Tuesday, October 2, 2018

முடியுமா முடியாதா? : ‍ கவிஞர் தணிகை

முடியுமா முடியாதா? : ‍ கவிஞர் தணிகை

Image result for can or cant


 நல்லது;இணையத்தில் தமிழ் சினிமாப் படங்களை வரவிடாமல் தடை விதிக்க பெருமுயற்சி எடுத்து பெருமளவு அதில் வெற்றியும் பெற்றுள்ள அரசால் பிஞ்சிலேயே வெம்பிப் போகும் எமது இளந்தளிர்களை காக்க‌ நீலப்படங்களை வராமல் தடுக்க முடியுமா முடியாதா?

நள்ளிரவில் இருந்து ஐநூறும் ஆயிரமும் செல்லாது என அறிவித்து பொதுமக்களை சித்ரவதைக்குள்ளாக்கிய அரசால் அதிக மதிப்புடைய பணத் தாள்களை நீக்க முடியுமா முடியாதா?

விவசாயிகளுக்கு நோ சொல்லிக் கொண்டு மாபெரும் தொழிலதிபர்களுக்கு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு எஸ் சொல்லிக் கொண்டு சலாம் போடும் அரசுகளால் ஏழை எளியார்க்கு வசதி வாய்ப்புகளை கொண்டு வர திட்டங்கள் சட்டங்கள் போட்டு சிக்கெடுக்க முடியுமா முடியாதா?

நதிகளை இணைத்து நாட்டு வறுமையை வெள்ளத்தை கட்டுக்கு கொண்டுவந்து இந்தியா என்னும் பூமியை வளப்படுத்த முடியுமா முடியாதா?

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வோம் என்னும் அரசால் அதைத் தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூட முடியுமா முடியாதா?

அது போன்ற கம்பெனிகளுக்கு உரிமம் வழங்காதிருக்க முடியுமா முடியாதா?

எவருக்குமே வேலைக்கு உத்தரவாதம் உரிய ஊதியம் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிற அரசுகளால் மதுக்கடைக்கு விநியோகம் செய்யும் கம்பெனிகளுக்கு தயாரிக்கத் தடை செய்யும் ஆணை வழங்கி மதுவை நிறுத்த முடியுமா முடியாதா? மது பான கம்பெனிகளுக்கு கல்தா கொடுக்க முடியுமா முடியாதா?

 பீடி சிகரெட் புகைப்பது, கஞ்சா , போதைப்பொருள், பான் பராக், குத்கா போன்ற வாய்ப்புற்று நோய் மற்றும் புற்று நோயை உண்டு பண்ணும் மனிதர்களை இழி நிலைக்குத் தள்ளும் உற்பத்தியை அரசுகளால் நிறுத்த முடியுமா முடியாதா அதிரடி நடவடிக்கை எடுத்தால்...

மதுவிற்பனையை விட பேராபத்தான குடி நீர் விற்பனையை அதை சுத்தம்பண்ணி விற்பதாக வேடிக்கை பண்ணி பேரை வைத்து பெரும்பணம் சம்பாதிக்கும் ஆலைகளுக்கு உரிமம் ரத்து
 பண்ணி குடி நீர் விற்பனையை தடுத்து நிறுத்த முடியுமா முடியாதா? அரசு நினைத்தால்...

ஓரினப்புணர்ச்சி செல்லும், ஜெ குற்றவாளி அல்ல, குற்றவாளி எனச் சொல்லி குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை அதாங்க எப் ஐ ஆர் போட்ட பின்னும் தேர்தலில் நிற்கலாம் எனச் சொல்லும், தற்கொலைக்கு செல்லாவிட்டால் போதும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம்  சுமுகமாக கமுக்கமாக ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டால் போதும் என்னும் சட்டம் நீதியால் சரியான சட்டம் நீதி எல்லாம் செய்து நாட்டு மக்களை நல்வழிப்படுத்த முடியுமா  முடியாதா:?

மக்கள் எங்கு ஒருங்கிணைந்து விடுவார்களோ என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அதையும் சரி எனச் சொல்லிக் கொண்டு அவர்களை பிரித்து ஆள நடிப்பு, சீரியல், சினிமா என போதைக்குள்ளாக்கி விடும் மக்களை இந்த ஊடகத்தை எல்லாம் சரி செய்து மேன்மைப்படுத்தி நல் வழிக்கு கொண்டு செல்ல முடியுமா முடியாதா?

இப்படி நாடெங்கும் சாலையெங்கும் வீதியெங்கும் கொடி படம் தோரணம் எனச் சொல்லீ நட்டுக் கொண்டும், நாளிதழ்களில் வேறு எந்த நல்ல செய்திகளுக்கும் இடம் தராமல் அரசியல் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா?

இப்படி ஆயிரம் கேள்விகளும் பதில்களும்...

ஏன் இலஞ்சம் இல்லா பாரதத்தை உருவாக்க முடியுமா முடியாதா?

இப்படி மிகவும் சிக்கலான கேள்விகளும் உண்டு...

மகாத்மா, லால்பகதூர் சாஸ்திரி, காமராசர்  போன்றோரை இருந்தாரை நினைக்க ஒரு நாள் விடுமுறை...சரி அவர் சரி இல்லை...இவர் சரி இல்லை...என்பதை எல்லாம் சொல்லுமளவு இருப்பவர்க்கு தகுதி இருக்கிறதா அப்படி தகுதியுடன் இருந்து அவர்களை எல்லாம் மீறி அவர்கள் சாதிக்காத ஒரு நன்மக்கள் சமுதாயத்தை சாதிக்க எது தடையாயிருக்கிறது? அந்த தடையை உடைத்து சாதிக்க ஏன்  நம்மால் முடியவேயில்லை...

மகாத்மா பற்றி அவர் பகத்தை நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனவும், கப்பலோட்டிய தமிழனுக்கு தென்னிந்தைய தமிழ் மக்கள் கொடுத்த நிவாரணப்பணத்தை அபேஸ் செய்து கொண்டார், அவர் முதல் மகன் ஒரு வீதியில் படுத்துக் கிடந்த குடிகாரன் என்றெல்லாம் செய்திகள் உண்டு...அதை எல்லாம் மீறி அவரது நாளை இன்று கொண்டாடி வருகிற இந்தியாவில் எனைப்பொறுத்த வரை இன்று எனக்கு ஒரு நாள் விடுமுறை. இன்று நடைபெறும் கிராமசபையில் கலந்து கொண்டு வாரப்படாத சாக்கடை, பல மாதங்களாகியும் எரியாத தெருவின் மின் விளக்கு, நீர் சரியாக வராமை, குடிநீர்க்கட்டணம் ஏன் ஏற்ற வேண்டும்? ஏன் இங்கேயும் நவப்பட்டியில் இருப்பது போல ஒரு மின்மயானம் ஒன்றை உருவாக்க்க் கூடாது? இப்படி பல கோரிக்கையை அளிக்க எண்ணம் உருப்பெறாமலே...

ஏன் ஒரு முறை சென்று கலந்து கொண்டதன் அனுபவம்...எல்லாவற்றையும் மீற சுய நலம், குடும்ப நலம் எல்லாவற்றையும் மீற வேண்டும்...சுய நலம் என்ற சொல்லின் பொருள்: இங்கு தவறு செய்வதல்ல, இலஞ்சம் பெறுவதல்ல, அடுத்தவர் பொருளை அபகரிப்பதல்ல, தவறான பொதுவாழ்வல்ல, தனது  வாழ்வில் இன்னும் செய்ய வேண்டிய கடமையில் கொஞ்சம் எஞ்சியிருப்பதால்...அதுவும் நிறைவடையும்போது...முதுமையும் உடற்பிணியும் வந்து நிற்கப்போகிறது அதனுடன் சேர்ந்து நின்றுத்தான் போராடியாக வேண்டும்...இளமையில் செய்ததைக் கூட குடும்பம் பொறுப்பு என்பவற்றில் இருந்து கொண்டு செய்ய முடியாத நிலையை இந்திய அரசியல் இந்த அரசியல் உருவாக்கி விட்டது...

காந்தி இதைப்பற்றி இந்த அரசைப்பற்றி, இது போன்ற அரசைப்பற்றி கருதவே இல்லை...

Related image


முடிந்தால் படித்துப் பாருங்கள்...காந்தியை தேசப்பிதா என்று சொல்லிக் கொண்டு காந்தியை தூய்மை பாரதம், அதற்கு இதற்கு என்று பேரை பயன்படுத்தி வரும் அரசு அவர் வழிச் செல்வதாக இருந்திருந்தால்...ஓரினப்புணர்ச்சி, மணமானவர்களும் எவரும் எவர் வேண்டுமானாலும் ஒருவர்க்கொருவர் விருப்பமிருப்பின், ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேர் ,ஜெ குற்றமற்றவர், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்ற குற்றவாளிகளும் அரசை நிர்வகிக்கும் பதவி பெற தேர்தலில் நிற்கலாம்...போன்ற தீர்ப்பை எல்லாம் வழங்கி இருக்கவே முடியாது...இதை எல்லாம் மாற்ற முடியுமா முடியாதா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment