Friday, March 16, 2018

மனுசங்களாடா மிருகங்களே பரவாயில்லடா: கவிஞர் தணிகை

மனுசங்களாடா மிருகங்களே பரவாயில்லடா: கவிஞர் தணிகை
Image result for responsibility of travellers of tamil nadu and india


8 ஆம் ஆண்டு படித்து முடிக்கும் நிலையில் உள்ள முதுகலை மருத்துவர் ஒருவரும் நானும் அவரது காரில் கல்லூரியிலிருந்து சேலம் நோக்கி கல்லூரி முடிந்ததும் சென்று கொண்டிருந்தோம்.

எமது காரை ஒரு வெள்ளை நிறமுடைய கார் முந்திச் சென்றது...அது சேலம் கோவை நெடுஞ்சாலை...சென்ற வண்டியிலிருந்து ஒரு பச்சை பந்து போன்ற பொருள் தூக்கி வெளியே வீசி எறியப்பட்டது...அது சாலையில் பட்டு தெறித்து எகிறி பின்னால் வந்து கொண்டிருந்த எமது காரில் பட்டு சென்றது..

நண்பர் தெரிந்து கொண்டார்...எனக்குத்தான் அது என்னவென்று விளங்கவில்லை.அது குடித்து முடித்து வெளியே வீசி நெடுஞ்சாலையில் வீசி எறியப்பட்ட இளநீர் மட்டை. அனேகமாக அது மதுக்குடித்து விட்டு செல்லும் வாகன ஓட்டிகளால் அவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய முடியும்...அது காரின் சக்கரத்தில் பட்டிருந்தால் காரே சாய்ந்து போக வேண்டிய நிலை நேர்ந்து எமக்கு விபத்தில் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் நண்பர் மிகவும் கட்டுப்பாட்டுடன் காரை செலுத்தி திருப்பி சென்றதால் எந்த விபத்தும் நேராமல் தப்பித்தோம். மாறாக அந்த இளநீர் மட்டை வாகனத்தில் பட்டு தெறித்து சென்றது நல்ல வேளை சக்கரத்தில் படாமல்


நண்பர் வண்டி அருகே  சென்று அந்த மனிதப் பதர்களிடம் சென்று எச்சரிக்கை செய்யலாம் என எத்தனித்தார்....ஆனால் அந்தக் கார் வெகு விரைவாக சென்றது மேலும் கண்ணாடிகளை மேல் ஏற்றி விட்டபடி சென்று மறைந்தது...

இப்படித்தான் காடு நோக்கு போவோரும், சுற்றுலா நோக்கி செல்வோரும், தனிமை விரும்பி செல்வாரும் தமது இஷ்டப்படி எந்தவித சமுதாயப் பொறுப்பும் கடமையும் இன்றி தான் தோன்றித் தனமாக எவருக்கு என்ன நேர்ந்தால் என்ன, எந்த விபத்து எப்படி ஏற்பட்டு எவர் செத்தால் என்ன பிழைத்தால் என்ன என புகைத்து அணைக்காமல் போடுவதும், மதுக் குடித்த பாட்டில்களை வீசி எறிவதும், உடைத்து சில்லுகளாக விட்டுச் செல்வதும்,
உண்டுவிட்டு, குடித்து விட்டு எச்சங்களை, பாக்கெட்களை, பிளாஸ்டிக் பாக்கெட்களை ஆங்காங்கே போட்டுச் செல்வதுமாய்...

Related image

இருக்கும் உலகை பாழ் படுத்தி விடுகிற நீங்கள் எல்லாம் மனிதரா, மிருகமா...அவை கூட பரவாயில்லை,,,கண்ட இடங்களில் எச்சில் உமிழ்வதும், சிறு நீர் கழிப்பதும், மலம் கழிப்பதுமாய்... உலகையே ஒரு மலக்கிடங்காய், சிறுநீர்க்கழிப்பிடமாய், எச்சில் துப்பிய தொட்டிலாய் மாற்றி விடுகிறிர்களே எவ்வளவு நாளைக்கு இந்தியாவை இப்படியே செலுத்திக்க் கொண்டு இருக்கப் போகிறீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


திருவரங்கம் ஆசியாவிலேயே  மிகப்பெரிய இராஜகோபுரத்தில் அடிப்பாகத்தில் விரிசலாம் அதுவும் 2010 லிருந்தாம் 300 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் அடிப்புறத்தில்...எல்லாம் மனித சேவையே...

No comments:

Post a Comment