Saturday, April 9, 2016

தோழா: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை.

தோழா: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை.




தனுஷுக்கு ஆடுகளம் வாய்த்தாற் போல இந்த் கார்த்திக்கு தோழா. கமல் சீக்கடி ராஜ்யம் தூங்காவனம் செய்தாற்போல தோழா என்றும் ஊப்ரி தெலுங்கில்( ஊப்ரி என்றால் மூச்சு உயிர் மூச்சு என்று சொல்லலாம்) இரு மொழியில் இரு மொழி கலந்த நடிகர்கள்  நாகார்ஜுனா கார்த்தி தமன்னா என சுலபமான அதிகம் முடிச்சி விழாத அற்புதமான படைப்பு. போட்ட 55 கோடி பணத்தை முதல் 10 நாளில் மார்ச் 25ல் வெளியிட்டு எடுத்து விட்ட படம்.

சும்மா சொல்லக் கூடாது, குடும்பத்தோடு ஒட்டிய கதை, குடும்பத்தோடு பார்க்க முடியும் . மது அருந்தும் சில காட்சிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்.

சீனு ஒரு  திருடன். ஜெயில் கைதி, பிணையில் 4 மாதம் வெளி வந்து விக்ரமாதித்யா விக்ரம் ஆதித்தியா என்னும் பெரும் கோடீஸ்வரரிடம் ஒன்றிப் போகிறார். விக்ரமாதித்யாவுக்கு கைகள் கால்கள் செயல் இழந்தவருக்கு கை கால்களாய் இருக்கிறார்.

கன கச்சிதமாக கார்த்தி என்ற சீனுவுக்கு இல்லை சீனு என்ற கார்த்திக்குக்கு அட ரெண்டுமே ஒன்று போல பொருந்தி இருக்கிறது. இது போல தேர்வு செய்து படம்செய்தால் கார்த்திக் எங்கேயோ போய்விடலாம் தமிழ், இப்போது தெலுங்கு நாளை இந்தி என...

ஒரு சண்டை இல்லை, அடி தடி தகராறு இல்லாமல் ஒரு படமாய் அதிலும் இந்தக் காலத்தில் ...ஒரு அனாதை சிறுவன் சித்தியிடம் வளர்ந்து தனது துடுக்குத்தனத்தால் அனைவரையும் கவர்ந்து அனைவரின் நம்பிக்கையும் பெற்று அட அந்த பெயிண்டிங் சீன் ஒன்று ஓதுமே. அதுவே இரண்டு மூன்று இடங்களில் வந்தலும் கொஞ்சம் கூட போரடிக்காமல்...



கதை வெண்ணெயில் வழுக்கிக் கொண்டு போகிறது சீனு தள்ளி விடும் ஆதித்யாவின் சக்கர நாற்காலி போல. கதைதான். ஆம் கதைதான் நிஜமாக இருக்க வழியில்லை...

ஆனாலும் சினிமாவாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான். தமன்னா வேறு மெழுகு பொம்மையாக கழுக் மொழுக் என நல்ல செக்ரட்டரி ஆதித்யாவுக்கு. சிவகுமார் அனுமதித்திருக்கலாம் கார்த்திக்கு தமன்னாவையே கல்யாணம் செய்து கொள்ள....வீட்டில் சினிமா தொடர்பான மருமகள் ஒரு ஜோவே போதும் என்று முடிவு கட்டி விட்டாரோ.... நமக்கெதுக்கு பர்சனல். அதுவும் மார்கண்டேயன்  நம் மண்ணின் மைந்தர் அழகிய குடும்பம் பற்றி...

பைக்கில் ,விமானத்தில்,கிளைடரில், காரில் இப்படி கைகள் கால்கள் விளங்காத நபர் ஏங்கும் ஆசை எல்லாம் இந்த ஏழை கார்த்தியால் நிறைவேற மூச்சு இழைப்பு அதிகம் வாங்கும் நோய் உள்ள விக்ரம் தேறி விடுகிறார்.

காதல் வேறு நடுவே பட்டுத் துகில் போல பின்னப்பட்டிருக்க...ஹன்சிகா ஸ்ரேயா, தமன்னா என...ஒரு முறை பார்த்து அனுபவிக்கலாம்.

மறுபடியும் கொஞ்ச காலம் தள்ளிப் பார்த்தாலும் இரசிக்கலாம். காலம் சென்ற பின்னாலும் எப்போது பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். உங்கள் சினிமாக் களஞ்சியத்துக்கான ஒரு நல்ல வரவு இந்த ஊப்ரி தோழா....



குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா என்பது போல...எல்லாத்துக்குமே மனசுதாங்க காரணம். ஏன் மனசு என்பதே இல்லை என்கிறாரே இரமண மகரிஷிகள்.

உண்மையிலேயே காதல் என்றால் வார்த்தை தடுமாறுவதும், நாக்கு பேச விடாமல் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்வதும், பயம் ஏற்படுவதையும் நாகார்ஜுனாவும், கார்த்திக்கும் நன்றாகவே படக் குழுவினரோடு சேர்ந்து விளக்கி இருக்கிறார்கள்.

இதில் நடித்த கல்பனா ஊர்வசியின் அக்கா சமீபமாக‌ மறைந்தது சினிமாவுக்கு ஒரு இழப்புதான்.



என்ன ரோல் கிடைத்தாலும் அள்ளி அள்ளி விழுங்கி விடுகிறார் பிரகாஷ்ராஜ்.எங்கேயாவது குறை தெரியுமா என்று பார்த்தாலும் தெரியவில்லை ஆனால் இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்க வழி இல்லை என்றே தோன்றுகிறது. நமது வலைதளம் நூற்றுக்கு 50க்கும் மேல் தருகிறது விர்சமில்லாத ஒரு கதைக்கு, கற்பனை பலம் அதிகம் என்றாலும் நிஜத்தில் இப்படி எல்லாம் இன்றைய காலக்க ட்டத்தில் இல்லை என்ற போதிலும்...

பிச்சைக்காரன்:
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 5 வருட காலம் ஆண்டில் 6 மாதம் பிச்சை எடுத்தும், 6 மாதம் தமது நிறுவனங்களை கவனித்த ஒரு மனிதர் தம் தாய் வாழ இதை எல்லாம் செய்தார் என சொல்கிற கதை.



விஜய் ஆண்டனி, நன்றாக செய்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட காட்சிகளாக சில பகுதிகளை ஏற்கெனவே முகநூல் வழி பார்த்து விட்டதால் இந்த படங்கள் யாவுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதையுடன் இருப்பதால் வெற்றி இருக்கிறது. ஆனால் படங்களை எல்லாம் பார்க்க பொறுமையும் நேரமும் தேவை
ம‌
று
ப‌
டி
யு
ம்
பூக்கும்
வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment