Wednesday, December 13, 2017

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா? கவிஞர் தணிகை

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா? கவிஞர் தணிகை



Image result for rajanayagam loyola college
லயோலாவின்  இராஜநாயகம் தினகரன் வெல்வார் என்றும் 33.5 சதம் வாக்கு அவருக்கு என்றும் அடுத்து தி.மு.க வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அ.இ.அ.தி.மு.கவின் மதுசூதனன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்போவதாகவும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

கருத்து கணிப்பில் 91.6 சதம் மக்கள் தினகரனின் குக்கர் சின்னத்தை அடையாளம் கண்டதாகவும் மற்ற கட்சிகளின் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டது சுமார் சற்றேறக் குறைய 80 சதமாகவே இருந்தது என்கிறது.

இதனிடையே ஆளும் எடப்பாடி அணியினர் குறைகளை சொல்ல ஒரு புதிய ஏற்பாடாக தொலைபேசி எண்ணையும், ஒரு வெப்சைட்டையும் ஆர்கேநகர் என்ற பேரில் ஏற்படுத்தி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு இருபது இலட்சம் வாரிக் கொடுப்பதும், இராஜஸ்தானில் கொல்லப்பட்ட எ.ஸ்.ஐக்கு கோடிக்கணக்கில் நிவாரணமும், மீனவர் குடும்பத்துக்கு வீட்டுக்கொருவர்க்கு அரசுப் பணி என்றும் வாரி வழங்குவது ஆர். கே நகர் தேர்தல் பயத்தாலா? என்பது அறிய முடியவில்லை ஆனால் ஊகித்தறிய முடிகிறது. தெரிய முடிகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு தவறாக இருந்து தி.மு.கவே கூட வெற்றி வாகை சூடலாம் என்றாலும் அப்போதும் எடப்பாடி அரசுக்கு அது அதிர்வேட்டுதான்.

பேசாமல் யாருக்கும் இன்றி இந்த முறையும் பணம் பட்டுவடாவை கண்காணிக்க முடியவில்லை என எக்கச் சக்கமாக புழங்குவதைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தி வீடுவது எடப்பாடி அணியினர்க்கும், பாரதிய ஜந்தா கட்சியினர்க்கும் நல்ல முடிவாயிருக்கும்.

ஆனால் எப்போதும் போல தி.மு.க தலையை தொங்கப்போட்டுக் கொண்டே போக வேண்டியதுதான். ஆனால் எல்லாக் கட்சியினருமே வாக்குக்கு பெரும்பணத்தை வாரி இறைத்து வருகின்றனர் என்பது அனைவர்க்கும் தெரியும் தேர்தல் ஆணையத்துக்கே தெரியும். இதை எல்லாம் சொல்லப்போனால் நம்மை ஆதாரம் கொண்டு வா என்று சொன்னாலும் சொல்வார்கள்...

Related image

இதுவரை எந்தக் கட்சியும், எந்த நபரும் என்னிடம் வந்து எந்தத் தேர்தலுக்குமே பணமோ பொருளோ கொடுத்ததே இல்லை....ஏன் எனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எங்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் , எப்போது கொடுக்க வேண்டும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம்...

எனவே இப்போதும் அப்படித்தான் நடக்கிறது. இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கும்...அதற்குள் தேர்தல் நிறுத்தச் செய்தியை எதிர்பார்க்கலாமா? அதற்குள் ஆளும் கட்சி நிலையை மாற்றி விட்டாலும் விடும் அதையும் சொல்வதற்கில்லை. எதையும்ம் சொல்வதற்கில்லை. ...அதனால்தாம் அரசியல் பற்றி எல்லாம் இப்போது யாம் எழுத தலைப்படுவதேயில்லை . அங்கே மோடீ மாடி என...இங்கே அம்மா சும்மா எனவும் எல்லா காலமும் மலையேறியே ஆக வேண்டும்.

அதற்காக இராஜநாயகம் லயோலா கல்லூரி டீம் தந்த செய்தி அப்படியே நடந்து விடும் என்றெல்லாம் சொல்வதற்குமில்லை..


இந்நிலையில் வாக்களிக்கும் எந்திரம் வைத்து தேர்தல் நடத்தினால் ஆளும் கட்சியே வெல்கிறது. பழையபடி பேல்லட் பேப்பர் முறை வரவேண்டும் என்றும் கருத்துகள் நிலவுவதையும் நாம் கவனிக்க வேண்டும்..


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

2 comments: