Tuesday, December 26, 2017

தேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் முறையும் கொண்டு வர இதுவே நல்ல தருணம்.: கவிஞர் தணிகை

தேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் முறையும் கொண்டு வர இதுவே நல்ல தருணம்.: கவிஞர் தணிகை

Image result for election reformation in india


சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே தேர்தல் வாக்குகளுக்காக ஒரு வாக்குக்கு ஒரு ரூபாயை புதிய நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து வரிசையாக கீழ்த் தட்டு மக்களுக்கு கொடுத்ததை நான் பார்த்தபோது எனது வயது 5 இருக்கும்.

எனவே தினகரன் சுயேட்சை வேட்பாளர், குக்கரில் வெந்து போன இரட்டை இலை, தாமரைப்பூ, வெளிச்சமில்லா சூரியன், வாழைப்பழத்துள் நோட்டுகள், டோக்கன்ன் சிஸ்டம், இருபது ரூபாய்க்கு இன்னும் வர வேண்டிய பத்தாயிரம் இன்னும் வராததால் வாக்களித்தவர்கள் கொடுப்பதாக வாக்களித்தவர் வீட்டு முன் முற்றுகை, ராதாகிருஷ்ணன் நகர், மத்திய அரசு, மாநில அரசு, கட்சி...தேர்தல் ஆணையம் இது பற்றி எல்லாம் எழுதியும், மக்கள் நாணயமின்றி இருந்தால் தேர்தலும், ஆட்சியும் நாணயமின்றித்தான் இருக்கும் என்பது பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியமில்லை.

மேலும் எந்திரத்தில் ஓட்டு அளிக்கும் முறையிருக்கும் வரை பாரதிய ஜனதாவை வீழ்த்த வழியில்லை, ஏன் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவே அப்படித்தான் வென்றிருக்கும் எனச் சொல்லிக் கொண்டிருப்போர் யூகங்கள், சந்தேகங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தேர்தல் முறைகளில் ஒரு வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்.


தேர்தலில் வெல்லும் வாக்காளர்கள் சரியில்லை என பெரும்பான்மையான வாக்களர்கள் கருதி திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்த நேர்கையில் அவர்கள் பதவி பறிக்கப்பட்டே ஆக வேண்டும்.

தேர்தல் ஆணையம் அல்லது அரசே தேர்தல் செலவை ஏற்க வேண்டும். வேட்பாளர்களோ கட்சிகளோ தேர்தலுக்கு எந்தவகையிலும் தேர்தல் செலவை ஏற்க செய்ய விடக் கூடாது.

இனியும் சின்னம், அதற்குத்தான் மதிப்பு என்ற கோட்பாடு இனியும் தேவைப்படாத ஒன்றாக மாறிவிட்டதால், கட்சி, வேட்பாளர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கும் தேர்தல் எந்திரம் அல்லது வாக்களிக்கும் அச்சிடப்பட்ட பேப்பர் பயன்படுத்தப் பட வேண்டும்.
Image result for election reformation in india

மேலும் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார முறைகளில் அதன் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு கூட்டாட்சி தத்துவம் வர வழி வகை செய்ய வேண்டும்.

இதை எல்லாம் செய்தாக வேண்டிய கட்டத்தில் இந்தியத் தேர்தல் முறைகள் வராவிட்டால் தேர்தல் நடத்துவது என்பதெல்லாம் விரயம். பயனில்லா பெரும் விரயம்.

தேர்தலும் வாக்களிப்பதும் இது போன்ற ஜனநாயக முறைகளும் கேலிக்கூத்து என பெரியார் கொள்கைகளும் சில கட்சிகளும் கொள்கையாக கொண்டு செயல்பாடுகளை நடத்தி வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.

இலஞ்சம், ஊழல், என்ற சுரண்டல் வர்க்கத்தின் கொள்கை, முதலாளித்துவ சார்பான நிலைபாடு, தனியார் மயம், தாராளமயம், உலக மயம் போன்ற மேலை நாட்டு மேற்கத்திய நாடுகளின் வழிமுறை செயல்பாடுகளில் நாடு நடப்பதும் மதவாதம், அறக்கட்டளைகள், சாமியார்களின் பிடிகள்  இதில் இருந்து எல்லாம் வெளியேறி மக்களுக்கான அரசாக மாற வேண்டும் எனில்

வேறு வழியே இல்லை...இது போன்ற தேர்தல் முறைகள் இலஞ்சம் உள்ளளவும் முறைகேடாகவே இருக்கும். கடல் உள்ளளவும் உப்பு இருக்கும் என்பது போல...

அடிப்படையான இந்த நிலையை சரி செய்யாமல் வெறும் தேர்தல் நடத்தி அதில் வெற்றி தோல்வி, தலைமை அமைச்சரவை, ஆட்சி என்பதெல்லாம் ஏமாற்று வேலைகளே.


 நாடெங்கும் ஒரே காலக்கட்டத்தில் பாராளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி தேர்தல்கள் எல்லாம் ஒருசேர நடத்தப்பட வேண்டும். எம்.எல்.ஏ, எம்.பி., மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம், சலுகைகள், ஓய்வுதியம் எல்லாம் கொடுக்கப்படக் கூடாது...Related image


தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய நாடு முழுதுமே தேர்தல் மாறுதல்களும், சீர் திருத்தங்களும், தொகுதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, சாதிய ஒதுக்கீடு, போன்ற அனைத்து வகையான ரிசர்வேசன் பற்றி எல்லாம் கூட மறு பரிசீலனை செய்வதற்குண்டான நேரம் இதுவே....இனியும் தேர்தல் ஆணையம் இதைப்பற்றி எல்லாம் நெறிப்படுத்தக் கொள்ள வில்லை எனில் ....ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் என குடியரசுத் தலைவரைச் சொல்வது போல இதையும் சொல்வதில் தவறு இல்லை.

 இத்தனை படை பரிவாரத்தை எல்லாம் வைத்துக் கொண்டு, இராணுவம், காவல்துறை, அரசு அலுவலர்கள், ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆகியோரை வைத்துக் கொண்டு  ஒரு தொகுதியில் நடந்த தேர்தலையே நடத்த முடியாத அரசாங்கம் எல்லாம் என்ன அரசாங்கம்? மத்திய அரசு, மாநில அரசு யாவுமே ஆள அருகதை இல்லை என ஆட்சிக் கட்டில் இருந்து கீழ் இறங்க வேண்டும் அதுவே நேர்மை. நேர்மையான ஆட்சி பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல் நன்றாக தேர்தல் நடப்பு , பணப் பட்டுவடா எல்லாம் தெரிந்தே இந்த தேர்தலை நடத்தி இருப்பது உள் நோக்கம் கொண்டது. அதிலும் தி.மு.க இரண்டாம் அலைக்கற்றை வழக்கில் அனைவரையும் அதே நாளில் விடுவித்து சமரசம் செய்து கொண்டதும், அவர்களும் அரசியலில் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும், பிரபாகரன் இலங்கையில் கொல்லப்படும் நாள் தேர்தல் நாள் வரை நடக்காமல் இருக்கட்டும் என காங்கிரஸ் தி.மு.க கூட்டு நீடிக்கட்டும் என இருந்தது போல நாம் வழக்கிலிருந்து விடுதலை பெற்றால் போதும், மேலும் நம் மேல் வருமான வரி வழக்குகளும் சோதனைகளும் இல்லாமல் இருந்தால் போதும் என்று சமாதானமாகி மக்களை எமாற்றிக் கொண்டிருக்க இந்த மடமையான மக்கள் துணித்துவிட்டார்கள் வாக்குக்கு மதிப்பு இருபதாயிரம் பெறும்வரை... வாக்கு ஜனநாயகம் எல்லாம் துப்பாக்கியின் பின் அசைவு போல ஜனநாயகத்தை வந்து தாக்கி விட்டது.

மறுபடியும் பூக்கும் வரை.

கவிஞர் தணிகை.

2 comments: