Tuesday, March 20, 2018

சேலத்து ரயில்வே நடை மேடை அசுத்தம் தான் நாடெங்கும்: கவிஞர் தணிகை

சேலத்து ரயில்வே நடை மேடை அசுத்தம் தான் நாடெங்கும்: கவிஞர் தணிகை
Image result for salem railways station 3 platform
மேட்டூர் ரயில் 3 ஆம் எண் நடைமேடையில். 4 ஆம் எண் நடைமேடைக்கும் 3 ஆம் எண் நடைமேடைக்கும் இடையில் ஒரு உணவகம்.அதிலிருந்து வரும் கழிவு நீர் நடைமேடையில் கால்வாய் போல வழிந்தோட, அந்த வழி போவோருக்கு வெகு தொல்லை தருவதாக இருந்தும் யாரும் அதைப்பற்றி அக்கறை எடுத்துக் கொண்டு கேட்பதாக இல்லை.

நான் அது பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று பார்த்தால் நிலைய தலைமை அலுவலர் அறையும், துணை நிலை தலைமை அலுவலர் அறை இரண்டுமே மூடப்பட்டு யாரையும் தொடர்பு கொள்ளும் நிலை இல்லை. அந்த உணவகத்தின் பின் புறம் எனவே அது பற்றி யாரை அணுகி சொல்வதென்றும் புரியவில்லை.

எனது பையோ மேட்டூர் ரயில் பெட்டியில். எனது இறங்கும் நிலைக்கு வசதிக்காக கடைசியில் வைக்கப்பட்டு இடம் போடப்பட்டு இருந்தது. எனவே அதை எடுத்துக் கொண்டு சென்று பேசவும் நான் விழையவில்லை.

எப்போதும் இருக்கும் கல்லூரி மாணவர்களும் அப்போது இல்லை. அங்கிருந்த  ஒரு பலகையில் : ரயில்வே நிலையத்தை அசுத்தப்படுத்துவது குற்றம் என்று இருக்க அதனருகிலேயே இப்படி...

காவலர் எவரும் வருவாரா என்று பார்த்தால் எவரும் அந்தப் பக்கம் வருவதாக இல்லை. எனவே அங்கிருந்து உணவகம், ரயில் நிலைய அலுவலர் இரண்டுக்கும் மாறி மாறி இரண்டு மூன்று முறை நடந்து அலைந்து பொறுக்காமல் இருந்தேன்...

அதற்குள் சாரி சாரியாக பயணிகள் போவதும் வருவதாகவும் அந்த வழியில் நடந்தபடி இருந்தது, முடிந்தவரை அனைவரையும் எச்சரித்தபடி இருந்தோம். மேலும் குழந்தைகளும், 10 ரூபாய்க்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சிஸ்கால் உபயம் செய்யும் வண்டியும் சர் சர் என நீரை அடித்தபடி சென்றபடியும் வந்தபடியும் இருந்தது....

எனது தடுமாற்றத்தையும் அலைச்சலையும் பார்த்த அந்த உணவகத்தினர் ஒரு இளையவரை அனுப்ப, அவரிடம் நான் அங்குள்ள நிலையை எடுத்துக் கூறினேன். அவர் வந்து ஒரு மூடப்பட்டிருந்த கடப்பாக் கல்லை எடுத்து அந்த உணவகத்திலிருந்து வரும் கழிவு நீர் செல்வதற்காக இருந்த கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய முயன்றார். அடைப்பை எடுத்துவிட்டு விட்டு,

ஒரு கிளீனர் பிரஸ்ஸை எடுத்து வந்து வழிந்தோடிய இடத்தை எல்லாம் சுத்தம் செய்தார்...அவருக்கு நன்றியறிதலை தெரிவித்து உனைப் போலவும், எனைப்போலவும் இருந்து விட்டால் இந்த உலகு இப்படி இருக்காது....என வாழ்த்தினேன். அவரை அந்தக் கடைக்காரர் எவராவது அனுப்பி இருந்தாலுமே அந்த இளைஞர் முறையாக நடந்து கொண்டார். எந்த வித கோபமோ கூச்சமோ அசிங்கம் என நினைக்கவோ இல்லாமல் தமது கடமையை சரியாக செய்தார்...

ம்ஆமாம் இந்த உலகுக்கு நல்லதையே செய்ய தம்மை தத்தம் செய்து கொண்டிருக்கும் நபர்களை எல்லாம் ஏன் இந்த உலகு நம்பி பொறுப்பை கொடுக்காமல் இப்படி ஏமாற்றி ஏமாந்தபடியே போய்க் கொண்டிருக்கிறது?

எல்லாம் எனக்கென்ன நமக்கென்ன என போய்க் கொண்டே இருக்கிறார்கள்...இப்படி இருந்தால் எப்படி மலரும் நல்லாட்சி?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment