Saturday, March 17, 2018

ஆ.ப.ஜெ அப்துல் கலாம் நினைவு அறிவியல் பூங்கா: கவிஞர் தணிகை

ஆ.ப.ஜெ அப்துல் கலாம் நினைவு அறிவியல் பூங்கா: கவிஞர் தணிகை

Image result for malco school in mettur damImage result for malco school in mettur dam


மேட்டூர் மால்கோ (வேதாந்தாக் குழுமம்) வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் இன்று ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் நினைவு அறிவியல் பூங்காவை சந்திராயன் புகழ் அறிவியல் அறிஞர் டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

அப்துல் கலாம் சிலை மையத்தில் வீற்றிருக்க, சுற்றிலும் ஐன்ஸ்டீன், கலிலியோ,சர்.சி.வி. ராமன்,இயற்பியல் மேதை சந்திரசேகர், அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்,ஐசக் நியூட்டன், விக்ரம் சாராபாய், ஹோமி பாபா, மேடம் ஐரி க்யூரி, இப்படி 27 உலக அளவிலான அறிவியல் அறிஞர்களின் மார்பளவு சிலைகள் சுற்றிலும் வீற்றிருக்க உள்ளே சுமார் 20 அறிவியல் புதிர் அல்லது பரிசோதனை ஆய்வுக்குரிய  செயல் முறை விளக்கங்களுக்கான அறிவியல் வித்தைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

நெம்புகோல் தத்துவம், இராட்டினப் புள்ளிகள், எதிரொலி விளக்கும் தட்டுகள்,ஊசலாட்ட குண்டுகள், உலோகம், மரம் சூடு குளிர் ஏற்புகள், குவி ஆடி, இப்படி எளிமையாக புரியும்படியாக விளக்கும் அறிவியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இது மேட்டூருக்கு ஒரு புதிய முயற்சி. இதை செய்து முடித்த மால்கோ பள்ளி நிர்வாகம், முதல்வர், தாளாளராக தற்போது இருக்கும் தேவராஜுலு போன்றோரைப்  பாராட்டலாம்.

இதை பாங்காக காலத்தை வெல்லும் வகையில் யாவருக்கும் முக்கியமாக படித்து வரும் இளைய தலைமுறையினர்க்கும் இனி வரும் குழந்தைச் செல்வங்களுக்கும் உரிய முறையில் கொண்டு சேர்த்தி அவர்களுக்குள் ஒரு விதையை மயில் சாமி அண்ணாதுரை சொன்னது போல விதைக்கும் கடமை அந்த நிறுவனத்துக்கும், அந்தப் பள்ளிக்கும் உள்ளது.ஏன் எனில் அது நன்கு பாதுகாக்கப்பட்ட இடத்தில் கம்பெனி வளாகத்தில் பல அடுக்கு வேலிக்கப்பால்தாம் உள்ளது. எந்தக் கட்சி, அரசியல், அரசு அலுவலர் எல்லாம் இல்லாமல் இதன் திறப்பு விழாவுக்கு குருவுக்கு ஏற்ற சீடரான கலாமின் சீடர் மயில்சாமி அண்ணாதுரையை அழைத்து வந்து இதை செய்தது மிகவும் உயர்ந்த விசயம்.

தமது தமிழ் உரையில் மயில்சாமி அண்ணாதுரைக் குறிப்பிட்டது போல இவ்வளவு சிறந்த கட்டமைவில் எல்லாம் கலாமோ, நாங்களோ படிக்க வில்லை என்றாலும் எங்களின் கேள்வி கேட்டு விடை காண வேண்டுமான தேடல் எங்களை எல்லாம் இங்கு வந்து நின்று பேச வைத்துள்ளது.  அந்தளவு எங்கள் பள்ளிகளை விட மிக மேன்மையுடன் இந்த பள்ளியும் இதன் நிர்வாகமும் பெரு முயற்சி எடுத்து செயல்படுகிறது.

Related imageஇதில் ஒரு பகுதி சி.பி.எஸ்.சி பகுதியும் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி அண்ணாதுரை கவுண்ட் டவுன் என்றால் என்ன என விளக்கம் கொடுத்தார், மேலும் நிலவின் வேகம் நொடிக்கு ஒரு கிலோமீட்டர் என்றும் அத்துடன் ஒரு அடி கீழே இறங்கி இறங்கி பயணம் செய்கிறது என நியூட்டன் இரண்டு விதிகள் இதற்கு எப்படி பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்டார். நாசா நிலவில் நீர் இல்லை என ஆர்ம்ஸ்ட்ராங்க் எடுத்து வந்த கல்லை வைத்து கணித்திருக்க அந்த ஆண்டில் பிறந்த மயில் சாமி அண்ணா துரை போன்ற நாங்கள் இஸ்ரோ மூலம் நிலவை எல்லாப் பக்கங்களிலும் ஆய்ந்து நிலவில் நீர் இருந்த அத்தாட்சியை நீர் இருக்கிறது என்றும் சொல்ல இது போன்ற கேள்வி கேட்கும் அறிவியல் அறிவுதான் பயன்பட்டது என்றார்.

இயல் இசை நாடகம் , சங்கத் தமிழ் மூன்றுக்கும் அப்பால் அறிவியல் தமிழ் என்ற ஒன்றை நாங்கள் அவாவுற்றோம் அதை அடைந்திருக்கிறோம் அது போல மாணவர்களாகிய உங்களில் இருந்து ஓரிருவராது வர வேண்டும் எனவேதான் இஸ்ரோவில் திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிந்து விட்டு நாங்கள் சனி ஞாயிறு இந்த இரண்டு நாட்களில் உங்களைப் போல் உள்ளோரை வந்து சேர்கிறோம் என்றும் இதுதான் கலாம் எங்களுக்கு காட்டிய வழி என்று அற்புதமான அனுபத்தை விளக்கினார்.

Related image

புத்தரின் அனந்தர் என்னும் சீடர் தாம் தேனீ வாழ்க்கை நம்முடையது என்று சொன்னார் அதாவது நமக்கான வயிற்றுப்பாடு, குடும்பம், நாடு இவை 3 பிரிவுக்குமே வாழ்வதுதான் எமது சிறந்த வாழ்க்கை என்று குறிப்பிட்டார் புத்தர் சீடர் கதை மூலம்.

Related image

நிரந்தர முதல்வர் என்றார்கள் ஜெவை அவர் போன இடம் சென்னைக் கடற்கரையைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்..அது போல இங்கு ஹோல் டைம் அல்லது ஆல் டைம் டைரக்டர் என்று முருகேஷ்வர் என்ற மால்கோ நிர்வாகத்தின் இயக்குனர் ஒருவர் நிகழ்வுக்கு நிறுவனம் சார்பாக கலந்து கொண்டிருந்தார்....அவர் மிகவும் நல்லவர்தாம், நன்றாகவே பேசினார்.

ஆனால் இந்த வேதாந்தாக் குழுமம், ஸ்டெரிலைட் குரூப் போன்ற தனியார் முதலாளிகளின் நிறுவன ஆதிக்கம் அதன் பள்ளி...அந்தப் பள்ளியில் இது போன்ற அரிய நிகழ்வு...அதை முழுதாக கேட்க விடாமல் மாணவர்கள் கேள்வி கேட்க அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் எனக் கேட்க விடாத மாணவ்ர்களின் இறைச்சல் பேச்சு இவை யாவற்றையும் நீக்கிப் பார்த்தால் இந்த நிகழ்வு மேட்டூரின் ஒரு அரிய சரித்திரப் பதிவு பெறும் நிகழ்வே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment