Wednesday, September 21, 2016

காவிரியின் புதல்வர்கள்:கவிஞர் தணிகை

காவிரியின் புதல்வர்கள்:கவிஞர் தணிகை

Image result for kaveri river map and flows

காவிரி நதி ஏறத் தாழ 800 கி.மீ ஓடி வருவதில் 64 கி.மீ தமிழக கர்நாடக எல்லைகள் இரண்டுக்கும் பொதுவாகும் பாயும் நதி 320 கி.மீ கர்நாடகாவிலும் 416 கி.மீ தமிழகத்திலும் பாய்ந்தோடி பூம்புகாரில் கடலில் கலக்கிற செய்திகள் உண்டு. அது பற்றி அல்ல இந்த பதிவு

ஒரு குடும்பத்தில் ஒரு தாய்க்கு பிள்ளைகள் பலர் இருக்கக் கூடும். அதில் மூத்த பிள்ளை அதிக நாள் பெற்றோருடன் இல்லாமல் மணம் முடித்ததும் வெளியேறிவிடுவார் குடும்பம் விட்டு. இளைய பிள்ளைகளை தேற்றி விடும் வரை அந்த பெற்றோரின் அந்த தாயின் கவனம் முழுதும் இளைய பிள்ளைகள் பால் இருக்கும் என்பது இயற்கை.

காவிரித் தாயும் அப்படித்தான்.கர்நாடக மைந்தர்களுக்கும் தமிழ்நாட்டினர்க்கும். இந்நிலையில் நதிகள், பெருநதிகள் அங்கு அதிகம் தமிழ் நாட்டுக்கு காவிரியை விட்டால் கதி இல்லை. அங்கு அணைகளும் அதிகம். இங்கு மேட்டூர் அணையை விட்டால் வேறு பெரும் அணை இல்லை.

இந்நிலையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்னும் 4 வாரங்களில் காவிரி நதி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நல்ல செய்தி . ஆனால் கர்நாடகாவில் மறுபடியும் கலவரம் ஆரம்பித்து விட்டது.

Image result for kaveri river map and flows


எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்  பதவி விலகத் தயாராக இருப்பதாக செய்திகள். சித்தாரமையா அரசுக்கு இன்னும் 2018 மே மாதம் வரை காலக்கெடு இருப்பதை குறி வைத்து பி.ஜே.பி கலவரத்தில் ஈடுபட்டு அந்த அரசை குலைக்கப் பார்க்கிறது அல்லது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நினைப்பதன் பேயாட்டம்தான் இந்த
காவிரி நதி நீர்ப் பிரச்சனையும் தமிழர்களுக்கு எதிரான சதியும்.

இந்நிலையில் பிரதமராக பதவியில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி தேவகவுடாவும் அவரது உதவாத கட்சி எம்.எல்.ஏக்களும் இராஜினாமா செய்ய இருப்பதாகவும் செய்தி. இவனை எல்லாம் பிரதமராக வைத்த இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?

எல்லாமே அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு அவர் தம் அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைத்தபடி...

தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப் பட்டு அதிலிருந்து பயணிகள் நடந்து சென்று எல்லை கடந்து கர்நாடகா பேருந்துகள் ஏறி சென்று வருவதாக செய்தி.Image result for wind up karnataka govt



ஒரு அறையில் பணியில் இருந்தபடி ஒன்றாக இருக்கும் இளைஞர்களை வீடு புகுந்து தாக்கி இருக்கிற செய்திகள், நாளை காலை நீ என் கண்ணில் பட்டால் உயிர் உடலில் தங்காது என கத்தியைக் காட்டி மிரட்ட, காலில் விழுந்து பயந்து வேலையை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்கள் கதைகள் எல்லாம் கதையாக அல்ல பெரும் சோகமாக உலவி வர இந்த நாட்டு குடிமக்கள் எந்தவித சட்ட ,நீதி முறைகளுக்கும் தர்ம பரிபாலன முறைகளுக்கும் வெளியிருந்து அநீதி செய்து வருகிறார்கள்.Like muslims and Hindu riots of Pakistan and Indians at that time of partisan   of our Independence.,making lot of disturbance to public life due to firing vehicles and affecting day to day peaceful life.


ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்லும் இந்தியனின் அடிப்படைச் சட்டத்துக்கே ஊறு விளைந்திருக்கிறது. மேலும் ஒரு இடத்திலிருந்து பிழைப்புக்கக சென்றவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கால்.

இது இந்திய அரசியல் அமைப்புக்கும், நீதிக்கும், அரசமைப்பு சட்ட திட்டங்களுக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது எனவே இந்த பதர்கள் எல்லாம் விலகும் முன் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வருவது தேவையான ஒன்று. ஆனால் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாமல் 2018 மே மாதம் வரை அந்த ஆட்சி தொடர வேண்டுவதும் அவசியம்.

அப்படி எல்லாம் நடந்து விட்டால் இவர்கள் கொட்டம் அடங்கும், அடங்காவிட்டால் இவர்கள் கொட்டம் அடக்கப்பட வேண்டும். நதி நீரை இணைக்கலாம் என்று எழுதினால் உடனே ஒருவர் அது சாத்தியமான திட்டம் அல்ல என மறு மொழி சொல்கிறார். முடியாதது என்பது எதுவுமே இல்லை. செய்ய வேண்டிய நபர்கள் எவருமே அதைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் அரசியல் மாறாத விதி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Saturday, September 17, 2016

ஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே!: கவிஞர் தணிகை

ஒரு பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாம் கர்நாடகா காவிரி பிரச்சனையில் சென்று மாற்றலாமே!: கவிஞர் தணிகை

Image result for bangalore cauvery issue


பெங்களூருவுக்கு பந்த்லூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பந்த்லூர் தீ தனக்குத் தானே வைத்துக் கொண்டது.கால் ஓயும் வரை உன் சாம்ராஜ்ஜியம்தான். ஒரே பந்தால் உலகை மாற்றுவோர் எல்லாமே தமிழனை எல்லாம் ஏமாற்றுவோர். மாற்றுவோர்க்கு மதிப்பில்லை.... முதல் குற்றவாளி டில்லியில், இரண்டாம் குற்றவாளி சென்னையில், மற்ற குற்றவாளிகள் யாவரும் நம்மருகே...அரசியல் என்ற பிரிவினைச் சக்தி  சதி தீ எல்லா ஒற்றுமையையும் எடுத்து விழுங்கி எரித்து முடித்துக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்த தமிழர் எல்லாம் இங்கு வந்து விட்டார். வர முடியாத தமிழர் எல்லாம் வீடடங்கி கூடடங்கி வாழ்வதாக செத்துக் கொண்டிருக்க, மாண்டியாத் தமிழரை எல்லாம் ஒருங்கிணைத்த அரசியல் சக்திகள் அவர்களை தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்க்கு எதிராகவும் கோஷம் போட வைத்திருக்கின்றன.


Image result for bangalore cauvery issue

அங்கு மாநிலத்தில் தனக்குத் தானே வைத்துக் கொண்ட தீயால் எல்லாப் பணியும் தமிழர் இல்லாததால் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. 100 பிணங்களுக்கும் மேல் எடுத்து அடக்கம் செய்ய, எரியூட்டாமல் கிடக்கின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் எந்தப் பணியும் நடைபெறாமல் ஆள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. 9 வது மாடி ஏறி பணி செய்யும் மென்பொருள் பணியாளரைக் கூட எங்க தண்ணீ இருந்ததால் தானே நீங்க வேலை செய்ய வந்தீர் எனத் துரத்திய கன்னட மக்கள் அந்தப் பணியை எப்படி செய்யப் போகிறார்கள் தெரியாமல் என விழித்துக் கிடக்கிறார்கள்.

என்றாலும் அம்மா திருமண மண்டபம் கட்ட, கட்சியில் 90,000 பேருக்கு மேலானவர்களை சேர்க்க வாய் திறக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் அடையாளம் செய்ய வாய் மூடியே சாதிக்கிறார்கள். கர்நாடகத்தில் மேலைக்கோட்டையில் பிறந்தவர், பார்ப்பன அக்ர‍ஹாரத்தில் சிறையில் இருந்த பயம் இன்னும் போகவில்லை இவருக்கு, மேலும் இவருக்கும் கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்கும், மோடிக்கும் நிறைய பங்குப் பணிகள் உள்ளன இன்னும் சில வாரங்களில் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் தீர்ப்பு வேறு உச்ச நீதிமன்றத்தால் சொல்லப் பட இருக்கிறது.

எனவே ஆளும் கட்சி பள்ளியை கல்வி நிலையங்களை, மத்திய மாநில அலுவலகங்களை அரசுப் போக்குவரத்தை வெற்றிகரமாக காவல்துறைப் பாதுகாப்புடன் நடத்தியதாக சொல்லும், எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதாக சொல்லும். எப்படிப்பார்த்தாலும் பாதிக்கப் பட்ட தமிழர்களின் குரல் கூட சரியாக வெளிப் படுத்த முடியாத ஆட்சி தமிழர் அல்லாத ஆட்சி மாட்சி. மதுபானப் பிரியர்களால் தேர்தல் முடிவு நிர்ணயக்கப்பட்டதால் கிடைத்த பரிசு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், கொல்லலாம். அதுதான் ஜனநாயகம்.

இந்திய நதிகளை இணைத்தால் அது இது போன்ற பிரச்சனைக்கு தீர்வாகும். எனவே அது பற்றி செய்வார் முதல் குற்றவாளியாக டில்லியில் இருக்கிறார். தமிழ் நாட்டை ஆண்டபடி தமிழை தமிழரை குளறுபடி செய்ய வேண்டிய, செய்த மாண்புமிகுக்கள் இரண்டாம் குற்றாவாளியாக சென்னையில் இருக்கிறார். நாங்கள் காவிரிக் கரையில் இருக்கிறோம் காலம் காலமாக. தாய்க்கெல்லாம் தாயாக அந்த நீர்த் தாயைப் பார்த்தபடி. எங்களது கருத்துகளை எல்லாம் கேட்க நாதியின்றி...மற்றோர் எல்லாம் கட்சிப்பணிகளில் சலியாது உழைக்கிறார்.

ஒரு பந்தால் உலகை மாற்றுவோம், மயிரைக் கட்டுவோம், வெட்டுவோம் என்ற புடுங்கிகள் எல்லாம் சேர்ந்து இந்தக் காவிரி விவகாரத்தில் எல்லாம் சென்று தீராத பிரச்சனையாக காலம் காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்தபடி தீர்க்கமுடியாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையை எல்லாம் தீர்க்கலாமே...இவர்கள் மாற்றுவோர் இல்லை ஏமாற்றுவோர்.இவனும் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்த மலையை, மண்ணை, காற்றை வஞ்சித்து தமிழரை ஏமாற்றிப் பிழைப்பவன் தான்...

இது போல நிறைய பேர் இந்த மண்ணில் இருந்து கொண்டு தழிழரை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமி, பூதம் என பயமுறுத்திக் கொண்டு..இந்தப் பெரியார் நினைவு நாளில் இதை பதிவு செய்வதில் அடையாளமாகட்டும் இந்தப் பதிவு.

கர்நாடகாவில் நடக்கும் இந்த வெறியாட்டம் ருத்ரவடிவம், செயலற்ற தமிழ் வடிவம் சிவம். ஆனால் இதன் பின்னணியில் வறுமையும், ஏழ்மையும் அறியாமையும் இருக்கிறது என்கிறார்கள் அறிவு சார்ந்தோர். இது இனவெறி மட்டுமல்ல, எமது வளத்தை, எனது வாய்ப்பை, எனது அறியாமையை பக்கத்து மாநிலத்தான் வந்து பிடுங்கிக் கொண்டு நல்லா வாழ்கிறான். நான் இன்னும் இப்படியே இருக்கிறேன் என்ற அவனது ஆற்றாமையை இந்த அரசியல் பித்தலாட்டக்காரர்கள் கட்சி பேதம் கொண்டு கன்னடிகா தமிழர் என்று தூண்டி விட்டு அரசியல் இலாபம் தேடி எதிர்வரும் சட்ட சபையில் இடம் பிடித்து ஆள நினைக்கும் போட்டியே இதன் வெளிப்பாடு என்ற ஒரு கணிப்பு இருக்கிறது.

பொருளாதாரத் தீர்வு மூலம் நதி நீர்ப் பங்கீடு மூலம், நதி நீர் இணைப்பு மூலம் ஆட்சியாளர்கள் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் இத்தனை காலமும் இவர்கள் இத்தனை உயிர்கள், இழப்புகள் நடந்த பின்னும் அப்படியே சட்டை செய்யாமல் இருக்கிறார்கள். ஏன் அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடக்கும் என்றுதான்.
Image result for bangalore cauvery issue




எனவே உண்மையான எதிரிகள் இந்த இனவெறியர்கள் அல்ல, அதன் பின் மறைந்து கிடக்கும் அவர்களை அப்படி பிர்த்தாளும் சூழ்ச்சியுள் சிக்க வைத்திருக்கும் அரசியல் சக்திகளே, மேலும் ஆளும் கட்சிகளே. அதன் தலைவர்களே.

ஒரு தலைமை தான் எதையும் செய்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. ஒரு தலைமை அதை எப்போதும் ஆதரிக்கிறது இது மக்களுக்கான ஆட்சி அல்ல, அவர்களுக்கான ஆட்சி.

இதைப் புரிந்து கொண்டார் ஒன்று எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும், அல்லது எதிலுமே ஈடுபடக்கூடாது. இதற்காக விக்னேஷ் போன்ற உயிர்கள் போவது இந்த நாட்டுக்கு இன்னும் பேரிழப்பே.


முதல்வர் அம்மா பள்ளிக்கு, அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு செல்லுங்கள் என்றார் பாதுகாப்பு உண்டு என்று, என் வீட்டு அம்மா போகக் கூடாது என்றார், காவிரித்தாயை அதன் நீரைப் பருகியே பாதி ஆயுள் வாழ்ந்தவன் என்ற நன்றிக் கடனுடன் எங்கும் போகாமல் இருந்து விட்டேன்.

அம்மா மேல் மருவத்தூர், அப்பன் ஈஷா, வேதாத்திரி குழுமம், அம்மா அமிர்தானந்த மயி, ரவி சங்கர், பதஞ்சலிகாரு எல்லா சாமிகளும் அம்மாக்களும் சேர்ந்து காலம் காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்சனையை தீர்த்தால் நானும் அவர்களுடன் சென்று தியானம் செய்ய அமர்ந்து கொள்வேன்...
Image result for bangalore cauvery issue

பெங்களூரு நல்ல திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்று எப்போதும் எனக்குப் பிடிக்கும் இப்போது அதை பந்த்லூரு என்றழைக்கிறார்கள்...பிடிக்காத மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டித்தனமான கட்டடங்களாக காட்சி கொடுத்து கசப்பாகி விட்டது எனக்கு...

பொதுவாகவே மேற்கு வங்க (பங்க்ளாக்கள்) வங்காளிகள், கேரளத்து மலையாளிகள்,தமிழகத்தின் தமிழர்கள், இந்தியாவில் எல்லா மாநிலத்தவரையும் விட கொஞ்சம் முன்னணியில் உள்ளவர்கள்தான். அறிவை நம்புவார் வன்முறையை கையில் எடுப்பதில்லை. அடி வாங்கலாம் ஆனால் வெல்வது அறிவுள்ளவர்களாகவே இருப்பார்கள். உடல் வலுவை நம்பி செயல்படுவார் உடல்வலு இருக்கும் மட்டுமே செயல்பட முடியும், அறிவு நம்பிகள் அறிவை இறுதி வரை பயன்படுத்தலாம்...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Friday, September 16, 2016

இலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை

இலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை




14.09.2016 அன்று புதன் கிழமை அன்று எமது முகாம் வாகனத்தில் சுமார் 9.30 மணி அளவில் புறப்பட்டோம். ஓட்டுனர் பொறுப்பு வாய்ந்த பாலமுருகன். எமது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவு கடந்தோம். இலட்சுமாயூர் நடுநிலைப்பள்ளி வந்தது.

கல்லூரி வாகனம் சேலம் ரயில் நிலைய சந்திப்பு கடந்து வழியில் இருமருங்கும் பூக்கள் பூத்த மரங்கள் வரவேற்க சுகமான பயணம், சேலம் உருக்காலை, தோப்பூர் மின் கட்ட நிலையம் (கிரிட்) எல்லாம் தாண்டி அணைமேட்டு வளைவில் தாரமங்கலம் திரும்பு முன் இந்த இலட்சுமாயூர் நம்மை அதனுடன் இணைக்கிறது.

நகரிய சாலையிலிருந்து சில நொடிகளிலேயே திடீரென ஒரு கிராமிய மணம், கிராமத்தில் நடுநிலைப்பள்ளி 2 இடங்களிலே இடவசதிக்காக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.



முன்னால் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும் தற்போதைய இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான பழனிவேல் அய்யா அவர்கள் அனைவரையும் கரம் கூப்பி பள்ளியின் உள் அழைத்தார். வாகனமும் உள் நிறுத்தப் பட்டது.




உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.முத்து அவர்கள் மேட்டூரில் இருந்து வருவதாகச் சொன்னார்கள் தொடக்க விழாவிற்கு. பின் பணிச் சுமையின் காரணமாக அவரால் வர இயலாமல் போனது.

நாங்கள் சுமார் 10 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு சென்று  சென்ற உடனே ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் வரை சுமார் 350 பேரை பார்க்க ஆரம்பித்து பற் பரிசோதனை செய்து மற்றும் பற் பாதுகாப்பு பற்றி தனித்தனியாக அறிவுரை கொடுக்க ஆரம்பித்திருந்தோம்.



பள்ளியின் மாணவ மாணவியர் பட்டியல் மிக நேர்த்தியாக தலைமை ஆசிரியர் அறிவுறுத்தலின் படி ஆசிரியர்களால் தயார் செய்யப் பட்டு எம்மிடம் அளிக்கப் பட்டிருந்தது அந்த முகாம் பணிகளை சுலபமாக்கியது

பள்ளி நல்ல சுத்தமான முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. எல்லா மாணவர்களுக்குமே தனியார் பள்ளியை ஒத்த அளவில் நல்ல கவனம் செலுத்தப் பட்டு அடையாள அட்டையுடன் மாணவர்கள் நேர்த்தியாக இருந்தனர். மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற இந்த தலைமை ஆசிரியர் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெறும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றே  தோன்றுகிறது.

முகாமில் கலந்து கொண்டு பணி புரிந்த எங்கள் மருத்துவ குழுவினர்க்கு காபி, பிஸ்கட்கள் வழங்கப் பட்டன.

முகாம் நிறைவு செய்ய அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் கூட்டி அமரச் செய்து பல் பாதுகாப்பு, பற்சுத்தம் , பராமரிப்பு குறித்து எமது மருத்துவ குழுவை சார்ந்த மரு.துர்கா மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.



தலைமை ஆசிரியரும், நாங்களும் சேவைப்பணியில் பங்கு கொண்டமைக்கு நன்றி பரிமாறிக் கொண்டோம்.எல்லா ஆசிரிய பெருமக்களும் முகாமில் மகிழ்வுடன் பங்கு கொண்டு பாராட்டை பெற்றனர். அதற்கு முன் அவசியம் பற்சிகிச்சை செய்ய வேண்டிய பள்ளி மாணவர்களின் தேர்வுப் பட்டியல் கொண்ட 34 பேரின் பேர்கள் அடங்கியதை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தோம்.

தேவையேற்பட்டால் பெற்றோர் அனுமதியுடன் எப்போதும் மருத்துவ சிகிச்சைக்கு எமது மருத்துவக் கல்லூரிக்கு வருக என நல்வரவு கூறி, அரசினர் பள்ளி மாணவ மாணவியர்க்கு (12 வயதுக்குட்பட்டோர்க்கு) இலவச மருத்துவ சிகிச்சை தருகிறோம் என்பதையும் கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஜா.பேபிஜான், மற்றும் சமுதாயத் துறை மருத்துவர். என். சரவணன் அவர்களின் ஒப்புதல் பெற்று நீங்கள் அனைத்து சிகிச்சை பெற வேண்டிய மாணவர்களின் வருகையை ஒருங்கிணைத்தால் எமது வாகனத்திலேயே  வந்து அழைத்து சென்று மருத்துவம் செய்து கொண்டு வந்து விட்டுச் செல்லவும் தயார் என்பதையும் குறிப்பிட்டோம். முகாம் மிகவும் இனிதே நிறைவேறியது. திருப்தியுடன் கல்லூரி திரும்பி விட்டோம் மதியம் 1 மணிக்குள்.



இந்த அரிய முகாமுக்கு எங்களுக்கு அனுமதி வழங்கிய விநாயகா மிசன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்.பேராசிரியர். ஜா.பேபி ஜான் அவர்களுக்கும் வழி நடைப்படுத்திய சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் அவர்களுக்கும் தமிழக கல்வித் துறை சேலம் மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர்,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய அனைவர்க்கும் அந்த இளம் பிஞ்சுகளின் சார்பாக எமது  நன்றி உரித்தாகும்.

அறிக்கை சமர்ப்பித்தல்: முகாமை ஒருங்கிணைத்த முகாம் அலுவலர்: சு. தணிகாசலம்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Tuesday, September 13, 2016

ஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே?:கவிஞர் தணிகை

ஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே?:கவிஞர் தணிகை
Image result for season of karnataka cauvery issue



உங்களை எப்படி ஒரு தாயும் தந்தையும் பெற்றார்களோ அப்படித்தானேடா அவனையும் ஒரு தாயும் தந்தையும் பெற்றிருப்பார்கள்? எப்படி எதற்காக ஒரு தனியாக சிக்கிக்கொண்டதற்காக அந்த மனிதனை அவமானப்படுத்தி, அடித்து, துன்புறுத்தி,மண்டியிட வைத்து உங்களுக்கு ஆதரவாக கோஷமிட வைத்தீர்கள்? எதற்காக எவன் போட்ட முதலோ அந்த வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள்?

ஒரு மாநில அரசின் போக்குவரத்து வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள், இனக் கலவரம், என மனித இனத்தையே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...வள்ளுவர் சொன்னபடி: தோன்றின் புகழொடு தோன்றுக... என்னும் படி நீங்கள் எல்லாம் தோன்றாமலே இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்.  அதுக்கு ஒரு நடிகை வேறு அவர் கவர்ச்சியாக நடித்து அந்த கன்னட நாட்டுக்கு பெரும் தொண்டு செய்வதாகவும் கேள்வி..அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு மேலும் தூண்டியிருக்கிறார். நீங்கள் எல்லாம் மனிதக்கருவிலிருந்து, மனிதக் கர்ப்பத்திலிருந்து, மனிதச் சூலிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள், ஆனால் உங்களை அழிக்க நாங்களும் எழுந்தால் அது வன்முறையாகிடும்.

சோனாக் கல்லூரியில் படிக்கும் கர்நாடகா கன்னட‌ மாணவப் பூம்பிஞ்சுகளில் 4 எனதருகே ஒரே பேருந்தில் நான் 5 ரோட்டில் இறங்கிக் கொள்கிறேன் நீங்கள் அமர்ந்து பயணிக்கலாம் என சக பயணியாய், சக உயிராய், சக மனிதராய் வாழ்க்கைப் பயணம் செய்து கொண்டிருந்தோம். எதை நம்பி ஒரு மனிதன் ஒரு மாநிலம் விட்டு மறு மாநிலம் பயணம் செய்கிறான்? படிப்பிற்காக, பிழைப்பிற்காக, வாழ்க்கைக்காக அங்கிருக்கும் மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேரும் உறுதுணையாக வாழ உதவுவார் என்ற தார்மீக நம்பிக்கை அடிப்படையில்தானே?

Image result for season of karnataka cauvery issue

எல்லாம் தேவையில்லாத காரணத்திற்காக உங்களைப் போல வெகுண்டு எழ ஆரம்பித்தால் பூமியில் எந்த மனிதருமே வீட்டை விட்டு வேறு எங்குமே போக முடியாது...மேலும் எந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ முடியாது...எந்த அரசுமே நிர்வாகம், ஆட்சி புரிய முடியாது...

செப்.20 வரை நீர் விடுவதை தடுத்து நிறுத்த உங்களால் முடியாது. ஆனால் வாகனத்தை, தீக்கிரையாக்க முடியும், தனியாக மாட்டிக் கொள்ளும் மனிதரை மண்டியிட வைக்க முடியும், அடிக்க முடியும், அறைய முடியும், உதைக்க முடியும், பின்னந்தலையில் ஓங்கி ஓங்கி அடிக்க முடியும், நீங்கள் சொல்லும் கோஷத்தை உயிருக்கு பயந்து சொல்ல முடியும்... நீரை பகிர்ந்து அளிக்க வேண்டிய கடமை இருந்த முதல்வர் வீட்டையும் கல்லெறிந்து தாக்கியுள்ளீர்கள், துப்பாக்கி சூட்டுக்கும் பலியாகி... அண்டை மாநில அரசுக்கு சொந்தமான , அத்தியாவசிய பணிக்கு வந்த வாகனங்களை எரித்தபடி, வீட்டைக் கொளுத்தியபடி.., இருக்கும் பதர்களே நீங்கள் செய்வது மனித இனத்திற்கே பெருத்த அவமானம்.

Image result for season of karnataka cauvery issue

நீங்கள் மனிதராய் இருப்பதற்கே தகுதி மட்டுமல்ல அருகதையற்றவர்கள்

சேலம் மாவட்டத்தில் பிறந்த மாரியப்பன் தங்கவேல் பெங்களூர்க்காரராக பயிற்சி ஏற்று பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக உயரம் தாண்டி நடப்பு அமெரிக்க சாம்பியனையும் வென்று முதல் பரிசு எட்டிய செய்தி காதிலிருந்து மறையுமுன்னே இந்த கர்நாடகா மாண்டியா மாவட்டத்துக்காரர்களின் இழி செயல்கள்....

உடனே அமெரிக்கா தமது குடிமகன்களை  அங்கு சுற்றுலா செல்வதிலிருந்து தள்ளி நில்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.இப்படி இருந்தால் எந்த ஆட்சி எந்த நிர்வாகம், எந்த மாநில மத்திய அரசுகள் ஆள முடியும், மிருகங்கள் இவை இதை குண்டாந்தடி கொண்டு தாக்குங்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என துணை நிலை இராணுவத்தை 1000 பேரை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுமளவு....அவமானச் சின்னமாகி விட்ட நீங்கள் என்றுதான் திருந்துவது? வட்டாள் நாகராஜ் போன்ற மனித இனத்துரோகிகளும், தற்போது எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மனித சகோதரர்களுள் ஒருவரை ஒருவர் எந்த காரணத்தையுமே அடிப்படை இல்லாமல் தூண்டி விட்டு நெருப்பு பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பதர்களே உங்களை அந்த நெருப்பு  பற்றவே பற்றாதா? உங்களை அந்த நெருப்பு பற்றுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? உங்கள் உயிர் மட்டும் என்ன என்றும் நிரந்தரம் என்ற பட்டியலில் இடப்பட்டு உனது பெற்றவரால் உருவாக்கப்பட்டதா?
Image result for season of karnataka cauvery issue

இந்த நாட்டில் மத, மொழி, இன, சாதிய எல்லைக்கோடுகள், மாநில எல்லைக்கோடுகள் எல்லாம் மறையும் தலைமுறையில் வாழ்கிறீர் என்பதை மறந்து விடாதீர், மேலும் கணியன் பூங்குன்றனார் சொன்னபடி அதை ஐ.நாவில் கலாம் பேசியபடி நாமெல்லாம் உலக மாந்தர்கள்...நாட்டின் எல்லைக்கோடுகள் கூட நம்மை பிரித்து குறுக்கி சிறுத்துப் போகச் செய்யக் கூடாது..

காக்கைக் குருவி எங்கள் சாதி
நீள் காடும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்கக் நோக்கக் களியாட்டம்

என்ற பாரதியின் வரிகளின் படி வரிகளைப் படி, அந்த பாரதிக்கும், திருவள்ளுவருக்கும் நீங்கள் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்பீர். உங்களிடம் எப்போதும் மாறுதல் வரவே போவதில்லை...
Image result for season of karnataka cauvery issue


முதலில் நதி நீரை இணையுங்கள்: தேர்தலின் போது மட்டும் வாய்ப்பந்தல் போடாதீர்கள்...எல்லாப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் மனிதம் குறைந்தபட்சம் இந்தியன் அனைவரும் என்ற உணர்வுக்காவது வந்து இணைவான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 11, 2016

பாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.

களத்து மேட்டில் சேலையை சரி செய்து கொண்டிருக்கும்
பெண்ணைப் பார்த்தால்
பாலுணர்வு தோன்றவில்லை

பெற்ற குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும்
தாயைப் பார்த்தால்
பாலுணர்வு தோன்றுவதில்லை

நீச்சல் உடையுடன் நீரில் போட்டியிடும்
நங்கை பார்த்தாலும்
பாலுணர்வு தோன்றுவதில்லை

ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டலில்
ஒட்டிய ஆடை அணிந்து தடகளத்தில் ஓடும்
விளையாட்டு வீராங்கனைகளைப் பார்த்தாலும்
பாலுணர்வு தோன்றுவதில்லை

டென்னிஸ் வீராங்கனைகள் ஆடை நகர்தலிலும்
உள்ளாடை தெரிதலிலும் கூட‌
பாலுணர்வு தெரிவதில்லை
காமம் கொப்பளிப்பதில்லை

பீச் பால் விளையாட்டில்
இரண்டு பீஸ் ஆடையுடன் ஆடுவதைப்
பார்த்தாலும் பாலுணர்வு தோன்றுவதில்லை
Image result for sexual urge and barbarism


ஆடை நழுவ அயர்ந்து உறங்கும்
பெண்களைப் பார்க்கும்போதும்
பாலுணர்வு தோன்றுவதில்லை

நிலவொளியிலும் கதிர் வெயிலிலும்
கடமை செய்யப் புறப்படும்
கடமை செய்து புறப்படும்
பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களைக்
கண்ட போதும்
பாலுணர்வு தோன்றுவதில்லை...

பாலுணர்வு என்பது
நினைவுக் கீற்றில்
நீட்டல் மடக்கலில்
அற்புதமாவதும் அற்பமாவதுமாக...

நீங்கள் பார்க்கும் பார்வையில்
நினைக்கும் நினைப்பில்
மதுவின் போதையில்
எல்லாம் இருக்கிறது

மனிதமே நேராகட்டும்
அறிவு கூராகட்டும்
(கர்நாடகா மொழி வெறியர்
காவிரிக்கு சொந்தம் கொண்டாடும்
இன வெறியர் )
காட்டுமிராண்டித் தனம் விட்டு
நாகரீகமாகட்டும்...


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பாலுணர்வு தோன்றுவதில்லை ; கவிஞர் தணிகை.

இருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை

இருமுகன்: அகிலன் லவ்: கவிஞர் தணிகை


Image result for irumugan

அறிவியல் கதையாக சொல்லி எடுக்கப்பட்ட பொழுது போக்குப் படம்.அகிலன் லவ் என்ற இரு வேடங்கள் விக்ரமுக்கு. நயந்தாராவுக்கு ரோல் ஏதுமில்லை எனச் சொல்லி விடக் கூடாது என இறந்தவரை புத்துயிர்ப்பு ஊட்டி கதைக்கு ஒத்துழைப்பு நல்கும் பாத்திரமாக்கியுள்ளனர்.

திட்டமிட்டு இளைஞர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட படம். ஜென்டிலாக இருக்கிறது . கதை ஸ்பீட் என்னும் ஆஸ்த்மாவில் மூச்சு விடச் சிரமப்படுவோர்க்கு உதவும் இன்‍ஹேலரில் 5 நிமிட அசுர சக்தி தரும் மருந்து நிரப்பப் பட்டு அதன் சுவாசம் மூளையையும், உடலையும் அடுத்த 5 நிமிடம் எந்திர வேகத்துடன் சக்தி படைத்ததாக மாற்றி விடும் கதை.

இதை பெரும் அழிவு சக்தியாக்க நினைக்கும் லவ் என்னும் திரு நங்கை பாத்திர வில்லத்தன‌ விக்ரமிடமிருந்து அகிலன் என்னும் இந்திய உளவுத் துறை இடைநீக்கம் செய்யப்பட்ட உளவாளி எப்படி பிடுங்கி எறிந்து உலகை அழிவு சக்தியிலிருந்து காக்கிறார் என்னும் கதை

15000 இன்‍ஹேலருடன் புறப்படும் கப்பலை நிறுத்த இன்னும் 20 நிமிடமே இருக்கிறது என்னும்போது நாயகனும் நாயகியும் செயல்படுகிறார்கள் அதை தடுத்து நிறுத்த...

முள்ளை முள்ளால் எடு என்பது போல லவ் கண்டு பிடித்து பயன்படுத்தும் அதே ஸ்பீட் மருந்தை பயன்படுத்தி லவ் வில்லத்தனத்துக்கு அகிலனும் மீராவும் எப்படி முடிவு கட்டுகிறார்கள் என்பது கதை. உடன் போனஸாக இறந்ததாக நினைக்கும் இவர் மனைவி மீரா நயன் தாரா ரோசியாக லவ் என்னும் இந்த திருநங்கையிடம் எப்படி பணி புரிகிறார் இவருக்கும் இந்த மருந்து எப்படி பலனளிக்கிறது என்பதையும் தெளிவாக சொல்லும் சைன்டிபிக் பிக்சன் ...அறிவியல் கதை

வில்லனாக இருக்கும் திருநங்கை லவ் விக்ரம் வேடம் அறிவை அதிகம் பயன்படுத்தி குறுக்கு வழியில் யாவற்றையும் எளிதில் அடைகிறது. நாயகன் அகிலன் மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டு இலக்கை  நோக்கி நகர்கிறார்.

அப்ரூவராக மாறுவதாக சொல்லும் அது யார் பாலாவா அவர் நிறைய படம் நகர வழியை திசை திருப்பி வில்லன் லவ்விடமிருந்து கட்சி மாறுவதும் கதையை நகர்த்த வழிகாட்டுவதும் கொஞ்சம் அளவுக்கதிகமாக நீளமாகவே உள்ளது. நம்புவதற்கு முயற்சி செய்யுமளவு.

மற்றபடி நாசர் பாத்திரம் சிறிய அளவில் கதைக்கு உறுதுணையாகவும், தம்பி ராமைய்யா முத்தைய்யா மலேசியன் போலீசாக வழக்கப்படியாக அசத்தலாகவும் கதைக்கும் பட நகர்தலுக்கும் கிளு கிளுப்பூட்டி சிரிக்கச் செய்து பாராட்டும்படியாகவும் உள்ளது.

நித்யா மேனன் ஆயுசியாக கேஸ் ஆபிசராக நன்றாக செய்திருக்கிறார். இசையும் பாடல்களும் சுமார். பின்னணி இசை நன்றாக இருக்கிறது ஹாரிஸ் ஜெயராஜ். மொத்தத்தில் ஆனந்த் சங்கரையும் தயாரிப்பாளர் சிபு தமீன் ஆகியோரை ரிஸ்க் எடுத்து இந்த படத்தை எடுத்தமைக்காகவும் அவர்களின் முயற்சிக்காகவும் பாராட்டலாம்

மர்ம மனிதன் என்ற பேரில் காஜல் அகர்வால், பிந்து மாதவி ஆகியோரை வைத்தும் வேறு வேறு தயாரிப்பு கம்பெனிகளுடன் ஆரம்பிக்கப் பட்ட இந்தப் படம், லடாக், காஷ்மீர், சென்னை , மலேசியா ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. கால மாற்றத்தில் நடிகர்கள் நடிகைகள் மாறி, தயாரிப்பு கம்பெனிகள் மாறி விக்ரம் மட்டும் மாறாமல் நல்ல விதமாகவே வெளிவந்து முதல் இரண்டு நாள்களில் 10 கோடி வசூலை எட்டியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லவ் திருநங்கை பாத்திர விக்ரம் ஆண்களை விரும்பும் பாத்திரம். நிறைய ஸ்கோப் இருந்த இந்த வேடம் திருநங்கை பாத்திரத்தில் அதிகம் கவனம், டச் பாவனை செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.

கமலை பின் தொடர்கிறார் விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. கொஞ்சம் எந்திரன் கொஞ்சம் விஸ்வரூபம் சாயல் தெரிகிறது இருந்தாலும் அவ்வளவு மோசமில்லை. பார்க்க முடிகிற படமாகவே இருக்கிறது கதை கொஞ்சம் அறிவியல் கதையாக இருந்தாலும் சினிமாடிக்காக இருந்தாலும் பார்க்கும்படியாகவே இருக்கிறது.

விக்ரம், நயன் தாரா முகத்தில் முதுமை நன்கு தெரிகிறது என்னதான் மேக் அப் செய்த போதும், மகளுக்கு திருமணம் செய்யும் விக்ரமும்,பழகிப் பழகி பார்த்து சலித்துப் போன நயன் தாராவுக்கும் மாற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Image result for irumugan

2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2016 செப்.8ல் வெளியாகும் வரை நிறைய மாறுதல்களை சந்தித்து படத்தை வெளிவரச் செய்ததும், இந்த அளவாவது பார்க்கும்படியாக வைத்திருப்பதும், முதல் இரு நாளிலேயே 10 கோடி வசூலை ஈட்டியதும் வெற்றிதான்.

தற்போதைய படங்களில் இருக்கும் தேவையற்ற காட்சிகள் மதுபோதை வழியும் காட்சிகள் இல்லாதது நல்லதுதான்.

வில்லன் லவ் விக்ரம், கதாநாயகன் அகிலன் விக்ரம் என போட்டி போட்டுக் கொண்டு ஸ்பீட் மருந்தை உட்கொண்டு  கலக்குமாறு காட்சிகள் அமைத்து ஆளாளுக்கு கொஞ்ச நேர நகர்த்தல் கதை செய்திருப்பது அறிவியலை மீறிய செயற்கை கலந்த திரைக்கதையைக் காட்டுகிறது.

சினிமாவாக பொழுது போக்காக பார்க்கலாம். 50 மதிப்பெண் நூற்றுக்கு  கொடுக்கலாம். ஆனால் விக்ரமின் லவ் ரோல் அவ்வளவு எதிர் பார்த்தபடியாக நாயகன் அகிலன் பாத்திரத்துக்கு கான்ட்ராவாக சோபிக்கவில்லை. அந்த ல்வ் ரோலில் இன்னும் கவனம் செலுத்தி செம்மைப்படுத்தி இருக்கலாம். ஆனாக் கதை நகர்தலில் பாதிப்பு இல்லை. பாவம் இதற்கே ஆண்டுகள் 2 க்கும் மேல் ஓடி விட்டது என்னும்போது அதில் ஏதாவது செய்ய முயற்சி செய்திருந்தால் மேலும் மெருகேற்ற முயன்றிருந்தால் இன்னும் காலம் அதிகம் சென்றிருக்கலாம் வெளியீட்டிற்கு. இவர்கள் கால்சீட் எல்லாம் வேறு கிடைக்க வேண்டுமே....

Image result for irumugan


ரெமோவில் சிவ கார்த்திகேயனுக்கு பெண் வேடம் நர்ஸாக நன்கு பொருந்துவதாக இருப்பதாக  ஆ ரம்பக் கட்ட புகைப்படங்கள் உள்ளன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, September 10, 2016

சேலம் மாவட்டத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத் தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை

சேலம் மாவட்டத்தின் தங்க  மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத்  தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை

Image result for mariappan thangavelu and his mother saroja


காலை மதுபோதை பேருந்து ஓட்டுனரால் 5 வயதில் இழந்த இந்த தங்க வேல் இன்று இந்த 21ஆம் வயதில் சரித்திரத்தில் தமது பெயரை தக்க வைத்துக் கொண்டார். தாய் சரோஜாவின் தியாகம் பயிற்சியாளர் பெங்களூரு சத்யநாரயணா ஆகிய அனைவரையும் தங்கவேலையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இது போன்ற எத்தனையோ வைரங்கள் நமது இந்திய மண்ணில் இருக்கின்றன. வெளியே பளிச்சிட ஆரம்பித்த பின் தான் இந்த உலகும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் இந்த இந்திய மண் கோடிகளாய் கொட்டிக் கொடுக்கிறது.

அதற்கும் முன் எத்தனை துன்பங்கள்? எத்தனை அவலங்கள், கணவன் விட்டுப் பிரிந்த பின் நாலு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் வாழ்ந்த இந்த காலை பேருந்துக்கு பலி கொடுத்த தங்கவேலு இந்திய நாட்டின் ஒலிம்பிக் அவமானத்தை துடைத்தெறிந்து இந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் உயரத் தாண்டுதலில் பெற்றதன் மூலம் ஒரு காலாக ஆகி விட்டார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் தாய் சரோஜா. இவர் பெரியவடகம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சைக்கிளில் சென்று காய்கறி விற்பனை செய்து வருகிறார்.


சரோஜா இவரின் தாய் கூலி வேலை பார்த்து செங்கல் தூக்கி அதன் பின் காய்கறி விற்று செய்யாத தியாகம் எல்லாம் செய்து ஆண் வருவாய் ஈட்டுவார் இல்லாத குடும்பத்தில் தியாக தீபம் ஏற்றி இன்று இந்தியப் புகழ் பந்தம் ஏந்தி உலகெங்கும் சுடர் விட வைத்து விட்டார் இந்த பதக்கத்தை பெற்றதன் மூலம்.

இளைஞர்களே இது நமக்கெல்லாம் ஒரு பாடம். கிரிக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள். இந்த உருப்படியில்லா அரசு உங்களை எல்லாம் உருவாக்கும் என நினைக்காமல் இப்படி தியாகம் செய்து சாதித்து காட்டுங்கள் அதன் பின் உலகே உங்கள் பின் நிற்கும்

எமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்வு. எமது ஊர்க்கார, சேலம் மாவட்டத்தை சார்ந்த தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடுகம்பட்டியை சார்ந்த சிறிய கிராமத்தை சார்ந்த இந்த இளைஞரை ஈன்று நாடே திரும்பிப் பார்க்கிறது.

அது மட்டுமல்ல இந்த உயரத் தாண்டலில் 3 பதக்கங்களில் 2 இந்தியாவுக்கே .தங்கமும், வெண்கலமும். இது ஒரு புதிய சாதனை.

ஆனால் பாருங்கள் நண்பர்களே இன்று ஜலகண்டாபுரத்து பள்ளி மாணவர் அதிலும் முதல் மதிப்பெண் நிலையில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர் மாதிரித் தேர்வு எழுதிய தாளைக் காணவில்லை என ஆசிரியை இப்படித்தான் நீ முதல் மதிப்பெண் பெறுகிறாயா எனக் கேட்ட கேள்விதாளாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொரு செய்தி...

அரசுகளே முதலில் இனி உங்கள் அமைப்பை மாற்றிக் கொண்டு திறமை எங்கிருக்கிறதோ அங்கு கீழ் இறங்கி வரக் கற்றுக் கொள்ளுங்கள் உங்க ஒலிம்பிக் கமிட்டி முதல் வேலையாய் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள இது போன்ற வைரங்களை தத்து எடுக்கட்டும். அதன் பின் ஒலிம்பிக்கில் நமக்கு இடம் இல்லாமல் போகவே போகாது.

இந்த தங்கவேல் கூட இந்தியாவில்  2 மீ உயரம் தாண்டிய சாதனை எல்லாம் உண்டாம். இப்போது 1.89ல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

என்ன சொல்லி வாழ்த்த என்றே விளங்கவில்லை...இந்த மாபெரும் மகிழ்வில் பங்கு கொள்ளவெ இந்த பதிவு.
 அந்த தங்க மகனை ஈன்று பெருந்தியாகம் செய்த அந்த சரோஜா என்ற தாய்க்கும் நாம் நமது ஈடில்லா வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறோம். இனி நாம் பேசும் பேச்சில் எழுதும் எழுத்தில் இந்த சரித்திர நாயகனின் சாதனையும் இடம் பெறும் என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

அருணிமா சின்‍ஹா செய்தது போல இதுவும் ஒரு அருஞ்சாதனை.
கால் இல்லாதவரால் நிகழ்த்தப் பட்ட சாதனை. அந்த உயிர் பட்ட பாட்டுக்கு ஏற்றுக் கொண்ட வேதனைக்கு வலிக்கு. இடைவிடாத பயிற்சியின் போது தாங்கிக் கொண்ட துன்பத்துக்கு ஒரு அற்புத பரிசு. முயற்சிக்கு  பலனாக வேறு எவரும் எட்ட முடியாத உயரம் சிகரம், இந்த இந்திய நாயகனின் பயணம்.

Image result for mariappan thangavelu and his mother saroja



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.