Wednesday, April 10, 2019

கருப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ரஜினி வேஷம் கலைஞ்சுப் போச்சு டும் டும் டும்: கவிஞர் தணிகை

கருப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ரஜினி வேஷம் கலைஞ்சுப் போச்சு டும் டும் டும்: கவிஞர் தணிகை

Image result for neela sayam veluthu


நதி நீரை இணைப்பதாக பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம் அது நம்மூர் புலி வருது புலி ராசா ரஜினி காந்துக்கு பிடித்துப் போய்விட்டதாம், அதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறாராம். கருத்து நல்லதுதான் ஆனால் அதை யார் சொல்வது பாரதிய ஜனதாவா...அதாவது கடந்த தேர்தலில் இதே கட்சி அயல் நாட்டில் முதலீட்டில் உள்ள இந்தியப் பணத்தை எல்லாம் மீட்டு வருவோம் என்ற கட்சி, தாங்கள் பதவிக்கு வந்தால் காங்கிரஸ் செய்ய முடியாததை எல்லாம் செய்வோம் இந்த ஆதார் தேவையில்லை, எரிவாயுவுக்கு இப்படி மானியம் தேவையில்லை, ஜி.எஸ். டி காங்கிரஸ் முயல்கிறது அது தேவையில்லை  என எதற்கெடுத்தாலும் காங்கிறஸ் ஆட்சிக்கு இவர்கள் வந்தால் பரவாயில்லை என நம்ப வைத்தார்கள்...கழுத்தறுத்து விட்டார்கள்.

இப்போது காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்று இவர்கள் ஆட்சி சொல்லிவிட்டது சொல்லாமல் சொல்லி விட்டது.

இந்த காங்கிரஸ் கட்சிக்கு விவஸ்தையே கிடையாது மாநிலத்தில் பிரியாணி பொட்டலம் கட்சித்தலமை அலுவலகத்தில் உனக்கு முந்தியா எனக்கு முந்தியா சண்டை...அதை ஊடகம் ரெடியாக ஊதி வைத்து பெருக்க வைத்து செய்தி ஆக்கி வரும் நிலையில் கே.எஸ் . அழகிரி மாநிலத் தலைவர் நதி நீரை இணப்பது சாத்தியமில்லை என தேவையில்லாத நேரத்தில் பேசிக் கெடுத்து வருகிறார். ராகுல் கூட அப்படி பேசித்தான் பாதிக் கெட்டார். எல்லாக் கட்சிகளையும் அரவணைத்துப் போகவேண்டும் என்று எங்கள் ஊர் ஓ.பிஎஸ் ஈ.பி.எஸ் கேட்டாவது தெரிந்து கொண்டிருக்கலாம்....
Related image
இந்நிலையில் நம்ம சூப்பர் ஸ்டார் கறுப்பழகன் என்றும் பதினாறு கட்டழகன்  தர்பார் நடத்த தில்லி செல்கிறார். அவர் தமக்கும்  கமலுக்கும் இருக்கும் நட்புறாவை சொல்லாத எதையாவது எழுதி கெடுத்து விடாதீர் எனக் கேட்டுக் கொண்டு அவருக்கு தமது ஒத்தழைப்பு ஆதரவு இல்லை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி, நதி நீர் இணைப்பு பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் இருக்கிறது அவர்கள் அதை நடத்தி விடுவார்கள் நள்ளிரவில் பணத்தை எல்லாம் செல்லாது என ஓரிரவில் அதுவும் நள்ளிரவில் சொல்லியபடி ஓரிரவிலேயே நடத்தி விடுவார்கள் என மகிழ்வடைந்ததாக பூரித்திருக்கிறார்.  அதையே சொல்லாமல் சொல்கிறார் யார் பக்கம் தாம் என்பதையும்...பிழைக்கத் தெரிந்தவன் 167வது படமாக தர்பார் செய்வார் அவர் பின்னால் பிழைக்கத் தெரியாத ஒரு கூட்டம் போய்க் கொண்டே படுகுழியில் விழுந்தபடியே....

அதற்கு கமலே பரவாயில்லை துணிச்சலுடன் எத்தனை பேர் வாக்களித்தாலும் இல்லையென்றாலும் நின்றே பார்த்துவிடுவது என கட்சி ஆரம்பித்த புதிதிலேயே நாடாளுமன்றம் வரை தமது குரலை கொண்டு போக‌
 இருக்கிறார்
Related image
காமராசர் சொன்னாராம்  என்று ஒரு காட்சி உலவுகிறது வாட்ஸ் ஆப்பில், கூத்தாடுகிறவனிடம் நாட்டை கொடுங்கள், அவன் கூத்தியாவிடம் அதைக் கொடுப்பான், அவள் அதை குற்றவாளிகளிட‌ம் அதைக் கொடுப்பாள் அவர்கள் அதை அடமானம் வைப்பவர்களிடம் கொடுப்பார்கள் என திண்டுக்கல் தேர்தலில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக தமது கட்சிக்கு வேட்பாளரை நிறுத்தியபோது  சொன்னாராம் அது அப்படியே நடந்தும் விட்டதே...
Related image
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

விடுதலை என்றால் முழுப் பொறுப்பு: கவிஞர் தணிகை

விடுதலை என்றால் முழுப் பொறுப்பு: கவிஞர் தணிகை

Image result for freedom means total responsibility

விடுதலை என்றல் முழுப்   பொறுப்புடன் இருப்பது என்றும் ஏழ்மை வறுமை சொரணை இல்லாத் தனத்தை தோற்றுவிக்கும் என்றும் அறிஞர்கள் கூற்று. உண்மைதான் பசி வந்தால் பற்றும் பறந்திடும் என்கிறது தமிழ் மொழி

எனவே தான் பொறுப்பே இல்லாமல் இந்திய விடுதலையை அனுபவிப்பவர்கள் பசி, பஞ்சம், போதை, சாதி, மதம் போன்றவற்றுடன் பொது மக்களை சாதாரண மக்களை அடித்தட்டு மக்களை பின்னிப் பிணைத்து விட்டு தாங்கள் மேலும் மேலும் மேல் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அரசியல் என்னும் ஆய்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆளுமை அடிமை  மேன்மை கீழ்மை என அரசும் ஆட்சி முறைகளும் இருப்பவை இன்னும் அனைத்து மக்கள் தொகைக்குமான வசதி வாய்ப்புகளை சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிச்சுவடே ஆரம்பிக்காத ஆட்சி முறைகளே இன்னும் நீடிக்கிறது. எனவே  மது எங்கும் கிடைக்க குடி நீர் எங்கும் கிடைக்கவில்லை...செல்பேசி எல்லார் கைகளுள்ளும் இருக்க கழிப்பறைகள் இல்லை,அடிப்படைத்தேவைகளான உணவு உடை உறையுள்ளுக்கான உத்தரவாதம் அளிக்கும் வேலைவாய்ப்புகள் உணவு தானிய உற்பத்திக்கான விவசாயம் காலம் செல்லச் செல்ல நசிந்து வருகின்றன.

பொதுமக்களின் ஜனநாயகப் பார்வையை திசை திருப்ப அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன. மக்களுக்கும் ஜனநாயகம் மேல் எந்தவித நம்பிக்கையும் இல்லை எனவேதான் காசு பணம் பிரியாணி குவாட்டர் பாட்டல் மது போன்றவற்றிற்காக தமது வாக்குரிமையை கீழ் தட்டு மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

எழுச்சி மிக்காரின் கருத்துகளை, ஏன் அவர்களையே புறக்கணிப்பு செய்யும் மக்கள் ஆட்சி, அதிகாரம், இவற்றின் பால் எந்தவித பிடிப்பும் இல்லாதிருக்கின்றனர்

சட்டம் நீதி நியாயம் ஒழுங்கு இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட்டே விளங்கிட மக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றங்களோ சிறிய விஷயங்களில் நீதியை நிலைநாட்டுவதாக பாசாங்கு செய்துவிட்டு பெரிய பெரிய முக்கியமான நடவடிக்கைகளில் கோட்டை விட்டு விடுகின்றன...அதற்காக சுயநலப் பலிகடாவாகும் நீதிபதிகளும் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

எடுத்துக் காட்டாக : குன்ஹா வழங்கிய தீர்ப்பை ஓரங்கட்டிய குமாரசாமி தீர்ப்பும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதவிகளுக்காக நல் செல்வ மிகுதி வாழ்வுக்காக பலிகடாவாகப் போய்விடுவதும்...

எனவேதான் ஆங்கிலேயர்களே இருந்திருந்தாலும் பரவாயில்லை, விடுதலை என்பதை பொறுப்புணருமுன்னே இந்தியர்கள் அடைந்து விட்டு பாடாய் படுத்தி வருகின்றனர் என நல் உள்ளங்கள் சலிப்பாக பேசி வருகின்றன.

அட, பொதுக்கழிப்பறையை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமாகவே இருக்கிறார்களே...எங்கும் காணுமிடங்கள் எங்கும் அது சாலையாக ரெயில்வே சாலையாக பொது இடமாக இருந்தாலும் எச்சிலும், சிறு நீரும், மலமும், குப்பையும் கூளமுமாக ஆக்கி நீர் நிலையை எல்லாம் பாழாக்கி இன்று பாட்டிலில் அடைத்த குடி நீரை விலைக்கு வாங்க கம்பெனி முதலாளிகளுக்கு விற்க அனுமதி வழங்கி  நாட்டை கூறு போட்டு விற்று விட்டனரே...
Image result for freedom means total responsibility
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாளர்க்கு கொடுக்க மாத ஊதியச் சம்பளம் இல்லையாம்...ஜியோ ரிலையன்ஸ் சக்கை போடு போடுகிறதாம்...மோடியை முகேஷ் அம்பானிமார்களைத்தான் வெற்றியின் தாரக மந்திரங்களின் சூட்சமம் பற்றி சொல்லித் தரச் சொல்ல வேண்டும்.
Image result for freedom means total responsibility
இந்நிலையில் தன்னிலை உணரா மக்களிடையே மாக்களாய் உள்ளார்க்கான தேர்தல் ஒரு கேடு, திருவிழாக் கூத்து...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, April 9, 2019

இந்தியத் தேர்தலும் பி.எஸ்.என்.எல் சேவையும்: கவிஞர் தணிகை



 Related image

இந்திய ஜனநாயகம் தேர்தல் வித்தையில் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறதோ அப்படியே பி.எஸ்.என்.எல் சேவையும் தடுமாறிக் கொண்டிருக்கிறது வாடிக்கையாளர்களை அதிருப்திப் படுத்திக் கொண்டு.

கடந்த பல நாட்களாகவே இதன் நெட்வொர்க் படு வீழ்ச்சி அடைந்துள்ளது. தானாகவே  இணைப்பு துண்டிக்கப்படுவதும், மறுபடியும் திரும்பக் கிடைப்பதாக பாசாங்கு செய்வதும் மறுபடியும் கிடைக்காமல் போவதுமாக‌

மேலும் மோடத்தின் எல்லா குறிப்பு பட்டன் விளக்குகளும் எரிந்த போதிலுமே வலையத்தில் நாம் தேடும் பக்கத்துக்காக சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறதே ஒழிய  அந்தப் பக்கம் திறப்பதில்லை.

மேலும் புகார் அளிக்கும்போது அந்த இணைப்பில் வந்து பேசுகிறார்கள் அல்லது நேரிலும் வந்து லைன்மேன்கள் வந்து பார்க்கிறார்கள்

அவர்கள் பேசும்போது அல்லது வந்து பார்க்கும்போது டவுன்லோட் வேகம் 6 எம் பி ப்பி எஸ் 4 எம்.பி. ப்பி எஸ் இப்படியாக  வித்தை காட்டுகிறது ஆனால் அவர்கள் சென்றதும் பழைய படி இரண்டு என இறங்கி மேலும் ஒன்றுக்கும் குறைவாகி சுழியத்தின் பின்னக் கணக்கீட்டில் ஜீரோ புள்ளி 44 என்ற கண்க்கிற்கும் கீழ் செல்கிறது அப்லோட் பற்றி சொல்லவே வேண்டாம் ஜீரோ புள்ளி 13 இப்படித்தான் கிடைக்கிறது.

இந்த இலட்சணத்தில் 4 ஆம் தலைமுறைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால்தான் இப்படி நடக்கிறது...முதல் தலைமுறையே இங்கு ஒழுங்கில்லாதபோது உங்களுக்கு எல்லாம் எதற்கு 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை...இருப்பதை ஒழுங்காக பிரித்துக் கொடுத்து  அதில் நல்ல பேர் வாங்கி அதன் சேவையை  மேம்படுத்திய பிறகல்லவா அடுத்த தலைமுறை பற்றி யோசிக்க வேண்டும்

இது பற்றி புகார் மேல் புகார் பதிவு செய்தாலும் நிலை இதுதான். மாறவே இல்லை. பின் எப்படி இப்படி இருந்தால் பில் கட்டுவது என்றால் அது மட்டும் தேதிக்குள் கட்டி விட வேண்டும்....

ஒன்று சரியாக சேவை தரவேண்டும் அல்லது அந்த நாட்களுக்கான தொகையை மாதாந்திர சேவைக்கட்டணத்திலிருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் நியாயம் நேர்மை.

என்னவோ சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் வங்கியில் நாம் சென்று ஏ.டி.எம் சென்டரில் பணம் கேட்க அங்கு இல்லையெனில் அதற்கு வங்கி அபராதத் தொகை தரவேண்டுமல்லவா,,, வாடிக்கையாளரின் பணம் குறைந்த பட்ச இருப்புத் தொகையை விடக் குறைந்தால் அதற்கு மட்டும் அபராதத் தொகை எனக் கழிப்பது என்ன நியாயம் என்று சொல்லியுள்ளதாக...

ஆனால் இது பற்றி ஏற்கெனவே வாட்ஸ் ஆப் உலவியில் நண்பர்கள் இதே கருத்தை பதிவிட்டு பகிர்ந்து கொண்டு பல மாதங்கள் ஆகிறது. அதைத்தான்... சினிமாவில் சேர்த்துள்ளார்கள்..

ஒரு பேருந்தில் ஒரு நிறுவனத்தில் அதாவது மின்கட்டணம், குடி நீர்க்கட்டணம் என்று கட்டுகிற இடத்தில் ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் வாங்க மறுக்கும் அதே நிறுவனத்தார் பல நேரங்களில் சில்லறை இல்லை என எவ்வளவோ பேருக்கு ஒரு ரூபாய் கொடுப்பதேயில்லையே அது என்ன நியாயம்...

குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயை ஓவ்வொருவருக்கும் பிடித்து வைத்திருக்கும் வங்கிகள் எத்தனை வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறதோ அத்தனை பணத்தை சேர்த்து வட்டி இல்லாமல் பயன்படுத்தி வருகிறது...அவர்கள் அனுமதியின்றியே அவர்கள் பணமானது பயன்படுத்தப்படுகிறது...இது தான் மோடியின் கேடி வேலைகள்...

இல்லை இல்லை ஜீரோ பேஸ்ட் அக்கவுண்ட் என்று ஒன்றாமே அதில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லையாமே என்று கேட்டால  ஊஹூம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தட்டிக் கழித்து விடுகிறார்கள்....

என்னய்யா நிறுவனங்கள் இந்தியாவில் மக்களுக்கு சேவை செய்யுது அவர்கள் வருவாயை பிடிங்கித் தின்றபடி...

இதில் எல்லாம் நெட்மயம்தான் நெட் இருந்தால் தான் வேலையாம். ஏண்டா எல்லாமே ஆன்லைன் என்கிறீர் எவனாவது இலஞ்சம் இல்லாமல் ஆன்லைன் பதிவின் படி நேர்மையாய் வேலையை செய்து கொடுக்கிறீர்களா...ஏன் அந்த இலஞ்சத்தையும் ஆன்லைனிலேயே பெற்று அக்கவுண்ட்ஸ் மெய்ன்டெய்ன் செய்ய வேண்டியதுதானே....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, April 8, 2019

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும்: கவிஞர் தணிகை.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும்: கவிஞர் தணிகை.

Image result for election commission of india
எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து தங்கத்தையும், பணத்தையும் பிடித்து வருவதாகவும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தவறுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இப்போதைய தேர்தலின் போது மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலின் போதும் சொல்லப்படுவதுதான்.

ஆளும் கட்சி ஆம்புலன்ஸ் காவல் துறை ஆகியவற்றை பயனபடுத்தி தமது நடவடிக்கையை நடத்திக் கொண்டு எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணி மற்றும் பணம், பொருள், தங்கம் ஆகியவற்றின் நடவடிக்கையை முடக்கி வைப்பதாகவும் அதன் மூலம் தங்களது வெற்றி வாய்ப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன.

உண்மையிலேயே நூற்றுக் கணக்கான செய்திகள் எதிர்க்கட்சி முடக்கத்தை செய்தியாக ஊடகம் வெளியிட்டால் இரண்டு அல்லது ஒன்று ஆளும் கட்சியின் குற்ற நடவடிக்கையையும் சொல்கிறது அந்த அளவுதான் ஊடகங்களுக்கு செய்தியாகும் அளவு ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் அரசின் அங்கங்களும் ஊடகங்களும் மூழ்கி உள்ளன.

இப்போதைய காலக் கட்டத்தில் அங்கே இவ்வளவு தங்கம், பணம் பிடித்தோம், இங்கே இவ்வளவு பிடித்தோம் என்று சொல்வதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிவடைந்துவிடுவதில்லை.

 மாறாக சட்டமன்றத் தேர்தல்களையும், பராளுமன்றத் தேர்தல்களையும் காபந்த் சர்க்கார் என்ற பேரில் ஏற்கெனவே ஆளும் கட்சியாக இருந்தார்  தொடர முடியாமல் குடியரசுத்தலைவரின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்து விட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற சட்ட வரைவை என்ற திட்டத்தை குடியரசுத்தலைவர்' பாராளுமன்றம், உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்து அதை அமலுக்கு கொண்டு வர வேண்டிய கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

இதை தேர்தல் ஆணையத்தைத் தவிர மற்ற அரசின் அமைப்புகள் மேற்கொள்ளும் என்றோ, மக்கள் அதை அமல்படுத்த கோரிக்கை வைப்பார் என்றோ சொல்வது தமது கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறுவது என்றே சொல்ல முடியும்.

எலிக்கறி தின்று, கோவணத்தை அவிழ்த்து தவழ்ந்து டில்லி வீதிகளில் சாலைகளில் திரிந்த விவசாயிகள் பற்றி எல்லாம் கவலை கொள்ளா மோடி அரசின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விவசாயிகள் பெறும் கடனுக்கு வட்டி இல்லை என்றும் இன்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் என்றால் அதற்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள், நாளை ஆட்சிக்கு வந்தவுடன் மாற மாட்டார் என்று என்ன நிச்சயம்?

