Tuesday, March 26, 2024

தேர்தல் சீர் திருத்தங்கள்: கவிஞர் தணிகை

 தேர்தல் சீர் திருத்தங்கள்: கவிஞர் தணிகை



1. அரசு எந்திரங்கள் வழியே வழி வழியாக நடத்துவதை மாற்றி தன்னிச்சையான சுயேச்சை அமைப்பு மூலம் மட்டுமே தேர்தல் நடத்தலே சிறந்தது. அதே அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கல்வி நிறுவன தனியார், அரசு நிறுவன ஊழியர்கள், மேலும் அரசு ஊழியர்கள் மூலம் நடத்தல் அப்போது நடக்கும் ஆட்சியாளர்க்கு சார்பாய் இருக்க வாய்ப்புண்டு.அப்படி  இல்லாமல் இருந்திருந்தால் 47000 ரூபாயை எடுத்துச் சென்ற நபருக்கு அதுவும் மருத்துவத்துக்கு கொண்டு சென்ற பணம் பிடித்து வைக்கப் பட்டிருக்காது. ரிஷி சுனக், ட்ரம்ப் போன்றோர்க்கும் அந்தந்த நாடுகளில் அங்கு ஒரே விதி...அது போலவாவது இங்கு இருக்க வேண்டுமல்லவா? அதே போல தேர்தல் நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு பிரச்சனைகளை தேர்தல் நாட்கள் காரணம் காட்டி பெரும்பாலான அரசு ஊழியங்கள் நடை பெறுவதேயில்லை என்ற நிலையும் மாற வேண்டும்.


2. கட்சிகள் அடிப்படையில் விகிதாச்சார வாக்கெடுப்பு செய்து  எல்லாக் கட்சி சார்ந்தவர்களும் பெற்ற வாக்கு எண்ணிக்கை  அடிப்படையில் கணக்கீடு செய்து அதன் பின்  விகிதாச்சார அடிப்படையில் தமது பிரதிநிதிகளை ஆட்சி அமைப்பில் பங்கு கொள்ளச் செய்தல்


3. தவறு செய்தோரை திரும்ப அழைத்துக் கொண்டு அதன் பிறகு அந்த அமைப்புகளில் இருந்தே வேறு ஒரு நல்ல பிரதிநிதியை பங்கு கொள்ளச் செய்தல்.


4. ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலே போதும் அது வெற்றி அவருக்கே பிரதிநிதித்துவம் தோற்ற அல்லது எஞ்சிய வாக்கு அனைத்துமே பயனற்றவை  என்று உலகளாவிய உள்ள தேர்தல் நெறியை மாற்றி அனைத்து வாக்காளர்க்கும் உரிய மதிப்பு வழங்கிடும்படியான தேர்தல் முறைகள் ஜனநாயக முன்னேற்றத்தின் அவசியம்.


5.உத்திர மேரூர் கல்வெட்டுகளின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளலாம் காலத்திற்கேற்ற நெறிமுறைகளுடன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment