Monday, May 6, 2019

தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையின் அபாயம்: கவிஞர் தணிகை


தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையின் அபாயம்: கவிஞர் தணிகை




ஜெ அரசின் வழித் தோன்றல்களில் செங்கோட்டையன் கல்வி அமைச்சர் சிறப்பாக பணி புரிகிறார் என்ற ஒரு மாயா பிம்பம் பிரமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய செய்திகளால் அந்த பிரமை அகன்று விட்டது.

8 ஆம் வகுப்பு வரை படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி,ப்ளஸ் ஒன்றுக்கு தனியான தேர்வு, ப்ளஸ் டூவுக்கு மறுபடியும் தேர்வு இப்படி பல மாற்றங்கள் என்றாலும் கடைசியில் ரிசல்ட் எல்லாம் 100க்கருகே வந்தாலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே போய்விட்டது.

இன்றைய செய்தி என்னவெனில் ப்ளஸ் ஒன் தவறிய மாணவர்கள் தவறிய பாடங்களில் அதாவது ப்ளஸ் டூ தேறிய போதும் ப்ளஸ் ஒன் தவறிய பாடங்களில் தேறவில்லை எனில் மேற்படிப்புக்கு செல்ல வழியில்லை என்ற நிலையில் மறு தேர்வு எழுதியவரில் 52 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். 48 சதவீத மாணவர்கள் தோல்வி.

இந்நிலையில் ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதமோ மிக அதிகம்.
எல்லாம் நூற்றுக்கு நூறுக்கு மிக அருகே. இவர்கள் என்ன படிக்கின்றனர்
எங்கே வேலை பார்க்கப் போகின்றனர் எவ்வளவு மாத ஊதியம் கிடைக்கும்
இது பற்றி அரசுக்கு கவலை இல்லை.

பள்ளியில் கற்றல் வழி, கேட்டல் மொழி, ஆய்வு வழி என்று என்ன என்னவோ சொல்லப்பட்டாலும் மெக்காலே கல்வி முறை மட்டும் அடிப்படையில் அப்படியே இருக்கிறது.

யானையும் காடும் கடலும் பாடத்தில் படத்தில் மட்டுமே காட்டப்படுகின்றன. மேலும் எண்ணும் எழுத்தும் ஆங்கில வழிக்கல்வியுமே பெரிதான கல்வி எனச் சொல்லும் மாயை இன்னும் விலகவே இல்லை.

இந்த நேரத்தில் எனது நினைவில்:

 எமது கல்லூரிக்கு வந்திருந்த ஜப்பானிய ஆய்வு அறிஞர்கள் இருவர்க்கும் ஆங்கிலம் அறவே வரவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் அவசியம் தேவைப்பட்டார். அவருக்கும் கூட பாராட்டுமளவு மொழி அறிவு இல்லை.

விவசாயம் நலிந்து விட்டது ஆனால் விவசாயப் படிப்புக்கு மௌஸ்.வேலையே இல்லை அதனாலோ என்னவோ காமர்ஸ் படிப்புக்கு மௌஸ். பொறியியல் படிப்பு பாடாய் படுத்துகிறது வேலைக்கு அரசு வேலைக்கு ஒர் ரேட் இருக்கிறது இல்லாமல் கிடைக்காத என்ற செய்தி அனைவரிடமும் பொதுவாக நிலவுகிறது.   

 தமிழகப் பள்ளிகளில் பெரும்பாலும் காலத்துக்கேற்ற கட்டமைவே இல்லை. அர்விந்த் கெஜ்ரிவால் முயற்சியில் டில்லியில் பொதுப்பள்ளிகள் எப்படி என ஒரு காட்சிப் பேழை பார்த்த்தேன் . கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல பள பள வென அயல் நாட்டுப் பள்ளிகள் போல காட்சி கொடுத்தன.

மொத்தத்தில் எல்லாம் இலவசம் என்று பள்ளியின் தரத்தை மாணவர்களின் கல்வித் தரத்தை படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி என்று சொல்லி வேலை வாய்ப்பை அதற்கான கல்வி தேர்ச்சிய முக்கியமான கல்விக் கட்டத் தேர்வில் மாணவர்களை அவர்கள் தரத்தின் தாழ்ச்சியை உறுதிப்படுத்தி விட்டன இந்த தமிழக அரசின் மாண்புகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment