Saturday, October 27, 2018

தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள் : கவிஞர் தணிகை

தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள்  : கவிஞர் தணிகை

Image result for salem city night dacoits 2018


நன்றி: காலைக்கதிர் 26.10.18.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊர் எடப்பாடி என்றாலும் கூட இவரது முக்கியமான தங்கும் இடம் சேலத்தில் நெடுஞ்சாலை நகர் இருப்பிடம். சென்னையிலிருந்து அடிக்கடி வந்து செல்வார். இவரது பிம்பம் இந்த 18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் வெற்றி பெற்றதால் பெரிதாக வளர்வது போன்று இவரது கட்சியில் தோற்றம்..

கடந்த சில நாட்களில் மட்டும் தீபாவளி ஸ்பெசலாக 76 செல்பேசி, மற்றும் ரொக்கம் வழிப்பறித் திருட்டாக இரவு நேரங்களில் கொள்ளை அடிக்கும் கும்பலால் நடத்தப்பட்டிருக்கின்றன என்று சேலம் காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன, என்று அதன் செய்தியை காலைக்கதிர் நாளிதழ் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். புகார் தெரிவிக்கப்பட்டதே 76 எண்ணிக்கை எனில் உண்மையில் நடந்தது எத்தனை இருக்குமோ என யூகித்துக் கொள்ளலாம். மேலும் இன்னும் தீபாவளிக்கு  ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்த தொல்லைகள் மேலும் நீடிக்கும் இன்னும் தீவிரமாக ... இது சேலத்தில் நடப்பு.

 எனது சொந்த அனுபவத்திலேயே ஒரு முறை இப்படி ரூ.7 ஆயிரம், அரை நாண் கொடி, ஆகியவற்றை ஒரு பேருந்துப் பயணத்தின் போது மேட்டூரிலிருந்து சேலம் செல்லும்போதே இழந்திருக்கிறேன். அப்போதும் அது தீபாவளிக் கூட்டம்தாம். ஆனால் நான் புகார் தெரிவிக்கவில்லை . நாட்டின் தலைவிதியை ஏற்றுக் கொண்டேன் எனது தலைவிதியாக...

இந்த திருட்டு, வழிப்பறி, நடுநிசிக் கொள்ளை , தொடர்ந்து சேலத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்கும் முதல்வர் அடிக்கடி சென்னையிலிருந்து சேலம் வந்து சொந்த வீட்டுக்கு வருகை புரிந்து கோலாகல வரவேற்பை ஏற்றுக் கொண்டு சென்று வருகிறார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

நள்ளிரவுகளில் இரவு ஷிப்ட் பணிக்கு செல்வோர் வருவாரிடையேயும், வெளியூர் பயணிகள் இடையேயும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுமளவு கத்தி போன்ற கூர்மையான ஆய்தங்களுடன் பலர் அடங்கிய இரு சக்கர வாகன கும்பல்கள் வழி மறித்து மிரட்டி முக்கியமாக செல்பேசி, மற்றும் பணப்பர்ஸ், பைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பிடுங்கி சென்று விடுவதாகவும் செய்தி குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் முதல்வர் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே விபத்துகளைத் தடுப்பதில் முதல் மாநிலமாக விளங்குகிறது அவ்வளவு முயற்சிகள் நடக்கிறது என்றும், விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலை விதிகளை கடைப்பிடிக்காததும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதுமே என்று குறிப்பிட்டு பேசி இருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும், இவரது  கட்சிக்காரர்களே வரவேற்பு கொடிகளை சாலையின் ஓரத்தில் நடாமல் பாதையின் இடையே சாலையின் இடர் விளைக்கும் பகுதிகளில் கூட நட்டு வைத்து விடுகிறார்கள் என்பதெல்லாம் அரசால் கவனிக்கப்பட வேண்டிய செய்திகள்.

மதுக்கடைகளையும் அரசே நடத்துகிறது, காவல்நிலையங்களையும் அரசே நடத்துகிறது...
Image result for salem city night dacoits 2018



அரசு நினைத்தால் எல்லாவற்றையும் செய்யலாம்...இன்னும் 3 எம்.எல்.ஏக்களியும் கூட பதவி நீக்கம் செய்யலாம். இடைத்தேர்தல் நடத்தலாம் 20 தொகுதிகளுக்கும் அவர்கள் மேல் முறையீடு செய்யாதிருந்தால்.. ஊராட்சித் தேர்தலையும் நடத்தாது இருக்கலாம்...தெருவிளக்குகள் இல்லாமல் இருக்கலாம்...பொது சாக்கடைகளையும் சுத்தப்படுத்தாமல் கொசுக்கள் பெருக டெங்கு , பன்றிக்காய்ச்சல் வருவதையும் விழிப்புணர்வு பிரச்சார பதாகைகள் அடிக்கச் சொல்லி கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட்டு செய்திகள் கொடுத்தபடி...மருத்துவ மனைகளையும் தயார்படுத்தலாம்...

எது அடிப்படையோ அதை செய்யாமல் ....எல்லாவற்றையும் வளரவிட்டு ஆள்வதாக மேலாண்மை செய்வதாக ஆட்சி செய்வதாக செய்திகளைக் கொடுக்கலாம்

ப்ளாஸ்டிக் வரும் ஜனவரி முதல் தடை என்று சொல்லி இருக்க, வணிகர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக செய்திகளும் சொல்லலாம்...

சாக்கடையை, இருப்பிடத்தை, வீதியை சாலையை தூய்மைப்படுத்தினால் கொசுக்கள் குறையும் அதை செய்ய மாட்டோம்.

மதுக்கடையை எடுக்க மாட்டோம்...விபத்து குறைய அடிப்படை ஆதாராமான அதை செய்ய மாட்டோம்..

பிளாஸ்டிக்கை , குடி நீரை, இப்படி எல்லாவற்றையும் வணிகமயமாக்கிவிட்டு இப்போது தடுக்க முடிவதாக, முனைவதாக செய்திகள்

எல்லாமே வரும் தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் திட்டமிட்டு காய் நகர்த்தலின் காட்சிகள். எனவே மீ டூ...அய்யப்பன் வைரமுத்து...என... தீர்ப்புகளும், ஆள்கையுமாக..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment