Saturday, September 29, 2018

என் தாய்த் திருநாடே உனக்கு ஒரு கடிதம்: கவிஞர் தணிகை

அஞ்சல் வழி தபால் போட்டியும்,தொலைத் தொடர்புத் துறையும்: கவிஞர் தணிகை

Related imageஎன் தாய்த் திருநாடே உனக்கு ஒரு கடிதம்

 அது ஒரு காலம் தகவல் தொடர்புத் துறை என்ற ஒரு துறையின் கீழ் தபால் தந்தி துறையும், தொலைத் தொடர்புத் துறையும் இருந்தன. வானொலிக்கு லைசன்ஸ் கட்டுவது அங்கேதான், சைக்கிளுக்கு பாஸ் போடுவதும் அங்குதான் ஆரம்பத்தில் இருந்தது. அதன் பின் தான் அதை ஊராட்சிக்கு மாற்றியதாக நினைவு. டெலிபோன் பில் கட்டுவது அங்கேதான், அப்போது டெலிபோன் வைத்திருப்பார் என்றால் அவர் சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர் என்று அர்த்தம். போன் பேசுவதே மிகப் பெரிய செயல்...ஆனால் அவை எல்லாம் காலப்போக்கில் மாறி ஒவ்வொருவரும் ஒரு காமிராவை கையில் வைத்தபடியே எங்கிருந்தாலும் அவரை நேரடியாக பார்ப்பது போலப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்குமளவு மிக முன்னேறி இருக்கின்றன தகவல் தொழில் நுட்பங்கள் இந்த மொபைல் செல்பேசி காலத்தில்.

Related image

 தபால் அலுவலகத்தில் அப்போதெல்லாம் பல பணிகள் இருக்கும் அதில் இப்போது தந்தி என்ற பணி  இல்லை. தபால் துறை அதாவது அஞ்சல் வழி தொடர்புத் துறை தனியாகவும், தொலைத் தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல் மட்டும் அரசு சார்ந்த நிறுவனமாக இருக்க...மற்றெல்லாம் தனியார் வசம்.  அதற்கும் அடுத்த நிலையில் ஊடகத்தில் பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி இவை எல்லாம் செய்தி ஊடகத்துறையில் இருக்க, பத்திரிகை யாவும் வியாபாரம், மார்க்கெட்டிங் என ஆலாய்ப் பறந்து ஃபிட்டஸ்ட் ஈஸ் சர்வைவல் என படாத பாடு பட்டுக் கொண்டிருக்க‌
Image result for postal department functions are reducing day by day
 அதில் இப்போது சமூக வலை தள ஊடகங்கள் ஊடுருவி எல்லாவற்றையும் மாறுதல் செய்து விட்டன. மின்னஞ்சலும் கூரியரும் தபால் துறையை மிகவும் தேய்த்துவிட்டன. பொங்கல் மற்றும் வாழ்த்து பரிமாற்றங்கள் எல்லாம் ஒரு காலத்தில் தபாலில் தான் நடைபெற்றன. அப்போது விழாக்காலங்களில் உரிய நேரத்தில் தபால்காரரை பிடிக்க முடியாது. எப்போதுமே அவரை கையில் பிடிக்க முடியாது. இப்போதும் ஓய்வூதியதாரர்களிடம் இவர்கள் பணி இருக்கிறதோ என்னவோ...தெரியவில்லை. இந்நிலையில்:

 30.09.18 அன்று கடைசித் தேதி: என் தாய்த் திருநாடே உனக்கு ஒரு கடிதம் என்ற உள் நாட்டு அஞ்சல் கவரில் 500 வார்த்தைகள் அளவில் எழுதி அனுப்பவும் அதற்கு மேல் கவரில் எழுதி அனுப்ப 1000 வார்த்தைகளிலும் எழுதலாம் என்று பெரும் பரிசுகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் உண்டு என‌  சேலம் ரயில்வே சந்திப்பின் அருகே உள்ள சூரமங்கலம் தலைமைத் தபால் நிலையத்தில் ஒரு விளம்பர பதாகை பார்த்தேன். நாம் தபால் காலத்தில் இருந்து வளர்ந்தவராயிற்றே...எனவே

உடனே அதை செயலாக்க எண்ணினேன். மறு நாள் சென்று ஒரு கவர், மற்றும் ஒரு இன்லேன்ட் கவர் உள் நாட்டு தபால் கவர் வாங்க கல்லூரி நேரம் முடிந்து ரயில் ஏறும் நேரத்துக்குள் வாங்கிக் கொள்ளலாம் எனக் காத்திருந்தேன். எனது 10 ரூபாயை செலவளிக்கவும் அதற்காக எழுதி அனுப்பவும் மனதளவில் என்னை நானே தயார் செய்தபடி இருந்தேன்.

26 அன்று மாலை தபால் நிலையம் உள் சென்று தபால் கவர்கள் வாங்க முற்பட்டேன்.

அந்த தபால் தலை மற்றும் கவர் விற்பனையின் வழக்கமான இருக்கை காலியாக இருக்க மற்றொரு இருக்கையிலிருந்தவர் வேறொரு இருக்கையை சுட்டிக்காட்டினார். அதுவும் காலியாக இருக்க காத்திருந்தேன் . நேரம் மாலை 5 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

நல்ல வேளை அந்த முன் சொன்ன நபரே வந்து என்ன வேண்டும் என எடுத்துக் கொடுத்தார். மனமுவந்து ஒரு காலத்தில் பல செய்திகளையும் தபால் மூலமே பெற்று வாழ்வை நகர்த்த தபால் தந்தி துறையை பெரிதும் சார்ந்து வாழ்ந்து இருந்ததால் நன்றிக்கடனாக 10 ரூ செலவு செய்வதுடன் அதற்காக எழுதி அனுப்பவும் தயார் செய்தேன். 500 வார்த்தை மற்றும் 1000 வார்த்தைப் பிரிவு இரண்டிலுமே கலந்து கொள்ள எழுதியதை எடுத்துக் கொண்டு அத்துடன் மற்றொரு பார்சலையும் எடுத்துக் கொண்டு 28.09.18 அன்று உள்ளூரில் உள்ள தபால் நிலையம் சென்று பார்த்தால் அந்த சேட்டிலைட் போஸ்ட் ஆபிசில் அந்த அம்மா டிவி பார்த்தபடி எந்த அஞ்சல் வில்லையும் கிடைக்காது என்றார். ஏதோ வேலைநிறுத்தம் போலும். இராமன்நகரிலும் இருக்காது என்றார். அதுதான் அவரது தலைமையகம்.

எனவே மேட்டூர் ஆர்.எஸ் போங்கள் என்றார். அங்கே சென்று வர எனக்கு டவுன் பஸ்ஸில் ரூ 10 இதர செலவு அது வேறு.

அங்கே சென்றால் பெட்டியில் நமது தபாலை போடமுடியாதபடி யுனைட்டெட் இன்சூர்ன்ஸ் தபால்கட்டுகள் முட்டிக் கொண்டிருந்தன. என்றாலும் அதிலேயே போடச் சொன்னார்கள்...அவ்வளவு பெரிய அலுவலகமாக இருந்த அது  சிறுத்து மாடியில் முதியவர் எவருமே ஏறி எளிதில் போகமுடியாதபடி  சிறியதாகி இருந்தது.

ஒரு காலத்தில் கெமிகல் கம்பெனி வளாகத்தில் கொடி கட்டிப்பறந்த அந்த தபால் நிலையத்தில் எவருமே இல்லை.நான் சென்று அஞ்சல் பொட்டலம். அதாங்க ரீஜீஸ்டர்ட் பார்சல் என்றேன். அவர் செல்பேசியை பார்த்தபடி இருந்தவர் தபால் கவரை ஆட்டினார், எனது பழைய கவர் ஆதலால் உடனே கிழிந்து போய்விட்டது...அது உடனே 30.09.18க்குள் போகவேண்டி இருப்பதால் அவசரம் ஆத்திரமாக பதற்றத்தில் புத்தகங்களை கடிதத்துடன் சேர்த்து ரப்பர் பேண்ட் போடாதது உறுத்திற்று.

நான் நிலையை விளக்கிச் சொன்னதால் அது நான் தேடி வந்திருக்கும் 3 வது அலுவலகம் என்றும் டவுன்பஸ்ஸில் மீண்டும் சென்று திரும்ப வேண்டும் என்றதாலும் அவரே ஒரு உதவிப் பெண் பணியாளரை அனுப்பி சலஃபான் டேப் ஒட்ட வைத்து சரியாக கிழிந்த இடத்தில் எல்லாம் ஒட்ட வைத்து பார்சலை பெற்றுக் கொண்டார். அது ஒழுங்காக போய்ச் சேருமா என இன்னும் எனக்கு சந்தேகம் உள்ளது..

பரிசு கிடைத்தாலும் இல்லையென்றாலும் நினைத்த பணியை முடித்தால்தான் எனக்கு ஒரு நிறைவு திருப்தி தூக்கமே வரும்...
Image result for postal department functions are reducing day by day
முன்னால் தெரிவதையெல்லாம்
முகம்
என்று நம்பிய‌
நான்
தற்போது
தபால் பெட்டியையும்
சந்தேகிக்கிறேன்

எப்போதோ தணிகை எழுதிய சில வரிகள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு.: நிலை இவ்வாறு இருக்க நமது பி.எஸ்.என்.எல் நாயகர்கள் தினமும் 24 மணி நேரம் வாய்தா வாங்கியபடியே காலம் தள்ளி வருகிறார்கள் அந்த எடுத்த எனது 7 ரூபாயை எனது கணக்கில் கட்டுவதற்கு..

சேலம் ரயில்வே சந்திப்பின் வணிக மேலாளரிடமிருந்து எனது மேட்டூர் பயணிகள் ரயில் நேரமாறுதல் குறித்தான  புகாருக்கு பதில் வந்திருக்கிறது

No comments:

Post a Comment