Sunday, May 19, 2019

ஜான் விக் 3., காற்றின் மொழி,கனா: கவிஞர் தணிகை

ஜான் விக்  3., காற்றின் மொழி,கனா: கவிஞர் தணிகை


Related image

ஜான் விக் மூன்றாம் பகுதி, காற்றின் மொழி, கனா ஆகிய படங்களைப் பார்த்தது பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டேன். பேரன்பு பற்றி மட்டும் எழுதி இருந்தேன்.

காற்றின் மொழி குடும்பத்துடன் பார்த்தேன் கடந்து போன வாரத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். மனம் இலயித்தது. எனவே பார்த்து முடித்து விட்டுத்தான் விடுவது என மனதைக் கட்டாயப் படுத்திக் கொண்டு எல்லா விவரங்கள் நீட்டல் விளம்பரங்கள் அடங்கிய எல்லா தொல்லைக் காட்சிகளையும் பொறுத்துக் கொண்டு பார்த்து முடித்தோம்.

Image result for kaatrin mozhi

வேலைக்கும் போகும் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக ஜோதிகாவின் நடிப்பு ஜொலித்தது. மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு நன்றாக செய்திருந்தார். இளங்கோ குமரவேல் அதற்கென்றே பொருத்தப்பட்ட கும்கி கும்பக்கரை கிருஷ்ணமூர்த்தியாகவும்  விதார்த் மிகவும் பொருத்தமான மெல்லவும் முழுங்கவும் முடியாத கணவனாகவும் நன்றாகவே செய்திருந்தார்கள். ஒருவரின் எழுத்தறிவுக்கும் வேலைக்கும் அனுபவத்திற்கும் நிறைய இடைவெளி என்பதை சொல்லி உள்ள படம். இடையே அதற்கு தீனிபோடும் நிறைய சிறு சிறு பாத்திரங்கள் ஊடுருவலாக ஒத்துழைக்க நல்ல படமாக இராதா மோகன் செய்திருந்தார். இவர் 1980களில் நான் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டிக்கு நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்ளச் சென்று இருந்த காலத்தில் சினிமாவா தொலைக்காட்சி வேலையா என்ற இரண்டுக்கும் நடுவில் தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் நல்ல படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்தீரை பதித்து வருகிறார். ஆனால் ஒரேமாதிரியான படங்கள் இவருடையது

கனா: அமீர்கான் இந்தியில் டங்கல் படத்தில் தமது குடும்பத்தில் இருந்து தனது கனவான ஒரு மல்யுத்த சாம்பியனை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை தனது மகளை  பெண் மல்யுத்த வீராங்கனையை உருவாக்குவது போல் சத்யராஜ் ஒரு ஏழை விவசாயி முருகேசனாக ஐஸ்வர்யா ராஜேஸ் கௌசல்யா முருகேசனாகவும், சிவகார்த்திகேயன் அனைவரும் பாராட்டும் பயிற்சியாளராகவும் சமுதாயப் புறக்கணிப்புகளையெல்லாம் புறம் தள்ளி தமது குறிக்கோளில் எவ்வாறு வெற்றி அடைகிறார்கள் என்பதே கதை நல்ல ஆக்க பூர்வமான கதைகள் வருவது நல்ல அறிகுறிதான். அது மட்டுமல்லாமல் விவசாயமும், கடன் வாங்கிய ஒரு விவசாயியின் நிலை பற்றியும் நல்ல முறையில் சித்தரித்துள்ளார்கள்.
தயாரிப்பாளர் சிவ கார்த்திகேயன் இதில் நடித்துமுள்ளார். நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

Image result for john wick 3

ஜான் விக் 3. மூன்றும் பார்த்து விட்டேன் இதை இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட பாகத்தில் அடுத்து ஜான் விக் 4 வர இதிலேயே கடைசியில் காட்சியை முடித்து தயாராக வைத்திருக்கிறார்கள்.

இதன் காட்சிகளில் சில எனக்கு என்டர்  த ட்ராகன்: புரூஸ் லீ கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாடி மாயா பிம்பங்களை உடைத்து அதன் பின் தெளிந்து எதிரியை சமாளிப்பாரே அவற்றை நினைவு படுத்தியது.

ஒரே நபர் என்னதான் புல்லட் புரூப் ஜாக்கெட் உடன் இருந்தாலுமே எப்படி சளைக்காமல் இவ்வளவு எதிரிகளைக் கொல்கிறார் என்பதும் சட்டம் காவல் நீதி என்பதே இல்லாத நாட்டில் நடப்பதாக இவற்றைக் கொண்டால் ஒரு சினிமாவாக கதையாக பார்த்தால் பிரமிப்பூட்டும் படங்கள் தாம் ஆங்கிலப் படங்கள் என்ட்கேம் உட்பட....ஆனால் எல்லாம் கம்ப்யூட்டர் கேம் விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டும் பொழுது போக்குகளே.

இடையே நாயின் பாசம். ஒரு நாயைக் கொல்வதிலிருந்து அந்தப் படம் மறுபடியும் வெகு வேகமாக கிளம்புகிறது...

கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் வரை

No comments:

Post a Comment