எட்டு வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ததும் தவறு, ஆர்ஜிதம் செய்வதும் தவறு என உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில் மாநிலக் ஆளும் கட்சிக்கு நாட்கள் நெருங்கி வருவது போல அறிகுறிகள்

ஏன் எனில் ஸ்டெரிலைட் காப்பர் போராட்டத்தில் வாயிலும், காதிலும், உடலின் மேற்பகுதியில் எல்லாம் குண்டுகளை பாய்ச்சி இறந்திருந்த 13 உயிரற்ற உடலை போராட்டக்காரர்களை  முதல்வர் என்ற முறையில் அனுதாபத்துடன் கூட எட்டிப்பாராதிருந்த எடப்பாடி அரசு எந்த மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது என்றே விள்ங்க வில்லை. எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள்...வாக்கு வங்கி இருக்க பயமேன் என கூட்டணி தர்மம் நமைக் காப்பாற்றி விடும் என்றெல்லாம் நம்புகிறார்போலும். ஒருவர் என்ன வென்றால் பூத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டேன் என்கிறார். இவர் இத்தனைக்கும் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்து எம்.பியாக இருந்து அந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என அந்தக் கட்சிக்காரர் பெருமை பேச, ஆளும்கட்சியிடம் இருந்து பொற்குவியல் பெற்றமைக்கு ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள் அதன் அடிமட்டத் தொண்டர்கள்...

இதை எல்லாம் சீர் தூக்கிப் பார்க்கும்போது ஆளும் கட்சி கூட்டணி தமது வெ(ற்)றிக்காக எதையும் செய்யும் சொல்லும் என்பது எல்லாம் கவனித்து உன்னித்துப் பார்க்காமல் மேலோட்டமாகப் பார்த்தாலே விளங்கும்...

எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் செய்யுங்கள் தேர்தல் நடத்தியே தீருவோம் முடிவுகள் வெளியான பின் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என பேசுவது சரியான நியாயமாகத் தெரியவில்லை.
Image result for president of india
தேர்தல் ஆணையம் சரியாக பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 7, 2019

மனித மாய்மாலங்கள்: கவிஞர் தணிகை

மனித மாய்மாலங்கள்: கவிஞர் தணிகை

Image result for ooty trains


என்றோ இயற்கைச் சீற்றத்தால் இறந்த கோடிக்கணக்கான உயிர்களின் உடல்களின் இரசாயனக் கசிவெண்ணெயே  மனிதராகிய நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் வாகன எரிபொருள்...

என்றோ இயற்கைச் சீற்றத்தால் பட்டு எரிந்து போன மாபெரும்  மரங்களின் புதை நிலை நிலக்கரிகள் நமது மின்சாரத் தேவைக்கு அனல் மின் நிலையத்தை மின் சார உற்பத்தியின் கலயமாக்கி
Image result for ooty trains
 என்றோ சேர்ந்து நிலத்து மேலே சேர்ந்து நிற்கும் நீரே நமக்கு பயன்பாட்டு நீராக‌

என்றோ பண்பட்ட நிலமே நமது உணவுத் தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் பூமியாக மண்ணாக

இப்படி எல்லாவிதத்திலும் இயற்கையிடமிருந்து பெற்றுவிட்டு மனிதம் எல்லா அதமங்களும் செய்யும்போது அக்கினியாய் கதிரவன் தகிக்க நிலத்தில் மரத்தினடியில் ஒதுங்க முடியாமல் நமது கூட்டம் மட்டுமல்ல விலங்கினங்களும் பறவையினங்களும்...
Image result for ooty trains
என்னதான் குளிரூட்டப்பட்ட அறையாய் இருந்தாலும் அன்றைய ஏற்காடு கோடைவிழா நடந்ததே அதற்கு இணையாகுமா இன்று ஏற்காட்டிலும் தீயாய் தகிக்கிற வெப்பம்

ஊட்டி கொடைக்கானலிலும் இந்த கானக வெப்பத்தில் பணம் படைத்த  மனிதர்கள் ஒதுங்கி அடைக்கலம் தேடுவார்களே அதற்கும் வந்தது வேட்டு.... அங்கும் இங்கும் எங்கும் வெப்பக் காடாய்

ஊட்டியின் 20 கி.மீ ரயில் பயணத்துக்கு பெரும் கட்டணம் வசூலிப்பதாகவும் அன்று வெளிநாட்டுப்பயணிகள் நிறைய வருவார்கள் என்றும் செய்தி...
Image result for ooty trains
எனவே குடிநீரும்,பயணமும், உணவும்,  யாவும் பணம் படைத்தவர்களுக்கே என ஆகிவிட்ட நாட்களில் பணத்தின் பின்னே தேர்தல் ஆணையமும் ஓடிக் கொண்டிருக்கிறது மக்கள் பின்னே ஓடமாட்டார்களா என்ன....ஓடாமல் வீட்டில் இருப்போரையும் இந்த வெப்பசலனம் இருக்க விடாமல் யாவற்றையும் அழித்து விட்டார்கள் நாளையப் பற்றி எண்ணாத பாவிகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 6, 2019

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? கவிஞர் தணிகை

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? கவிஞர் தணிகை

Image result for socrates


சுமார் 2450 ஆண்டுகள் முன்பு சாக்ரடீஸ் :ஏதென்ஸ் நகரத்து மக்கள் இடையே 501 பேரில் சாக்ரடீஸுக்கு மரணமா விடுதலையா என்ற வாக்கெடுப்பில் 220 பேர் சாக்ரடீஸை விட்டு விடச் சொல்ல 281 வாக்குகள் அவர் கொல்லப்பட வேண்டும் விஷக்கோப்பை ஏந்தி விஷமருந்தி என்று முடிவு இருந்ததால் தற்கொலையை தாமே ஏற்றுக் கொண்டார் என்பது உலக வரலாறு.

இவரே உலகின் முதல் தத்துவ ஞானி என்றும் இவரை சந்தேகம் கேட்பாரை இவர் கேள்வி மூலமே எதிர் கேள்வி கேட்டு தெளிவு பெறச் செய்து இவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளமே இருந்ததும் செய்திகள்...இவரை தீர்த்துக் கட்டியது மற்ற சில கலைஞர்கள் இவர் மேல் கொண்ட பொறாமையும் வாக்கெடுப்பும்.பகலிலும் விளக்கேந்தி மனிதரைத் தேடுகிறேன் என்பார் என்பதெல்லாம் செய்திகள்

சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை முதலாம் பராந்தக சோழன் ஏற்படுத்திய கிராம சபையின் குடவோலை முறை தங்களது பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய காரணமாக இருந்தது என்று நமது தமிழர் கால வரலாறு சொல்கிறது அது மட்டுமில்லாமல் ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு அதாவது ஓலையில் பேர் எழுதி குடத்தில் போடப்படுவதற்கே தகுதிகள் இவை இவை என்றும், தகுதியற்றவர் இவர் என்றும் சில விதிகள் இருந்ததாகவும் பட்டியல் இருக்கின்றன இந்தக் கல்வெட்டை இப்போதும் உத்திர மேருர் கல்வெட்டு வாயிலாக அறியலாம்.

இப்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எங்கு பார்த்தாலும் அறிவிப்புகள் அப்படி இருக்கும்போது நோட்டா மற்றும் 49 ஓ வும் இருப்பது எதனால்... இது இருந்தால் அது இருக்கக் கூடாது அது இருந்தால் இது இருக்கக்கூடாதல்லவா?

உலகிலேயே மிக முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன்,  போன்ற நாடுகளில் எல்லாம் கூட வாக்குச் சீட்டு முறை இருக்கும்போது இந்திய மாபெரும் உலக ஜனநாயகத்தில் மின் பொருளியல் வாக்கு எந்திரம் வந்து பல தேர்தல் ஆகிவிட்டது.இப்போது அந்த வாக்கு யாருக்கு விழுந்தது என்பதையும் காட்சிப்படுத்திட...

செயற்கைக்கோளை ஏவுகணை வீசி அழிக்கும் நாடுகள் உலகிலேயே  நான்கு மட்டுமே அவற்றில் இந்தியா ஒன்று...ஆனால் குடி நீர் கழிப்பறைகள் கூட குடிமக்களுக்கு இல்லாமல் கிடைக்காமல்...

சுதந்திரமும் குடியரசும் பெற்று சுமார் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் போனபின்னும் இன்னும் வெள்ளை ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுபடவே இல்லை ஒரு வரையறுக்கப்பட்ட இனம் சார்ந்த கனிஷ்கா ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் இந்த படிக்காத மந்திரிமார்களுக்கு சல்யூட் அடிக்க‌

ஆங்கிலம், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கில வைத்தியம், ஆங்கில மொழியறிவு, கோடை விடுமுறை, அவர்கள் என்ன செய்தார்களோ என்ன தந்தார்களோ என்ன என்ன நடைமுறைப்படுத்தினார்களோ அவையே இன்றும் தொடர பேர் மட்டும் இந்திய ஜனநாயகம்...

 காலனி ஆதிக்கம் போய் பணக்காரக் காலனி ஆதிக்கமாகிவிட்டது. உண்மையில் கீழ் தட்டு மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கொண்டு சேர்க்கப்படவே இல்லை...

இந்நிலையில் மத்தியில் தேர்தல் மோடியின் பாரதிய ஜனதாவா காங்கிரஸ் கட்சியின் ராகுலா, மாயவதியா, மமதாவா, அரவிந்த் கெஜ்ரிவாலா மாநிலக்கட்சிகளின் எவற்றுக்கு வாக்களிக்கப் போகிறோம்.

மாநிலத்தில் : அ.இ.அ.தி.மு.க அணியும் திமுக அணியும் அதில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆம்புலன்ஸ் சேவையும், காவல்துறை வாகனங்களும் தேர்தல் பணப்பட்டுவடாவில் ஈடுபடுத்தப்பட எதிர்க்கட்சிகளின் பணப் பட்டுவடாவை மட்டும் சுழன்று சுழற்றி தேர்தல் ஆணையமும் ஆட்சியும் அதிகாரமும் பிடித்து வருவதாக கோடிகளாக தங்கக் கட்டிகளாக புதுக் கருக்கழியா கரன்ஸி நோட்டுகளுமாய்...என எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றிட ஊடகம் அதன் பங்குக்கு ஒருபக்கம் தி.மு.க கூட்டணி வெல்லும், என்றும் மோடிக்கு அறுபது சதத்திற்கும் மேல் மவுசு கூடி விட்டது என்றும் செய்திகளை இடைவிடாமல் சொல்லி வருகின்றன.

 இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்று எப்படி சொல்வது இவர்களுக்கு எல்லாம் வாக்களிக்கக் கூடாதுதான். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால், கமல் போன்றோர்க்கு சீமான் போன்றோர்க்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்ன எப்படி இருந்தாலும் பழைய நுழை நரிகளுக்குப் போடுவதற்கு பதிலாக புதிய முகங்களை அமர்த்துவதும் ஏற்கெனவே பதவியில் இருந்தவரை தூக்கி எறிந்து மறுபடியும் வேறு நபர்களைக் கொண்டுவருவதும்தான் சரியான வாக்களிக்கும் முறையின்  யுக்திகளாய் இருக்க வேண்டும்...எனவே வாக்களிப்பது அப்படி இருந்தால் தான் நல்லது...அப்படித்தான் வாக்களிக்க வேண்டும் அப்படி நடக்குமா மக்கள் செய்வார்களா?

இங்கு தான் குற்றவாளிகளின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கத் தயாராகி இருக்கிறார்களே...இந்தியாவின் ஒரு சதவீத மக்களிடம் எழுபத்து மூன்று விழுக்காடு செல்வ வளம் குவிந்திருக்கிற ஒரு நாட்டில் ஏழை தம் பணத்தை வங்கியில் போட்டு எடுக்க விடாது  எடுக்க முடியாது பணம்படைத்த முதலைகளுக்கு அது வாராக் கடனாய் பயன்பட வேண்டும் என இருக்கிற நாட்டில் அதைப்பற்றி அரசு எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியா நாட்டில்
Related image
சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த காட்டுமிராண்டிகளை விடக் கேவல
மான குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கும் பதிலாக ஆயுள் தண்டனை என உயர்நீதிமன்றங்கள் நீதி செய்து வருகிற நாட்டில்...

ஆள் ஆளுக்கு சட்டமும் நீதியும் மாறிக் கொண்டிருக்க‌

இங்கு நாம் நினைப்பதற்கா இவர்கள் வாக்களிப்பர், எல்லாம் சாக்ரடீஸ் கதைதான் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆன போதும்...நியாயம் நீதி நேர்மை எல்லாம் வெல்லப்போவதில்லை...
Image result for to whom u r going to vote
மாறுபட்ட சிந்தனை இருந்தாலே அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனித சமுதாயம் கலிலியோவை  ஆயுள் சிறை வைத்ததும், கோபர்நிகஸ் நாவைத் துண்டாடியதும்...சரித்திரம் எப்போதுமே மூடத்தனம் செய்வாரையே விரும்புகிறது நல் அறிஞரை ஏற்றுக்கொள்வதே இல்லை...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Wednesday, April 3, 2019

நரகம் என்பது வேறல்ல அரக்கன் என்பவர் வேறு யாருமல்ல: கவிஞர் தணிகை

நரகம் என்பது வேறல்ல அரக்கன் என்பவர் வேறு யாருமல்ல: கவிஞர் தணிகை

Related image

நரகம் என்பது வேறல்ல பூமிதான் பூமியில்தான், அரக்கன் என்பவர் வேறு எவருமல்ல இந்த மனிதர்கள் தாம்.

7 வயது சிறுமியை இரு முறை வன்புணர்ச்சி செய்த பின் அவர் அதை வெளியே சொல்லாமல் இருந்ததால் 3 ஆம் முறை  அவரைத் தூக்கிச் சென்று வன்புணர்ச்சி செய்யும்போது அவர் கத்தியதால் சத்தம் வெளிவராதிருக்க, செய்தி வெளித்தெரியாமல் போக அடித்துக் கொன்றேன் அந்த சிறுமியின் பிணத்தை வீட்டில் வைத்துவிட்டு பாட்டியின் சவ நிகழ்ச்சியையும் நடத்தி முடித்தேன் என்றிருக்கிறார் கோவை சார்ந்த ஒரு பெயர் குறிப்பிட அசிங்கமான ஒரு கட்சி சார்ந்த ஒரு அரக்க மிருகம்.

தேனியில் 10 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 3 மிருகங்களுக்கு தூக்கு தண்டனை என்றிருந்ததை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை என்று மாற்றி உள்ளதாக இன்றைய செய்தி...

டில்லியில் நிர்பயா வழக்கு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற இலண்டன் மருத்துவமனைக்கு கூட விமானம் பறந்தது...

காஷ்மீரில் அசீபா பானு என்ற 8 வயது கால்நடை மேய்க்கும் சிறுமிக்கு நேர்ந்த கதி பற்றி எல்லாம் உலகே பேசியது ஆனால் தேனி, தர்மபுரி, கோவை என்றால் அது பெரிதாக அலை எழுப்புவதில்லையே ஏன்? ஊடகங்கள் கவனிக்க வேண்டும் இது பற்றி எல்லாம்.
Image result for coimbatore 7 year old rape case
கழிப்பறைகள் போதுமான அளவில் இல்லா நாடு உலகின் 4 ஆம் நாடாக துணைச் செயற்கைக் கோள்களை ஏவுகணை வீசி அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்க‌

குடிக்க நீர் கிடைக்கா நிலையில் எல்லார் கையிலும் செல்பேசிகள் இருக்க‌

ரயில்வே இருப்புப் பாதை நெடுக எங்கும் எங்கும் எங்கெங்கும் இன்னும் துர்நாற்றம் இல்லா மனிதக் கழிவு இல்லா நிலையே இல்லா நிலையில் வாக்கு எந்திரத்தின் வழியே வாக்குப்பதிவு

சாதாரண மனிதர்க்கும் ஏழை எளியவர்க்கும் தம்முடைய காசையே வங்கியில் இருந்து எடுக்க ஆயிரம் சட்ட திட்டங்கள் வரைமுறைகள் ஆனால் டிஜிட்டல் மனி, அக்கவுண்ட்ஸ் ட்ரான்ஸ்வர், நெவ்ட், ஆர்டிஜிஎஸ் என்ற சேவை எல்லாம் இருக்க இந்த மாபெரும் மனிதர்கள் எப்படி இவ்வளவு கருக்கழியா புது நோட்டுகளில் புரள்கிறார்கள்...
Image result for coimbatore 7 year old rape case
இந்த நாட்டின் ஒரு சதவீத மக்களிடம் மொத்தமாக 73 சதவீத சொத்து உள்ளடங்கிக் கிடப்பதாக ஆதாரபூர்வமான செய்தியும் விவாதமும் வெட்டவெளிச்சத்தில்.

 அந்த ஒரு சதவீதத்தைக் கண்டறிந்து மிக எளிதாக அதை நாடெங்கும் விநியகம் செய்ய முடியாததா என்ன... நீரவ் மோடியும், விஜய்மல்லையாவும் லலித் மோடியும் இதே போல எத்தனை மோடிகள் ஏழைகளின் நாயகர்கள் எனச் சொல்லியபடியே அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் ஸ்டெரிலைட் முதலாளிகளுக்கும் ஏவல் நாய்களாக....

இங்கொருவர் துணைவியின் தாலியை வைத்துதான் தேர்தலில் நிற்பதாக நின்று மக்கள் காலடியில் வேண்டி வென்று, அதன் பின் மந்திரியாகி, சபாநாயகராகி வெறும் எம்.எல்.ஏ ஆகி ஒரு கூட்டத்தில் ஒரு  நபர் எட்டு வழிச்சாலை தடுப்பது பற்றி பேசினீர்களே, விவசாயிபக்கம் நிற்பதாக எல்லாம் சொன்னீர்களே என்ற ஒரு நபரை வாய் மீதே அடித்து துர்த்துகிறார்.

சேவை வழியில் வளர்வதாக இருந்தால் மிகவும் கால தாமதம் ஏற்படுமே...ஏன் எங்களைப்போல அடையாளம் தெரியாமல் கூட போய்விடலாமே... எனவே உடனடியாக முன்னேற வேண்டுமெனில் தாயுடன் உறவு கொள்வது போல என்று பேசினாலும் அதன் பின் உறவு கொள்வது அவசியம்தானே....மேலும் பல நூறுகோடிகள் கைமாறி இருப்பதாக செய்தி வருகிறதே என்றால் அந்த அடிப்படைத் தொண்டர்களே  எங்கே ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்களே...

அதாவது இவர்கள் ஆதாரம் வைத்துக் கொண்டு பணப்பரிவர்த்தனை செய்து கொள்வார்களா இந்த அடிப்படை கூடவா தெரியமல் இவர்கள் இருப்பார்கள்..

 ஒரு மந்திரி அங்க வாங்க பார்க்கலாம் என ஒரு வேலைக்காரப் பெண்ணின் அம்மாவிடம் சொன்னதும், பொள்ளாச்சி விவகாரம் சிரிப்பாய் சிரித்து அடங்க மறுப்பதுமாய்....

ஒரு பொதுக்கழிப்பறையைக் கூட தூய்மையாக வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கிற நாடு இது நரகமல்லாமல் வேறென்ன....இங்கு தேர்தலில் நிற்பவர் யாவருமே குற்றவாளிகளாகவே இருக்க‌

குற்றவாளிகளின் ஆட்சியில் மக்கள் எல்லாம் குற்றவாளிகளாகவே இருப்பார்கள்... குற்றவாளிகளாய் இருக்கும் மக்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் குற்றவாளிகளாகத்தானே இருக்க முடியும்...

இந்தியா எச்சரிக்கயுடன்  பயணம் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது....
Image result for asifa banu
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.