Thursday, October 11, 2018

4 மீன்கள் இறந்துவிட்டன. கவிஞர் தணிகை

ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியாகலாம்: கவிஞர் தணிகை

Image result for water air and land pollution


2050 ஆம் ஆண்டில் பல டிகிரி சேர்ந்து பூமி வெப்பமடையும் என்றும், ஒரு நூற்றாண்டில் உலகு உயிர்கள் வாழத் தகுதியற்ற இடமாகாலாம் என்பதெல்லாம் சரியாகவே இருக்கும் என்ற எண்ண அலைகள் நம்முள்ளும் தோன்றுவதை தடுத்து நிறுத்த முடியாத அளவு சில நிகழ்வுகள்

இன்று காலை காவிரி நீரை அன்றாட பயன்பாட்டுக்கு என பிடித்து வைத்திருந்த எங்கள் நீர்த் தொட்டியில் வளர்ந்து கொண்டிருந்த 4 மீன்கள் இறந்துவிட்டன. காரணம்: நீர் மிகவும் கலங்கிய நிலை இருக்கிற காரணம் பற்றி அளவுக்கதிகமாக குளோரின் கலந்ததே.  ஒரு ரசாயனம் படித்த பட்டதாரி செய்ய வேண்டிய வேலையை துப்புரவு பணியாளர்களும், நீர் வால்வைத் திறந்து விடும் பணியாளர்களும் ஊராட்சிப் பணிகளில் செய்தால் எப்படி இருக்கும் அது இப்படித்தான் இருக்கும், முடியும்....

தேசிய அளவில் இரண்டாம் பரிசைப் பெற  புது டில்லி சென்ற எமது கல்லூரிப் பெண் உடல் நலம் சீர் கெட்டு, தொண்டை எல்லாம் மங்கிப் போய், சளி எல்லாம் சேர குன்றிய நிலையில் ரயில் பயணம் மேற்கொண்டு சென்றிருந்தவர் விட்டால் போதும் என ஆகாய விமானப் பயணத்தில் வந்து சேர்ந்து விட்டார்.

1990களில் நானும் ஒரு முறை ரயிலில் சென்று விட்டு புது டில்லியின் வெப்பம் தாங்காமல் ஆகாய விமானப் பயணத்தின் மூலம் வீடு வந்து சேர்ந்தது நினைவுக்கு வந்தது தாஜ் மஹால் கூடப் பார்க்காமல்...

அதே நிலைதான் இந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கிறது.
தாஜ் மஹால் ஏகப்பட்ட ஏராளமான மாசடைந்துள்ளதாக ஏற்கெனவே நமக்கு ஊடகச் செய்தி யாவும் வந்ததும், அதற்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் அடையாள அட்டை வழங்கி பார்க்க அனுமதித்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கண்டது நினைவாடுகிறது.

இதில் இன்னொரு ரஷியாவின் அணு உலையும் இந்தியாவுக்கு வரும் என அண்மைய புடின் மோடி சந்திப்பு சொல்லி இருக்கிறது.

ஏற்கெனவே நிலத்தடி நீர் , நிலம் காற்றும் யாவுமே மாசடைந்து கெட்டுவிட்டது   இந்தியா போன்ற‌ அகண்ட பெரு பூமியிலேயே ஏற்பட்டு விட்டது...

சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் பற்றி சொல்லவே வேண்டாம்.

கால நிலை, பருவ நிலை மாறுதல்கள் எல்லாமே தாறுமாறாகிவிட்டன...பயிர்வளம், உயிர்களின் நலம் யாவுமே  புவி மற்றும் நீர் காற்று மாசடைதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு மீட்க முடியா அளவு கெட்டு விட்டது...

மனிதா உன் வாலைச் சுருட்டு இல்லையேல் இயற்கை உனது மனித குல வரலாற்றை அடையாளமின்றி அழிக்கும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. நல்லதொரு பதிவு. கால நிலை, பருவ நிலை மாற்றங்கள் மிகவும் அச்சமடைய வைக்கின்றன.

    ReplyDelete
  2. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

    ReplyDelete