Sunday, May 22, 2016

எப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை

எப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை



132 ஆளும் கட்சி தமிழக எம்.எல்.ஏக்களில் 32 பேர் மந்திரிமார்களாகிறார்கள். அவர்கள் தவிர்த்து 100 பேர் எம்.எல்.ஏ அவர்களுக்கும் அந்த வாரியம் இந்த  வாரியம், நொந்த வாரியம், கூட்டுறவு மாற்று உறவு எல்லாம் கிடைக்கும் அவர்கள் பெற்றது சுமார் 40 சதவீதம் வாக்குகள். மொத்தத்தில்26 சதவீத மக்கள் வாக்களிக்கவே வரவில்லை.நோட்டா தி.மு.க போன்ற எதிராக இருக்கும் வாக்குகளின் சதவீதம் 60 சதவீதம்.

ஆனால் நீங்கள் நன்றாக கவனியுங்கள் இனி இந்த மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களின் அல்லது தமிழகத்தின் பாதிக்கும் மேலான தொகுதிகளுக்கு அம்மாவின் திட்டங்கள் சென்று அடைவது கேள்விக்குறிதான். கேலிக்குறிதான்.

எனது எப்போதும் கேட்கப்படும் கேள்வி ஜனநாயகத்தில் 40 சதவீதம் எல்லா அரசு உதவிகளும் பெற 60 சதவீதம் புறக்கணிக்கப்படுவதும் அல்லது குரல் முடக்கப்படுவதும்தான் மக்களாட்சியா? இந்த பதவியில் ஏறிக் கொள்வோர் சொல்லே அம்பலத்தில் ஏறும். அவர்கள் அக்கமே குடை சாயும் திட்டம் நிறைவேறும். அவர்கள் சார்பாகவே எல்லாம் நடைபெறுமென்பதுதான் ஜனநாயகத் தத்துவமா?

எனவே ஆளும் கட்சிக்கு எதிராக அல்லது சார்பாக இல்லாத மக்களின் வாக்குப் பிரதிநிதித்துவம் யாவுமே அது எவ்வளவு எண்ணிக்கையில் பிரதானமாக இருந்த போதும் செல்லாதவையே.பயனில்லாதவையே. அப்படித்தான் இந்தக் கட்சி ஆட்சி முறைகள் சொல்லி வருகின்றன. செய்து வருகின்றன.

கோடீஸ்வரர்கள் தங்களை மேலும் கோடீஸ்வரர்களாக்க பாதை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு அடித்தளமே இந்த தேர்தல். அதற்கு வழி அமைத்துத் தந்தவர்களே நமது வைகோ, விஜய்காந்து, தொல் திருமா, கம்யூனிஸ்ட் பாண்டிகள், பா.ம.க, எல்லாமே...

நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.எல்.ஏக்களில் 76% கோடீஸ்வரர்களே. அம்மாவையும் சேர்த்து. இந்த கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம். அம்மாவின் சிண்டு பி.ஜே.பியிடம் உச்ச நீதி மன்றத்தில் ...ஆனால் அம்மாவின் சப்போர்ட் பாராளுமன்றத்தில் பி.ஜே.பிக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தேர்தல் மற்றும் இன்ன பிற மசோதா தாக்கல்களின் போதெல்லாம் பரஸபரம் தேவை. எனவே இருவரும் பரிமாறிக்கொள்வார்கள். வழக்கம்போல துணை இணை பதவிகள் தமிழகத்துக்கும் அம்மாவின் கட்சிப் பிரமுகர்களுக்கும் கிடைக்கும்.அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்.

கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்,குற்ற வாளி எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் இவர்களுக்கு எல்லாம் ஏழை படும் பாடு தெரியும் என்கிறீர்களா? அவர்கள் கஷ்டம் உணர்வார்களா?



மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே இருக்க உதவிடும் தேர்தல்கள் பாலமிடும் மது  வாக்கு வங்கி, வாக்கு விற்பனை...வாக்கு விலை மிக மலிந்து விட்டது ஒரு வாக்கு விலை மதிப்பு ரூ. 200க்கும் குறைந்து விட்டது.

