சினிமா சினிமா: கவிஞர் தணிகை
ஆக்கபூர்வமாக வாழ்வில் சாதிப்பார் பெரும்பாலும் சினிமா பார்க்காதாராகவே இருப்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறேன். பெரும் ஞானிகள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள்,சாதனை புரிந்தோர் இப்படி எல்லாம் இருப்பார் சினிமா பார்ப்பதில்லை என்றே சொல்கிறார்கள், என்னிடம் என் தனிப்பட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்தார்கள். அப்படியும் சினிமா வேண்டுமெனில் இப்போதெல்லாம் நேரம் குறைவாக சில பல நிமிடங்களில் சொல்ல வேண்டியதை சொல்லி விடும் திரைப்படங்கள் நிறைய வந்து விட்டன. சில நாட்களுக்கும் முன் 22 நிமிடத்துக்குள் ஒரு குறும்படம் ஒரு 3 மணி நேர சினிமாவின் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததை சிறுமியர் கடத்தல் ,பாலியல் குற்றம் போன்றவற்றை சிறப்பாக சொல்லி இருந்ததைக் கவனிக்க முடிந்தது.
சினிமா கூட ஒரு போதையாகவே இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் என் கருத்தாக வைக்கிறேன்.ஆவதும், ஆனதும் சினிமாவாகவே, அது ஒரு தவிர்க்க முடியா சக்தியாக,அது ஒரு தொழிலாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு நிறைவான வென்றெடுக்க வேண்டிய சமுதாயக் கட்டமைவுக்கு போதை, மது,சூதாட்டம்,சிறுவர் கடத்தல்கள்,பாலியல் குற்றங்கள்,கட்டுப்பாடில்லா இணையத் தேடல்களும் சுதந்திரமும்,சினிமாவும் கூடபெரும் தடைகளே. தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சியும் கூட இதனால் பாதிப்படைகின்றன.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க, காந்தி,(அட்டன்பரோ இயக்கியது) ஸிண்ட்லர்ஸ் லிஸ்ட்,குழந்தைகள் பெரிதும் விரும்பும் டைனசோர் போன்ற படங்கள் தவிர, வரலாற்று ஆவணப் படங்கள்,தவிர வணிக நோக்கில் வன்முறையைப் பரப்பும் படங்கள் இருக்கக் கூடாது, அதுவும் பல மணி நேரம் இருக்கக் கூடாது பெரும்பாலான மனிதர்களின் நேரத்தைக் கொல்வதாக இருக்கக் கூடாது.ஆக்க பூர்வமாக மனிதர் இருக்கும் போது இயங்கும் போது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும்,
ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் கிடைத்த வாய்ப்பு என்பார் நேரத்தை மிக அரியதான சக்தியாக இழந்தால் அதைப் பெற முடியாத வாய்ப்பாக நினைக்கிறார்கள். பொருளை இழந்தாலும் திரும்ப பெற்று விட முடியும்.நேரத்தை இழந்தால் அதைத் திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதை எல்லாம் கேட்ட பின் நான் எவ்வளவு நேரத்தை இப்படி இழந்து விட்டேன் என நினக்கும் போதே எனது குற்ற உணர்வு எனை மென்று தின்கிறது, அவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன் என் வாழ்வில் இளைமையில் இருந்து, ஏன் சிறுவனாக இருக்கும்போதிருந்தே சினிமா, சினிமா என்றே பார்த்து அழிந்திருக்கிறேன். இல்லையேல் இன்னும் கூட சிகரத்தொடல்களுக்கு சென்றிருக்கலாமோ என காலங் கடந்த பின் தோன்றுகிறது.
இதை எல்லாம் சாவின் அருகே அருகே செல்லும் மனிதர்கள் அனைவர்க்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. எவன் கேட்கப் போகிறான்? யார் படிக்கப் போகிறார்? எவர் இதை பின் பற்றப் போகிறார்? என்றெல்லாம் நினைக்கலாம்.
கியூபாவின் தொலைக்காட்சி அந்த நாட்டின் விவசாயம், விளையாட்டு,மக்களுக்குப் பயன்படும் கருத்துகள் தவிர வேறு எதையும் ஒளி பரப்புவுதில்லை. ஒளிபரப்ப வில்லை. எனவே அந்த சிறு நாட்டை வல்லரசுகள் எல்லாம் விழுங்கப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் அதன் கட்டமைவில் பெரும் பங்கு வகித்த அதன் தலைமைக்கு செய்த கொலை முயற்சி பலிக்கவே இல்லை. சிங்கப்பூர் கூட நல்ல கட்டமைவில். ஏன் இப்போதிருக்கும் அரேபிய நாடுகள் எல்லாம் இது போன்ற நிலை வழியில் பயணம் செய்ய முயன்று வருகின்றன.
அவை எல்லாம் சிறிய நாடுகள் இந்தியா பெரிய நாடு என்பார்க்கு, ரஷியாவும் சீனாவும் முன் நிற்கின்றன.இஸ்ரேலின் ஒவ்வொரு இளைஞரும் அந்த நாட்டின் கட்டமைவுக்கு உறுதுணையாக இருப்பதை செய்திகள் தெரிவிக்கின்றன.கட்டுப்பாடு அவசியம் ஒவ்வொரு தனிமனிதர்க்கும், ஏன் சமூக மாற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்.
சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் மிகச் சுருக்கமாக
பிறகு உங்கள் விருப்பம்.
1897ல்(PATENTED)developed between 1889 and 1892, தாமஸ் ஆல்வா எடிசன் மூவி கேமிராவை ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்தவே கண்டு பிடித்தார் வெடிமருந்தை ஆல்ப்ரட் நோபெல் கண்டறிந்தது போல ஆனால் அவை எல்லாமே காலத்தால் மனிதர்களால் எதிர்மறையாகவே பயன்படுத்துவது அவர்கள் கண்டிருந்தால் இதை எல்லாம் கண்டறியாமலே விட்டிருக்கலாமே என நமது ஜி.டி நாயுடு போல வேதனைப் பட்டிருக்கவும் கூடும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment