Friday, May 24, 2019

மோதி என் நண்பன்: கவிஞர் தணிகை

மோதி என் நண்பன்: கவிஞர் தணிகை

Image result for modi with dog

அப்போது இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்புதான் வயது 8 இருக்கலாம் . 1970களாக இருக்கலாம். மோதி என் நண்பன் என்ற திரைப்படத்தை பள்ளியிலிருந்து ஆசிரியர்களே கூட்டிக் கொண்டு போனார்கள். அதற்கு காசு கொடுத்தோமா இல்லையா என்பது கூட சரியாக நினைவில்லை. அந்தப் படம் பள்ளி மாணவர்களுக்காகவே எடுக்கப்பட்டு அரசால் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கலாம் என்று இப்போது ஒரு முடிவுக்கு வர முடியுமளவு அறிவு இருக்கிறது ஆனால் அப்போது அதெல்லாம் இல்லை. சினிமா, சினிமா மிகப்பெரிய கொண்டாட்டம்.

அந்தப் படத்தில் பூபதி, பார்த்திபன் போல் ஏதாவது ஒரு நண்பன் கதை இருக்கும் என நினைத்துப் போய்ப் பார்த்தால் . மோதி என்பது ஒரு வீட்டின் அந்த சிறுவனின் வளர்ப்பு நாய். அரிய தோழன். அந்த நாயை அவன் ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது சாலையோரத்தில் அடிபட்டு முனகிக் கிடக்கும் ஒரு குட்டி நாய் அதுவும் ஒரு பெண் நாய் என்றே எவரும் அதை சீண்டாமல் இருக்க, சிறுவன் அதை எடுத்து வந்து அவனது தந்தையிடம் திட்டு வாங்கினாலும் அந்த நாய்க்கு மருந்திட்டு , நீர் கொடுத்து , உணவு கொடுத்து பிழைக்க வைத்து காப்பாற்றி விடுகிறான். அது முதல் அந்த நாய் அவனது உயிர்த் தோழமை கொள்கிறது.

ஏன் அது முதல் அவனுடன் பள்ளி சென்று வாசலில் காத்திருந்து அழைத்து வருவதும் இருவரும் சேர்ந்து திருடனை பிடிப்பதும், காவல்துறைக்கு நன்மை செய்வதும் கடைசியில் அவனது உயிரைக் காப்பாற்ற கொள்ளையர்களின் குண்டுக்கு பலியாக உயிரை விடுவதுமாக இருக்கும்.

*************************************************************************
Image result for modi with dog
இந்தியக் குடிமகனாக இருந்து அபார வெற்றி பெற்று மறுபடியும் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு  ஒரு கடிதம் அஞ்சல் செய்ய அவசியமாகிறது.
அப்துல் கலாம் போன்ற மாமேதைகளுக்கும் கூட தமது உச்ச பதவியில் இரண்டாம் முறை அமர வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்தியாவின் மக்கள்   2019ல் தேர்தலில் அளித்த தீர்ப்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது 1971க்கும் பிறகு  ஏற்கெனவே ஆண்ட அதே பிரதமர் மறு வாய்ப்பைஉடனே திரும்பவும்  பெற்றதேயில்லை உங்களைத்தவிர‌  என்கின்றன செய்திகள்.

மாபெரும் வாய்ப்புதான் அதில் எவருக்கும் சந்தேகமில்லை.

அதை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள்....கடந்த காலத்தில் பணக்காரர்களுக்கு குடை பிடிக்கும் நிலையை அப்படியே நீடிக்க விடப்போகிறீர்களா அல்லது உங்களுக்கு தங்களது நம்பிக்கையின் சின்னமாக வாக்களித்த ஏழை எளியவர்களுக்காக திட்டம் தீட்டி மாபெரும் மனிதராக மாறப் போகிறீர்களா அவர்கள் கண்ணீர் துடைத்து.

குடிநீர், மருத்துவம், வேலைவாய்ப்பு, இருப்பிடம், ஆகியவை பற்றிய‌ துன்பம் தொடர்வதன் துயர் துடைக்கப்போகிறீகளா?


இராமகிருஷ்ணர் சொல்வார் மழை என்பது மேல் இருந்து பூமியை நனைத்து பயிர் முளைக்க கீழ் இறங்கி வருவது போல மாந்தர் மிக உயரும்போதும் கீழ் இறங்கி வர வேண்டும் என்பார்.

