Friday, October 19, 2018

அய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை

அய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை
Image result for ayyappan tempil



உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், கேரள அரசும், தேவசம் போர்டும் ஏற்றுக் கொண்ட முடிவை ஏன் ஆர்வலர்கள் ஆட்சேபித்து நிலக்கல்லில் பெண்கள் வாகனச் சோதனை நடத்தி வருவார் போவோரை சங்கடத்தில் ஏன் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தார் பட்டியலில் வரவில்லையா...மத்திய நாடாளுமன்றத் தேர்தல் அருகே வர வர..எல்லா மாநிலங்களிலுமே இது போன்ற சலசலப்புகள்...காரணமாகும் தீர்ப்புகள். காவிரியும் கர்நாடகாவும் போல...வைரமுத்துவும் தமிழகமும் போல...ஹெச் ராஜா எஸ்.வி. சேகர் கருணாஸ் போல...
 வைக்கம் வீரர் பெரியார் இன்று இருந்திருந்தால் நிலக்கல், பதினெட்டாம்படி அய்யப்பன் கோவிலுக்கு சென்று போராட்டம் நடத்தி இருப்பார். ஆனால் அவர் இல்லாதபோது அவர் பேர் சொல்லும் இயக்கங்கள் என்ன செய்கின்றன...அல்லது செய்தவை பற்றி ஊடகங்கள் வாய் மூடிக் கிடக்கின்றனவா?


தாழ்த்தப்பட்ட இனத்தவரை முதலில் அர்ச்சகர் ஆக்கி மூலஸ்தானத்தில் நுழைய வைத்த கேரள அரசின் நடவடிக்கையை பாராட்டினார்கள். அனைவரும் இப்போது அய்யப்பன் கோவில் முடிவில் முரண்பாடாய் நிற்கிறார்க்ள் நியாயத்துக்கு புறம்பாக...


அனைவரும் கோவிலுக்குச் செல்வது ஏற்புடையதுதானே...அதில் என்ன அனைவர்க்கும் சம வாய்ப்பு உண்டாக்கித் தரவேண்டியதுதானே கோவிலும் அரசும்

10 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் 60 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும் மாதவிடாய் உள்ள காரணம் பற்றியே இவர்கள் எல்லாம் தடுக்க முனைகிறார்களா அல்லது வணிக நோக்கமா, அல்லது அய்யப்பன் புகழ் மங்கிவிடுமா....
மக்கள் கூடும் பொது இடங்கள் யாவற்றிலுமே துர்நாற்றம் வீசுமளவு கழிவுகளின் எச்சம் வீச்சம் வருகிறது உண்மைதான்...அதற்காக போக்குவரத்தையே நிறுத்தி விட முடியாதே...அரசுக்கும் தூயமை செய்ய வேண்டிய கடமையும் ஒவ்வொரு தனி மனிதர்க்கும் சுற்றுப் புறம் சுகாதாரம் ஆகியவற்றில் தனி கவனமும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றைப்பற்றி நன்கு அறிவுறுத்தி நமது பிழைகளை நாம் சீர் செய்தாகவேண்டும்
Image result for ayyappan tempil
காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. 48 நாட்கள் விரதமிருந்து சென்றவர்கள் இப்போது அப்படியா சென்று வருகிறார்கள் அதை ஏன் தடுக்க முடியவில்லை அய்யப்பன் கோவில் வருகிற அத்தனை பேரும் அப்பழுக்கற்ற புனிதர்க்ளாகவா மாறி விடுகிறார் அல்லது மாறி இருக்கிறார்...எனக்குத் தெரிந்த ஒரு பாக்கியை பக்கி என எழுதும் ஒரு நபர் கோவில் சாமி என்ற பேர் எல்லாம் சொல்லிக் கொண்டு எல்லா வித அயோக்யத்தனங்களையும், ஊழல்களையும் செய்து கொண்டுதான் இருந்தது. அதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.
Image result for ayyappan tempil


அப்படி அய்யப்பன் கோவில் வருவதால் புனிதமடைவதாக இருந்தால் இதுவரை வந்து சென்ற அத்தனை மாந்தரும் இந்தியாவில் புனிதராக அல்லவா ஆகி இருக்க வேண்டும்...என் போன்றோர் தவிர....அந்த பூகோள பூமியின் வனப்பை காணக் கூட அங்கு நான் இன்னும் ஒரு முறை கூட போனதில்லை என்பது வேறு...சென்னையில், சந்து முனையில், சேலத்தில் எல்லா இடங்களிலுமே அய்யப்பன் இப்போது கொலுவிருந்து வருகிறார் குடி இருந்துதான் வருகிறார் . நான் பிறப்பு ஆராய்ச்சிக்குள் எல்லாம் நுழையவேயில்லை..

மொத்தத்தில் இந்தப் பெண்கள் மாதவிடாய் நாப்கின் பேட்களை மாற்றி தூர வீசுவதற்கும் மாறாக ஆங்காங்கே எறிந்து அசுத்தப்படுத்தியும் விடுகிறார்கள் இதுதானே முக்கிய பிரபலமான ஆட்சேபகரமான பிரச்சனை இதற்கு ஒரு முனையத்தை ஏற்படுத்தி அங்கே அரசு, தன்னார்வ நிறுவனங்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து அவற்றுக்கு உண்டான தோதான, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் காலத்துக்குகந்த நடவடிக்கை.
Related image
இந்த ஆணை அமல்படுத்தலால் கம்ப்யூனிஸ்ட் அரசு, இன்னும்  வெள்ள நிவாரண மீட்பு நடவடிக்கையிலிருந்தே முழுதும் மீளாமல் இருக்கும்போது இது அவரகளுக்கு ஒரு சோதனை.

அவர்களை வெற்றி அடைய விடாமல் தடுக்க எடுக்கப்படும் சூழ்ச்சிகள்...பினராய் விஜயன் நல்ல தலைவர். நல்ல முதல்வர். அதை நல்ல முறையில் கையாண்டு மீட்டு எடுக்க வேண்டும். எல்லா மக்களும் கோவிலென்றால் போவதுதான் சரி.

உன்னைக் காண:
----------------------------

திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநி சென்றேன்
சமயபுரம் சென்றேன்
சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்
சுப்ரமண்யா சென்றேன்
காசி ராமேஸ்வரம் சென்றேன்
அமிர்தசரஸ் சென்றேன்
ஜெருசலம் சென்றேன்
பெத்லகேம் சென்றேன்
வாடிகன் சென்றேன்
மெக்கா ,மதினா சென்றேன்
அய்யப்பன் கோவில் சென்றேன்
....................
...................
......................
,,,,,,,,,,,,,,,,,,,,,
 நீ
இங்கிருப்பது அறியாமலே...

  ...2006 ல் கவிஞர் தணிகை ...மூச்சுக் காற்று.

மறுபடியும் பூக்கும் வரை



4 comments:

  1. அருமையான பதிவு. அரசியலுக்காக எல்லாம். நன்றி.

    ReplyDelete
  2. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. எல்லாமே அவன் செயல் அல்ல.. நம் செயல்.. அவ்வளவே..!

    ReplyDelete