கிணற்றுத் தவளைகளுக்கு கிணறே பெரிய உலகம்

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ...

தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் அயோக்யர் என்றால்
தேர்ந்தெடுப்பவர் முட்டாள் ‍‍‍ பெரியார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பதவி ஏற்காமல் ராஜினாமா செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை

பதவி ஏற்காமல் ராஜினாமா  செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை




தேர்தலில் ஜெயித்த தி.மு.க அணியினர் அனைவருமே மறு தேர்தல் நடத்தக் கோரி பதவி ஏற்காமல் பணநாயகத் தேர்தல் எதிர்த்து போராடும் முகம் தங்கள் பதவியை உதறி எறிவார்களா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வார்களா?

தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு தேர்தல் கோருவார்களா?

குடியரசுத் தலைவரிடம் சென்று முறையிடுவார்களா?

தமிழ் நாட்டில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வுக்காக மறு தேர்தல் நடத்த மக்களிடம் சென்று மாநிலமெங்கும் போராட்டம் நடத்துவார்களா?

அரசு அலுவலகங்கள்,மாநில மத்திய அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்துவார்களா? சசி பெருமாள் போல இலக்கு நோக்கி சாகும் வரை செல்வார்களா?



அதுவும் இன்னும் சில நாட்களிலே, அல்லது உடனே, அல்லது பதவி ஏற்பு வைபவத்துக்கு முன்பே இவர்களால் செய்ய முடியுமா?

அப்படி எல்லாம் செய்தால் நாட்டில் ஒரு அலை பரபரப்பு ஏற்படும். நாடே திரும்பி பார்க்கும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்,பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலவர் அலுவலகம் யாவுமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனச் செய்வார்களா? நினைத்தால் செய்ய முடியும். ஆனால்..

அதெல்லாம் இவர்களால் முடியாது.




ஏன் எனில் இவர்கள் இவ்வளவு தொகுதிகள் பெற்றதே பெரிது என்று எண்ணுகிறார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் இவர்களுக்கு போதும்.

ஏன் எனில் இவர்களும் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார்கள். சில இடங்களில் கொடுக்க வில்லை...கொடுக்காத இடங்களில் தோற்றுள்ளார்கள்.

எல்லாக் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பல பாடங்களைக் கற்பித்துள்ள  நிலையில் தி.மு.க என்னும் பிரதான எதிர்க்கட்சிக்கும் நல்ல பாடம் கற்பித்துள்ளது.




பிரித்தாளும் சூழ்ச்சி அல்லது கொள்கையில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அதே சிங்கம் நாலு மாடுகள் கதைதான். நரிதான் யார் என்று தெரியவில்லை. ஆனால் திட்டம் வெற்றி அடைந்து விட்டது. அதுவே சரித்திரம் சாதனை என்றாகிவிட்டது. அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடி இந்திய பணம் அடித்தளம் ஆகியிருக்கிறது. இந்திய ஜனநாயகம் தமிழகத் தேர்தலில் மதுவுடனும், மாதுவுடனும், பணத்துடனும் போகத்துடனும் போதையுடனும் மடிந்து போய்விட்டது.

என்றுதான் எழுச்சி வருமோ? எமது குடிமகன்  கட்டிய லுங்கி இடுப்பில் இல்லாதிருப்பது அறியாமல் உள்ளாடை தெரிய உயிர் நிலை தெரிய தெருவிலும் சாலையிலும் குடித்து மயங்கிக் கிடக்கும் நிலை காட்சியில் இல்லாமல் போகுமோ? இயற்கை மக்கள் செய்யாததை செய்யட்டும்.

நடந்தது தேர்தலா? பணமே வாக்குக்கு கொடுக்கப்படவே இல்லையா?
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

http://marubadiyumpookkum.blogspot.in/2016/05/blog-post_28.html

2 comments:

  1. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. thanks for your feedback on this post. vanakkam. please keep contact

    ReplyDelete