Thursday, March 17, 2022

ஒரு மௌன யுத்தம்: கவிஞர் தணிகை




எனது பெயர் எஸ்.தணிகாசலம் வயது:60 1993 மார்ச் 11ல் 8 சென்ட் நிலம் வாங்கி பத்திரப் பதிவு செய்து பட்டா மாறுதலுக்கும் மனு செய்துள்ளேன். அப்போது அதன் சர்வே எண:188/2B2 பட்டா எண்:211.வீரக்கல் புதூர்(014) பேரூராட்சியில் இருக்கிறது.

1.03.11.2018ல் பட்டா உட்பிரிவு செய்து அளிக்க முறைப்படி உரிய சேவை மையம் ழியே விண்ணப்பித்திருக்கிறேன்: உட்பிரிவு பட்டா மாறுதல் எண்:330809148325 விண்ணப்ப எண்:2018/0105/08/069770 தேதி: 03.11.2018. சர்வே எண்:188/2B2D1A1A1 என்று குறிப்பிடப் பட்டு...பட்டா வழங்கப் பட வில்லை. எந்த வில்லங்கமும் இல்லை சான்றுகள் இணைக்கப் பட்டிருந்தன. அளந்தும் சென்றார்கள்.


2. 01.09.2021 மீண்டும் முறைப்படி உரிய .சேவை மையம் வழியே விண்ணப்பித்திருக்கிறேன் உட்புல பிரிவு மாறுதல் பட்டா எண்:133080914488639 விண்ணப்ப எண்:2021/0105/08/233891 தேதி:01.09.2021 சர்வேஎ எண்: 188/2B2A என்று...குறிப்பிட்டு பட்டா வழங்கப் படவில்லை எந்த வில்லங்கமும் இல்லை சான்றுகள் இணைக்கப் பட்டிருந்தன அளந்தும் சென்றார்கள்.


3. 14.12.2021 மீண்டும் மனு செய்யச் சொன்னார்கள் அளந்த பிறகு முறைப்படி இ.சேவை மையம் வழியாக விண்ணப்பித்துள்ளேன்.:சர்வே எண்: 188/33A என்று குறிப்பிட்டு.செய்துள்ளேன் உட்பிரிவு பட்டா மாறுதல் எண்:133080914488639 விண்ணப்ப எண்:2021/0105/08/258351 தேதி: 14.12.2021

4. பாரத ஸ்டேட் வங்கி மூலமாகவும் சலான் தேதி:17.12.2021 வழியாக ரூ.400 18.12.2021 அன்று வங்கியில்  உட்பிரிவு மாறுதல் பட்டாவுக்காக SA No: 188/33 என்று கட்டப்பட்டு விட்டது.

ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் ரூ.160 முதல் 240 வரை செலவு சேவை மையத்துக்கு செலவு செய்திருக்கிறேன். பல முறை அளந்து சென்றும் பட்டா கிடைக்காமல் எனது மனைவிக்கு வாக்கு அடையாள சரியான அட்டைக்கு 5 முறை அலைந்து திரிந்தது போலவே இதுவும் இருக்கிறது.


 14.01.2022 இன்று வரை எனக்கு கிடைக்க வேண்டிய பட்டா கிடைக்காதிருப்பதன் காரணம் ஒன்றே ஒன்று: அது நான் சட்டத்துக்கு புறம்பாக நடக்க மறுப்பதுதான். இலஞ்சம் கொடுக்காமல் இருப்பதுதான். இதை எப்படி சொல்கிறேன் எனில் எனக்குப் பிறகு அந்த இடங்களில் அதன் சுற்றுப் புறங்களில் நிலம் வாங்கி விண்ணப்பித்த அனைவருமே பட்டா பெற்றுவிட்டனர்.

 காரணம் அமைப்புடன் அனைவருமே ஒத்துப்போவார்களாக இருக்கின்றனர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நில அளவை அலுவலர்கள் பலமுறை மாறிவிட்டனர். பல முறை அளந்தும் விட்டனர்.ஆனால் ஒரு அம்மா ரூ. ஐந்தாயிரம் கொடுங்கள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று மாறுதல் செய்து சென்றுவிட்டார். பின்னால் வருவார் செய்து கொடுப்பார் என்று சர்வே எண் மாறி விட்டது உங்களுக்கென்ன பட்டாதானே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்

பின்னால் வந்தவர் நல்லவர் அவரும் அளந்து ஆவன செய்தார். ஆனால் அவரின் உதவியாளர் ஒருவர் ( அரசு அலுவலரா என்று தெரியவில்லை) ரூ.8000 கொடுங்கள் முடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். வீரக்கல்புதூர்(014) பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி புரியும் ஒரு ஆயாம்மா நீங்கள் அளவீட்டாளருடன் பேசுங்கள் என எனது மனைவியிடம் கூறி இருக்கிறார் கொள்வினை கொடுப்பினை பற்றித்தான்.

ஆக அரசு நல்ல விதமாக செயல்பட எண்ணினாலும், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாதாரண பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே எப்படியும் இடைத்தரகர்கள் தோன்றியபடியே இருக்கிறார்கள்.அமைப்பு மாறவில்லை.நான் எவரையுமே குறிப்பிட்டு காட்ட விரும்பவில்லை. அந்த முகமற்ற நபர்கள் சமூகத்தின் அவலங்களாய்த் தொடர்கின்றனர்.

 எனக்கு இப்போதிருக்கும் நிலை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும் பத்திரப் பதிவு, வருவாய் மற்றும் அரசுத் துறைகள் எப்படி எல்லாம் மேல் இருந்து இயங்க நினைக்கின்றன ஆனால் கீழ் மட்டத்தில் இயங்க மறுக்கின்றன என்பதற்கு.


இந்நிலையில் எனக்கு பட்டா கிடைக்க ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

வணக்கங்களுடன்.


கவிஞர் தணிகை ()எஸ்.தணிகாசலம்

இணைத் தலைவர்

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்

11/125 புதுசாம்பள்ளி

மேட்டூர் அணை 636 403

தொடர்பு எண்: 8015584566

deivapublisher@gmail.com

puthusamballi

14.01.2022


பி.கு: இந்த மின்னஞ்சலை தமிழ் நாடு அரசின் மாண்பு மிகு முதல்வர் முதல்,தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்,கோட்டாட்சியர், தொடர்புடைய அமைச்சர்கள் இப்படி அனைவர்க்கும் தெரியப்படுத்தியதால் பெற்ற சிறு வெற்றி இது. எல்லாப் புகழும் இயற்கைக்கே. இந்த மடலின் விளைவாகவும், இதன் நினைவூட்டல்களினாலுமே உரிமையுடைய நில ஆவணத்தை ஆன்லைனில் பெற முடிந்திருக்கிறது. யாரையும் புண் படுத்த வேண்டிய நிலையில் இல்லாமல் எனது குறையை மட்டுமே தீர்க்கச் சொன்ன ஒரு அத்தியாம் இது. ஆனால் இது எத்தனையாவது அத்தியாம் மறுபடியும் பூக்கும் வாழ்வுப் புத்தகத்தில் என்று மட்டும் கேட்டால் அதிர்ந்து போவீர்கள் இன்னும் இருக்கும் காலமெல்லாம் அதே துணிச்சலுடன் பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துகளுடன் கவிஞர் தணிகை


Wednesday, March 16, 2022

. வாய்மையே வெல்லும் போராட்ட குணம் இருந்தால்: கவிஞர் தணிகை





வாய்மையே வெல்லும் போராட்ட குணம் இருந்தால்: கவிஞர் தணிகை


14.01.2022ல் உங்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தி இருந்தேன் எனக்கு ஒரு நிலத்தின் பட்டா பெறும் முயற்சியில் நடந்த கதையை அல்ல அல்ல உண்மைச் சம்பவங்களை. அதைப்பற்றிய குறுஞ்செய்திகளை தொடர்புடைய கீழ் மட்ட இரு அலுவலகங்களிடமிருந்தும் 31.01.22ல் பரிந்துரைக்கப் பட்டு வட்டாட்சியரிடம் கொண்டு செல்லப் பட்டன எனப் பெற்றேன்.


அதன் பின் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி தேர்தல்...அவர்களை எல்லாம் குறை ஏதும் சொல்ல வழியின்றி காத்திருந்தேன். அதன் பின் நினைவூட்டும் மின்னஞ்சல்களை கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பியிருந்தேன்.


இன்று ஆன்லைனில் பட்டா பெற்று விட்டேன்...ஏன் பெற்று விட்டோம் என்றும் சொல்லலாம்.இலஞ்சம் இல்லாமல் பெற்று விட்டேன் ஒரு நியாயமான உரிமையை.

ஆனால் அதற்குள் தான் எத்தனை போராட்டம், மனப்போராட்டம் எல்லாம்...கடிதச் செலவு கூட இன்றி மின்னஞ்சல் வழியேதான் எனது வேண்டுகோள் வைக்கப் பட்டது.


எனவே காத்திருப்பும் மற்றும் உரிய முறையிலான அணுகுமுறையும் இந்த வெற்றியைக் கொணர்ந்து சேர்த்திருக்கிறது அதன் அளவீடுகள் அதன் குறிப்புகள் சற்று புரிந்து கொள்ள முடியாமல் அதன் மொழியில் இருந்த போதும் மொத்தத்தில் உரிய பட்டா  ஆன்லைன் மூலம் பிரிண்ட் எடுக்கப் பட்டு விட்டது.


கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இப்படி வெற்றி கிடைத்திருக்கிறது

ஜெ.ஜெயலலிதா முதலவராக இருந்த போதும் இது போன்ற ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது

இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கின்ற போதும் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது.


கீழ் மட்டம் இன்னும் திருந்தியபடியாகக் காணோம் என்றாலும் நாம் நமது போராட்ட குணத்தை தளரவிடாதிருந்தால்

வெற்றி நிச்சயம் சத்தியமேவ ஜெயதே... வாய்மையே வெல்லும். மக்களிடம் சக்தி இருக்கிறது அதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதாகக் காணோம். மேல் மட்டத்து அளவிலும் குறை தீர்க்க குறை களைய முயல்வதாகவே அறிகிறோம்...என்றாலும் ஏன் இத்தனை சலிப்படைய வைக்கின்றன இந்த நியாயமான கோரிக்கைகளின் வெற்றிகள்...எப்படியோ 1993ல் ஆரம்பித்த  மறுபடியும் பூக்கும் என்ற கதையின் ஒரு அத்தியாயம் 2022ல் நிறைவுக்கு வந்திருக்கிறது.



அனைவர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும்...


கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை. 

Friday, January 28, 2022

தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி: கவிஞர் தணிகை

 ஒரு நல்ல செய்தி: கவிஞர் தணிகை



வணக்கம்


நீண்ட நாட்களாக என்னால் வலை தளத்தில் புகுந்து எதுவுமே செய்ய நேரமில்லை.காரணம் பல.எனது வலைப்பூவுக்கே சுமார் 2 மாதம் முடியும் தருவாயில் வந்து சேர்ந்திருக்கிறேன்.


வந்ததன் காரணம்:

நிலம் வாங்கி வீடு கட்டி அனுமதி பெற வேண்டிய நிர்பந்தத்தை வைத்துக் கொண்டு அதைப் பெற்றுத் தருகிறோம் என‌ நிறைய அரசியல் முன்னணியினர் ஏமாந்த மக்களிடம் இலட்சக் கணக்கில் களவாடிய வரலாற்றை மாற்றி அமைக்க தமிழக அரசு ஒரு புதிய  நிலைப்பாட்டை எடுத்த செய்தி படித்தேன்.


அதையே உங்களுக்கும் பகிர்கிறேன்...

இனி 1. இன்ஸ்டன்ட் (உடனுக்கு உடன்) 24 மணி நேரத்தில் போதிய ஆதாரங்களை சமர்பித்தால் 1000 சதுர அடிக்குள் இருந்தால் 14 நாட்கள் ஆய்ந்த பின் கொடுக்கப் படும் என்றும்

2. ஆட்டோ ... தானாக இயங்குதல் இந்த திட்டம் ஆயிரம்  சதுர அடிக்கும் மேல் 32 ஆயிரம் அடி வரை 30 நாளுக்குள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு கொடுக்கப் படும் அனுமதி என்றும்


3. மற்றொன்று 3. ரெகுலர்: இப்போது இருப்பது போல  தொடரும் என்றும் இவை யாவும் ஆன்லைன் விண்ணப்ப முறைகளில் நிர்ணயிக்க பணி நடைபெறுகிறது என்றும் அதே போல இன்னும் சிறிது காலத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் இருக்கின்றன.


மேலும் மின்சார இணைப்புக்கும் கூட தமிழில் என்ன என்ன ஆவணங்கள்  தேவைப்படுகிறது எப்படி இணைப்பை பெறுவது என்ற விளக்கங்களுடன் தமிழ் ஆன்லைன் வசதிகள் பயன்படுத்தப் படுவதாகவும் செய்திகள் இருக்கின்றன.


மேலும் வ.வு.சியை தெரியாது என்று ஒன்றிய அரசின் குடியரசு தின விழா ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காத அலங்கார தமிழகத்தின் வாகனங்கள் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பாதுகாப்புடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன இன்று அது எங்கள் கல்லூரி வழியாக கோவை சென்றடைந்திருக்கிறது. 


அனைவரும் பயன்பெறுக...

அனைவரும் பயன்பெறுக...


நன்றி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Saturday, December 4, 2021

பேரறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாதுரையின் சத்ரபதி சிவாஜி:கவிஞர் தணிகை






பேரறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாவின் சத்ரபதி சிவாஜி:
எனது வாழ் நாளில் எனைத் தொடர்ந்து வரும் இந்த வீர வசனம் எங்களது கல்லூரியின் இந்த ஆண்டு மாணவர்களின் கலை இலக்கிய விளையாட்டு விழாவில் இடம் பெற்றது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை