Wednesday, March 16, 2022

. வாய்மையே வெல்லும் போராட்ட குணம் இருந்தால்: கவிஞர் தணிகை





வாய்மையே வெல்லும் போராட்ட குணம் இருந்தால்: கவிஞர் தணிகை


14.01.2022ல் உங்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தி இருந்தேன் எனக்கு ஒரு நிலத்தின் பட்டா பெறும் முயற்சியில் நடந்த கதையை அல்ல அல்ல உண்மைச் சம்பவங்களை. அதைப்பற்றிய குறுஞ்செய்திகளை தொடர்புடைய கீழ் மட்ட இரு அலுவலகங்களிடமிருந்தும் 31.01.22ல் பரிந்துரைக்கப் பட்டு வட்டாட்சியரிடம் கொண்டு செல்லப் பட்டன எனப் பெற்றேன்.


அதன் பின் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி தேர்தல்...அவர்களை எல்லாம் குறை ஏதும் சொல்ல வழியின்றி காத்திருந்தேன். அதன் பின் நினைவூட்டும் மின்னஞ்சல்களை கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பியிருந்தேன்.


இன்று ஆன்லைனில் பட்டா பெற்று விட்டேன்...ஏன் பெற்று விட்டோம் என்றும் சொல்லலாம்.இலஞ்சம் இல்லாமல் பெற்று விட்டேன் ஒரு நியாயமான உரிமையை.

ஆனால் அதற்குள் தான் எத்தனை போராட்டம், மனப்போராட்டம் எல்லாம்...கடிதச் செலவு கூட இன்றி மின்னஞ்சல் வழியேதான் எனது வேண்டுகோள் வைக்கப் பட்டது.


எனவே காத்திருப்பும் மற்றும் உரிய முறையிலான அணுகுமுறையும் இந்த வெற்றியைக் கொணர்ந்து சேர்த்திருக்கிறது அதன் அளவீடுகள் அதன் குறிப்புகள் சற்று புரிந்து கொள்ள முடியாமல் அதன் மொழியில் இருந்த போதும் மொத்தத்தில் உரிய பட்டா  ஆன்லைன் மூலம் பிரிண்ட் எடுக்கப் பட்டு விட்டது.


கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இப்படி வெற்றி கிடைத்திருக்கிறது

ஜெ.ஜெயலலிதா முதலவராக இருந்த போதும் இது போன்ற ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது

இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கின்ற போதும் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது.


கீழ் மட்டம் இன்னும் திருந்தியபடியாகக் காணோம் என்றாலும் நாம் நமது போராட்ட குணத்தை தளரவிடாதிருந்தால்

வெற்றி நிச்சயம் சத்தியமேவ ஜெயதே... வாய்மையே வெல்லும். மக்களிடம் சக்தி இருக்கிறது அதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதாகக் காணோம். மேல் மட்டத்து அளவிலும் குறை தீர்க்க குறை களைய முயல்வதாகவே அறிகிறோம்...என்றாலும் ஏன் இத்தனை சலிப்படைய வைக்கின்றன இந்த நியாயமான கோரிக்கைகளின் வெற்றிகள்...எப்படியோ 1993ல் ஆரம்பித்த  மறுபடியும் பூக்கும் என்ற கதையின் ஒரு அத்தியாயம் 2022ல் நிறைவுக்கு வந்திருக்கிறது.



அனைவர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும்...


கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை. 

No comments:

Post a Comment