இந்தியாவின் தந்தை மகாத்மா போட்டிருக்கும் பணப் புழக்கத்தின் நோட்டை மாற்றிக் காட்டினீர், இரவு நேரத்தில் பணத்தை மதிப்பிழக்க வைத்து மக்களை வங்கி வாசலில் உயிர் போக வைத்தீர், படேலுக்கு உலகின் மாபெரும் சிலை வைத்தீர், ஐந்து ஆண்டு கழித்த பின்னே பத்திரிகையாளரை
சந்தித்தீர், உலகின் நாடெல்லாம் சுற்றி வலம் வந்தீர், பாராளுமன்றத்தில் கேள்வி பதில் நிகழ்வுகளில் கூட பங்கெடுத்து பதில் அளிக்க பெரும்பாலும் விரும்பியதில்லை என்றாலும் இந்திய மக்கள் உங்களை நம்பி இரண்டாம் முறை உங்களை கடவுளாகவே தம்மை இரட் சிக்க வந்தவர் என்றெண்ணி அரசியலையும் பக்தியையும் கலந்தே பார்த்தே வாக்களித்துள்ளனர். ஆதிகடவூரின்  அபிராம பட்டர் சொல்லிய பதினாறு செல்வங்களுள் ஒன்றான கோணாத கோல் என்ற ஆட்சியைத் தருவீர் என்று...இராமனும் கிருஷ்ணனும் நல்லதொரு ஆட்சி அமைக்க உதவியிருக்கிறார்கள்
Image result for modi with dog
எதுவும் வேண்டாம், தயவு செய்து நதிகளை இணைத்து தேசியமயமாக்குங்கள்.

மகாத்மா காந்தியை தேசப்பிதா என்றவரை
இந்த நாட்டின் நீர்ப்பாசனத் தந்தை என்ற சர் ஆர்தர் காட்டன் என்றவரை
 எல்லாம் அவர் பேரை எல்லாம் பின் தள்ளி

உங்கள் பேர் முன் வரும். இந்திய சரித்திரத்தில் இடம் பெறும்
இதன் தடையாக வரும் எந்த சக்தியையும் முறியடியுங்கள்

எந்த மாநிலமாவது எதிர்த்தது என்றால் அந்த மாநில ஆட்சியைக் கலைத்து அதை குடியரசுத் தலைவரின் நேரடி மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து திட்டத்தை எப்பாடுபட்டாவது உங்களின் இந்த 5 ஆண்டு நிறைவடைவதற்குள் செயல்படுத்தி விட்டால் இந்தியாவே உங்கள் புகழ் பாடும்.
Image result for modi with dog
இதைப்பற்றிய மேலான கருத்துகள் செறிவான பகிர்தல்கள் தேவைப்பட்டால் இந்த நாட்டின் வல்லுனர்களிடம் இருந்து பெறலாம். நானும் கூட நதி நீர் இணைப்பு பற்றி பல இடங்களில் எப்படி எல்லாம் செய்யலாம் என வடிவமையும் வண்ணம் எனது கருத்துகளைப் பதிந்து பகிர்ந்துள்ளேன் அவற்றைப் பற்றி உங்களிடமும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

வாழ்த்துகள் என்றும்.
Image result for modi with dog
உங்கள் கட்சியின் நெறிகளில் இரண்டு முறைக்கும் மேல் மறுபடியும் இது போன்ற மாபெரும் பதவி வகிக்க தேர்தலில் அதற்காக போட்டியிட‌ அனுமதி மறுக்கப்படும் என்பது உண்மையா இல்லை அது போன்ற வழிமுறைகள் அமெரிக்க நாட்டில் உண்டு... இங்கு நமது நாட்டில் உண்டா என்று தெரியவில்லை. உங்கள் கட்சியின் ஒரு தொண்டர் இனி தேர்தலும் வேண்டாம் நீங்களே போதும் என உங்களைக் கடவுளாகவே வணங்குவதாக என்டி டி வியில் பிரண்ணாய் ராய் பேட்டியில் பார்த்தேன். பிரண்ணாய்  ரீடர்ஸ் டைஜஸ்ட் மே மாத இதழிலில் தேர்தலுக்கும் முன்பே நீங்களே வருவீர் பிரதமராக உங்கள் கட்சியே வெற்றி பெறும் என்றும் புதிதாக வாக்களிக்க உரிமை பெற்ற இளையவர் எல்லாம் நீங்கள் தலைமை ஏற்கவே ஆர்வமாக உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொல்லியது உண்மை. அது நிரூபணமாகிவிட்டது. இந்தியாவில் அடுத்த தேர்தல் முதல் வாக்கு சீட்டு முறையைக் கூட மறுபடியும் கொண்டுவந்து சிலர் படும் சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள். நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment