தியாயமாக புத்தகமாக்கியிருக்கிறேன் படித்துப் பாருங்கள் என்கிறார் அமுதவன்.

அமுதவன், பாப்பா பற்றிய கதை நம் கண் முன் காட்சி ஓவியமாய் விரிந்தோடுகிறது...அதில் இடையே தேவைப்பாட்டுக்காக அஞ்சலி,என்னும் விஜயலட்சுமி, . அஞ்சலி அமீர் என்னும் மீரா போன்ற நல்ல படைப்புகளும் இணைந்து வருகின்றன என்றாலும் ஊரும் உறவும் உலகும் அவர்களை தூற வீசி எறிய அவர்கள் எப்படி யாருமற்ற கானகத்திற்கு போய் அங்கும் வாழமுடியாமல் மறுபடியும் நகர்புற வாழ்வுக்கே வந்து படாத பாடு படுகிறார்கள் என மிகவும் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது .இந்த உலகத்தரமான படம். டாக்டர் தனபாலாக சமுத்திரக்கனி அளவாக, அஞ்சலி போன்றோரும்

இந்தப் படத்தைப் பற்றி சொல்ல முயற்சிக்கும் முன் பார்த்து விடுவதே சரியாக இருக்கும்
Image result for peranbu
நல்ல துணிச்சலுடன் சுய இன்பம் என்ற ஒரு தீங்கு எப்படி இளையவர்களை தீண்டி அவர்களை பாழ்படுத்துமளவு சென்றுவிடும் அதை எவ்வாறு கையாள்வது என நுட்பமாக நுணுக்கத்துடன் அலசி இருக்கின்றனர்.

பழங்காலத்தில் பெற்றோர்க்கு, முதியவர்க்கு தாத்தா பாட்டிகளுக்கு எல்லாம் ஒரு சகிப்புத்தன்மையுடன் செய்தார்கள் அதே போல குடும்பத்துள் எவராவது ஒருவர் தப்பிப் பிறந்தால் ஊமையாகவோ, முடமாகவோ, ஏதோ ஒரு குறைபாட்டுடன் இருந்தாலும் அரவணைப்பு கிடைத்தது...ஆனால் அது நாட்பட நாட்பட காலப்போக்கில் எப்படி மாறியது மனிதர்கள் எப்படி சுயநலக்கிருமிகளாகிப் போனார்கள் என்ற வட்டத்தை தெளிவாக தொட்டுக் காண்பித்திருக்கும் படம்

சமுத்திரக் கனி ஒரு படத்தில் எப்படி ஒரு பெண் குழந்தையுடன் இரவு விடுதிகளில் சென்று அவதிப்படுவாரோ,அதே போல சாலையோரம் கடற்கரையோரம் என்ற காட்சிகள் நமது சமூகத்தின் வெளிப்பாட்டுக் குணமாக ஈரமில்லாத நெஞ்சுகளை எளிதில் புலப்படுத்துவதும் சுற்றம் சூழம் எவ்வாறு மனித நச்சு மிருகங்களுள் முடங்கிப் போய் உள்ளன என்பவற்றையும் காட்டுகின்றன.

மோகன்லால், மம்மூட்டி கமல், அமீர்கான் போன்றோர் மட்டுமே இது போன்ற கேரக்டர்களில் செய்ய முடியும். மம்மூட்டி அமுதவனாக மாறி இருக்கிறார். கொஞ்சம் கூட மிகையான நடிப்பில்லை. அறை வாங்குகிறார், அடி வாங்குகிறார் ... நான் நம்ம ரஜினியை நினைச்சுப் பார்த்தேன்....அந்த ரோலில்... கதை நகர்கிறது நகர்த்துகிறது நடிப்பார் அல்லாமல்...அவர்கள் வழியே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment