Sunday, December 31, 2017

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல்?!... கவிஞர் தணிகை

 ஆன்மீக அரசியல்?!... கவிஞர் தணிகை

https://youtu.be/Zr6NCKPyu-E

https://www.youtube.com/watch?v=Zr6NCKPyu-E


Image result for rajinikanth speech on 31 march 2017

ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால் தொடர்பு படுத்தி ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட் சொல்லி இருக்கிறார். நன்று.ஆனால் அபிராம பட்டர் தமது அபிராமி அந்தாதியில் 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழச் சொல்லும் வாழ்த்தில் கோணாத கோலும் என்ற ஒரு செல்வத்தை சொல்லி இருக்கிறார். அது வளையாத நேர்மையான ஆட்சி என்ற பொருள் படும்.

அதையே ரஜினிகாந்த்

 உண்மையான ஆட்சி, நேர்மையான ஆட்சி, நாணயமான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி, சாதி சமயமற்ற ஆட்சி என்று

  கூறி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று இன்று நெடுநாளைய கேள்விக்கு பதில் சொல்லி முடிவு கட்டி விட்டார். ஒவ்வொரு தனிமனிதருக்குமே அரசியல் ஈடுபாடு இருக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அவரவர் தனிப்பட்ட சொந்த வாழ்வில் அரசியல் பங்கீடு இருந்தேதான் ஆகிறது. அதை எல்லாம் உணராமல் மாக்களாக இருந்து மடிந்து போவார் தவிர மற்ற அனைவருமே இந்த தாக்கத்திலிருந்து தப்பித்து விட முடியாது. அல்லது அவர் ஒரு ஆன்மீக வாதியாக இருந்தால் இது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியிருக்காது. ஆனாலும் அவர்களுமே கூட மக்கள் நல்வாழ்வில் ஆட்சி புரியும் நல்ல ஆட்சியாளர்களை சந்தித்து குருவாக விளங்கியதுமுண்டு.

ஆனால் இங்கு ஆன்மீகமும் அரசியலும் இணைப்பதாகச் சொல்லி இருக்கிறார் காவலர்கள் வேண்டும் என்றும்...அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைத்தால் அந்தக் காவலர்கள் மக்களுக்கு எல்லாத் திட்டங்களும் சென்றடைய வைப்பார்கள் என்றும், தட்டிக் கேட்கும் இந்தக் காவலர்களை கண்காணிக்கும் ஆள் தான் நான் என்றும் அந்த ஆட்சி சரியில்லை என்றால்  3 ஆண்டுகளில் வெளியேறிவிடுவதாகவும் சூளுரைத்திருக்கிறார்.

இவர் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது பெரிதாக ஏதும் செய்யவில்லை, இலங்கைத் தமிழர் கொலையுண்டபோது என்ன செய்தார் என சீமான் கேட்பது போல குரல் கொடுக்கவில்லை, அன்புமணி ராமதாஸ் எம்.பி சொல்வது போல காவிரி நீர் மேலாண்மை பற்றி குரல் கொடுப்பாரா என்று கேட்பது போல குரலும் கொடுக்கவில்லை.

இப்போதும் கூட தமது இரசிகர் மன்றத்தின் இரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். தமது இரசிகர் மன்றத்தை பதிவு பெற்றவற்றுடன் பதிவு செய்யாதவற்றை பதிவு செய்து இணைக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதுதான் நமது கொள்கை,  உண்மை, உழைப்பு, உயர்வு என்ற மந்திரம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

மகாத்மா காந்தியின் சத்யாகிரக இயக்கமே இதில் வெற்றி பெறவில்லை.காந்தியை மீறி வன்முறை வெடித்தது இந்திய சுதந்திரப்போரில்.

ஒவ்வொரு தனிமனிதருக்குமே அரசியல் பொறுப்பு உண்டுதான். ஆனால் ரஜினிகாந்த் சினிமா பிரபலத்தை , அந்த லைம்லைட்டை, விளம்பரத்தை மூலதனமாக்கி அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நிகழ்ந்தது இவருக்கு நிகழுமா என்பது கேள்விக்குறிதான்.

வரக்கூடாது என்பதெல்லாம் இல்லை. வரலாம் ஆனாலும் இவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் என்போன்ற மக்கள் பணியாளரின் கருத்து.

இந்த நாட்டில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் கவ்வி, ஸ்டைல் செய்து, தமக்கு டான்ஸ் ஆடத் தெரியாததையும், சோகத்தில் நடிக்கத் தெரியாததையும் மறைக்க காட்சிகள் வைக்கச் செய்ததை அதை வீரம் என்று நம்பிய‌ இரசிகர்கள் கூட்டம் இன்று இவரை நாடாள வர கேட்டுக் கொண்டுள்ளது. இவர் எப்போதுமே இவரது படங்கள் வெளியிடத் தயாராக இருக்கும்போதெல்லாம் இதே போன்றுதான் பேத்தல் நடத்துவார் தம் படங்கள் ஓடுவதற்காக என்றும் அது போல இதுவும் இருந்து விடக் கூடாது என்றும் முணுமுணுப்புகள் கேட்காமல் இல்லை.

இவர் தமது சினிமா வாய்ப்புகளையே தக்கவைக்க ஆன்மீகம் உதவியது. ஒரு கட்டத்தில் மனநிலை குழம்பி இவர் சிதைந்து கொண்டிருந்த நேரத்தில் கை தூக்கி விட்ட தியானமும் ஆன்மீகமும் பெரிதும் உதவியது ஆனால் அதே ஆன்மீகம் இவரை அரசியலில் போற்றப்பட வேண்டியவராக மாற்றுமா என வரும் நாட்கள் சொல்லி விடும்.

இவருக்கு சிஸ்டம் மாற்ற எல்லாம் எந்த பயிற்சியுமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Related image


மிக நல்ல மாந்தர்களை எல்லாம் செத்துப் போனால், செத்துப் போன பின்னால்தான் அங்கீகரிக்கும் இந்த நாடு...பாரதிக்கு இறந்த பின் சிலை, காந்தி சுடப்பட்ட பின் பெரும் புகழ், இன்குலாப் போன்ற கவிஞர்க்கு இறந்த பின்னேதாம் சாஹித்ய அகாடமி விருது, சசிபெருமாள் செத்த பின் தாம் மதுவிலக்குப் போர் கோவன் பாடல் மூலம் எழுச்சி பெற்று இன்று மதுவிலக்குக்கு ஆதரவு...

இப்படி எம் போன்ற உழைப்பாளர்கள், உண்மையாளர்களுக்கு எல்லாமே இறந்து இல்லாமல் போனால்தாம் பெரிதும் போற்றப்பட்டு பேசப்படுகிறார்கள் அங்கீகாரம் பெறுகிறார்கள்.

ஆனால் கருணாநிதிக்கும், ஜெவுக்கும் இருக்கும்போதே சிலை வைத்து விடுகிறார்கள். அப்துல்கலாம் போன்றோர் மேலும் சேவை செய்ய நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் அரசியல் நிலைப்பாட்டை வைத்து தடுத்து விட முடிந்திருக்கிறது...மேலும் பிரதமர், முதல்வர்கள் ஆகியோரைக் கூட வாக்கு வங்கி அரசியல் மூலம் தடுத்து விட முடிந்து இருக்கிறது.

இன்று இராதாகிருஷ்ணன் நகர் தேர்தலும், ஜெ வின் வெற்றிடமும் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி காலம் கனியவைத்திருக்கிறது. தகுதியான மனிதர்களை எல்லாம் விட்டு விட்டு, தகுதிகளை வளர்த்துக் கொள்ளாத மனிதர்கள் பின் கூட்டம் திரள ஆரம்பித்து விடுகிறது. இது தமிழகத்தின் தலைவிதி. அது எம்.ஜீ.ஆர், கலைஞர், ஜெ இப்படி இவர்கள் எல்லாம் வந்த கதை.

ரஜினி வரட்டும் கமல் வரட்டும், ஏன் விஜய் கூட வரட்டும் வாக்குகள் எல்லாம் பிரிந்து சிதறட்டும், தமிழகத்தின் தலைவிதி தலைவிரி கோலமாக மாறட்டும். அதன் பின்னாவது ஒரு நிலைத்த அரசியல் புரிதல்கள் நிகழட்டும் என் போன்ற சேவையாளர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனத்தெரியவரட்டும் அதுவரை காலத்தின் பயணம் இதே போன்று தொடரட்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வெளிப்படைத்தன்மை , புதிய சீரமைப்பு என்ற நிலைப்பாட்டில் ப்ரஸ்த்ராய்க்கோ,கிளாஸ்நாத் என்ற கொள்கையில் கோர்பச்சேவ் நோபெல்பெற்ற ரசிய ஆட்சியாளரே வீழ்ந்த கதை எல்லாம் உலகில் உண்டு. இவர் எவ்வளவு வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பார் என லாஸ் வேகாஸ் சூதாட்ட கிளப்களும், கட்டிய பல்வரிசை செட்டிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் அதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நல்லாட்சி தந்தால் எமக்கெல்லாம் மகிழ்ச்சி. யோவ் முதல்ல சிகரெட், மது இதிலிருந்து வெளியே வாங்கப்பா... ஊடகங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் ஏன் எனின் அவைதாம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் பலூனாக ஊதிபுடைக்க வைப்பதே...நல்லதுக்கெல்லாம் ஒரு சிறு பெட்டியளவு கூட ஒதுக்காமல் இது போன்றவைக்கெல்லாம் நாளெல்லாம் முழுப்பக்கமெல்லாம் ஒதுக்குவதுதான் அவற்றில் வியாபார உத்தி.

Saturday, December 30, 2017

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை
Image result for kalavaadiya pozhuthugal


தீரன், அருவி, வேலைக்காரன் போன்று விறுவிறுப்பு இல்லை என்று இரசிகர்கள் பார்க்காமல் விட்டு விடாதீர்கள். தங்கர் பச்சான் போன்ற ஒளி ஓவியர்களை அவசியம் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காகவாவது இது போன்ற படத்தை நாம் பார்த்து பரிமாறிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு கதை பின்னால் ஒளிந்திருக்கும். அதை எல்லாம் மறந்து விட்டும் மறந்து விடாமலும் தாம் வாழ்வை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். அதை ஒரு அழகிய கவிதையாக நமக்கு உண்மையும் கற்பனையும் கலந்து உண்மையான கலைஞராக நின்று வழங்கி இருக்கிறார் தங்கர் பச்சான்.

இது போன்ற படங்களில் ஒரு வேகம் இருக்காது என்றாலும் பார்க்கும்படியாகவே இருக்கும் ஆனால் இது போன்ற படங்களைப் பார்க்க நமது இளந்தலைமுறைக்கு ஆர்வமும் பொறுமையும் இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது.

சத்யஜித் ரே, மூன்றாம் பிறை தந்த பாலு மகேந்திரா, மகேந்திரன் போல இந்த தங்கர் பச்சானின் படமும் ஒரு தனிப்பட்ட ரசனையோடு பார்க்க வேண்டியிருக்கும். இவரின் பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி போன்ற படங்களின் தொடர்ச்சியாக இந்த படத்தையும் சொல்லலாம்Related image



அந்த படங்களில் எல்லாம் அவ்வப்போது ஒரு திருப்பு முனை நிகழ்ந்து படத்தை வேறுபட்ட தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கும் ஆனால் இதில் காதல். மிகவும் சாதுர்யமாக கம்பி மேல் நடப்பது போல அழகாக கையாள வேண்டிய கருப்பொருள். அதை அழகாக செய்து வெற்றி பெற்றிருக்கிறார் தங்கர்.

மிகையாகப் போனாலும் பாலுணர்வை சொல்வது போன்றதாகிவிடும், குறைவாகவும் சொல்ல முடியாது மிகவும் அருமையாக பிரபு தேவா, பூமிகா அடித்துள்ளனர் அவர்கள் தோள் மேல்தான் எல்லா பொறுப்பும். பிரகாஷ்ராஜ்க்கு எப்போதும்போல் ஒரு ஜென்டிலான கேரக்டர்.சத்யன் வழக்கம் போல் அதிகம் வராமலே படத்தின் முக்கியமான கட்டத்தில் படத்தின் முடிச்சை அவிழ்த்து கணவனான பிரகாஷ்ராஜ்க்கு அதாவது சௌந்தர்ராஜனுக்கு மனைவியான பூமிகா ஜெயந்தி ஏற்கெனவே பொற்செழியன் பிரபு தேவாவின் காதலிதான் என்று வெளிப்படுத்தி விடுகிறார்.

ஜெயந்தி இருக்கிறாளா, இறந்து விட்டாளா என நமக்குத் தெரியாதது போல பொற்செழியனும் தெரியாமலே செல்பேசியின் சிம் கார்டையும் கிழித்து போனையும் வீசி எறிந்து விட்டு பயணத்தை மேற்கொள்கிறார்.
Related image


இரண்டு காதலர்களின் ஊசலாட்டத்தை அகடு முகடாக மாற்றி மாற்றி அழகு படுத்தி உண்மையான அலைபாய்தலை சில காட்சிகளால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று கட்டுப் பாட்டுடன் இருக்கும் பொற்செழியன் திடீரென தமது காரை ஜெயந்தி செல்லும் காரை சென்று மறித்து அவளை தனது காரில் ஏறச் சொல்லி அவளது லக்கேஜ்களை எடுத்து வரும்போதும்,

பின்னால் அமர்ந்தே பயணம் செய்யும் ஜெயந்தி ஒரு கட்டத்தில் தாமாகவே வந்து முன் இருக்கையில் அமர்ந்து வருவதும் இப்படி சில இடங்களில்...

கடைசியில் இருவருமே கட்டு மீறிப் போய்விடுவோமோ என்று பிரிந்து சென்றாகவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். வாழ்வது மிகவும் கடுமையாக கொடுமையாக இருப்பதும், நான் செத்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா ஜெயந்தி என பொற்செழியன் சொல்வதும் படத்தை நமக்கு உணர்த்தும் சொல்லாக...
Related image



ஏண்டாப்பா இந்த சௌந்தரைக் காப்பாற்றினோம் என ஜெயந்தியைப் பார்த்து துடிப்பதும் நடிப்பதுமாக நல்ல மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரபு தேவா நன்றாக செய்திருக்கிறார்.

நல்ல கதை எல்லார் வாழ்விலும் ஜீரணித்தும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும் கதையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர். கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் பெரியாரிசம், என ஜீவா, பெரியார் எல்லாம்மேடையேற்றி எப்போதும் போல தமது கூத்துப் பட்டறைக் காட்சியையும் கொண்டு வந்திருக்கிறார்.

மக்கள் எல்லம் ஆட்டம் பாட்டம் என ஒவ்வொரு வீட்டையும் தியேட்டராக மாற்றி தொலைக்காட்சி அடிமைகளாக மாறிவிட்டதையும், மது அடிமையாக நாடு மாறி வருவதையும் சொல்ல முயன்றிருக்கிறார்.

கதையின் ஆழத்தில் இந்தப் பிரச்சாரம் எல்லாம் மிகவும் லைட்டாகவே இருக்கிறது... சத்யராஜின் பெரியார் வசனங்கள் மிகவும் செயற்கையாக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க இந்த கஸ்ட் ரோலில் சத்யராஜ்...மிகையான நடிப்பில் சொதப்பல்.

மற்றபடி பார்க்க வேண்டிய படம். உணர வேண்டிய படம். எல்லம் கடந்து வந்த பாதை தானே....ஒரு கவிதை.
களவாடிய பொழுதுகள் நல்ல தலைப்பு. நூற்றுக்கு 50 மதிப்பெண் நமது மதிப்பீடாக.
Related image



பாக்யராஜின்  அந்த 7 நாட்கள் வேறு மாதிரி இருக்க இது முற்றிலும் காதல், திருமணத்துக்கும் பின் இருவரின் சந்திப்பு அதனால் கெடாத கெடுத்துக் கொள்ள முடியாத நெருப்பின் முனையாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
P.S:
இருவரும் முகநூலில் நண்பர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மேட்டூரில் எனக்குத் தெரிந்த இடத்துக்கு வரும் நாளில் வருக சந்திக்கலாம் என்று சொல்லியும் அன்று என்னால் போக முடியாததற்காக இன்னும் வருந்தியபடியே இருக்கிறேன். சாரி தங்கர் பச்சான்.

Friday, December 29, 2017

எனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍ ...கவிஞர் தணிகை.

எனக்குப் பிடித்த ஐந்து:‍‍‍

காற்று

இடத்தின் பேரை எழுதிச் செல்கிறது
வாசத்தால்
Related image
ஜீவன் ஓடிக் கொண்டிருக்கிறது
சுவாசத்தால்..

நீரின் ஒவ்வொரு துளியும் அமுதம்
அளவின்றி பிரளயமானால்
அதுவும்
எதுவும்
விஷம்


Image result for water from air


வடுவற்ற நிலம்
வஞ்சியின் முகமாக‌
காயம்படாத இதழாக‌

Related image


தீயின் தாகம்
தீராத பசியின் மோகம்

Image result for fire land

சொல்ல முடியாது சொல்லில்
விண்ணின் வியாபகம்...

  ...கவிஞர் தணிகை.


Image result for sky

Tuesday, December 26, 2017

தேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் முறையும் கொண்டு வர இதுவே நல்ல தருணம்.: கவிஞர் தணிகை

தேர்தல் சீர்திருத்தம் செய்யவும் திரும்ப அழைக்கும் முறையும் கொண்டு வர இதுவே நல்ல தருணம்.: கவிஞர் தணிகை

Image result for election reformation in india


சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே தேர்தல் வாக்குகளுக்காக ஒரு வாக்குக்கு ஒரு ரூபாயை புதிய நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து வரிசையாக கீழ்த் தட்டு மக்களுக்கு கொடுத்ததை நான் பார்த்தபோது எனது வயது 5 இருக்கும்.

எனவே தினகரன் சுயேட்சை வேட்பாளர், குக்கரில் வெந்து போன இரட்டை இலை, தாமரைப்பூ, வெளிச்சமில்லா சூரியன், வாழைப்பழத்துள் நோட்டுகள், டோக்கன்ன் சிஸ்டம், இருபது ரூபாய்க்கு இன்னும் வர வேண்டிய பத்தாயிரம் இன்னும் வராததால் வாக்களித்தவர்கள் கொடுப்பதாக வாக்களித்தவர் வீட்டு முன் முற்றுகை, ராதாகிருஷ்ணன் நகர், மத்திய அரசு, மாநில அரசு, கட்சி...தேர்தல் ஆணையம் இது பற்றி எல்லாம் எழுதியும், மக்கள் நாணயமின்றி இருந்தால் தேர்தலும், ஆட்சியும் நாணயமின்றித்தான் இருக்கும் என்பது பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியமில்லை.

மேலும் எந்திரத்தில் ஓட்டு அளிக்கும் முறையிருக்கும் வரை பாரதிய ஜனதாவை வீழ்த்த வழியில்லை, ஏன் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவே அப்படித்தான் வென்றிருக்கும் எனச் சொல்லிக் கொண்டிருப்போர் யூகங்கள், சந்தேகங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தேர்தல் முறைகளில் ஒரு வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்.


தேர்தலில் வெல்லும் வாக்காளர்கள் சரியில்லை என பெரும்பான்மையான வாக்களர்கள் கருதி திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்த நேர்கையில் அவர்கள் பதவி பறிக்கப்பட்டே ஆக வேண்டும்.

தேர்தல் ஆணையம் அல்லது அரசே தேர்தல் செலவை ஏற்க வேண்டும். வேட்பாளர்களோ கட்சிகளோ தேர்தலுக்கு எந்தவகையிலும் தேர்தல் செலவை ஏற்க செய்ய விடக் கூடாது.

இனியும் சின்னம், அதற்குத்தான் மதிப்பு என்ற கோட்பாடு இனியும் தேவைப்படாத ஒன்றாக மாறிவிட்டதால், கட்சி, வேட்பாளர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கும் தேர்தல் எந்திரம் அல்லது வாக்களிக்கும் அச்சிடப்பட்ட பேப்பர் பயன்படுத்தப் பட வேண்டும்.
Image result for election reformation in india

மேலும் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார முறைகளில் அதன் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு கூட்டாட்சி தத்துவம் வர வழி வகை செய்ய வேண்டும்.

இதை எல்லாம் செய்தாக வேண்டிய கட்டத்தில் இந்தியத் தேர்தல் முறைகள் வராவிட்டால் தேர்தல் நடத்துவது என்பதெல்லாம் விரயம். பயனில்லா பெரும் விரயம்.

தேர்தலும் வாக்களிப்பதும் இது போன்ற ஜனநாயக முறைகளும் கேலிக்கூத்து என பெரியார் கொள்கைகளும் சில கட்சிகளும் கொள்கையாக கொண்டு செயல்பாடுகளை நடத்தி வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.

இலஞ்சம், ஊழல், என்ற சுரண்டல் வர்க்கத்தின் கொள்கை, முதலாளித்துவ சார்பான நிலைபாடு, தனியார் மயம், தாராளமயம், உலக மயம் போன்ற மேலை நாட்டு மேற்கத்திய நாடுகளின் வழிமுறை செயல்பாடுகளில் நாடு நடப்பதும் மதவாதம், அறக்கட்டளைகள், சாமியார்களின் பிடிகள்  இதில் இருந்து எல்லாம் வெளியேறி மக்களுக்கான அரசாக மாற வேண்டும் எனில்

வேறு வழியே இல்லை...இது போன்ற தேர்தல் முறைகள் இலஞ்சம் உள்ளளவும் முறைகேடாகவே இருக்கும். கடல் உள்ளளவும் உப்பு இருக்கும் என்பது போல...

அடிப்படையான இந்த நிலையை சரி செய்யாமல் வெறும் தேர்தல் நடத்தி அதில் வெற்றி தோல்வி, தலைமை அமைச்சரவை, ஆட்சி என்பதெல்லாம் ஏமாற்று வேலைகளே.


 நாடெங்கும் ஒரே காலக்கட்டத்தில் பாராளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி தேர்தல்கள் எல்லாம் ஒருசேர நடத்தப்பட வேண்டும். எம்.எல்.ஏ, எம்.பி., மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம், சலுகைகள், ஓய்வுதியம் எல்லாம் கொடுக்கப்படக் கூடாது...Related image


தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய நாடு முழுதுமே தேர்தல் மாறுதல்களும், சீர் திருத்தங்களும், தொகுதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, சாதிய ஒதுக்கீடு, போன்ற அனைத்து வகையான ரிசர்வேசன் பற்றி எல்லாம் கூட மறு பரிசீலனை செய்வதற்குண்டான நேரம் இதுவே....இனியும் தேர்தல் ஆணையம் இதைப்பற்றி எல்லாம் நெறிப்படுத்தக் கொள்ள வில்லை எனில் ....ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் என குடியரசுத் தலைவரைச் சொல்வது போல இதையும் சொல்வதில் தவறு இல்லை.

 இத்தனை படை பரிவாரத்தை எல்லாம் வைத்துக் கொண்டு, இராணுவம், காவல்துறை, அரசு அலுவலர்கள், ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆகியோரை வைத்துக் கொண்டு  ஒரு தொகுதியில் நடந்த தேர்தலையே நடத்த முடியாத அரசாங்கம் எல்லாம் என்ன அரசாங்கம்? மத்திய அரசு, மாநில அரசு யாவுமே ஆள அருகதை இல்லை என ஆட்சிக் கட்டில் இருந்து கீழ் இறங்க வேண்டும் அதுவே நேர்மை. நேர்மையான ஆட்சி பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல் நன்றாக தேர்தல் நடப்பு , பணப் பட்டுவடா எல்லாம் தெரிந்தே இந்த தேர்தலை நடத்தி இருப்பது உள் நோக்கம் கொண்டது. அதிலும் தி.மு.க இரண்டாம் அலைக்கற்றை வழக்கில் அனைவரையும் அதே நாளில் விடுவித்து சமரசம் செய்து கொண்டதும், அவர்களும் அரசியலில் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும், பிரபாகரன் இலங்கையில் கொல்லப்படும் நாள் தேர்தல் நாள் வரை நடக்காமல் இருக்கட்டும் என காங்கிரஸ் தி.மு.க கூட்டு நீடிக்கட்டும் என இருந்தது போல நாம் வழக்கிலிருந்து விடுதலை பெற்றால் போதும், மேலும் நம் மேல் வருமான வரி வழக்குகளும் சோதனைகளும் இல்லாமல் இருந்தால் போதும் என்று சமாதானமாகி மக்களை எமாற்றிக் கொண்டிருக்க இந்த மடமையான மக்கள் துணித்துவிட்டார்கள் வாக்குக்கு மதிப்பு இருபதாயிரம் பெறும்வரை... வாக்கு ஜனநாயகம் எல்லாம் துப்பாக்கியின் பின் அசைவு போல ஜனநாயகத்தை வந்து தாக்கி விட்டது.

மறுபடியும் பூக்கும் வரை.

கவிஞர் தணிகை.





Sunday, December 24, 2017

வேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை

வேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை
Image result for velaikkaran full movie wikipedia


தினகரனின் குக்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்புகள் வந்திருக்கும் ஊடகங்களின் செய்திகளின் ஊடாக இந்த சினிமா பற்றி ஏன் எழுதுகிறேன் எனில் இது என்னதான் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நுகர்வோர் விழிப்புணர்வை தந்திருப்பதாலும், நுகர்வோர் என்போர் நாம் தான் பல் வேறு களங்களில் தொழில் முனைகளில் பணி செய்யும் வேலை செய்வோராகிய நாம் தாம் என்று கொலைகாரன் பேட்டை அல்லது கூலிக்காரன் பேட்டையிலிருது வித்தியாசமாக கதை நகர ஆரம்பிக்கிறது.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து, வாக்குகள் பணத்துக்காக விற்கப்படும் என்ற ஒரு இந்திய நாட்டில் இலஞ்ச ஊழல் இலாவண்யங்கள் செய்யும் அரசுகள் இருக்கும் வரை இந்த வாக்குகளுக்கு பணம் பெறுவதும் இருக்கும் இதில் தவறு ஏதுமில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதை இந்த இடைத்தேர்தல் காண்பித்து விட்டது. மேலும் வாக்குகளுக்கு இவ்வளவு பணப் பரிமாற்றம் நடப்பது தெரிந்திருந்தும் இந்த தேர்தலை நடத்தி முடித்திருப்பது எவ்வளவு கேவலமான செயல் இந்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகள் என்பதும் எல்லாம் அசை போட வேண்டிய விஷயங்கள்.

சிவ கார்த்திகேயன் போடி அப்பன் சொன்னான் ஆட்டுக்குட்டி சொன்னான் என பேசித் திரிந்தவர்க்கு ஒரு நல்ல மெச்சூர்டான கேரக்டர். பாராட்டலாம். அமைச்சூராக கம்யூனிட்டி ரேடியோ என்று சொல்லித் திரிந்தவர் வேலை என்று கார்ப்ரேட் கம்பெனிக்கு அடிமையாகிறார். அதன் பின் பிரகாஷ் ராஜ் என்ற கசாப்புக்கடைக்கார போதிமரத்திடம் ஞானம் பெற்று வேலைக்காரர் என்று சொல்லப்படும் நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஊட்டப் போராடுகிறார்.

ஸ்னேகா நல்ல நடிகை என நீண்ட நாள் கழித்து மறுபடியும் நிரூபத்திருக்கிறார். அதிபன் மாதவ் என ஆதி என்றும் ஃபாஹத் பாசில் என்னும்  நடிகர் தனி ஒருவன் அரவிந்த் சாமியை நினைவூட்டி இருக்கிறார். மிகவும் நல்ல இயல்பான போட்டி நெகடிவ்வான கேரக்டரில் நல்ல நடிப்பு. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

Related image

அவர் சூபர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர் பற்றி சொல்வது எல்லாம் மிகவும் அற்புதம். இதுபோன்ற தூண்டல்களுக்கு எல்லாம் அடி பணிந்து விடுவார் ஆனால் நான் இன்னும் ரிலையன்ஸ் போன்ற சேலத்து மால் களுக்கு செல்லும் போதும் எனக்குத் தேவையான வேறு எங்கும் எளிதில் கிடைக்காத டாட்டா சோடியம் சால்ட் போன்ற எனக்குத் தேவயான பொருட்களை மட்டுமே வாங்கி வருவேன் என்பது எனக்கு நானே அளித்துக் கொள்ளும் சான்று. இந்தப் படத்தின் மூலம் எனக்கு நினைவில் தோன்றியது.

நிறைய நடிகர்கள் கூட்டம். 40 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளார்கள். சவ்வரான் என்ற கம்பெனி என்ற நுகர்வோர் பொருளை மையமாக வைத்து. நயந்தாரா, இராமைய்யா , ரோகினி, சார்லி போன்றோர் அளவாக தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ரோகினி நன்றாக செய்திருக்கிறார்

உண்மையாகவே மோகன் ராஜா என்பவர் இயக்கி எழுதி இருக்கிறார். அதை நாம் அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். சுபா பாஸ்கரன் என்ற இருவருக்கும் அந்தக் கதை உண்டு பண்ணியதில் உதவியிருக்கிறார்.

நல்ல கதை அமைப்பு. நல்ல தயாரிப்பு, நல்ல திட்டமிட்ட சோடை போகாத நல்ல மக்களுக்குத் தேவையான கருத்தை வியாபார நோக்கத்திலும் கூட சொல்லி வென்றிருக்கிறார்கள்.

Related image

உலகத்தின் மாபெரும் சொல் செயல்
நல்ல வார்த்தை.

Image result for sakka podu podu raja

அடுத்து சக்கை போடு போடு இராஜா சந்தாவுக்கு ஒரு படம் அவ்வளவுதான். எதற்கு இவ்வளவு செலவு செய்து ஒரு லௌக்யா என்ற படம் அது தெலுங்கு படத்தை ரீ மேக் செய்ய வேண்டிய புதிய கதையா...எப்படியோ சன்டா ஒரு கதாநாயகனக ஆள் வேண்டுமானால் நன்றாகவே ஹீரோவாக தெரிகிறார் ஆனால் படம் ஜீரோதான். நல்ல கட்டான தேகத்தோடு கதாநாயகி நடிகை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 17, 2017

தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.

தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.

Related image

பரணிக்கு தன் தாய் இறந்தது பேரதிர்ச்சி. சுமார் இரண்டாண்டுகள் வெளியில் வாய் திறந்தே பேசவில்லை.கிறித்தவத்தில் சோகத்தில் தாவீது சாக்கிலான ஆடையை அணிந்திருந்தான் துக்க காலத்தில் என்பது போல எந்தவித ஆடை அலங்கார ஒப்பனைகளில் கவனமின்றி காலம் செலுத்தி வந்தான். தான் இறந்திருந்தால் கூட அவ்வளவு துன்பமாய் இருந்திருக்க வழியில்லை என்றே இருந்தது அவனுக்கு.

சாப்பிடும்போதெல்லாம் அந்த நினைவு தாக்கியது வாய் விட்டும் அழுவான்,எப்படி இந்த மரணம் இப்படி சொல்லி வைத்தபடி நிகழ்ந்தது என்றே ஆச்சரியப்பட்டான். ஏன் எனில் தந்தையின் ஆண்டு நினைவு தினத்தின் போது அடுத்த ஆண்டு இவ(ள்) இருக்க மாட்டா(ள்)  என்ற ஒரு அசரீரியா, ஆன்மாவின் குரலா ? தியான வழிகாட்டுதலாம் தமக்கு கிடைத்த வரமா அதிலிருந்து கிடைத்தது அப்படியே பலித்தது. அவள் இறந்த முன் தினத்தில் தாம் கண்ட கனவை தாயிடமே பகிர்ந்து கொண்டதும் அந்த ஆட்டுக் கிடாயை தூக்கிய மீசைக்கார கறுப்பு மனிதன் கதவைத் தள்ளி அவன் உள் நுழைய பரணி அதைத் தடுக்க முயல இந்தப் போராட்டத்தில் மீசைக்காரன் வென்று விட்டான் என்றும் சொல்கிறான். அதற்கு அம்மா அது வேறு ஒன்னுமில்லடா அக்கா வீட்டில் இன்னைக்கு மாரியம்மன் பண்டிகை, கெடா வெட்டுவாங்க இல்ல அதான்..எனச் சொல்லி முடித்தது நேற்று நடந்தது போல் அப்படியே இருக்க‌

அவள் பயன்படுத்திய கை விசிறி இன்னும் சேதமாகாமல் இருக்க..அவள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்க அவள் இல்லையே...தந்தைக்கும் பிறகு 20முழு ஆண்டுகள் அப்படியே நம்முடன் வாழ்ந்தாளே இன்று இல்லையே சென்று இரண்டாண்டு போயிற்றே...என்று விரக்தியில் இருந்தான். திருமணம் முடித்தபின் பரணி மனைவியும் ஓராண்டின் நிறைவில் ஒரு மகனுமாக இருக்க மணம் செய்த ஒன்பதாண்டுகள் முடிந்தவுடன் இவளும் விடை பெற்று விட்டாளே...

அவள் கடைசி ஆசை என பெயரனுக்கு ஒரு வெள்ளித் தட்டை வாங்கித்  தர ஆசைப்பட்டாளே. அதை இன்னும் நிறைவேற்றவில்லையே...அவள் கடைசியாக ஆசைப்பட்டாள் என அவள் பட்டு சேலை கட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமை செல்லும் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு பெரிய மணியை சேலம் செவ்வாய்ப் பேட்டையில் வாங்கி வந்து ஒரு பூஜை செய்து கோவிலில் கட்டி விட்டு வந்து விட்டான் குடும்ப சகிதமாக சென்று...ஆனால்  இந்த வெள்ளித் தட்டு ஆசை அப்படியே இருந்தது.

அதற்கும் ஒரு நாள் முடிவு கண்டு விடலாம் என சுமார் ஏழாயிரத்து எண்ணூறு ரூபாயும் பிய்ந்து போயிருந்த அரை ஞாண் கொடியையும்  சுமார் 3 வயதேயான  தரணியையும் கூட்டிக் கொண்டு சேலம் புறப்பட்டான் ஒரு வெள்ளித்தட்டை வாங்கிக் கொண்டு வந்து விடலாம் என.

எம்.ஆர்.பி என்ற ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டான், பாலகனையும் ஏற்றிக் கொண்டான் அவனுக்கு ஜன்னலோரம் சீட்டைக் கொடுத்து வெளியே வேடிக்கை பார்க்க அமர்த்தி விட்டு அந்த மூன்று பேர் அடங்கிய சீட்டில் அமர்ந்து கொண்டான். பேருந்தில் நல்ல கூட்டம். மேச்சேரி வந்தது. ஒரு கரும் பூதமான குண்டாக ஒரு பெண் ஒரு நடக்கும் வயதில் உள்ள ஒரு பையனுடன் வித்தியாசமாக  கையில் இடுப்பில் எடுத்து வந்தாள், இவனருகே வந்து நகர், என்றாள்.
Related image


இவனும் கம்யூனிச சிந்தனை உள்ளவன் என்பதால் எவருடன் வேண்டுமானாலும் பாவம் என அமர்ந்து கொண்டு உதவிகளும் செய்வான் எனப்தால் அது ஒரு வித்தியாசமாகத் தெரியவில்லை. அவளுக்கு நகர்ந்து இடம் கொடுத்தான். தமது வலது பக்கத்தில் உள்ள மகன் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான். ஏன் எனில் அவன் துறு துறு வென சுட்டிப் பையன் என்பதால் . ஏற்கெனவே மூக்கில் சிலேட் பெனிசிலை போட்டுக் கொண்டு தூக்கி ஓடி மருத்துவமனை சென்று எடுத்த வந்த கதையும், பள்ளியில் விளையாடி ஸ்டீல் சேர் டேபுள்மேல் விழுந்து இடது கண் புருவத்தில் வெட்டப்பட்டு விழி திறந்தது போன்ற ஒரு வெட்டு நடந்து தையல் போட்டது அது சற்றுத் தவறி பட்டிருந்தாலும் கண் போயிருக்கலாம், சற்றுத் தள்ளிப் பட்டிருந்தாலும் பொறியில் பட்டு உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கலாம் என்பதாலும் அவன் மேல் கவனமாக இருந்தான்.

இந்த கருமலை போன்ற பூதமான பெண் அவள் மஞ்சள் பையில் இருக்கும் காசை எடுத்து கொடுக்கச் சொன்னாள் டிக்கட் வாங்க அதையும் செய்தான். வண்டி ஓமலூர் தாண்டி  சேலம் செல்லும் வழியில் குரங்கு சாவடியில் அந்தப் பெண் இறங்கிக் கொண்டாள்.

பரணி தரணியைக் கூட்டிக் கொண்டு வெள்ளித் தட்டு வாங்கும் முன் அண்ணா பூங்கா சென்று ரோலர் வீல் ஏறி சிறுவனுக்கு வேடிக்கை காட்டினான் அதன்பின் புறப்படும்போது கைப்பையை திறந்து பார்த்தான் அரை ஞாண் கொடியும் பணம்  7,800 ரூபாயும் அந்தப் பையில் இல்லை.

உடனே வீட்டுக்குத் துணைவியிடம் பேசி பணம் பறி போயிற்று வெள்ளித் தட்டு எல்லாம் வாங்க வில்லை. வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டான்.

இதைப்பற்றி மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அட, அதை உடனே காவல் நிலையம் சென்றிருந்தால் பிடித்திருக்கலாமே அவள் குரங்கு சாவடியில் இறங்கிய அந்தக் கருங்குண்டிதான் எடுத்திருக்கிறாள்.  அந்த பையனை சேலைக்கடியில் விட்டு கூடையில் வைத்திருந்த கைப்பையில் இருந்து பணத்தையும், அரை ஞாணையும் எடுக்க வைத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். ஆனால் அவன் காவல் நிலையமே செல்ல வில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு அவனை தலைக்கு குளிக்கச் சொல்லி மனைவி அறிவுறுத்த அவன் சொட்டை விழுந்து கொண்டிருந்த அவன் தலையில் ஒரு கறுப்பு பொட்டு சுமார் ஒரு சிறு வட்டமாய் பொட்டாக வைக்கப்பட்டிருந்தது மையில். அதைத் தேய்த்து சுரண்டி எடுத்து விட்டு தலைக்கு தேய்த்து குளிக்க வைத்தாள்

பணத்தை எடுத்துக் கொண்டு பணி நிமித்தம் இலட்சக்கணக்கில் எல்லாம் பயணம் செய்து 100லிருந்து 150 கி.மீ எல்லாம் சென்று மலை வாழ் மக்களுக்கு எல்லாம் விநியோகம் செய்த காலம் , நாடெங்கும் சுற்றித் திரிந்து  சென்று பணத்துடன் புழங்கிய காலம் எல்லாம் கண்ணில் வர எனக்கா இப்படி நடந்தது என மலைத்து வந்தான்.

அதன் பின் அதே சேலத்தில் சொற்ப பணத்துடன் ஒரு ஜர்னலிஸ்ட் அடையாள அட்டையுடன் டவுண் பஸ்ஸில் பாக்கெட் அடிக்கப்பட்டதும், அதன் பின் புத்தகம் போடும் முயற்சியின்போது சேலம் பால் மார்க்கெட்டில் இறங்கி செவ்வாய்ப் பேட்டை பிரஸ் பைன்டிங் பணிகளுக்கு சென்ற போது புத்தகம் வைத்திருந்த ஏ.வீ. ஆரில் கொடுத்த லெதர் பை அடியில் பிளேடால் கிழிக்கப்பட்டு உள்ளே கையை விட்டு தேடப்பட்டிருந்ததும், அட சொல்லி இருந்தால் நானே எழுதி இருக்கும் ஒரு புத்தகத்தை கையில் கொடுத்திருப்பேனே என்றும்,

அதன் பின் அவனும் அவரது நண்பரும் பிரஸ். பைண்டிங் நபருக்கு கொடுக்க வேண்டிய சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு சத்திரம் ரெயில்வே கிராஸ் செய்து இரவு நேரத்தில் செவ்வாய்ப் பேட்டைக்கு போகாமல் பணம் பெற வேண்டியவரையே போன் செய்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் இங்கிருக்கிறோம் என அழைக்க அவரும் வராமல், இவர்களும் செல்லாமல் மற்றொரு நாள் கொடுத்துக் கொள்ளலாம் என திரும்பியதும் படச் சுருளாக ஓடின.
Related image


சேலம் நாலு ரோடு, செவ்வாய்ப் பேட்டை, லீ பஜார், சத்திரம் ரெயில்வே லைன் போன்ற இடங்களில் எப்போதுமே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு இதெல்லாம் காவல் துறைக்கும் தெரியும் என்ற செய்திகளும் பரிமாறப்பட்டன‌

இதே போல மளிகைக் கடை ஜீவா தமது பங்குக்கு ஒரு பணம் பறிப் போன கதையை சொன்னான். இதை எல்லாம் கண்காணிக்க எடுக்க பறிக்க எடுத்துச் செல்ல ஒரு நெட் ஒர்க் இருக்குமோ என்றெல்லாம் எண்ணினான்.

அதிலிருந்து பணத்திற்கான பை ஏதுமே எடுத்துச் செல்லக் கூடாது என்றும் முடிவுக்கு வந்தான்.

ஆனால் இந்த கருப்பு மை, சுடுகாடு, மண்டையோட்டு மை, நள்ளிரவு பூஜைகள், வசிய மை,   போன்றவை பற்றி எல்லாம் பில்லி சூனியம், மந்திரம், மாந்திரீகம் போன்றவை எல்லாம் அறிவியலுக்கு எட்டாமல் இருந்தபோதும் கேரளாவில் குட்டிச் சாத்தான், மாந்திரிகம் மந்திரம் எல்லாம் பகவதி அம்மன் எல்லாம் இப்படி அப்படி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே என்றாலும் தெளிவில்லை.

ஆனாலும் நகையை தாமாக கழட்டிக் கொடுத்த பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள், கொண்டு போனவற்றை எல்லாம் இழந்து விட்டு சுய நினைவே இன்றி வேறெங்கோ சென்றபடி இருப்பார் எல்லாம் உண்மையாகவே இருக்கிறார்கள்.

மனித அறிவுக்கு எட்டாத இப்படிப்பட்ட புதிர்கள் இன்னும் எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களால் எழுதப் படித்த மனிதர்களிடை மேல் கூட பிரயோகம் செய்தபடி...இதன் தொடர்ச்சியாக அரசியல், தொழில், வியாபாரம் ஏன் காதலைக் கூட பிரிக்கவும் சேர்க்கவும் இந்த வசியக் கலை உதவுவதாகவும் செய்திகள் இருக்கின்றன நம்பவே முடியவில்லை என்ற போதும் அவரவர்க்கு நடந்தபோது நம்பியே ஆக வேண்டிய நிலையில் உண்மையாகவே நடந்திருப்பதால்.

ஏன் இங்கிலாந்தில் சந்திராசாமி தாட்சருக்கு செய்த கதை எல்லாம் கூட நமது சுய வரலாறில் எழுதப்பட்ட சான்றுகளை ஒரு வெளி நாட்டு தூதராயிருந்தார் எழுதி இருக்கிறாரே...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருவி: கவிஞர் தணிகை

அருவி: கவிஞர் தணிகை

Image result for aruvi movie


நீண்ட நாள் கழித்து குடும்பத்தின் அனைவரும் சேர்ந்திருந்து பார்க்க வேண்டிய படமாக அதிதியாக அருவி... அருவியாக அதிதி


எப்படிப் பாராட்டினாலும் தகுதியுடைய ஒரு படம் தமிழ் பட உலகுக்கு கிடைத்திருக்கிறது . ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து சமூக அக்கறையுடன் செதுக்கி உள்ளனர்.அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ஜோக்கர் சகுனி கஷ்மோரா ஆகிய படங்களைத் தயாரித்த அதே பட நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயரிப்பில் அருண் பிரபு புருசோத்தமன் என்ற இரண்டு நபர்கள் இயக்கி வெளி வந்திருக்கும் படம். ஏற்கெனவே சீனா ஷாங்காய் பட விழாவுக்கு சென்று வந்து இங்கு டிசம்பர் 15ல் வெளி வந்துள்ளது சுமார் 130 நிமிடங்கள் வீண் போகாத படம்.

அதிதி பாலன் என்ற வழக்கறிஞரை 600 பேரிலிருந்து இதன் கதாநாயகியாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் இந்தப் படத்தை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். ஜோக்கருக்கு அடுத்து சமூகத்தை ஒவ்வொரு கட்டத்திலும் சாட்டையால் வெளுத்திருக்கும் பாடம்.

ஊடகம், அரசியல், சினிமா, தொலைகாட்சித் தொடர்கள், அரசு, காவல்துறை, தம் பிள்ளைகளையே நம்பாத பெற்றோர், கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கைக்கு  புலம் பெயர்தலால் கிடைக்கும் பரிசு இப்படி ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இரசிக்கும்படியாக காட்சிக்கு காட்சி பாராட்டும்படியாக நன்றாக பார்வைக்கு வந்திருக்கும் படம். இது போன்ற படங்கள் தாம் உண்மையிலேயே சமூகத்திற்கு அவசியத் தேவை.

இதில் நடித்துள்ள நபர்கள் யாருமே பெரிய ஆட்கள் ரஜினி, கமல் எல்லாம் கிடையாது ஆனால் இதுவரை அவர்கள் எல்லாம் கூட தொடாத பிரதேசத்தை தொட்டுச் சொல்லி இருக்கும் படம் . கடைசியில் கண்ணீரை வராமல் இந்தப் படத்தை நிறைவு செய்யவே முடியாது.

வாழ்க்கையில் இறப்பு எப்போது என்ற பயம் இருக்கும்போது அனைவர்க்கும் நன்மை செய்யவே தோன்றும் அந்த பயம் இருந்தால் நாம் எவருமே தவறு செய்ய மாட்டோம் என்பதில் இரகசிய நீரோட்டமாக இழையோடவிட்டு,

எய்ட்ஸ் நோய், பற்றி எடுத்துச் சொல்லி திருநங்கை பாத்திரத்தை எல்லா திருநங்கை வர்க்கமுமே பெருமப்படும் வண்ணம் அழகுபடுத்தி அவரே எய்ட்ஸ் வந்த அருவியை அருவருக்காமல் உடன் வரும் தோழியாக கடைசி வரை நிற்கிறார் என்று காட்டி,,
Related image


ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் என்ன என்ன வெட்டி பந்தா இருக்கும் என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லி, அதில் காட்சியை தொகுப்பவராக நடத்துபவராக இலட்சுமி கோபால் சாமியையும் தொடர் இயக்குனராக கவிதா பாரதியையும் உதவி இயக்குனராக, அவருக்கு ஒரு உதவியாளராக இப்படி பல அடுக்குகள் கொண்ட நிலையை நன்கு விளக்கி சொல்லி இன்டஸ்ட்ரியின்ன் காலில் விழும் கலாச்சாரத்தை சாடி, அந்தக் காட்சிகள் எப்படி உள்ளிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை எல்லாம் சொல்லி...இது பற்றி கவண், மற்றும் ஊமை விழிகள் ஆரம்பித்து பல படங்களில் ஒன்றில் ஜீவா கூட நடித்திருந்தாரே அது போல பல படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக அவர்களை எல்லாம் விட தேர்ந்த மனிதர்கள் வெளியில் இருக்கிறார்கள் வாய்ப்பின்றி என்பதை அழகாக  அதிதி பாலன் என்னும் அருவி உணர்த்துகிறார்.

சாதரணமாக ஆனந்த யாழை மீட்டுகிறாள் என அப்பா மகள் கதை சொல்லப்போகிறார்களோ என்று நினைத்து மீள்வதற்குள் அருவி வயதுக்கு வந்து பெரியவளாகி,காதல் இல்லாமலே போய் அதன் பிறகு கதை போகிறது பயணம் உச்சத்திற்கு, உச்சி சிகரத்துக்கு, என்னதான் இருந்தாலும் பெற்ற பிள்ளைகளையெ நம்ப முடியாத பெற்றோர்க்கும் இது தரும் பாடமும்.. வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறுகிறது ஒரு மருத்துவ அலட்சியத்தால் எவரோ செய்யும் ஒரு பிழை எப்படி சமூகத்தை ஆட்டி கலக்கு கலக்குகிறது அதை நன்றாக உணரும்படி செய்திருக்கிறார்கள்.

நினைப்பதை நினைத்ததை எல்லாம் காட்சியாக்கி மிகவும் இயல்பான வாழ்க்கையை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். நான் எடுத்தால் இது போன்றுதான் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுவேன். அதற்கு பதிலாக இவர்கள் தாமெடுத்து விட்டார்களே. தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்து விட்டார்கள்.

கற்பழிப்பு, கொலை, நிர்பயா போன்றவற்றையும் தொட்டு விட்டு அவர்களையும் மன்னிக்கச் ச்சொல்லி,  ஊடகம் பிரச்சனையை ஊதிப் பெருசாக்குவதற்கு மாறாக நினைக்காத கோணங்களில் எல்லாம் படம் படையெடுக்கிறது லைவ் டெலிகாஸ்ட்டில் இருவருக்கும் எய்ட்ஸ் பாஸிட்டிவ் என்று சொன்னதிலிருந்து...

அனேகமாக‌ 2017 முடியப் போகிற போக்கில் ஒரு சிறந்த படத்தை , இதுதான் இந்த ஆண்டின் சிறந்த படம் என்ற போக்கில், அதிதி பாலன் தாம் சிறந்த நடிகை என்ற கோணத்தில் ...ஏன் 2017, தமிழ் பட வரலாற்றிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் இது நிச்சயம் இடம் பெறும் என்று சொல்லலாம்.

சங்கர், மணி ரத்னம் போன்றோர் இன்னும் பிரம்மாண்டம் என்று சொல்லி மகக்ளை ஏமாற்றும் நிலை விட்டு இது போன்ற நல்ல நேர்மறையான படங்கள் நோக்கி திரும்பிப் பார்க்கலாம்...

அருமையான திரைக்கதை, கூர்மையான வசனம், நல்ல காட்சி அமைப்பு, ஆக்சன் என கவிதா பாரதி சொல்லிய மறு குரலாக ரோலிங் சார் என்ற குரல் நகைச்சுவையுடன் இப்போது கூட ரீங்காரம் செய்வதை கேட்க முடிகிறது...இந்தப் படத்தை ஒரு முறை மட்டுமல்ல இரண்டாவதும் சினிமாத்தியேட்டரில்  அமர்ந்து பார்த்து பாராட்டி அழத் தோன்றுகிறது. \

நிறைய இடங்களில் காட்சி அமைப்புகளும், வசனங்களும் மஞ்சப்பையில் செருப்பை போட்டு அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது போல சமூகத்தை அதன் அவலத்தை  முட்டாள் தனத்தை அடித்து நொறுக்கி விடுகிறது...
Image result for aruvi movie


அதிதி பாலன் உருக்கி விடுகிறார். சிரிக்க வைக்கிறார் மகிழ்ச்சி அடைய வைக்கிறார் அழவும் வைக்கிறார்.  யார் சொன்னாலும் ஏன் என்று கேட்க வேண்டும் , அனைவருடனும் அன்பாய் இருக்க வேண்டும் என நீங்கள் தாம் சொன்னீர்களே அப்பா எனக் கேட்கிறாய் படத்தின் கரு இதுதான்...அருவி உயரே இருந்து கொட்டுகிறது ஆர்ப்பரிக்க சுழித்து ஓடுகிறது...

கமல் பெற்றால் தான் பிள்ளையா என்ற பண்பலைக் குரலை விட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்தப் படம் ஒரு வரம். தமிழ் பட உலகுக்கு ஒரு நல்ல பரிசு.

வாழ்த்துகள்
வணக்கங்கள்
எ க்ரேட் சல்யூட் டு தி டீம்.

Image result for aruvi movie


நூற்றுக்கு 80 தரலாம் தாராளமாக.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
\
எப்போதுமே குடி மதுக்குடி வரும் படங்களை நான் சாடுவது வழக்கம் இதிலும் பீர், வைன் எனக் குடிப்பது போல காட்சிகள் வருகின்றன ஆனால் சாகப்போகிற நாள் நெருங்குகிற நபர் குடித்தால் கூட தவறில்லை அதை பெரிதாக விமர்சிக்க ஒன்றுமில்லை என நினைக்கிறேன். அப்படித்தான் கண்ணதாசன் தாம் ஒருவரே எல்லா மதுவையும் குடித்து மதுவிலக்கு அவசியம் நாட்டுக்குத் தேவை என்று சேவை செய்தாரோ என்னவோ? இதெல்லாம் சொல்லத் தோன்றியது..