தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்ச்மின் பட்டன்: கவிஞர் தணிகை
ஆங்கிலத்தில் 2008ல் வந்த ஒரு நல்ல திரைப்படம்.3 ஆஸ்கார் விருதுகளையும் அதற்கும் மேல் பல விருதுகளையும் வென்ற திரைப்படம்.
பிறந்த குழந்தை தோல் எல்லாம் சுருக்கம் விழுந்து முதியவரைப் போல் பார்க்க சகிக்க முடியாமல் இருக்க அதன் தந்தை அதை ஆற்றில் தூக்கி வீசி எறிய முற்பட போலீஸ்காரரால் கண்ணில் பட்டதால் அதையும் செய்ய முடியாமல் ஒரு முதியோர் இல்லத்தின் படிகளில் போர்த்தி வைத்திருந்த போர்வைத் துணியுடன் வைத்து விட்டு சென்று விடுகிறார்.
அந்த விடுதியின் கறுப்பினப் பெண் ஒருவர் அந்தக் குழந்தையை கண்டு எடுத்து வளர்க்கிறார். அது வளர வளர இளமை அடைகிறது. வளர வளர இளமை திரும்புகிறது மேலும் வளர்கையில் அதன் பின் அது குழந்தையாகி கண் மூடுகிறது இறந்து விடுகிறது. மனைவி குழந்தை யார் என்றெல்லாம் அதற்கு நினைவு வராத வாழ்வு பின்னோக்கிய சக்கர வாழ்வு. இந்த இடைவெளியில் அதன் வாழ்வு எப்படி எல்லாம் செல்கிறது எங்கெல்லாம் செல்கிறது என்ன என்ன எப்படி எப்படி எல்லாம் அனுபவங்களைப் பெறுகிறது என்ற வாழ்வின் பின்னோக்கிய பயணத்தின் பார்வையுடனான திரைப்படம்.
மிகவும் பொறுமையிருந்தால் மட்டுமே பார்க்க முடியும் . ஆனால் இப்படிப் பட்ட படத்தை எல்லாம் பார்க்கும் அனுபவத்தை அமெரிக்க சிந்தனை நமக்கு கொடுத்திருக்கிறது.
தெய்வ மகன் படம்(சிவாஜி) நமக்கு நினைவுக்கு வந்த போதும் ஆனால் அது அல்ல இது.
எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் கதையை நம்பி. இன்னும் தமிழ் சினிமாக்காரர்கள் இது போன்ற சினிமாக்களை எல்லாம் காண வேண்டிய தேவை இருக்கிறது என உணர்த்தும் படம். கொஞ்சம் பின்னோக்கிய கதை என்பதால் கொஞ்சம் டைட்டானிக் படத்தையும் நினைவு படுத்தி விடுகிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment