Monday, March 12, 2018

நாடா இது இடுகாடா ?கேள்விப் படும் செய்தி எல்லாம் பொய்களாக மாறாதா? கவிஞர் தணிகை

 நாடா இது இடுகாடா ?கேள்விப் படும் செய்தி எல்லாம் பொய்களாக மாறாதா? கவிஞர் தணிகை

Image result for is it our  nation india and Tamil Nadu  or buriyal yard?


தேனி மாவட்டம் குரங்கணிக் காட்டில் 10 உயிர்கள் காட்டுத் தீக்கு இரையாயினர்,மேலும் பலர் கவலைக்கிடமாக மருத்துவ மனையில்...

மாணிக் சர்க்கார் போன்ற நல்ல மனிதர் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார் வாக்களிக்கும் எந்திர முறையிலான வாக்குப் பதிவில்...

கமல்ஹாசன் ஈரோடு வருவது தள்ளிப் போகலாம் அவர் வேறு மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் சென்னை அருகே என ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சி ரத்து என வீடுகளுக்கு வந்த பிறகு கமல் ஈரோடு மாவட்டத்தில் நல்ல வரவேற்புடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

வங்கிகள் எல்லாமே ஏழைப்பணத்தை ஏப்பம் விட்டு கோடிகளில் உறங்கும் கேடிகளிடை நட்புறவு பாராட்டி இந்திய வங்கிப் பயணத்தை காயடித்ததாக வரும் செய்திக்கு மாறாக எவர் எவ்வளவு சேமிப்பு, வரவு செலவு செய்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு கடனுதவி, மானியம், வங்கிச் சேவை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்த இந்த மானங்கெட்ட அரசால் முடியாதா?

விவசாயிகளின் போராட்ட முகத்தில் ஒரு ஆளும் கட்சி சார்ந்த பெண் அறைந்து விட்டு, அவர்கள் தம்மை தாக்கியதாக மருத்துவ மனையில் சென்று படுத்துக் கொண்ட பாசாங்கு எவ்வளவு பழைய ஈனத்தனம்?

அது ஒரு நெடுஞ்சாலையில் உள்ள பல்கலை வளாகம் சார்ந்த பகுதிகள் அடங்கிய பிரதேசம்....அதில் ஒரு மிகவும் நல்ல மருத்துவர், தம் உழைப்பின் மூலம் வாங்கி பயன்படுத்தி வந்த சுமார் ஒன்னரை இலட்ச ரூபாய்  மோட்டார் சைக்கிள் இன்று திருடு போய்விட்டதாம்...

அதை காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கலாம் என்றால் அனேகமாக மாவட்டத்தில் வருகை தந்திருக்கும் முதல்வரின் பாதுகாப்புக்காக டூட்டி போடப்பட்டு சென்றிருக்கலாம்....எனவே அவர் நிலையத்தில் இல்லாததால் புகார் ஏற்கப்படவில்லையாம்.

முதல் தகவல் அறிக்கை தரவே மாட்டார்களாம், இது போல ஒரு அனுபவத்தில் மாவட்டக் கண்காணிப்பாளர் வரை சென்றும் கூட அந்த அறிக்கையை பெறவே முடியவில்லையாம்...ஆனால் அது கிடைத்தால் மட்டுமே காப்புறுதி மூலம் ஓரளவாவது தொகை கிடைக்குமாம்...

ஆனால் எதுவுமே கிடைக்காமல் வெட்டிச்செலவிலேயே பல ஆயிரங்கள் போய்விடுகிறதே என..அமைதியாக விட்டு விடுவதுதான் பொருளை இழந்த நட்டப்பட்டவர்கள் செய்ய வேண்டிய செயலாம்...புகார் அளிப்பது கூட இந்த வாகனம் வேறெங்காவது பிடிபட்டு அது குற்றப் பின்னணிக்கு உள்ளாக்கப்படும்போது வாகனத்தின் உரிமையாளர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தானாம்...

இதே போல ஒரு கல்லூரி வளாகத்திலேயே திருடு போன ஒரு வாகனத்தை பிடிக்கவே முடியவில்லையாம் என்னதான் எவ்வளவுதான் முயன்று செலவு செய்தபோதும்

உள்ளூர் நண்பர் ஒருவர் சொல்கிறார், அடித்து செல்பேசியை பிடிங்கிப் போய்விட்டார்கள் என்ற புகாருக்கே விசாரித்த காவல் துணை ஆய்வாளர், உனக்கு அந்த நேரத்தில் அங்கே என்ன வேலை, அதுவும் செல்போனுடன் அங்கு எதற்கு சென்றாய்? என புகார் கொடுத்தவர்கள் பக்கமே எதிரிடையாக கேள்விகள் கேட்டு மடக்கி அனுப்பி விட்டாராம், மேலும் நானே இரவு ரவுண்ட்ஸ் போகும்போது ஒரு வழியிலும் வரும்போது வேறு வழியிலும் வர வேண்டியதிருக்கும்போது நீங்கள் எல்லாம் எதுக்கு இரவில் போகிறீர்? அவர்கள் என்னையே அடித்து விட்டு, அட, நம்ம எஸ்.ஐயா தெரியாமல் அடித்து விட்டோம் என்று சொல்லி விடுவார்கள்...அது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றுதான் மாற்று வழியில் நாங்களே செல்கிறோம் என்றாராம்

அதை விட ஒரு எஸ்.பி வீட்டில் குடியிருந்தவர் கார் தொலைந்து போனதாம். ஆனால் அது பற்றி எந்த தகவலுமே அதற்கு பிறகு கிடைக்கவில்லையாம்..

Related image
நிலை மிகவும் சொல்லத் தரமில்லாதிருக்கும் நிலையில், நமது முதல்வர் மரம் நடும் விழா, ஸ்கூட்டி வழங்கும் விழா என கலக்கு கலக்கி விட்டு தமது வீடு நெடுஞ்சாலை நகர் செல்லும் வரை சாலையெங்கும் பதாகை, விளம்பர பேனர், நிறைய காவலர்கள் பாதுகாப்பு,  வழி நெடுக வழிகாட்ட,...சாலையின் இருமருங்கும் கோலப்பொடி வட்டங்கள்...அவர் வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் தோரண வாயிலாக...மேலும் பாடல் சத்தம்....

அத்வானியை கண்டுக்காத பிரதமர்....மேடையில் அழைக்காமலே இருந்திருக்கலாமே....

இப்படிப்பட்ட நாட்டில் தாம் நாம் வாழ்கிறோம்...இதில்  வேறு...அச் , அச், என தேறாத சத்தத்தில் வெறும் குரைப்பாக நிறைய சத்தங்கள்..அட எனக்கு சளி இருமல்...அதையே நான் சொன்னேன்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



4 comments:

  1. அசத்தலான வர்ணணை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் மனக் குமுறல் புரிகிறது நண்பரே

    ReplyDelete